Saturday, January 30, 2021

திருத்தலங்கள் தரிசனம் 2021 கடுவெளி

கடுவெளி : திருவையாறு காவிரி வடகரையில் தில்லைஸ்தானம் பாடல் தலம் கடந்து
 (திருக்காட்டுப்பள்ளி) - கல்லணை சாலை 4 கி.மீ. தூரத்தில் உள்ள கடுவெளி யில் உள்ள
புகழ்பெற்ற கடுவெளி சித்தர் அமைத்த
ஸ்ரீ ஆசாசபுரீஸ்வரர் ஸ்ரீமங்களாம்பிகை
ஆலயம் உள்ளது.
ஆலயம் முன்பும் ஒரு நந்தி மற்றும் ஸ்ரீ செல்வ விநாயகர் ஆலயம் தரிசித்து, பின் 5 நிலை இராஜகோபுரம் கடந்தால்,
வரும் நந்தியை வணங்கி ஆலயம்
முன் முன் மண்டபம் அழகுற அமையப்பெற்றிருக்கிறது.
2013 ல் குடமுழுக்கு நடைபெற்றுள்ளது. நல்ல பராமரிப்பில் உள்ளது. முன்மண்டபம் கடந்தால் .உள் மண்டபம் தெற்கு நோக்கிய அம்பாள், கிழக்கு நோக்கிய சிவனும் உள்ளார்கள். அம்பாளுக்கு தனி நந்தியும் தென்புறம் உள்ளது.
பெரிய அளவில் ஏகப்பிரகாரமாக இருந்தாலும், வினாயகர், முருகன், தனி சன்டிகேஸ்வரர்  சன்னதிகள் சுற்றி அமைந்துள்ளது.  ஆலயம் வடபுறத்தில் கிழக்குப் பார்த்து கடுவெளி சித்தருக்கு தனி சன்னதியும் அருமையான சூழலில் அமைந்துள்ளது.
ஆலயம் இராஜகோபுரம் அருகில் இவ்வாலயம் உபய குறிப்புகள் உள்ள தனிகல்லில் பொறித்துள்ளது.

ஆலயம் முன்புறத்தில் ஆலயக் காப்பாளரிடம் சாவி வாங்கி உடன் தரிசனம் செய்யலாம்.
#அற்புதத்திருத்தலங்கள் 
#சிற்றூர்_ஆலய_தரிசனம் 
என்றும் அன்புடன்
#சுப்ராம்_அருணாசலம்
காரைக்கால்

திருத்தலங்கள் தரிசனம் 2021 கூத்தூர் - திருவையாறு - திருக்காட்டுப்பள்ளி வழியில்

கூத்தூர்: 
திருவையாறு - திருக்காட்டுப்பள்ளி சாலையில் உள்ள சிறிய ஊர். இங்கிருந்து வடக்கில் வானரங்குடி என்ற கொள்ளிடம் ஆறு அருகில் உள்ள ஊருக்கு செல்லும் வழியில் 
உள்ளது.
1. ஸ்ரீ நாராயனேஸ்வரர், 
ஸ்ரீ அதலாம்பிகை சிவன் ஆலயம்,
2. ஸ்ரீ லெட்சுமிநாராயணர் ஆலயம்,

மேலும் ஒரு சிறிய காளியம்மன் ஆலயமும் உள்ளது.
சிவன் ஆலயம் சுவாமி, அம்மன், நந்தி க்கு தனிதனி மண்டபமும், ஆலயத்தில் உள்ளது. விநாயகர், முருகனுக்கு சுவாமி சன்னதிக்கு முன்பு வைத்து வழிபாடு நடை பெறுகிறது.  
ஒரு காலம் என்பதால்,
அருகில் உள்ள ஒரு அடியார் வீட்டில் சாவி வாங்கி தரிசிக்கலாம்.

பெருமாள் ஆலயம் முன் மண்டபம் மேல் கூறை இடிந்து வெட்டவெளியாக இருக்கிறது.
ஆலயம் முன் மிக உயரமான புராதானமான அரசமரம் உள்ளது.
 20.01.2021
 #சிற்றூர்ஆலயதரிசனம் 
என்றும் அன்புடன்
#சுப்ராம்_அருணாசலம் 
காரைக்கால்.

திருத்தலங்கள் தரிசனம் 2021 பேரளம் அருகே : மேனாங்குடி, அகிலாம்பேட்டை.

மேனாங்குடி
திருநள்ளாறு - கொல்லாபுரம் கடந்து பேரளம் சாலையில் உள்ள ஊர்.
ஊர் நடுவில் மிக அழகிய சிறிய ஆலயம். 
ஸ்ரீ நாகநாதர் ஸ்ரீ பிரத்யஷ்ட நாயகி, 
சுவாமி கிழக்குப் பார்த்தும், அம்பாள் தெற்கு நோக்கிய தனி சன்னதியும் உடையது.
தட்சிணாமூர்த்தி, விநாயகர், முருகர், சண்டிகேஸ்வரர், தனிதனி சன்னதிகள்.
ஆலயம் முன்பு தனி பஞ்சமுக தசபுஜ ஆஞ்சனேயர் சன்னதி உண்டு.
23.01.2021
#சிற்றூர்ஆலயதரிசனம் 
என்றும் அன்புடன்
#சுப்ராம்_அருணாசலம் 
காரைக்கால்,

அகிலாம்பேட்டை: 
1.பேரளம் - காரைக்கால் வழியில் பேரளத்திலிருந்து 500 மீ.தூரம் தாண்டினால் தெற்கில் பிரியும் சாலையில் 1 கி.மீ. தூரத்தில் உள்ள சிற்றூர்.
2. பேரளம் - நன்னிலம் சாலையில் வரும் பேரளத்திலிருந்து தெற்கில் 2 கி.மீ. இஞ்சிக்குடி வந்து இஞ்சிக்குடிக்கு கிழக்கில் 1. கி.மீ தூரத்தில் உள்ளது.
ஸ்ரீ ஜம்புநாதேஸ்வரர், ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி 
சிறிய சிவனாலயம்.
சுவாமி கிழக்குப் பார்த்தும், அம்பாள் தெற்கு பார்த்தும், தனி தனிக் கருவறைகள் இணைத்து, ஏக மண்டபம் ஆக கட்டியுள்ளார்கள்.
விநாயகர், முருகர் சுவாமி கருவரை வாசலில் உள்ளார்கள். எதிரில் நந்திபகவான். சிறிய சுற்று பிரகாரம்.
சிறிய ஆலயம். இஞ்சிக்குடியிருந்து அர்ச்சகர் வர வேண்டும். 
இவ்வாலயம் புனரமைக்கப்பட்டு, 02.04.2021 அன்று குடமுழுக்கு நடைபெற்றுள்ளது.
02.04.2021
#சிற்றூர்_ஆலய_தரிசனம் 
#சுப்ராம்_அருணாசலம்_காரைக்கால்

திருத்தலங்கள் தரிசனம் 2021 ஜனவரி விஷ்ணுபுரம்

விஷ்ணுபுரம் : பூந்தோட்டம் - நாச்சியார்கோவில் பிரதான சாலையில் வரும் எரவாஞ்சேரி அருகில் உள்ள சிற்றூர்.
இவ்வூரில் இரண்டு சிறப்பு சிவன்  ஆலயங்கள், ஒரு வைணவ ஆலயம், உள்ளன.
பிரதான சாலையின் வடக்கு புறம் இந்த ஆலயங்கள் உள்ளன.
அருகில் உள்ள திருவீழிமிழலையை புராணத்தை ஒட்டியது.
சப்தரிஷிகள் வணங்கிய சப்தஸ்தானங்களில் இரண்டு ஆலயங்கள் இவை:
1. தருமபுரீஸ்வரர், தருமாம்பிகை, தரும விநாயகர் அமைந்துள்ள ஆலயத்திற்கு முன்புறம் தருமர் அருள் பெற்ற தரும குளம் மிகப்பெரியது.
தருமர் வணங்கியதால் இது இப்பெயர்பெற்றது. இவ்வாலயம் வணங்கினால், மரண பயம் இல்லை
சிறிய ஆலயம், இராஜகோபுரம் இல்லை,
முன் மண்டபத்தில்  நந்தியுள்ளது.,
சுவாமி கிழக்கு நோக்கியும், அம்மன் தெற்கு நோக்கியும் ,உள்ளது.
பிரதோஷம் நடைபெறுகிறது.

2. ஸ்ரீ கைலாசநாதர் ஸ்ரீஅமுர்தேஸ்வரி.
கெளதம மகரிஷி  வணங்கியது.
சற்று பெரிய ஆலயம். ஊர் நடுவில் உள்ளது. நீண்ட முன்மண்டபம் நந்தி உள்ளது. உள் மண்டபத்தில் ஓவியங்கள் உள்ளன.
தென்புறம் பார்த்து அம்மன் சன்னதி
கிழக்கு நோக்கிய சுவாமி,
பிரகாரத்தில், தட்சினாமூர்த்தி, வினாயகர் முருகர், சண்டிகேஸ்வரர் தனி சன்னதிகள் உண்டு.
கற்கோவில். சிறப்பான வழிபாடுகள் நடைபெறுகின்றது. பிரதோஷ விசேஷ வழிபாடுகள் உண்டு.
இவ்வாலம் ஓட்டி நவீன பாபா ஆலயமும் வழி பாட்டில் உள்ளது.

3.வரதராஜ ஆலயம்.  மிகச் சிறிய ஆலயம், கிழக்கு நோக்கியது.
உள்புறம் சிறிய மண்படம் வினாயகர், ஆஞ்சநேயர் கருடன்
அக்ரஹாரம் ஒட்டி உள்ளதால் சிறப்பு வழிபாடுகள் உண்டு.
Jan.2021
#சிற்றூர்ஆலயம்
என்றும் அன்புடன்
#சுப்ராம்_அருணாசலம்_காரைக்கால்

https://m.facebook.com/story.php?story_fbid=5076904975718052&id=100001957991710

திருத்தலங்கள் தரிசனம் 2021 - - காரைக்கால் மாவட்டம் முப்பைத்தாங்குடி குடமுழுக்கு

முப்பைத்தங்குடி: 
திருநள்ளாறு மேற்கில் பேரளம் செல்லும் பிரதான சாலையில் வரும் தென்னங்குடி, அரசினர் கால்நடை மருந்தகம் அருகில் தெற்கில் பிரியும் சிறிய பாதையில் 1. கி.மீ சென்றால் முப்பைத்தாங்குடி என்னும் சிறிய கிராமத்தில் அமைந்துள்ள சிவன் ஆலயம்:
ஸ்ரீ கைலாசநாதஸ்வாமி, ஸ்ரீ காமாஷி அம்பாள் ஆலயம்.
சுவாமி, நந்தி, சிறப்பு. பழைய ஆலயம் முழுதும் முற்றிலும் சிதைந்துவிட்டதால்
புதியதாக  எல்லாசன்னதிகளும் அழகுற கட்டி 25-01-2021 அன்று கும்பாபிஷேகம் மிகச் சிறப்பாக நடைபெற்றுள்ளது.
புதிய உற்சவர்களும், வாங்கி சிறப்பு செய்துள்ளனர்.
ஆலயம் பின்புறம் குளம் உள்ளது. பிரதான சாலை குளத்திற்கும் ஆலயத்தின் மேற்குப் பகுதிக்கு இடையில் உள்ளது.
24.01.2021
#சிற்றூர்ஆலயம்
என்றும் அன்புடன்
#சுப்ராம்_அருணாசலம்_காரைக்கால்

Tuesday, January 19, 2021

திருத்தலங்கள் தரிசனம்: 1 ஜனவரி, 2021

1.01.2021
I. காரைக்கால் -  கொல்லாபுரம் - கும்பகோணம் சாலை

1. கொல்லாபுரம் 2.கிளியனூர். 
3. நல்லாவூர் 4. புதூர் 5.திருக்கொளம்பியம் 

II. ஆடுதுறை-கும்பகோணம் சாலை

6. ஆடுதுறை 7. பானபுரி 8. திருபுவனம்

III. 
 I. சுவாமிமலை.
Il. திருவலஞ்சுழி 

lV. கும்பகோணம் - (வடகரை) கோனேரிராஜபுரம் வழி

1.சிவபுரம் 2. ஐவர்பாடி
3.இளந்துறை 4. மல்லாபுரம் 5. வயலூர்.

