_இலங்கை பயண பதிவு : 20_
*திரிகோணமலையிலிருந்து யாழ்ப்பானம்*
17.12.2018 காலை திரிகோணமலையிலிருந்து புறப்பட்டு முல்லைத்தீவில் உள்ள புகழ் பெற்ற அம்மாச்சி கடையில் சிறிது ஓய்வு எடுத்து Beach பார்த்துவிட்டு முள்ளிவாய்க்கால் மேலும் பல ஊர்கள் தாண்டி யாழ்பாணம் சென்றோம். இந்த பகுதியில் செல்லும் போது நமது தமிழர்கள் எத்துணை வேதனைகளை சுமந்து வாழ்ந்து வருகிறார்கள் என்ற சோகம் நெஞ்சில் வந்தது. வழியெல்லாம் 2 கீ மீக்கு ஒரு இலங்கை இராணுவம் குழn ம் அமைத்து இருக்கிறார்கள். சில இடங்கள் புனரமைப்பு வேலைகள் நடந்து வருகின்றது.
*மக்கள் நடைமுறை வாழ்வில் இருந்தாலும் தமிழர்கள் இன்னும் இயல்பான முழுமையான சுதந்திரமான வாழ்வு முறையை அடைய வேண்டிய தூரம் மிகவும் அதிகம்.
ரயில் பாதை பற்றி குறிப்பிட வேண்டும்.
யாழ்ப்பானம் வரை 95% எந்த லெவல் கிராஸிங்கிலிலும் கேட் கிடையாது. மக்கள் வாகனங்களை நிறுத்தி கவனமாக
- அவதானம் - செய்து செல்கிறார்கள்.
இலங்கையின் எல்லா சாலைகளும் மிகவும் நன்றாக உள்ளது.
No Speed brakes. Minimum Signals. All are wearing Helmets including back seaters. All are Follow road rules.
யாழ் நகரத்தில் MANGOS என்ற உணவகத்தில் அவ்வூரில் மருத்துவராக பணிபுரியும் சிவனடியார் ஒருவர் எங்களை அன்புடன் வரவேற்று மதிய விருந்து ஏற்பாடளித்து இரண்டு நாள் கூட இருந்து அன்பு செய்தார்.
உணவு முடித்து
*நயினார் தீவு*
நாகபூஷனி அம்மன் கோவில் சென்றடைந்தோம்.
(இரண்டு நாட்களாக பருவநிலை காரணமாக அங்கு யாரும் சென்று தரிசிக்க முடியவில்லை என்றும் இன்று (17. 12. 2018) ல் தான் படகு செல்கிறது என்று கூறினார்கள்.
https://m.facebook.com/story.php?story_fbid=2450112145064028&id=100001957991710
No comments:
Post a Comment