_இலங்கை பயண பதிவு : 18_ *திரிகோணமலை*
இலங்கையில் உள்ள புராதான இடம். பாடல் பெற்ற சிவஸ்தலம். பல முறை சிதைக்கபட்டு புதியதாக கட்டப்பட்டு நன்றாக பராமரிப்பில் உள்ளது. முறையாக பூசைகள் செய்யப்பட்டு வருகிறது. மகா சக்தி பீடங்களில் ஒன்று. கோனேச்சுரரும், மாதுமை யாளும் அருள் புரிகின்றனர். அருணகிரி நாதர் திருப்புகழ் இயற்றி உள்ளார்.
புதிய கோவில் முன் உள்ள மிகப் பெரிய சிவன் சிலை புனரைப்பு வேலை நடந்து வருகிறது. திரிகோணமலை கோட்டை பகுதி வரை பேருந்து, கார்களில் சென்று அங்கிருந்து சுமார் 2 கீ மீ ஆட்டோவில் செல்ல வேண்டும். அதன் பிறகு 100 மீ. நடந்து செல்ல வேண்டும். இரு புறமும் கடைகள் வியாபாரம் நடைபெறுகிறது. ஒருபுறம் மரங்கள் அடர்ந்த பகுதியில் மnன்கள் இருந்தன.
கோவில் எதிரில் கிழக்கு புறம் சிறிய அரசமரத்தை சுற்றி வர பாதை அமைத்துள்ளார்கள். சுற்றி வரும் போது மார்கண்டேயருக்கு அருளியது முதலிய கதை சிற்பங்கள், விநாயகர், சோமஸ்கந்தர் உருவங்கள் அமைக்கப்பட்டுள்ளது. சற்று கீழ்புறம் இராவணன் கை கூப்பி வணங்கும் சிலையும் உள்ளது. ஒருபுறம் மிக உயரமான மலை மீது இருந்து கொண்டு கீழே அலைமோதும் கடல்.
கோவில் ஒரே பிரகாரம் . கிழக்கு பார்த்து சுவாமியும், தெற்கு பார்த்து அம்பாளும் அருள் தருகிறார்கள். முன் மண்டபத்தை தாண்டி உள்ளே செல்ல சாதாரணமாக அனுமதியில்லை. மண்டபத்தில் கடம் வைத்து தினம் பூசை செய்து வருகிறார்கள். நிரந்தரமாக அமைப்பு உள்ளது.
கோவில் முன்புறம் சற்று அருகில் கிழக்கு புறத்தில் மலை பிளவுபட்டு இரண்டாக உள்ளது. இந்த இடத்தை *இரவணன் வெட்டு* என்று கூறுகிறார்கள். சிவன் தன் கோரிக்கையை ஏற்காததால் அந்த மலையை பிளந்து விட்டதாக புராணம்.
அருகில் ஒரு இடத்தில் லெட்சுமி நாராயணர் சிலை வைக்கப்பட்டுள்ளது. அருகில் இருக்கும் கோட்டை பகுதியில் அகழ்வராய்ச்சியில் கிடைத்தது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இக்கோவிலை நிர்மாணித்த குளக்கோட்டு மன்னனுக்கு சிலையும் அவருடைய Prediction வார்த்தைகளையும் எழுதி வைத்துள்ளார்கள். இந்த கோவில் போர்த்துக்கீசியர்கள், ஆங்கிலேயர்கள் வந்து இடித் தாலும், மீன்டும் இந்த கோவில் கட்டப்படும் என்பது எழுதப்பட்டுளது.
https://m.facebook.com/story.php?story_fbid=2449549761786933&id=100001957991710
No comments:
Post a Comment