🙇🙏🙇🙏🙇🙏🙇🙏🙇🙏🙇🙏🙇🙏🙇🙏
1. கொல்லாபுரம்: 
காரைக்கால் - பேரளம் பிரதான சாலையில் வரும் சிற்றூர். பஸ் நிறுத்தம் மிக அருகில். 
கிழக்கு பார்த்த சிவன், விஷ்ணு ஆலயம்.
வினாயகர், 
ஸ்ரீ அர்ச்சனேஸ்வரர், 
ஸ்ரீ வரதராஜபெருமாள்
ஸ்ரீ வினாயகர்
தனித்தனியாக இருப்பினும் ஏகமண்டபம்.. மேலும், சப்த கன்னியர், 
துர்க்கை, சன்டீஸ்வரர், கருடாழ்வார், ஹனுமார், மற்றும் தனி நவகிரகங்கள் மண்டபத்துடன் அமைக்கப்பட்டுள்ள ஆலயம்.
புராதான, பழமையான ஆலயம் சிதைந்துவிட்டதால் புதிய ஆலயமாக கட்டப்பட்டு முறையான வழிபாட்டில் உள்ளது.
(01.01.2021)
#சிற்றூர்ஆலயதரிசனம்
என்றும் அன்புடன்
#சுப்ராம்_அருணாசலம்
காரைக்கால்
❤️🙏❤️🙏❤️🙏
2. திருமெய்ஞானம் : 
காரைக்கால் கொல்லுமாங்குடி - கும்பகோணம் பிரதான சாலையில் கொல்லாபுரம் தாண்டி 5 கி.மீ. சென்றால் வரும் கிளியனூர் பேருந்து நிலையத்திலிருந்து தெற்கில் 500 மீட்டர் தூரம் சென்றால் கிழக்கு புரத்தில் உள்ள பழமையான ஆலயம்.
கிழக்குப் பார்த்த 3 நிலை ராஜகோபுரம். முன்மண்டபம் கொடிமரம் நந்தி சேர்த்தது.
உள் மண்டம், கருவறை முன் மண்படம் உள்ளிட்டது.
ஸ்ரீ ஞானபுரீஸ்வரர், ஸ்ரீ ஞானம்பிகை.
சுவாமி கிழக்கு பார்த்தும், அம்மன் தெற்குப் பார்த்தும், அமைக்கப்பட்டுள்ளது. ஒரு சுற்று பிரகாரம். தட்சிணாமூர்த்தி, சண்டிகேஸ்வரர் அமைந்துள்ளர்கள்.
சில ஆண்டுகளுக்கு முன்
இவ்வாலயத்தின் கருவரையில் உள்ள அம்மன் சிலையில் கிளி ஒன்று 2, 3 நாட்கள் தொடர்ந்து இருந்து வழிபட்டு, மிகுந்த பரபரப்பாக இருந்தது.
2003 ல் கடைசியாக குடமுழுக்கு நடைபெற்றுள்ளது.
(01.01.2021)
#சிற்றூர்ஆலயதரிசனம்
என்றும் அன்புடன்
#சுப்ராம்_அருணாசலம்
காரைக்கால்
❤️🙏❤️🙏❤️🙏

3. நல்லாவூர்
காரைக்கால்- கும்பகோணம் பிரதான சாலையில் வரும் பாலையூர் கடந்து காஞ்சி வாய் என்ற பேருந்து நிறுத்தம் அருகில் தெற்கில் பிரியும் பாலம் கடந்து 500 மீ. தூரத்தில் கிழக்குப் பார்த்த ஆலயம். அருகில் பாபா ஆலயம் பிரசித்தமாக தற்போது உள்ளது.
தேவார வைப்பு தலம்.
ஸ்ரீ பசுபதீஸ்வரர் மற்றும் ஸ்ரீனிவாச பெருமாள் (பெரிய உருவம்), சௌந்தரநாயகி அணைத்தும் கிழக்கு நோக்கி தனிதனி சன்னதி. மேலும், வினாயகர், தெட்சிணாமூர்த்தி, முருகன், சண்டிகேஸ்வரர், நவகிரகங்களும் உள்ளது. வடகிழக்கு புறத்தில் சிவலிங்கம், பைரவர், சூரியன், சந்திரன் அமைந்துள்ளது.
நல்ல பராமரிப்பில் உள்ள ஆலயம்.
(01.01.2021)
#சிற்றூர்ஆலயதரிசனம்
என்றும் அன்புடன்
#சுப்ராம்_அருணாசலம்
காரைக்கால்
❤️🙏❤️🙏❤️🙏

4.  S.புதூர். :
காரைக்கால் - கொல்லுமாங்குடி - கும்பகோணம் சாலையில் உள்ள முக்கிய ஊர். 
இவ்வூரின் வடக்கு புறத்தில், திருக் கொளம்பியம் சாத்தனூர், திருவாடுதுறை முதலிய ஊர்களும், தெற்கு புறத்தில் கோனேரிராஜபுரம் முதலிய ஊர்களும் அமைந்துள்ளன.

ஊரின் வடக்குப்புறம் பிரியும் சாலையில் 200 மீ.தூரத்தில் உள்ள மேற்கு பார்த்தசிவன் ஆலயம்
ஸ்ரீ சனத்குமரேஸ்வரர், ஸ்ரீ சௌந்தரநாயகி ஆலயம்.
தேவார வைப்புத்தலம்.
குரு மிகவும் பிரசித்தம்.
ஆலயம் அமைதியான சூழலில் பிரகாரத்தில் மரங்கள் சூழ அமைந்துள்ளது. முன் மண்டபம் வினாயகர், முருகன் சிறிய சன்னதிகள்.
அம்மன் தெற்கு பார்த்தும் அமைந்துள்ளர்.
கருவரை, முன் மண்டபத்துடன் உள்ளது. முன்மண்டபத்தின் நுழைவில், தலவரலாற்றுடன் அமைந்துள்ளது.
ஒரு பிரகாரம் மட்டுமே.
தெற்கு பிரகாரத்தில் அமைந்துள்ள குருவிற்கு விஷேச பூசைகள் உண்டு.
பராமரிப்பில் உள்ள ஆலயம்.
(01.01.2021)
#சிற்றூர்ஆலயதரிசனம்
என்றும் அன்புடன்
#சுப்ராம்_அருணாசலம்
காரைக்கால்
❤️🙏❤️🙏❤️🙏

5. திருக்கொளம்பியம்: 
1. காரைக்கால் - கும்பகோணம் வழித்தடத்தில் வரும் 
S.புதூர் என்ற ஊர் வந்து வடக்கில் செல்லும் சாலையில் 2 கி.மீ. தூரம்.

2. திருவாடுதுறை ஆலயத்திலிருந்து தெற்கில் செல்லும் சாலையில் 1கி.மீ வந்து வீர சோழன் ஆற்று பாலம் கடந்து மல்லபுரம் வந்து, அங் இருந்து தெற்கில் 1.5 கி.மீ வரலாம்.

திருக்கொளம்பியம் சிறிய கிராமம். 
ஸ்ரீகொளம்பிய நாதர், ஸ்ரீ கோகர்னேஸ்வரர், ஸ்ரீ சௌந்தரநாயகி புராதான,
பாடல் பெற்ற அருட்தலம்.
ஆலயம் முன் புன்னிய தீர்த்தம்.
 இராஜகோபுரம், கொடிமரம் தாண்டினால், தெற்கு நோக்கிய அம்பாள் சன்னதி தரிசனம். அடுத்து உள்ள உள் கோபுரம் கடந்தால் கற்றளி ஆலயம், முன்மண்டபம், 
உள் மண்டபம் கடந்தால் கருவறையில் கிழக்கு நோக்கிய அருள்தரும் சுவாமி வணங்கலாம்.
கருவரை சுற்றில், தட்சினாமூர்த்தி, பிரகாரம் விநாயகர், சண்டிகேஸ்வரர். தனிசன்னதி.
ஏராளமான கல்வெட்டுகள்.
அற்புத சிவாலயம். பழமை மாறாமல், அமைதியான சூழலில் உள்ள பாடல் பெற்ற தலம்.
பகலில் மெய்காவலர் உண்டு. தரிசிக்கலாம்.
(01.01.2021)
#சிற்றூர்ஆலயதரிசனம்
என்றும் அன்புடன்
#சுப்ராம்_அருணாசலம்
காரைக்கால்
❤️🙏❤️🙏❤️🙏
 II. ஆடுதுறை-கும்பகோணம் சாலை

6. ஆடுதுறை/தென்குரங்காடுதுறை:

மயிலாடுதுறை - கும்பகோணம் பிரதான சாலையில் உள்ள ஊர். பேருந்து நிலையத்திலிருந்து தென்புறம் 700 மீ. தூரத்தில் அமைந்துள்ள கிழக்கு பார்த்த திருக்கோவில்.
திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், அருணகிரிநாதர் முதலியவர்களால் பாடப்பெற்ற திருத்தலம்.
சுவாமி : ஆபத்சகாயேஸ்வரர், பவளக்கொடியம்மை
வாலி, வழிபட்ட இடம்.
அகத்தியர் வழிபாடு சிறப்புடன் நடைபெறுகிறது.
மூன்று நிலை ராஜகோபுரம் கொடிமரம் முன் மன்டபம் தொடர்ந்து, அம்பாள் தெற்குநோக்கி தனி சன்னதி, சுவாமி தனி முன், நடு,மண்டபம், உள் மண்டம், கடந்து கருவறையில் கிழக்கு நோக்கி அருளுகிறார்.
கருவறை சுற்றில் அமைந்துள்ள கம்பீரமான அகத்தியர் சிறப்பு வழிபாடு. தொடர்ந்து பல்வேறு அழகிய அற்புத சிற்பங்கள் கருவறை சுவற்றின் மேல்பகுதியில் காணலாம். பிரகாரத்தில் தனி வினாயகர், சுப்ரமணியர், திருப்புகழ் பாடப்பெற்றது. துர்க்கை அம்மன் தனி சன்னதி அமைக்கப்பட்டு சிறப்பு வழிபாடு உண்டு.
துர்க்கை அருகில் காரைக்கால் அம்மையார் ஈசனை வழிபடும் தனி சிற்பம் கருவறை சுவற்றில் உள்ளது.
சண்டிகேஸ்வரர் தனி சன்னதி.
பக்தர்களால் சிறப்பாக வழிபடபெற்று வரும் ஆலயங்களில் இதுவும் உண்டு.
(01.01.2021).
#சிற்றூர்_ஆலய_தரிசனம்.
🙇🏼🙏🙇🏼🙏🙇🏼🙏
என்றும் அன்புடன்
#சுப்ராம்_அருணாசலம்
காரைக்கால்.
🙏❤️🙏❤️🙏❤️🙏

7. வாணபுரம் : 
மயிலாடுதுறை - குத்தாலம் - ஆடுதுறை தாண்டி வரும் கோவிந்தபுரம் அருகில் தென்புறம் செல்லும் சாலை 1 கி.மீ.தூரத்தில் உள்ள ஊர்.
ஸ்ரீ பானபுரீஸ்வரர், ஸ்ரீ அபிராமி ஆலயம்.
சிறப்பான சிறிய ஆலயம். 
3 அடுக்கு இராஜகோபுரம் தாண்டி சிறிய முன் மண்டபம் அடுத்துள்ள நடுமண்டபத்திலிருந்து சுவாமி, அம்பாள் ஒரு சேர தரிசிக்கும் அமைப்பில் பெரிய அளவில் உள்ளது.
சுவாமி மேற்கு பார்த்தும் அம்பாள் தெற்குநோக்கியும் அமைந்து அருள் பாலிக்கின்றனர்.

