விஷ்ணுபுரம் : பூந்தோட்டம் - நாச்சியார்கோவில் பிரதான சாலையில் வரும் எரவாஞ்சேரி அருகில் உள்ள சிற்றூர்.
இவ்வூரில் இரண்டு சிறப்பு சிவன் ஆலயங்கள், ஒரு வைணவ ஆலயம், உள்ளன.
பிரதான சாலையின் வடக்கு புறம் இந்த ஆலயங்கள் உள்ளன.
அருகில் உள்ள திருவீழிமிழலையை புராணத்தை ஒட்டியது.
சப்தரிஷிகள் வணங்கிய சப்தஸ்தானங்களில் இரண்டு ஆலயங்கள் இவை:
1. தருமபுரீஸ்வரர், தருமாம்பிகை, தரும விநாயகர் அமைந்துள்ள ஆலயத்திற்கு முன்புறம் தருமர் அருள் பெற்ற தரும குளம் மிகப்பெரியது.
தருமர் வணங்கியதால் இது இப்பெயர்பெற்றது. இவ்வாலயம் வணங்கினால், மரண பயம் இல்லை
சிறிய ஆலயம், இராஜகோபுரம் இல்லை,
முன் மண்டபத்தில் நந்தியுள்ளது.,
சுவாமி கிழக்கு நோக்கியும், அம்மன் தெற்கு நோக்கியும் ,உள்ளது.
பிரதோஷம் நடைபெறுகிறது.
2. ஸ்ரீ கைலாசநாதர் ஸ்ரீஅமுர்தேஸ்வரி.
கெளதம மகரிஷி வணங்கியது.
சற்று பெரிய ஆலயம். ஊர் நடுவில் உள்ளது. நீண்ட முன்மண்டபம் நந்தி உள்ளது. உள் மண்டபத்தில் ஓவியங்கள் உள்ளன.
தென்புறம் பார்த்து அம்மன் சன்னதி
கிழக்கு நோக்கிய சுவாமி,
பிரகாரத்தில், தட்சினாமூர்த்தி, வினாயகர் முருகர், சண்டிகேஸ்வரர் தனி சன்னதிகள் உண்டு.
கற்கோவில். சிறப்பான வழிபாடுகள் நடைபெறுகின்றது. பிரதோஷ விசேஷ வழிபாடுகள் உண்டு.
இவ்வாலம் ஓட்டி நவீன பாபா ஆலயமும் வழி பாட்டில் உள்ளது.
3.வரதராஜ ஆலயம். மிகச் சிறிய ஆலயம், கிழக்கு நோக்கியது.
உள்புறம் சிறிய மண்படம் வினாயகர், ஆஞ்சநேயர் கருடன்
அக்ரஹாரம் ஒட்டி உள்ளதால் சிறப்பு வழிபாடுகள் உண்டு.
Jan.2021
#சிற்றூர்ஆலயம்
என்றும் அன்புடன்
#சுப்ராம்_அருணாசலம்_காரைக்கால்
https://m.facebook.com/story.php?story_fbid=5076904975718052&id=100001957991710
No comments:
Post a Comment