_இலங்கை பயண பதிவு : 23_
*நல்லூர் கந்தசாமி கோவில் யாழ்பானம்*
மிகவும் புராதானமான புகழ் பெற்ற முருகன் தலம்.
புவனேசுவாகு என்ற அரசால் கட்டப்பட்டு பிறகு பல்வேறு இலங்கை அரசர்களால் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. போர்த்துக்கீசியர்களால் முற்றிலும் இடிக்கப்பட்டும் பல மாறுதலுக்கு உட்பட்டு புதிய கட்டுமானத்தில் இந்த ஆலயத்தை புனரமைத்தவர் ஆறுமுகநாவலர் அவர்கள். அவரைத் தொடர்ந்து அவர் தம் மாணாக்கர்கள் சிரிய முறையில் இக்கோவிலை பராமரித்து வருகிறார்கள்.
கருவரையில் வேல் வைத்து தான் வணங்குகிறார்கள். தென்புறம் வள்ளி தெய்வாணையுடன் தனி சன்னதியில் முருகன். கோவிலின் உள் பிரகாரத்தில் தென்புறம் மிக அழகிய தீர்த்தக் குளம் கட்டப்பட்டுள்ளது. கோவில் முழுதும் மிக அருமையான முறையில் பரமரித்து வருகிறார்கள்.
நித்திய பூசைகள் மிகவும் அருமையாக செய்து வருகிறார்கள். நாள் தோறும் திருப்பள்ளியெழுச்சியும் பள்ளியறை உற்சவமும் நடைபெறுகின்றன.
வருட திருவிழா மிகச் சிறப்பாக நடைபெறுகிறது.
ஆன்மீக மேம்பாட்டுக்காக பல நிகழ்ச்சிகளும் தொடர்ந்து நடைபெறுகிறது. ஆண்கள் பனியன் சட்டை போட அனுமதி இல்லை. மிக அவசியம் தரிசிக்க வேண்டி தலம்.
No comments:
Post a Comment