ஒரே பிரகாரம் உள்ளது.
திருவாடுதுறை ஆதீனத்திற்குரிய ஆலயம்

பராமரிப்பில் உள்ள ஆலயம்.
(01.01.2021)

#சிற்றூர்ஆலயதரிசனம்
🙇🏼🙏🙇🏼🙏🙇🏼🙏
என்றும் அன்புடன்
#சுப்ராம்_அருணாசலம் 
காரைக்கால்.
❤️🙏❤️🙏❤️🙏

8. திருபுவனம்: 
ஸ்ரீ கம்பகரேஸ்வரர் ஸ்ரீ பெரியநாயகி அம்பாள், ஸ்ரீ சரபேஸ்வரர்
அருள்தரும் ஆலயம்
சிற்ப அற்புதம். தமிழரின் பெருமை உணர்த்தும், வரலாற்று சிறப்புள்ள மிகப்பெரிய ஆலயம்.
கட்டாயம் தரிசிக்க வேண்டிய அற்புத ஆலயங்களில் ஒன்று.
(01.01.2021)
#அற்புதத்திருத்தலங்கள்
#சிற்றூர்ஆலயதரிசனம்
🙇🏼🙏🙇🏼🙏🙇🏼🙏
என்றும் அன்புடன்
#சுப்ராம்_அருணாசலம்
காரைக்கால்
❤️🙏❤️🙏❤️🙏

I.  சுவாமிமலை:
அற்புத முருகனின் ஆறுபடைவீடு.
01.01.2021

#சிற்றூர்ஆலயதரிசனம்
என்றும் அன்புடன்
#சுப்ராம்_அருணாசலம்
காரைக்கால்
❤️🙏❤️🙏❤️🙏https://m.facebook.com/story.php?story_fbid=4958343027574248&id=100001957991710

II.  திருவலஞ்சுழி :
கும்பகோணம் - தஞ்சாவூர் பிரதான சாலையில் அமைந்துள்ள ஊர். இவ்வூர் பேருந்து நிறுத்தம் அருகில் வடக்கில் பிரியும் சுவாமிமலை செல்லும் சாலையில் உள்ள மிகப் பெரிய கற்றளி ஆலயம். 
சுவாமி : கம்பகரேஸ்வரர்
அம்பாள்: பெரியநாயகி
தேவாரத்தலம்
திருப்புகழ் தலம்.
வலம்புரி விநாயகர்
சோழ அரசர் வணங்கிய காளி
ஏரகண்ட முனிவர்
துர்வாச முனிவர் வணங்கிய லிங்கங்கள்
கிழக்கு நோக்கிய தனி சனிஸ்வரர் 

இராஜகோபுரம் தாண்டி உள்ளே சென்றால், வலதுபுரம் தீர்த்தக் குளம். குளக்கரையில் வினாயகர் தனி சன்னதி. அடுத்துள்ள அலங்கார அமைப்புடன் அமைந்துள்ள கோபுரம். 
அடுத்து வரும், கொடிமரம், அடுத்துள்ள தனி அழகிய கருங்கல் சிற்பங்கள் சிறப்புள்ள அழகு மன்டபம் அடுத்து உள்ள சிறிய சன்னதியில் வெள்ளை நுறையில் அமைந்துள்ள சிறிய பிரசித்திபெற்ற வலஞ்சுழி விநாயகர். 
திருவிடைமருதூர் மகாலிங்கசுவாமிகள் ஆலயத்திற்கு தொடர்புள்ள புராணத்தில் வருபவர்.
இவ்வாலயம் மிகப்பெரியது.
அடுத்து வரும் அழகிய கோபுரம் தாண்டினால் நீண்ட வெளி, உள், நடு, மண்டபங்கள் தாண்டினால் வரும் கருவரையில் சுவாமி கிழக்கு நோக்கி அருள்பாலிக்கின்றார்.
கருவறை சுற்றில் விநாயகர், தெட்சினாமூர்த்தி, துர்க்கை, சண்டிகேஸ்வரர். அருகில் ஏரகண்ட முனிவர். 
ஆலய தென்புறம் சுற்றில் ஏராளமான லிங்கங்கள். சப்தமாதர், விநாயகர், 
வடபுறம் முனிவர்கள் பூசித்த லிங்கங்கள்.
கருவறை சுற்றின் கிழக்குப் பகுதியில், தனி சனிஸ்வரர் சன்னதி.

சுவாமி ஆலயத்தின் தென்புறம் பெரியநாயகி அப்பாளுக்கு தனி ஆலயம்.
உள்ளே இடதுபுறம் அமைந்துள்ள புராதானமான காளி, மிக சக்தியுடையது. பெரிய கற்சிலை அமைப்பு. 
இன்னும் புராதான சிறப்பு மிக்க 
பல கலைச்செல்வங்களும் கல்வெட்டுகளும் ஆலயத்தில் உள்ளன.
(01.01.2021)
#அற்புதத்திருத்தலங்கள்
#சிற்றூர்ஆலயதரிசனம் 
🙇🙏🙇🙏🙇🙏
என்றும் அன்புடன்
 #சுப்ராம்_அருணாசலம்
காரைக்கால்.
🙏🔱🙇🙏🔱🙇🙏

lV. கும்பகோணம் -சிவபுரம் முதல்
 (வடகரை) கோனேரிராஜபுரம் வழி

1.சிவபுரம்
கும்பகோணம் கிழக்கு சுற்றுப்பாதை (Bye pass) வழியில் பிரதான சாலையிலிருந்து 1 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ள சிறிய ஊரில் உள்ள தேவார பாடல் பெற்ற தலம்.
ஸ்ரீ சிவகுருநாதஸ்வாமி
ஸ்ரீ சிங்காரவல்லி அம்மன்.
விஷ்ணு வெண்பன்றி அவதாரம் எடுத்து சுவாமியை வணங்கி அருள் பெற்ற வரலாறு தலம்.
பைரவர் தனி சன்னதி மிகவும் பிரசித்தமாக வழிபாடுகள் நடைபெறும் ஆலயம்.

அழகிய இராஜகோபுரம் கடந்து விசாலாமான பிரகாரத்தில் கொடிமரம், நந்தி தாண்டினால் பெரிய மண்டபம் 
அம்பாள் தெற்கு நோக்கிய தனி சன்னதி
அடுத்து சுவாமிக்கு உள் மண்டபம், நடுமண்டபம் தாண்டி கருவரையில் கிழக்கு நோக்கிய சுவாமி சன்னதி.
வெளிமண்ட சுவற்றில் பெருமான் பன்றி வடிவத்துடன் சென்று பூசித்த காட்சி கல்லில் வடிவமைத்துள்ளது.
தட்சினாமூர்த்தி, வினாயகர், சுப்பிரமணியர், மகாலெட்சுமி சண்டிகேஸ்வரர், தனி தனி சன்னதியுடன். அமைந்துள்ள கற்றளி ஆலயம். நகரத்தார் கட்டியது.
சில ஆண்டுகளுக்கு முன் குடமுழுக்கு நடைபெற்றதால், ஆலயம் பளிச்சிட்டுள்ளது.

 சுற்று தூண்களை பாதுகாக்க, வேட்டி, துணிகளை சுற்றி வைத்துள்ளார்கள்.

பைரவர் தெற்கு நோக்கி தனியான சன்னதியில் அமைந்துள்ளார்.
ஆலயம் நல்ல பராமரிப்பில் உள்ளது.
(01.01.2021)
#அற்புதத்திருத்தலங்கள் 
#சிற்றூர்_ஆலய_தரிசனம் 
என்றும் அன்புடன்
#சுப்ராம்_அருணாசலம் 
காரைக்கால்.
🙏🙇🏼🛕🙇🏼🔱🙇🏼🙏

2. அய்யாவாடி / ஐவர் பாடி:
அய்யாவாடி என்று வழக்கில் உள்ள ஐவர்பாடி என்னும் சிற்றூர். 
இங்கு உள்ள மிகவும் பிரபலமான ஸ்ரீ மகா மகாபிரிங்கா தேவி ஆலயம். ஆலயத்தின் ஒரு பகுதியில் ஸ்ரீ அகத்தீஸ்வரர் சிவன் ஆலயம் உள்ளது.
1.திருநாகேஸ்வரம், ஒப்பிலியப்பன் ஆலயம் வந்து, அங்கிருந்து தெற்கில் உள்ள நாச்சியார்கோயில் வழியில் உள்ள ஒரு சிற்றூர்.
2. கிழக்கில் அம்மன்குடி, தண்டந்தோட்டம், இளந்துறை, முதலிய தலங்களும்,
மேற்கில் சிவபுரம் என்னும் தேவார பாடல் பெற்ற தலங்களும் சூழ இயற்கையான அமைப்பில் உள்ள ஊர். தெற்கில் அரசலாறும், வடக்கில் நாட்டாரும் உள்ளன.
ஸ்ரீ மகா பிரித்தியங்கரா ஆலயம் மிக மிக சக்திவாய்ந்தது. நிகும்பல யாகம் அம்மாவாசைகளில் மிக சிறப்பாக நடைபெற்று வருகிறது. ஏராளமானோர் வந்து வணங்குகிறார்கள்.
ஆலயம் மேலும் மேலும் சிறப்படைந்து புதிய கட்டுமானங்களில் பக்தர்கள் பங்குபெற்று வருகிறார்கள்.
தனியார் பராமரிப்பில் உள்ள ஆலயம்.

ஸ்ரீமகாப்ரத்யங்கரா தேவியை பஞ்சபாண்டவர்கள் ஐவர் யாகம் அமைத்து வழிபட்டு, இழந்தவற்றையெல்லாம் பெற்றதாக புராண வரலாறு சிறப்பு உண்டு.
ஸ்ரீ மகாப்ரத்யங்கரா தேவி வடக்கு நோக்கி அமர்ந்து அருள் தருகிறார். முன்புறம் நிகும்பல யாக மண்டபம் அமைத்துள்ளார்கள்.
அடுத்து அமைந்துள்ள
ஸ்ரீ அகத்தீஸ்வரர் சிவன் ஆலயமும் மிகவும் புராதனமானது. 
ஸ்ரீஅகத்தீஸ்வரர் சன்னதி கிழக்கு நோக்கியும், அம்மன் சன்னதி தெற்கு நோக்கியும் அமைந்துள்ளது.
ஒரு பெரிய மண்டபத்துடன் இணைக்கப் பட்டுள்ளது.
பிரகாரத்தில், தட்சினாமூர்த்தி, தனி விநாயகர், சண்டிகேஸ்வரர் சன்னதிகளும் நிறைந்த மிகப்பழமையான ஆலயம். 
ஸ்ரீ மகா ப்ரத்யங்கரா தேவி ஆலயத்துடன் இணைந்து நல்ல முறையில் பராமரித்து, பூசைகள் நடைபெற்று வருகிறது.
ஆலயம் அமைந்துள்ள பகுதியே, இயற்கை வளத்துடன் அமைந்துள்ளது.
பெருஞ்செல்வர்கள், பிரபலங்கள், அரசியல்வாதிகள் பல யாக பூசைகள் செய்து வருவதாலும், தனியார் கட்டுப்பாட்டில் இருப்பதாலும்,
ஆலயம் நல்ல பராமரிப்பில் உள்ளது.
(01.01.2021)
#அற்புதத்திருத்தலங்கள் 
#சிற்றூர்_ஆலய_தரிசனம் 
என்றும் அன்புடன்
#சுப்ராம்_அருணாசலம் 
காரைக்கால்.
🙏🙇🏼🛕🙇🏼🔱🙇🏼🙏

3. இளந்துறை
#தேவாரவைப்புத்தலம்.
வழி:
1. குடந்தை-காரைக்கால் சாலையில் வரும் திருநீலக்குடி (பாடல் பெற்ற தலம்) வந்து, தென்புறம் விட்டலூர் செல்லும் சாலையில் 1 கி.மீ. சென்றால், அபிஷேகபுரம் - வடகரை சாலையில் மேற்கில் திரும்பி 1. கி.மீ.யில் வரும் சிறிய ஊர்.

2. திருநாகேஸ்வரம் - ஒப்பிலியப்பன் கோயில், தெற்கில் உள்ள அய்யாவாடி என்ற ஐவர்பாடி என்ற ஊரிலிருந்து கிழக்கில் வடகரை செல்லும் சாலையில்
 2.கி.மீயில் இளந்துறை செல்லலாம்.

இலந்தை வனத்தில் அமைந்த ஆலயம் என்பதால் இளந்துறை என்பது புராணம்.
சோழர் கால கற்கோவில்களில் இதுவும் ஒன்று.

ஸ்ரீ சுந்தரேஸ்வரர் கிழக்குப் பார்த்தும், ஸ்ரீ அபிராமி தெற்கு நோக்கியும் அமைந்துள்ளது.
ஆலயம் முன்புறம் நீண்ட தீர்த்தக்குளம் உள்ளது. ஆலயம் முன்பு குளம் ஒட்டி ஆலயத்திற்கு இடதுபுரத்தில் ஒரு சிவலிங்க தனி சன்னதியும் உள்ளது.
ஆலயம் மூன்று அடுக்கு இராஜகோபுரம் அமைந்துள்ளது. உள்புறம் நந்தி கொடிமரம் தாண்டினால் அடுத்துவரும் முன் மண்டபம். தென்புறம் பார்த்த அம்பாள் சன்னதியும் உள்ளது. 
சுவாமி கிழக்குப் பார்த்த அமைப்பு,
நடுமண்டபமும், கருவரையும் உள்ளது.

