_இலங்கை பயண பதிவு : 24_
*கீரிமலை நகுலேஸ்வரம்*
யாழ் மாவட்டம் கீரிமலையில் அமைந்துள்ள புராதானமான சிவன் ஆலயம்
நகுல முனிவர்.இராமன், சோழ அரசன், நளன், அருச்சுனன், முசுகுந்தன் வழிபட பெற்றது.
நகுலேஸ்வரர், நகுலாம் பிகை அம்மன் வழிபட வேண்டிய தெய்வங்கள்.
உள்நாட்டு யுத்தத்தால் சிதை பட்ட இந்த ஆலயத்தை ஆதீனகர்த்தா குருக்கள் அயராத முயற்சியினால் தற்போது இக்கோவில் பொலிவுடன் , முறையான பூசை வழிபாட்டுடன் நல்ல முறையில் பராமரிக்கப்பட்டு வருகிறது.
2012ல் கும்பாபிஷேகம் நடைபெற்றிருக்கிறது.
இந்தக் கோவிலில்
ஒரு வயதான காளை உள்ளது. பிரதோஷம் அன்று அதற்கு முறையான பூசை செய்து சிவன் அம்பாளை வழிபாடு செய்கிறார்கள்.
வயது முதிர்ந்த அக்கோவிலின் ஆதின கர்த்தாவும் முதிய குருக்களுமான திரு நகுலேஸ்வரகுருக்கள் அவர்களிடம் ஆசியும் பெற்றுக் கொண்டோம்.
14.03.2015ல் பாரத பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள் இங்கு வந்து தரிசனம் செய்துள்ளார்கள். வேண்டிய உதவிகளையும் இந்தியா சார்பாக கொடுத்திருக்கிறார்கள் என்று அறிந்தோம்.
அவசியம் தரிசிக்க வேண்டிய தலம்
இலங்கையின் 5 ஈஸ்வரன் கோவிலில் இதுவும் ஒன்று.
No comments:
Post a Comment