_இலங்கை பயண பதிவு : 26_
*மருதனார்மடம் ஆஞ்சநேயர் கோவில்*
யாழ்ப்பாணம் காங்கேசந்துறை வீதியின் ஓரமே புதிதாக நிர்மாணிக்கப்பட்ட 2013ம் ஆண்டில் சுமார் 72 அடி உயர பிரபிப்பான ஆஞ்சநேயர் சிலை. இக்கோவில் உள் பகுதி ஸ்ரீ சுந்தர ஆஞ்சனேயர் திருவுருவம் இந்தியாவிலிருந்து கொண்டு வந்து பிரதிஷ்ட்டை செய்யப்பட்டும் நித்திய பூசைகள் முறையாக செய்யப்பட்டு வருகிறது. நாங்கள் தரிசித்த போது ஆஞ்சனேயருக்கு அபிஷேகம் நடைபெற்றது.
தரிசனம் முடிந்து யாழ் நகர் சென்று AKSHATHAl Hotel மதிய உணவு முடித்துக் கொண்டு
சிவபூமி திருவாசக அரண்மணை சென்றோம். திருவாசகத்தின் சிறப்பு கருதி யாழ் நகரின் நுழைவுப் பகுதியில் தனியாரால் அமைக்கப்பட்ட அற்புதமான இடம்
மண்டபம் முழுதும் திருவாசத்தின் 51 பதிகளும் பதிக்கப்பட்டு 108 சிவலிங்கங்களும் அமைக்கப்பட்டுள்ளது
நடுவில் மணிவாசகருக்கு குருவடிவாக வந்து காட்சி அளித்தமையால் ச தெட்சிணாமூர்த்தியை மூலவராக வைத்திருக்கிறார்கள்.
வணங்கிப் பின் கேதீஸ்வரம் செல்லலானோம்.
No comments:
Post a Comment