சுற்றுப் பிரகாரத்தில் தட்சினாமூர்த்தி. மேற்கில் நீண்ட மண்டபத்தில் 
அழகிய பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவியுடன் அமர்ந்துள்ளர்கள். அடுத்துள்ள பிரதான விநாயகர் வாகன மண்டபம், முருகன், மகாலெட்சுமி சன்னதிகளும், வடக்குப்புறம் துர்க்கை தனி சன்டிகேஸ்வரர் சன்னதி, நவ கிரகங்கள் அமைந்துள்ளது.

செவ்வாய் தோஷம் போக்கும் தலம்,
கார்த்திகை கடை செவ்வாய் கிழமையில் தீர்த்தவாரி உற்சவம் சிறப்பு.

ஆலயம் பராமரிப்புடன் பூசை நடைபெற்று வருகிறது.

(01.01.2021)
#தேவாரவைப்புத்தலம்
#சிற்றூர்_ஆலய_தரிசனம் 
என்றும் அன்புடன்
#சுப்ராம்_அருணாசலம் 
காரைக்கால்.
🙏🙇🏼🛕🙇🏼🔱🙇🏼🙏

4. மல்லபுரம் :
கோனேரிராஜபுரம் அருகில் உள்ள வடகரை யிலிருந்து மேற்கில் 2 கி.மீ. தூரத்தில் உள்ள சிற்றூர்.

2. திருநீலக்குடி - கொத்துக் கோவில் வழியாகவும் வரலாம்.

சாலையிலேயே வரும் 
சிறிய ஆலயம். இராஜ கோபுரம் பதிலாக சுவாமி அம்பாள் காட்சி தரும் மண்டப முன் முகப்பு.

ஸ்ரீ விருபாஷிஸ்வரர் ஸ்ரீ பார்வதி அம்மன்.
ஓரே மண்டத்தில் சுவாமி அம்பாள் தரிசனம் செய்ய முடியும். 
சுற்று பிரகாரத்தில் தட்சினாமூர்த்தி, தனி வினாயகர், மற்றும் மேற்கு புற நீண்ட மண்டத்தில் முருகன் தனி சன்னதி, மகாலட்சுமி,
சண்டிகேஸ்வரர், தெற்கு பார்த்து பெரிய பைரவர் தனி சன்னதிகள் உள்ளன.

துர்க்கை அழகுடன் மிக கம்பீர அமைப்பு சிறப்பு.

ஆலயம் பராமரிப்புடன் பூசை நடைபெற்று வருகிறது.

(01.01.2021)
#சிற்றூர்_ஆலய_தரிசனம் 
என்றும் அன்புடன்
#சுப்ராம்_அருணாசலம் 
காரைக்கால்.
🙏🙇🏼🛕🙇🏼🔱🙇🏼🙏
4. மல்லபுரம் :
கோனேரிராஜபுரம் அருகில் உள்ள வடகரை யிலிருந்து மேற்கில் 2 கி.மீ. தூரத்தில் உள்ள சிற்றூர்.

சாலையிலேயே வரும்
சிறிய ஆலயம். இராஜ கோபுரம் பதிலாக சுவாமி அம்பாள் காட்சி தரும் மண்டப முன் முகப்பு.

ஸ்ரீ விருபாஷிஸ்வரர் ஸ்ரீ பார்வதி அம்மன்.
ஓரே மண்டத்தில் சுவாமி அம்பாள் தரிசனம் செய்ய முடியும்.
சுற்று பிரகாரத்தில் தட்சினாமூர்த்தி, தனி வினாயகர், மற்றும் மேற்கு புற நீண்ட மண்டத்தில் முருகன் தனி சன்னதி, மகாலட்சுமி,
சண்டிகேஸ்வரர், தெற்கு பார்த்து பெரிய பைரவர் தனி சன்னதிகள் உள்ளன.

துர்க்கை அழகுடன் மிக கம்பீர அமைப்பு சிறப்பு.

ஆலயம் பராமரிப்புடன் பூசை நடைபெற்று வருகிறது.

(01.01.2021)
#சிற்றூர்_ஆலய_தரிசனம்
என்றும் அன்புடன்
#சுப்ராம்_அருணாசலம்
காரைக்கால்.
🙏🙇🏼🛕🙇🏼🔱🙇🏼🙏

5. வயலூர் :
கோனேரிராஜபுரத்திலிருந்து வடகரை வந்து மேற்கில் 2 கி.மீ.தூரத்தில் அமைந்துள்ள சிற்றூர். சாலையில் அமைந்துள்ள தனி பெரிய விநாயகர் ஆலயத்திலிருந்து தெற்கில் பிரியும் சாலையில் ஊர் வந்தால் கிழக்குப் பார்த்த ஒரு சிவன் ஆலயம், மற்றும் ஒரு பெருமாள் ஆலயமும் இணைந்துள்ளது. முன்புறம் பெரிய தீர்த்தக்குளம் உள்ளது.
ஸ்ரீ கார்கோடஸ்வரர்.
 ஸ்ரீ மங்களாம்பிகை
சிறிய முன்வாசல் கோபுரம் தாண்டி உள்ளே நீண்ட மண்டபம் அடுத்து தென்புறம் பார்த்து அம்மன் சன்னதி, தனி கருவறை மண்டபத்தில் கிழக்கு நோக்கிய சுவாமியும் உள்ளனர்.
சுற்றில் தனி வினாயகர்.
கருவறை தென்புறம் தெட்சினாமூர்த்திக்கு சற்று முன்பாக கார்கோடகர் சுவாமியை வழிபடும் சிற்பம் அமைந்துள்ளது. 
முருகன் துர்க்கை, சன்டிகேஸ்வரர் சன்னதியும் அமைந்துள்ளது. சுவாமி ஆலயம் ஓட்டியே, வடபுறத்தில்
வரதராஜ பெருமாள் தனியாக ஒரு ஆலயமும் உள்ளது.
மிகப்புராதானமான ஆலயம் இருந்து சிறைந்து போய், தற்போது புதிதாக அழகாக அமைத்துள்ளனர்.
ஆலய சிறப்பை இவ்வூர் சார்ந்த மிக உயர்ந்த நிலையில் தற்போது உள்ள ஆகம பண்டிதர் எழுதிய ஆலய சிறப்பை இவ்வாலயத்திலேயே வைத்துள்ளனர்.
மிக அருகாமையில் சிவாச்சாரியார் உள்ளார். உள்ளன்போடு அனுகுகிறார்.
ஆலயம் பராமரிப்புடன் பூசை நடைபெற்று வருகிறது.

(01.01.2021)
#சிற்றூர்_ஆலய_தரிசனம்
என்றும் அன்புடன்
#சுப்ராம்_அருணாசலம்
காரைக்கால்.
🙏🙇🏼🛕🙇🏼🔱🙇🏼

Monday, January 18, 2021

அகத்தியர் மலை பற்றிய சில தகவல்கள்

பொதிகை மலை
நெல்லை மாவட்டம் பாபநாசம் மலைக்கு மேலே முண்டந்துறை புலிகள் காப்பக வனப்பகுதியில் பொதிகை மலையின் உச்சியில் 6150 அடி உயரத்தில் தவமிருக்கும் அகத்தியரை வழிபட முண்டந்துறை, பாபநாசம், பாணதீர்த்தம் அருவியின் மேற்பகுதி வழியாக இஞ்சிக்குழி, கண்ணிகட்டி, பூங்குளம் வழியாக பக்தர்கள் சென்று வந்தனர். இந்த வழித்தடத்தில் பக்தர்கள் சென்று வர கடந்த 1998ம் ஆண்டு தமிழக வனத்துறை அனுமதி மறுத்து விட்டது. சில கட்டுப்பாடுகளுடன் மீண்டும் 1999ல் பொதிகை மலை செல்ல அனுமதி வழங்கியது. இந்நிலையில், 2009ல் தமிழக வனத் துறை தமிழகம் வழியாக பொதிகை மலைக்குச் செல்ல நிரந்தரமாக அனுமதி மறுத்ததுடன், கேரளா வழியாக அகத்திய மலைக்கு செல்ல அறிவுறுத்தியது. இதையடுத்து கேரள வனத்துறையினர் தங்களது கட்டுப்பாட்டில் உள்ள வனப்பகுதி வழியாக சூழலியல் சுற்றுலாவாக ஜனவரி முதல் ஏப்ரல் வரை அகத்தியர் மலைக்கு பக்தர்கள் சென்று வர அனுமதி வழங்குகின்றனர். இதற்காக கேரள மாநிலம் திருவனந்தபுரம்  வட்டியூர் காவு பிடிபி நகரிலுள்ள வனத்துறை அலுவலகத்தில் அகஸ்தியர் கூடம் செல்வதற்கு அனுமதி வழங்கப்படுகிறது.

திருவனந்தபுரத்தில் இருந்து நெடுமங்காடு - விதுரா - போனகாடு பஸ்சில் பயணிக்கலாம். காலை 6 மணி முதல் இரண்டு மணி நேரத்துக்கு ஒரு பஸ் இயக்கப்படுகிறது. இல்லாவிடில் நெடுமங்காடு சென்று அங்கிருந்தும் போனக்காடு செல்லலாம். பஸ் நிறுத்தத்தில் இருந்து சுமார் 4 கிலோ மீட்டர் தூர பயணத்தில் வன இலாகா அலுவலகத்தை அடையலாம். போனக்காட்டிலுள்ள வனத்துறை சோதனை மையத்தில் அனுமதிச் சீட்டு பெற்று பயணம் துவங்கலாம். தனியாக யாரையும் இங்கு மலையேற அனுமதிப்பதில்லை. ஒவ்வொரு குழுவாகவே அனுமதி வழங்கப்படுகிறது. இதற்காக வனத்துறையினர் ஏற்பாடு செய்துள்ள வழிகாட்டியுடன் மூன்று நாள் பொதிகை மலை நடைப்பயணம் தொடங்கும்.
முதல் அரைமணி நேரப்பயணத்தில் முதலில் விநாயகர் கோயிலை அடையலாம். அங்கிருந்து சுமார் ஒரு மணி நேர பயணத்தில் கரமனையாறு என்ற இடத்தை அடையலாம். பகலையே இரவு போல் காட்டும் அடர்ந்த வனப்பகுதி இங்கிருந்துதான் தொடங்குகிறது. இந்த வழித்தடத்தில் சுமார் 6 மணி நேரம் நடந்து சென்றால் அதிருமலை எஸ்டேட் என்ற இடம் நம்மை வரவேற்கும்.

அங்கு கேரள வனத்துறையினர் பக்தர்கள் தங்குவதற்காகக் கட்டியுள்ள அதிருமலை கேம்ப் ஷெட்டில் முதல் நாள் இரவு தங்க வைக்கப்படுவர். மறுநாள் காலை  அதிருமலையின் காவல் தெய்வத்தை வணங்கி விட்டு மீண்டும் நடைபயணம் தொடங்குகிறது. சுமார் 1 மணி நேர நடைப்பயணத்தில் பொதிகை மலையின் அடிவாரத்தை அடையலாம். அங்கு சிறிது நேரம் ஓய்வு, அங்குள்ள தென் பொதிகை மானசரோவரில் சிறு குளியலை முடித்துவிட்டு மீண்டும் நடைபயணம் தொடர்ந்தால் 15 நிமிடத்தில் தமிழக வனப்பகுதி எல்லையான சங்கு முத்திரை என்ற இடம் வரவேற்கும்.  இது கடல்மட்டத்தில் இருந்து சுமார் 4,000 அடி உயரம் கொண்டது. சங்கு போன்ற அமைப்பை உடையதால் இப்பெயர். கேரளத்தினர் இப் பகுதியை பொங்காலைப்பாறை என்று கூறுகின்றனர். (கேரளத்தவர்கள் இங்கு வந்து பொங்கலிட்டு, அகத்தியரை வழிபடுவதால் இந்த இடம் பொங்காலைப்பாறை என்றழைக்கப்படுகிறது.

