_இலங்கை பயண பதிவு : 29_
*19.12.2018 அநுராதபுரம் - புத்தளம் - மானவாரி*
இலங்கையின் வடமத்திய பாகத்தில் உள்ள புராதானமான முக்கிய தலம். இங்குள்ள Happy Leoni Hotel அணைத்து வசதிகளும் கொண்டிருந்தது. காலையில் சூரிய நமஸ்காரம் செய்ய அந்த ஹோட்டலின் உச்சி மாடியிலிருந்து அந்நகரத்தை கண்ட போது அருமையாக இருந்தது. சோலைகளும் காடுகளும் வெகு தூரத்தில் மிகப் பெரிய ஸ்துபிகளையும் கொன்டு மிக அமைதியாக காட்சியளித்தது. உண்மையில் இலங்கை வரலாற்றில் மிக புராதானமான சிறந்த தலைநகராமாக உருவாக்கப்பட்டு பல ஆண்டுகள் மிக பொலிவுடன் விளங்கிய நகரம். பெளத்தர்களின் புண்ணிய பூமிகளில் இதுவும் ஒன்று. புத்தர் ஞானம் பெற்ற போதி மரத்தின் கிளையைக் கொண்டு இங்கு பெளத்த ஆலயம் உள்ளது. ஏராளமான சரித்திர சான்றுகளும் கட்டிடங்களும் தொல்லியல் ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றது. இலங்கையில் நாங்கள் பார்த்த புராதான பெருநகரங்களில் இன்று எந்த ஒரு பரபரப்பும் இன்றி மிக மிக அமைதியான நகரமாகும். பல்வேறு பெளத்த கலாச்சார சின்னங்களையும் கொண்டுள்ளது. நகரரைச் சுற்றி ஏராளமான பிரமாண்டமான ஸ்துபிகளையும் புத்தர் சிலைகளையும் வரலாற்று ஆவணக் கட்டிடங்களையும் கொண்டிருக்கிறது. காலை உணவு முடித்து அங்கிருந்து கடற்கரை ஊரான புத்தளம் என்ற சிறிய ஊரிணை அடைந்தோம்.
*புத்தளம்*
இலங்கையின் வட மேற்கு கடற்கரையின் ஒரு முக்கியமான இடம். கடல் உள்வாங்கி மிகப்பெரிய U போல இயற்கையாக அமைந்துள்ளது. Beach அமைத்து சிறந்த சுற்றுலா இடமாக மாற்றிக் கொண்டிருக்கிறார்கள். அங்கு சிறிது இளைப்பாறி விட்டு மனவாரி என்ற புராதான சிறிய ஊரில் உள்ள சிவன் கோவிலுக்கு சென்று தரிசனம் செய்தோம்.
*மானவாரி*
மானாவாரி என்ற அந்த ஊரில் உள்ள சிறிய சிவன் கோவில் இராமலிங்கேஸ்வரர் இராஜராஸே்வரி அம்மன் நல்ல வினாயகர் சன்னதிகள்.
இராமர் போர் முடிந்து வரும் போது பிரம்ம கத்தி பின் தொடர இலங்கையை தாண்ட மனலால் ஒரு சிவலிங்கத்தை பிடித்து வணங்கி பாவம் நீக்கிக் கொள்ளும் புனித இடம். முக்கிய சாலையிலிருந்து பிரிந்து 2 கீமி உள் சென்று திரும்ப வேண்டும். அருகில் உள்ள *முன்னிஸ்வரம்* ஆலய புராணத்திற்கு தொடர்பு உள்ளது.
இலங்கையின் முக்கிய 5 ஈஸ்வரத்தில் இந்த தலமும் ஒன்று என்றார் சிவாச்சாரியார்.. ஆலயம் முன்பு நல்ல விநாயகர் உள்ளார். மிக புராதானமா சிவ ஆலயம் முற்றிலும் சிதைந்து போய் விட இப்போது புதிய ஆலயமாக புனரமைக்கப்பட்டுள்ளது.
இதன் பிறகு முன்னீஸ்வரம் என்ற மிக முக்கிய சிவன் ஆலயம் உள்ள ஊர் சென்றோம்.
No comments:
Post a Comment