இச்சங்கு முத்திரை வனப்பகுதியின் மற்றொரு புறம் உள்ள கிடுகிடு பள்ளத்தாக்கில் வற்றாத ஜீவநதியான பொருநை என்று அழைக்கப்படும் தாமிரபரணி உற்பத்தியாகும் ‘பூங்குளம்’ என்ற சுனை தெரியும். நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர் என 4 மாவட்ட மக்களின் குடிநீர், விவசாயத்திற்கு ஜீவநாடியாக விளங்கும் அகத்தியர் தந்த தாமிரபரணியின் பிறப்பிடத்தை கண் குளிர தரிசித்து வணங்கி விட்டு பொதிகை மலை பயணத்தை தொடர வேண்டும். செங்குத்தான பகுதியில் மலையில் கட்டப்பட்டுள்ள கயிறு  (ரோப்) பிடித்துக் கொண்டு  கவனத்துடன் ஏறிச் சென்றால் கடல்மட்டத்தில் இருந்து சுமார் 6350 அடி உயரமுடைய பொதிகை மலை சிகரத்தை அடையலாம்.
அங்கு சிறு சோலையில் குறுமுனிவர் அகத்தியரின் ஏகாந்த சிலையை தரிசிக்கும்போது, சிரமப்பட்டு மலை ஏறிவந்த எண்ணங்கள் எல்லாம் மறந்து, இந்த தரிசனத்துக்குத்தானா இப்பிறவி எடுத்தோம் என்ற பரவச நிலை பக்தர்களுக்கு ஏற்படும்.

ஆனைமலைத் தொடரின் ஒரு பகுதியாகவும், மகேந்திரகிரி மலை, முண்டந்துறை வனப்பகுதியின் தலையைப் போலவும் விளங்கும் பொதிகை மலை உச்சியில் திடீர், திடீரென வெயிலும் சில நேரங்களில் உடலை நடுங்கச் செய்யும் பலத்த குளிர்காற்றும், சில நேரம் மழையும், சாரலும் பெய்யும். மனம் நிறைந்த ஆனந்த அனுபவத்துடன் அகத்தியரை வழிபாடு செய்த பின் மீண்டும் பயணம் தொடங்குகிறது. மலை ஏற்றத்தைப் போலவே மிகவும் கவனமாக கீழே இறங்கத் தொடங்கி, மூன்று மணி நேரம் நடந்தால் மீண்டும் அதிருமலை கேம்ப் ஷெட்டை அடையலாம். அங்கு உணவருந்தி விட்டு, அன்று இரவும் அங்கேயே தங்கி விட்டு, மூன்றாம் நாள் காலையில் அதிருமலை காவல் தெய்வத்தையும், பொதிகை சிகரத்தையும் வணங்கிவிட்டு சுமார் 5 மணி நேரம் நடந்தால் போனக்காடு பிக்கெட் ஸ்டேஷனில் பொதிகை மலை பயணம் நிறைவு பெறும்.

இந்த மூன்று நாள் பயணத்தின்போதும் சுத்தமான காற்று, மூலிகை கலந்த நீர், இவையெல்லாம் விட செல்போன் தொந்தரவே இல்லாமல் பார்க்கும் இடங்கள் எல்லாம் பசுமை நிறைந்து மனதைக் கவரும்.  உடலும், உள்ளமும் புத்துணர்வு பெறும். ஒவ்வொரு ஆண்டும் தமிழ் முனியை தரிசிக்க ஜனவரி முதல் ஏப்ரல் வரை அனுமதி வழங்கப்படுகிறது. ஆன்லைனிலும் இதற்கான அனுமதியைபெறலாம்.  இதற்காக உள்ள இணைய தளத்திலோ அல்லது வட்டியூர் காவுவனத்துறை அலுவலகத்திலோ பதிவு செய்து சென்று வரலாம். 10 நபர்கள் அடங்கிய குழுவாகவும் சென்றுவர அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. பதிவு செய்பவர்கள் கண்டிப்பாக போட்டோவுடன் கூடிய அடையாள அட்டை வைத்திருக்க வேண்டும். இதே அடையாள அட்டையைத்தான் பயணத்தின்போதும் வைத்திருக்க வேண்டும்.  அற்புதங்கள் நிறைந்த, அரிய பொக்கிஷங்களை காணக்கிடைக்கும் ஒரு புதிய பயண அனுபவத்தை பெற விரும்புகிறீர்கள் என்றால் நீங்கள் பொதிகைக்கு கிளம்பி விடலாம்.

உயிரினங்களின் வகைகள்
6 ஆயிரம் சதுர கிலோ மீட்டர் பரப்பு கொண்டது, பொதிகை மலை. இதில் அகத்திய மலையின் உயரம் 1868 மீட்டர் (சுமார் 6150 அடி). நீரிலும், நிலத்திலும் வாழும் உயிரினங்கள் தமிழ்நாட்டில் 76 உள்ளன. ஆனால் பொதிகை மலையில் 121 உள்ளன. 27 வகை மீன், 9 வகை தவளைகள் பொதிகையில் மட்டுமே காணப்படுகின்றன. 177 வகை ஊர்வனவற்றில் 157 வகைகள் பொதிகை மலையில் மட்டும் உள்ளன. அதிலும் 39 வகை இங்கு மட்டுமே வாழ்கின்றன. கரும்பு, சோளம், கம்பு, ராகி போன்ற உணவு தானியங்கள் 260ல் 60க்கு மூலவித்து இங்குள்ளது. நாமறிந்த மீன் வகை 165. ஆனால் பொதிகையில் வசிப்பதோ 218.

நுண்ணுயிர் முதல் மந்தி வரை
புவிப்பரப்பில் முதலில் தோன்றிய நுண்ணுயிர் முதல் மனிதனுக்கு முந்தைய மந்தி வரை பொதிகையில் உள்ளன. இந்த பிரபஞ்சத்தில் 1300 கோடி ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்த பெருவெடிப்பில் விழுந்த சிறு துண்டாகிய பூமி 500 கோடி வருடங்களுக்கு முன் குளிர்ச்சியடைந்து பூமியானது. அதில் 300 கோடி வருடங்களுக்கு முன்பு உயிர்த்தோற்றம் உண்டானது என்கின்றனர் வரலாற்று ஆய்வாளர்கள். பூமி குளிர்ந்து ஒருவித வடிவத்துக்கு வந்து உயிர்கள் உருவான காலத்திலேயே பொதிகை மலையும் தோன்றியிருக்கலாம்.

ரகசிய மூலிகைகள்
பசிக்கவே செய்யாத மூலிகை, நீண்ட ஆயுள் தரும் மூலிகைகள் என பல ரகசிய மூலிகைகள் இங்கு ஏராளமாக வளர்ந்து கிடக்கின்றன. இந்த மூலிகைகளைக் கொண்டுதான் அகஸ்தியர் கடுமையான நோய்களுக்கும் மருந்து கண்டுபிடித்தார் என்று கூறப்படுகிறது.

மூலிகைகளின் மூல ஸ்தானம்
பொதிகை மலைதான், மூலிகைகளின் மூல ஸ்தானம். மூட்டு வலியை போக்கும் பளிங்கு காய், தாமிரத்தை பஸ்பமாக்கும் கல் தாமரை, விஷம் முறிக்கும் கீரிக்கிழங்கு, சர்க்கரை நோயை போக்கும் பொன்கொரண்டி என பல்வேறு மூலிகைகள் பொதிகையில் உள்ளன. 7 வகை பனைகள், 10 ஆண்டுகளில் காய்த்து, காயில் உள்ள விதையால் கர்ப்பப்பை புற்றை அகற்றும் கல்வாழை, பட்டையால் பாம்பின் நஞ்சை இறக்கும் ஞாறவாழை உள்ளிட்ட 7 வகை வாழைகள் இங்கு வளர்கின்றன.

கொழித்துக் கிடக்கும் குலவு, புலவு
உலகில் உள்ள பூக்கும் தாவரங்கள் 5640ல் 2654 வகை இங்கு உள்ளன. 600க்கு மேற்பட்ட மூலிகைகள் இங்கு மட்டுமே வளர்கின்றன என்கிறார்கள் ஆய்வாளர்கள். வார்னிஷ் தயாரிக்க உதவும் குலவு, விஷக்கடி வீரியத்தை போக்கும் புலவு, சிறுநீர்ப்பை கல்லடைப்பை நீக்கும் சர்க்கரை வேம்பு மற்றும் செருப்படை போன்ற மூலிகைகள் இங்கு கொழித்துக் கிடப்பதாக தகவல்கள் கூறுகின்றன.

பொதிகைமலை...    
இந்தப் பெயரைக் கேட்டவுடனே நம் நினைவில் வருவது தாமிரபரணியும், தமிழும், அதைத் தோற்றுவித்த அகத்தியரும் தான்.

சிவாய நம..... திருச்சிற்றம்பலம்..... எம் பெருமான்  ஈசனுடைய திருமண காட்சியை அகஸ்திய மகரிஷிக்கு அளித்த *பொதிகை மலை யாத்திரை பற்றி செய்தி*   அகஸ்தியர் கூடத்திற்கு  அனுமதி ஒவ்வொரு ஆண்டும் வழங்கி வருவதால் அகஸ்தியரை தரிசிக்க நினைப்பவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி எம்பெருமான் ஈசன் அகஸ்தியருக்கு காட்சியளித்த பொதிகை மலை யை தரிசித்து கொள்ள வேண்டுகிறேன்.   பொதிகை மலைக்கு யாத்திரை செல்ல www.forest.kerala.gov.in என்ற முகவரியில் அகஸ்தியர் கூடம்  புக் செய்யலாம்.
🔥

வலைதளங்களில் இருந்து 

மேலும் ஒரு பகிர்வு.

🏵️

பொதியமலை உச்சியில் 

அகத்தியர் சிலை நிறுவுதல்.

 

நான் திருவள்ளுவர் கல்லூரியில் முதல்வராக இருந்தபோது நடந்த ஒரு நிகழ்ச்சி.


60 ஆண்டுகளுக்கு முன்- அதாவது 01.05.1971 நள்ளிரவு 1 மணிக்கு 'என்றுமுள தென்தமிழ் இயம்பி இசை கொண்ட' அகத்தியர் வாழ்ந்த பொதியமலை உச்சியில் அவரது சிலையை என் தலைமையில் சென்ற குழுவினர் நிறுவினோம். இதற்குப் பின்னே ஒரு வரலாறு உண்டு.


1970இல் கிறித்தவ ஆர்வலர்கள் பொதியமலை உச்சியில் ஒரு சிலுவையை நட்டு அதன் அருகில் Saint Augustus peak எனக் கல்லிலே பொறித்துத் தமிழ்ப் பண்பாட்டுத் தடத்தை சிதைக்க முற்பட்டனர். இச்செய்தி மலைவாழ் மக்கள் வழியே எங்களுக்குத் தெரிந்தது. பொறியாளர் சுந்தரம்பிள்ளை போன்ற உள்ளூர்ப் பெருமக்கள் பலருடைய ஒத்துழைப்புடன் காவல்துறை நீதித்துறை வழியே உரிய நடவடிக்கை எடுத்துச் சிலுவை அகற்றப்பட்டது. அதற்குப் பின்னர் இனியும் இது போன்று ஒரு பண்பாட்டுப் படையெடுப்பு நிகழக்கூடாது என்ற நினைப்பில் அகத்தியர் சிலையை நிறுவலாம் என்றேன். அதை ஏற்று உரிய ஏற்பாடு செய்து சிலைமுடிக்க மூன்று திங்கள் ஆயின. இடையில் மழைக்காலம் குறுக்கிட்டது.  


மலை ஏறுதல் அவ்வளவு எளிய செயலன்று. வேனில் வரட்டும் என்று பொறுத்திருந்தோம். அதுவரை பொறியாளர் சுந்தரம்பிள்ளையின் வீட்டு வளாகத்தில் சிலையை வைத்தோம், பொதுமக்கள் தாமாகவே முன்வந்து வழிபாடு செய்தனர். 


கல்லூரி முடிந்து வேனிலும் தொடங்கியது. முதலில் நாங்கள் 20 பேர் மட்டுமே மலையுச்சிக்குச் சென்று சிலை நிறுவுவது என்று திட்டம். அக்காலத்தில் நானே எதிர்பார்க்காத அளவு பெரும் செல்வாக்கும் புகழும் எனக்கு உண்டு. நான் தலைமை வகிக்கின்றேன் என்று கேள்விப்பட்ட ஆண்-பெண் அறுபதின்மர் என்னிடம் வந்து தாங்களும் வருவதாக வேண்டினர். சிவபெருமான் தம் திருமணக் கோலத்தை அகத்தியருக்குப் பொதிய மலையில் காட்டியருளினார் என்னும் தொன்மத்தை உறுதியாக நம்பும் ஆழ்ந்த சமயப் பற்றுள்ளவர்கள். பொதிகையைக் கைலாயமலை ஆகவே கருதக்கூடிய சைவர்கள். அவர்களுக்கு அகத்தியர் வாழ்ந்த புனித மலை உச்சிக்கு சென்று வழிபட வேண்டும் என்ற தணியாத ஆவல்; ஆதலால் அவர்கள் வருவதற்கு உடன்பட்டேன்.

 

30 ஏப்ரல் 1971 விடியல் 4 மணிக்குப் புறப்பட்டோம், பொதிய மலை அடிவாரத்திலிருந்து 10 கி.மீ காரையாறு தாமிரபரணி நீர்த்தேக்கம்வரை பேருந்துப் பயணம். படகில் சென்று அக்கரையை அடைந்தோம். அங்கிருந்து மலைக்காட்டுவழி நடைப்பயணம். ஏழரை மணி அளவில் கன்னிகட்டி பண்ணை சேர்ந்தோம் . பண்ணை மேலாளர் எனக்கு நண்பர்.அவரிடம் செய்த முன்னேற்பாட்டின்படி காலை சிற்றுண்டி முடித்து ப் பிற்பகலுக்குப் பொதிசோறு, வழிகாட்டிகள் பலர் துணையோடு 8 மணிக்குக் குழு புறப்பட்டது அதன் பின்னர் கடினமான செடி கொடி அடர்ந்த கரடுமுரடான ஒற்றையடிப்பாதை. 30 கிலோமீட்டர் சுற்றி வளைத்து செல்ல வேண்டும்.

 

இடையில் கடுவா எனப்படும் புலி, சிறுத்தை, மிளா எனப்படும் மாடு போன்ற மான், இயல்பாகவே ஊர்ந்து செல்லும் மலைபாம்புகள். காலில் ஒட்டிக்கொள்ளும் அட்டைகள் உள்ள இரண்டு காட்டாறுகள் , மேடுபள்ளம் செங்குத்து சரிவு வழிகள் -இவற்றை எல்லாம் பெரும் துன்பத்துடன் கடந்து மாலை 5 மணிக்கு உச்சிக்குச் சென்றால் கடைசியில் ஏற முடியாதபடி மலைக்கவைக்கும் 150 அடி செங்குத்து உயரம் , ஒருவாறு சரிவுப் பாறையில் முளையடித்துக் கயிறு கட்டி மகளிரையும் சிலை நிறுவும் கனமான ஸ்தபதியாரையும் உச்சிக்குக் கொண்டு சேர்க்கும் போது சரியாக ஏழு மணி . ஏறத்தாழ 100 பேருக்கும் மேலாக புழங்கக்கூடிய திடல் போன்ற உச்சிப்பகுதி . எல்லோருக்கும் களைப்பு மிகுதி இருப்பினும் சமையற்காரர்கள் உணவு சமைத்தார்கள் உண்ட பின் அனைவரும் உறங்கினோம்.


மறுநாள் காலை 01.05.1971 அன்று சிலையை நிறுவும் பணி மேற்கொள்ளப்பட்டது. நீர் வேண்டுமென்றால் கீழே 200 அடிக்கு அப்பால் சென்று தான் கொண்டு வர வேண்டும். உச்சியிலேயே ஒருபக்கம் நீர்ச்சுனை இருப்பதைக் கண்டறிந்து அங்கேயே 4-க்கு 6 அடி 3அடி ஆழம் என்ற வகையில் பாறையை வெடிவைத்து தகர்த்துப் பொறியாளர்கள் நீரூற்று உண்டாக்கினர். நானும் சுந்தரம் பிள்ளையும் ஸ்தபதியார் அருகிருந்து சிலை நிறுவும் பணிக்கு உதவினோம். அவர் ஆகம முறைப்படி சடங்குகளை மேற்கொண்டார் மே முதல் நாள் நள்ளிரவு ஒரு மணிக்கு அகத்தியர் சிலையை நிறுவினோம்.

 

அடுத்த நாள் எங்களில் 15 பேரைத் தவிர ஏனையோர் காலைச் சிற்றுண்டிக்குப் பிறகு பாபநாசம் பொதிகையடிக்குத் திரும்பினர். விலங்கு, இயற்கைச் சீற்றத்தி னால் சிலைக்கு ஊறு நேராத வாறு உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்து, பின்னர் அடுத்திருக்கும் ஐந்துதலைப் பொதிகையையும், மலைமுகட்டில் தாமிரபரணி தோன்றும் இடத்தையும் பார்வையிட்டுப் பின்னர் நாங்கள் பொதிகையடி அடைந்தோம்.

 

நாளடைவில் அன்பர்கள் முயற்சியால் கல்லிடைக் குறிச்சியில் இருந்து நேரடியாகப் பொதிய மலை உச்சி அகத்தியர் கோயிலுக்குச் செல்லுமாறு பாதைகள் அமைக்கப்பட்டு, இப்போது ஆண்டுதோறும் இந்த மே முதல் நாளில் திருவிழா நடக்கின்றது என்று அன்பர்கள் தெரிவித்தார்கள். இந்த வரலாற்று- பண்பாட்டுச் சாதனையை எண்ணும்போது இதயம் பெருமிதத்துடன் இறும்பூது எய்துகிறது, நினைவலையில் நீந்தி மகிழ்கிறது

.

🙇📰📗📃🙏🙏🙏

Wednesday, January 13, 2021

இலங்கை பயணம் - 2018 பதிவு - 34 பயண மனம் நிறைவு பதிவு

இலங்கை பயண பதிவு : 34
(13.12.2018 முதல் 20.12.2018)
மனம் நிறைந்த பயணம் .

இந்த எட்டு நாட்கள் கொண்ட இனிய
இலங்கை பயணத்தில் என் அனுபவத்தின் குறிப்புகளை இதுவரை கொடுத்து உள்ளேன்.

பயண நாட்கள் அணைத்தும் மிக அருமையான கால சூழல் (Beatiful Climate),  இலங்கையின் பெரும் பகுதிகள் நமது கேரளn மாநிலம் போன்ற புவியமைப்பு, கடல், காணகம், மலை அமைப்பு எங்கும் . மனிதர்கள் மிக அமைதியாக இனிமையாக பல இடங்களில் உதவியாகவும் இருந்தனர்.

உடன் வந்த பயணிகள் ஒருவருக்கொருவர் அன்புடன் பழகினார்கள். ஒருவரும் உடல் நிலை குறைவு ஏற்படாமல் நல்ல ஆரோக்கியத்தையும் மற்றவர்களுடன் ஒத்துழைக்கும் பண்பாடுடனும் பழகியது சிறப்பு. 

இறைவனுக்கு நன்றி.
 
அனுபவங்கள் ஒவ்வொருவருக்கும் மாறுபடலாம். ஆனாலும் எல்லோருக்கும் இந்த 8 நாள்  இலங்கை பயணம் ஒரு இனிய அனுபமாகவே அமைந்தது இறையருளே.
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

 *இன்னும் சில எண்ணக் குறிப்புக்கள் :*  

பாடல் பெற்ற தலங்கள் 276 ல் இலங்கை நாட்டில் உள்ள இரண்டு பாடல் பெற்ற ஆலயங்களையும் தரிசித்தால் 276 பாடல் பெற்ற தலங்களையும் தரிசித்த நிறைவு எனக்குக் கிடைக்கும் என்று இந்த பயணம் திட்டமிடும் போதிலும்  
உடன் இருந்து சென்று வந்த போதும் எனக்கு ஆலயங்கள் வழிகாட்டியாகவும் பேருதவியாகவும் எப்போதும் விளங்கும் ஆலயச் செல்வர், என் வழிகாட்டி திரு S. குலசேகரன் அய்யn அவர்களுக்கும் அவரின் துணவியாருக்கும், 
என் நன்றி. 

மேலும் எனக்கு மிகச் சிறந்த ஆண்மீக நன்பராக இருந்து வருபவரும், ஆலய பயணங்களில் எனக்கு எல்லா வகையிலும் உற்ற துணையாய் இருந்து வரும் என் உடன் பிறவா சகோதரர்  திரு பரணிதரன் அன்னாருக்கும், 

இந்த பயணத்தின் பட்டியல் படியே அணைத்து இடங்களுக்கும் இன்முகத் துடன் தேவையான அனைத்தையும் சகல வசதிகளுடன் செய்து கொடுத்து ஒவ்வொருவரையும் அரவணைத்து யாத்திரையின் முதுகெலும்பாக இருந்த இனிய பண்பாளர் இன்முக அரசர் 
எல்லோராலும் பாலு அண்ணா என்று பாசத்துடன் அழைக்கப்படும் பாசமிகு திரு S.R. பாலசுப்ரமணியன் Director SUJANA TOURS, மேற்கு மாம்பலம், சென்னை , அவர்களுக்கும்,

 என் அன்பு வணக்கத்தையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இறையருளால் இந்தப் பயணம் முழுமையும் எங்கள் பயணக்குழுவில் உடன் பயணித்தவர்கள் அணைவரும் பக்தி பரவசமாய் பல்வேறு ஆண்மீக விஷயங்களை பகிர்ந்து கொண்டும் முழுமையான பக்தி சுற்றுலாவாக எடுத்துச் சென்றனர்.  ஸ்லோகங்கள், புராண கதைகள், பல ஆண்மீக விஷயங்களை அனைவருக்கும் பயன் தருமாறு எல்லோரும் பகிர்ந்து கொண்டனர். குறிப்பாக பெண்மணிகளின்  ஆண்மீக பகிர்வுகள் என் போன்ற அறியாமையில் மூழ்கி இருப்பவருக்கு மிகவும் பயனுள்ளதாக, பாக்கியம் உள்ளதாக இருந்தது என்றால் மிகவும் உண்மை.

இந்தக் குறிப்புகளை சமூக ஊடகத்தில் பகிர்ந்து கொள்ளும் போது ஏராளமான எனது நன்பர்கள் ஊக்கப்படுத்தினார்கள்.
எனது குறிப்புகள் பிழை இருக்கலாம். செல்போன் கேமராவில் எடுத்த புகைப்படங்கள் பெரும்பாலும் அவசர நகர்வுகளில் பதியப்பட்டதே. 
இருப்பினும் எனக்கு உற்சாகத்தையும் ஊக்கத்தையும்  தருவதற்காக பெருந்தன்மையுடன் பாரட்டிய அணைத்து நல் உள்ளங்களுக்கும் என் சிரம் தாழ்ந்த நன்றி

நோய் நொடியில்லாத நிம்மதியான அமைதியான வாழ்க்கை எல்லோருக்கும் அமைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்தனை செய்து கொள்கிறேன்.
நன்றி நன்றி நன்றி
🙏🙏🙏🙏🙏🙏

இலங்கை பயணம் - 2018 பதிவு 33 கொழும்பு - 3 - கெளனியா பெளத்தர் ஆலயம்

_இலங்கை பயன பதிவு :_ 33  ( *20.12.2018)*
 *கொழும்பு: ( 3 )* *கெளனியா பெளத்தர் கோவில்*.

கொழும்பு நகரத்தின் வடகிழக்கு புறத்தில்  கெளனியா என்ற நதி ஓரம் ஒரு மிகப் பெரிய புத்தர் கோவில் உள்ளது. இதை விபூஷணர் கோவில் என்று கூறுகிறார்கள். 
இந்த இடம் புராதானத்தில் இராமாயணத்தில் விபூஷணனுக்கு இலட்குமணன் முடிசூட்டிய இடம். 

இராமர்  தந்தை சொல் காப்பாற்ற 14 ஆண்டு வனவாசம் முடிந்து அயோத்தி சென்றதால் இலக்கு மணனே விபூஷணனுக்கு முடிசூட்டினார். 
இந்த காட்சி கோவிலின் வடக்கு பகுதியில் சிற்பமாக உள்ளது.
கிழக்கு புற சுற்றில் அழகான விநாயகர் சிற்பம் கவணிக்கத்தக்கது. 

இந்த இடத்திற்கு கெளதம புத்தர் வந்ததாகவும் இரண்டு நாகங்களுக்கிடையில் ஏற்பட்ட சண்டை தீர்த்ததாகவும் புராணம்

கோவிலின் உள் அருமையான ஓவியங்களால் புத்தரின் வரலாற்றுக் காட்சிகள் இருக்கின்றன. 
இன்னும் போதுமான பராமரிப்பு Care எடுத்தால் நல்லது.

 புறச் சுற்றுகளில் இலங்கை அரசர், அரசிகள் சிலைகளும் மிகப் பெரிய ஸ்தூபியும் உள்ளன. பெளத்தர்களின் புனித இட மானதால் ஏராளமான பெளத்தர்கள் வருகின்றனர்.

 கருவரையில் தற்போது புத்தர் வைக்கப்பட்டு வணங்கப்பட்டு வருகிறார். வெளிச் சுற்றில் ஆலய மணிமண்டபம் நீர் ஊற்று நிலை அழகாக உள்ளது. பார்க்கத்தக்க இடம் .
இத்துடன் மாலை சூரியன் மயங்கும் வேலை வந்தது. பயணம் இனிது நிறைவுற்று இலங்கையின் விமான நிலையம் வந்து கையில் கொண்டு வந்த உணவை சாப்பிட்டு 20.12.2018 இரவு 10.40 மணிக்கு சென்னை விமான நிலையம் வந்து சேர்ந்து அங்கிருந்து 21.12.2018 காலை அவரவர் வீடு வந்து இறையருளால் நலமுடன் சேர்ந்தோம்.
🙏🙏💐💐💐🙏🙏
கெளனியா கோவில் மேலும் படங்கள் நிறைவுப் பதிவில் ....

இலங்கை பயணம் - 2018 பதிவு - 32 கொழும்பு - (2) பொன்னம்பலவானேஸ்வரர் ஆலயம்

_இலங்கை பயண பதிவு : 32_
 *(20.12.2018*)
 *கொழும்பு: (2)*
 *பொன்னம்பலவானேஸ்வரர் ஆலயம்.*
இலங்கை கொழும்பில் இருக்கும் மிகச் சிறப்பான இந்து வழிபாட்டுக் கோவிலாக
இதை குறிப்பிட வேண்டும் 
பொன்னம்பல ஸே்வரர் கிழக்கு பார்த்தும், ஒரு அற்புத நடராஜர் விக்கிரகத்தை சுவாமி கருவரை முன் மண்டபத்திலும் வைத்து இருக்கிறார்கள். சிவகாமி அம்பாள் தெற்கு பார்த்து ஒரு சன்னதியில் அருள் வழங்குகிறார்கள். ஒவ்வொருமுறையும் கற்பூர ஆராதனை எடுக்கும் போது முதலிலில் சுவாமிக்கும் அடுத்து அம்பாளிற்கும் பிறகு நந்திக்கும் காட்டி விட்டுதான் பக்தர்களிடம் கொண்டு வருகிறார்கள். முழு தேர்விலும் நாட்டுக் கோட்டை செட்டியார்கள் தமிழகத்தில் அமைத்துள்ள சிவன் ஆலய அமைப்பில் அற்புதமாக உள்ளது. கோயிலில் பசுமடம் தனியாக பராமரித்து வருகிறார்கள். மார்கழியில் திருவாசகம் முற்றோதல் அருமையாக செய்கிறார்கள். அவசியம் தரிசிக்க வேண்டிய ஆலயம்.
காலை உணவு முடித்துவிட்டு ஆலய தரிசனம் அடுத்து

 *ஆஞ்சனேயர் - சனி ஸ்வரர் ஆலயம்* 

தெகிவளையில் உள்ள ஸ்ரீ போதிக்காரமார என்ற வீதி உள்ளது அந்த பகுதியில்
பக்தர் ஒருவரின் கடும் முயற்சியில் அமைக்கப்பட்ட 
ஒரு மிகப் பெரிய *ஜெயவீர பஞ்சமுக* *ஆஞ்சனேயர்* மற்றும் தனி *சனி ஸ்வரர் ஆலயம்* சிறப்பாக அமைக்கப்பட்டு முறையாக பூசையும் நடைபெற்று வரும் ஒரு ஆலயத்தையும்

சற்று அருகில் உள்ள *வெங்கடேஸ்வர மகா விஷ்ணு மூர்த்தி* என்ற விஷ்னு ஆலயத்தையும் தரிசித்தோம்.

அடுத்து
கொழும்பு நகரில் உள்ள பல்வேறு சிறப்பு வாய்ந்த பல்வேறு கட்டிடங்களையும் கண்டு களித்தோம்.
மதிய உணவுக்கு பின்
மிகப் பெரிய Shopping Centre சென்று purchase செய்தார்கள்.
 அடுத்து கெளனியா வில் உள்ள மிக புகழ் பெற்ற புரண முக்கியத்துவம் வாய்ந்த பெளத்த கோவில் சென்றோம்.

இலங்கை பயணம் - 2018 பதிவு - 31 கொழும்பு

_இலங்கை பயண பதிவு : 31_
 *கொழும்பு*
நாங்கள் தங்கியிருந்த METRO PORT CITY Hotel கதிரேசன் தெருவில் இருக்கிறது. சற்று எதிர்புறத்தில் வேலாயுத சுவாமி கோவில் உள்ளது. புத்தம் புதிதாக வைத்துள்ளார்கள். தமிழ்நாடு முறைலேயே அமைப்பு சிறிய கோவில். அறங்காவலர் வாரியயே  ஆன்மீக பயிற்சியில் சிறந்த மாணவர்களை தேர்ந்தெடுத்து பல பரிசுகள் கொடுத்து ஆண்மீக உணர்வுகளை ஊட்டி ஊக்கப்படுத்துவது பெருமையாக உள்ளது. நமது நாட்டில் செயல்படும் அற நிலையத் துறையைப் பற்றியும்சிந்திக்க வைத்தது.
அருகில் உள்ள தெருவில் நாட்டுக்கோட்டை செட்டியர்கள் பராமரிக்கும் சிவன் கோவிலுக்கும் சென்றோம்.
இன்னும் சில இடங்களில் புதிய இந்து ஆலயங்களை அற்புதமாக நிர்மாணித்து, முறையான பூசை கள் செய்து வருகிறார்கள். தமிழ்நாட்டில் புராதானமான கோவில்கள் அமைப்புகள், வழிபாடுகள், விழாக்கள் நடைபெறுகிறது. ஆனாலும் முறையான உண்மையான பக்தி வழிபாடு நாடு விட்டு நாடு சென்றவர்களிடம் காணும் போது பெருமையாக இருக்கிறது.
இலங்கை பகுதிகளில்
வெள்ளைக்காரர்கள் விட்டுப் போன பல கட்டி Lங்கள் அப்படியே உள்ளது. நாங்கள் இருந்த இடத்திற்கு
சற்று அருகில் 0LD முனிசிபல் Hall  (மிகவும் Uழமையான கட்டிடம் ) ஒட்டி ஏராளமான ரெங்கநாதன் தெருக்கள். நெருக்கடியான கடைத்தெரு , ஓவ்வொரு Street Joining places ம் Roundana போல அமைத்துள்ளார்கள்.
 எங்கும் No.signals, Speed Breaks, மக்கள், வாகண ஓட்டிகள் தங்களுக்குள் ஒழுங்கு Uடுத்திக் கொண்டு சுறுசுறுப்பாக இயங்குகிறார்கள் வியப்பாக இருக்கிறது. நமக்கு மொழி பிரச்சினையே இல்லை. அருகில் STREET - VENDOR SHOPPINGSம் நிறைய உண்டு. நிறைய Hawakers. எல்லா 
பொருள்களும் விலை ... .அதிகம் தான்.
அடுத்த நாள் (20.12.2018 ) ஒரு பெரிய Shopping MALL சென்ற போதும்இதை உணர்ந்தோம்.
கொழும்பு இலங்கையின் தலைநகர் என்று பலர் எண்ணியிருக்கலம். இலங்கையின் புதிய தலைநகர் கொழும்புவிலிருந்து பல கீ.மீ தள்ளி இருக்கிறது. ஜெயவர்த்தனே புரம். கொழும்பு தான் எல்லா புகழும் பெறுகிறது. 0LD and NEW கட்டிடங்கள் 
மிக வேகமாக வளர்ந்துவரும் பெரிய City. Port மிக அருகமையில் இருந்தது. சுதந்திர கட்டிடங்கள் பழைய பார்லிமெண்ட் இந்தியா US எம்பசி கட்டிடங்கள். இருக்கின்றன.  இந்தியா, பாக்கிஸ்தான் சீனா மேலும் பல நாடுகளும் தானே சென்று உதவத் தயாராக இருப்பதற்கு இலங்கையின் strategic position தான் காரணம். பெரிய potential Properties  இருக்கிறதா என்று ஆராய வேண்டும். 
பொதுவாக மிக அமைதியான நாடு.  மக்களும் அவ்வாறு தான் வாழுகிறார்கள். மிக மெதுவாக முன்னேறி வருகிறது நல்ல மிகத் திறமையான இனப் பாகுபாட்டுக்கு வழி வகுக்காத நேர்மையான வலிமையான அரசும் தலைவரும் கிடைத்திருந்தால் (மோடி போல?) ....
இலங்கை உலக நாடுகளில் இன்னேரம் முதன்மையாக இருந்திருக்கலாம்.

இலங்கை பயணம் - 2018 பதிவு - 30 முன்னீஸ்வரம்

_இலங்கை பயண பதிவு : 30_ 
 *முன்னீஸ்வரம்*
இலங்கையில் தரிசிக்க வேண்டிய முக்கிய சிவஸ்தலங்களில் இது முக்கியமானது வட மத்திய மேற்கு கடற்கரைக்கு கொழும்புக்கு அருகில் உள்ளது. புராதானமான மிகச்சிறந்த பராமரிப்பில் உள்ள ஸ்தலம் தமிழர்கள் பராமரிப்பில் உள்ளது. பெரும்பாலும் இலங்கையில்  அர்ச்சனை என்பது வெற்றிலை பாக்கு பழம் தேங்காய் வைப்பதில்லை. ஓரு தட்டில் மிக அழகாக பழங்களை அடுக்கி வைத்து அர்ச்கர்களிடம் கொடுக்க அதை சுவாமியிடம் வைத்து திருப்பிக் கொடுக்கிறார்கள். மந்திர உபாசனைகளும் சுவாமிக்கு குருக்கள் முறையாக செய்கிறார்கள். இலங்கையின் 5 ஈஸ்ரத்தில்
முன்னிஸ்வரர் முதன்மையான ஈஸ்வரராக உள்ளவர் அம்பாள் வடிவழகி அம்மன் . கருவரையிலேயே சிவன அம்பாள் வழிபடுவதால் சிவ லிங்கம் முன்பு அம்பாளின் அற்புத ( உலோக) சிலை வைக்கப்பட்டுள்ளது. அம்மனுக்கு தனியாக சிலா ரூப சிலை வைத்து தனி கருவரை தெற்கு பார்த்து உள்ளது. ஒரு பெரிய மண்டபத்திலிருந்து சிவன் அம்பாள் ஒரு சேர தரிசிக்குமாறு அமைப்பில் உள்ளது. சிவலிங்க பூசனை முடிந்ததும் அம்மபnள் கருவரை திரையிட்டு விடுகிறார்கள். சுவாமி எப்போதும் காட்சி கொடுத்துக் கொண்டிருகிறார். விநாயகர் தட்சினா மூர்த்தி லிங்கோத்பவர் துர்க்கை சன்டிகேஸ்வரர், பிரம்மா என்ற முறையில் வித்தியாசமான முறையில் இக்கோவில் உள்ளது. லிங்கோத்பவர் உச்சியில் அன்னபட்சி உள்ளது. புராணபடி சிவபக்தராகிய இராவணனை அழித்ததால் இராமர் இலங்கையை தாண்ட முடியாமல் பிரம்மகத்தியால் பிடிபட்டு இருக்கையில் முனிவரின் ஆலோசணை படி லிங்க வடிபாடு செய்ய அவசரமாக மனலால் செய்யப்பட்ட லிங்கத்தை மனல்வாரி என்ற மானவாரியில் வழிபட்டு பின் இராமர் இங்கு வந்து முறையாக பூசை செய்கிறார்.
இராமர் வழிபட்ட இடம் . காலத்தால் அழிக்கப்பட தற்போது உள்ள லிங்கம் மறைந்து பின் வெளிப்படும் போது லிங்கத்தின் முன்பகுதி வெட்டு பட்டு விடுகிறது முன் பகுதி மட்டும் வெளிப்பட்டதால் முன்னேஸ்வரர் . காலத்தால் பழமையானது.
மூல லிங்கமே இப்போது கோஷ்ட்டத்தில் லிங்கோத்பவராக உள்ளார். லிங்கத்தின் முன்பகுதி வெட்டு பட்டு விட்டதால் லிங்கோதபவர் இடத்தில் வைத்து வழிபடுகிறது.
துர்க்கை கோமுகத்தில் உள்ளதும் மிகக் கடுமையான முக அமைப்பும் கொண்டுள்ளார். பின் சன்டிகேஸ்வரர் அடுத்து பிரம்மன் இருப்பது விசேடம். பழங்காலத்திலிருந்து எல்லா விழாக்களும் மிகச் சிறப்பாக நடைபெற தமிழர்கள் மிகவும் ஒற்றுமையாக செயல்படுகிறார்கள்.  அருகில் நாட்டுக் கோட்டை செட்டியார் மடம் ஓன்றும் ஒரு பெரிய தனி விநாயகர் ஆலயம் வடக்கு பார்த்து பக்கத்தில் இருக்கிறது. ஏராளமான பக்தர்கள் வருகிறார்கள். வாகனங்கள் நிறுத்த நிறைய இடம் உள்ளது. எடுத்து சென்ற மதிய உணவுகளை மடத்தில் வைத்து உண்டு Rest எடுத்து கொழும்பு புறப்பட்டோம். வழியில் மிகப் பெரிய முருகன் சிலை கொண்ட புதிய ஆலயம் சாலையிலேயே கண்டு வழிபட்டு 
*கொழும்பு* Metro Port City Hotel அடைந்தோம். City க்குள் கதிரேசன் சாலையில் இருந்தது. அதே சாலையில் உள்ள ஆலயங்களையும் கண்டு தரிசித்தோம்.  மாலையில்  கொழும்பிவில் Shopping walking.

அருகில் உள்ள சரஸ்வதி கபேயில் இரவு உணவு உண்டதற்கு ஆன சிலவு பணம்  SUJANA TOUR   திரு பால கப்ரமணியன் அவர்கள் ஒவ்வொருவருக்கும் திருப்பிக் கொடுத்தார்.  இரவு தங்கல்.

இலங்கை பயணம் - 2018 பதிவு - 29 அநுராதபுரம் - புத்தளம் - மானவாரி*

_இலங்கை பயண பதிவு : 29_
 *19.12.2018 அநுராதபுரம் - புத்தளம் - மானவாரி*

இலங்கையின் வடமத்திய பாகத்தில் உள்ள புராதானமான முக்கிய தலம். இங்குள்ள Happy Leoni Hotel அணைத்து வசதிகளும் கொண்டிருந்தது. காலையில் சூரிய நமஸ்காரம் செய்ய அந்த ஹோட்டலின் உச்சி மாடியிலிருந்து அந்நகரத்தை கண்ட போது அருமையாக இருந்தது. சோலைகளும் காடுகளும் வெகு தூரத்தில் மிகப் பெரிய ஸ்துபிகளையும் கொன்டு மிக அமைதியாக காட்சியளித்தது. உண்மையில் இலங்கை வரலாற்றில் மிக புராதானமான சிறந்த தலைநகராமாக உருவாக்கப்பட்டு பல ஆண்டுகள் மிக பொலிவுடன் விளங்கிய நகரம். பெளத்தர்களின் புண்ணிய பூமிகளில் இதுவும் ஒன்று.  புத்தர் ஞானம் பெற்ற போதி மரத்தின் கிளையைக் கொண்டு இங்கு பெளத்த ஆலயம் உள்ளது.  ஏராளமான சரித்திர சான்றுகளும் கட்டிடங்களும் தொல்லியல் ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றது. இலங்கையில் நாங்கள் பார்த்த புராதான பெருநகரங்களில் இன்று எந்த ஒரு பரபரப்பும் இன்றி மிக மிக அமைதியான நகரமாகும். பல்வேறு பெளத்த கலாச்சார சின்னங்களையும் கொண்டுள்ளது. நகரரைச் சுற்றி ஏராளமான பிரமாண்டமான        ஸ்துபிகளையும் புத்தர் சிலைகளையும்  வரலாற்று ஆவணக் கட்டிடங்களையும் கொண்டிருக்கிறது. காலை உணவு முடித்து  அங்கிருந்து கடற்கரை ஊரான புத்தளம் என்ற சிறிய ஊரிணை அடைந்தோம்.

 *புத்தளம்* 
இலங்கையின் வட மேற்கு கடற்கரையின் ஒரு முக்கியமான இடம். கடல் உள்வாங்கி மிகப்பெரிய U போல இயற்கையாக  அமைந்துள்ளது.  Beach அமைத்து சிறந்த சுற்றுலா இடமாக மாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.  அங்கு சிறிது இளைப்பாறி விட்டு மனவாரி என்ற புராதான சிறிய ஊரில் உள்ள சிவன் கோவிலுக்கு சென்று தரிசனம் செய்தோம்.

 *மானவாரி*
மானாவாரி என்ற அந்த ஊரில் உள்ள சிறிய சிவன் கோவில் இராமலிங்கேஸ்வரர் இராஜராஸே்வரி அம்மன் நல்ல வினாயகர் சன்னதிகள். 
இராமர் போர் முடிந்து வரும் போது பிரம்ம கத்தி பின் தொடர இலங்கையை தாண்ட மனலால் ஒரு சிவலிங்கத்தை பிடித்து வணங்கி பாவம் நீக்கிக் கொள்ளும் புனித இடம்.  முக்கிய சாலையிலிருந்து பிரிந்து 2 கீமி உள் சென்று திரும்ப வேண்டும். அருகில் உள்ள *முன்னிஸ்வரம்*  ஆலய புராணத்திற்கு தொடர்பு உள்ளது.
இலங்கையின் முக்கிய 5 ஈஸ்வரத்தில் இந்த தலமும் ஒன்று என்றார் சிவாச்சாரியார்.. ஆலயம் முன்பு நல்ல விநாயகர் உள்ளார். மிக புராதானமா சிவ ஆலயம் முற்றிலும் சிதைந்து போய் விட இப்போது புதிய ஆலயமாக புனரமைக்கப்பட்டுள்ளது.
இதன் பிறகு முன்னீஸ்வரம் என்ற மிக முக்கிய சிவன் ஆலயம் உள்ள ஊர் சென்றோம்.

இலங்கை பயணம் 2018 - பதிவு - 28 திருக்கேதீஸ்வரம்

_இலங்கை பயண பதிவு : 28_ 
 *திருகேதிஸ்வரம்*

தேவரா பாடல் பெற்ற திருத்தலம் திருஞானசம்பந்தராலும்  சுந்தரமூர்த்தி சுவாமிகளாலும் பதிகம் பெற்ற தலம்.
கேது வழிபாடு செய்ததால் கேதீஸ்வரர்  ஆலயம் புராண காலத்திலிருந்து புகழ் பெற்றிருந்தது.
முன்பு இருந்த கோவிலை முழுவதுமாக மாற்றி சுமார் 35 கோடிக்கு கற்றளியாக மாற்றி கும்பாபிஷேகம் 2020ல் நடைபெற உத்தேசித்து பணிகள் நடைபெறுகின்றன. கோவிலில் முன் மண்டபம் அமைத்து அணைத்து விக்கிரகங்களுக்கும் முறையாக பூசை நடைபெற்று வருகிறது. 

நாங்கள் சென்ற போது 
வவுனியா என்ற ஊரிலிருந்து ஒரு சிவனடியார், திருவாசகம் முற்றோதல் செய்து பூர்த்தி செய்தார். இவர் தம்முடைய 75வது வயதில் திருக்கைலாயம் சென்ற போது திருவாசகம் முற்றோதல்  அங்கேயே செய்துள்ளார். மேலும் இந்தியா இலங்கை பகுதிகளில் சுமார் 1500 முறை திருவாசகம் முற்றோதல் செய்துள்ளார் என்று தெரிந்த போது அனைவரும் வியந்தோம். 1959 ல் இலங்கை வந்து தற்போது வரை அங்கேயே இருக்கிறார். நல்ல நிலமைக்கு அவருடைய விடாமுயற்சி உழைப்பும் என்று அறிந்து கொண்டோம். இந்தியா இன்னமும் உதவி செய்யலாம் என்று கூறுகிறார். போருக்கு தாங்களே - தமிழர்களே - காரணம் என்று மனம் வெதும்பினார். 

அடுத்து அநுராதபுரம் சென்று தங்கினோம்.

இலங்கை பயணம் - 2018 பதிவு - 27 திரு கேதீஸ்வரம் பாலாவித் தீர்த்தம்

_இலங்கை பயண பதிவு : 27_
 *திரு கேதீஸ்வரம் பாலாவித் தீர்த்தம்*
 இலங்கை மேற்கு கடற்கரை மன்னார் மாவட்டம் மாதோட்டத்தில் அமைந்துள்ள தேவார பாடல் பெற்ற திருத்தலம் 
அருகில் பாலாவி தீர்த்தம் ஓரு ஏரி போல தற்போது காட்சியளிக்கிறது. முற்காலத்தில் நதியாக ஓடியதாக புராணம் 
சூரபதுமன் மனைவியாரின் பேரனார் துவட்டா என்பவர் இந்த நதியில் நீராடி திரு கேதீஸ்வரரை வழிபட்டு பிள்ளைப் பேறு பெற்று இந்த இடத்தினை பெரு நகராக்க துவட்டா நகரம் - மாது வட்டா - மாதோட்ட மாகியது வரலாறு. புன்ணிய தீர்த்தம் பிரம்மகத்தி தோசம் நீக்குவது.
10-11 நூற்றாண்டில் சோழ மன்ணர்களால் புகழ் பெற்ற தலம்.

அருகில் தற்போது தூய தொண்டுள்ளம் படைத்த
தன் நிறைந்த செல்வங்களை தர்மம் செய்ய எண்ணி அம்மை அப்பன் மடம் என்று அமைத்து வருபவர்களுக்கு சகல வசதிகளையும் அன்புடன் அளித்து வருகிறார்.

இலங்கை பயணம் - 2018 பதிவு - 26 மருதனார்மடம் ஆஞ்சநேயர் ஆலயம், திருவாசக அரன் ஆலயம்

_இலங்கை பயண பதிவு : 26_
 *மருதனார்மடம் ஆஞ்சநேயர் கோவில்*
யாழ்ப்பாணம் காங்கேசந்துறை வீதியின் ஓரமே புதிதாக நிர்மாணிக்கப்பட்ட  2013ம் ஆண்டில் சுமார் 72 அடி உயர பிரபிப்பான ஆஞ்சநேயர் சிலை. இக்கோவில் உள் பகுதி ஸ்ரீ சுந்தர ஆஞ்சனேயர் திருவுருவம் இந்தியாவிலிருந்து கொண்டு வந்து பிரதிஷ்ட்டை செய்யப்பட்டும்  நித்திய பூசைகள் முறையாக செய்யப்பட்டு வருகிறது. நாங்கள் தரிசித்த போது ஆஞ்சனேயருக்கு அபிஷேகம் நடைபெற்றது.

தரிசனம் முடிந்து யாழ் நகர் சென்று  AKSHATHAl Hotel மதிய உணவு முடித்துக் கொண்டு 
சிவபூமி திருவாசக அரண்மணை சென்றோம். திருவாசகத்தின் சிறப்பு கருதி யாழ் நகரின் நுழைவுப் பகுதியில் தனியாரால் அமைக்கப்பட்ட அற்புதமான இடம் 
மண்டபம் முழுதும் திருவாசத்தின் 51 பதிகளும் பதிக்கப்பட்டு 108 சிவலிங்கங்களும் அமைக்கப்பட்டுள்ளது
நடுவில் மணிவாசகருக்கு குருவடிவாக வந்து காட்சி அளித்தமையால் ச தெட்சிணாமூர்த்தியை மூலவராக வைத்திருக்கிறார்கள்.

 வணங்கிப் பின் கேதீஸ்வரம்  செல்லலானோம்.

இலங்கை பயணம் 2018 பதிவு - 25 கீரிமலை *நகுலேஸ்வரம்* *நன்னீர் ஊற்று*

_இலங்கை பயண பதிவு : 25._ 
 *கீரிமலை *நகுலேஸ்வரம்* 
 *நன்னீர் ஊற்று* 

 புராதானமான நகுலேஸ்வரம் ஆலயம் இலங்கையின் வட கோடி முனையில் கடற்கரையின் மிக அருகில் ஓரமாக உள்ள நன்ணீர் ஊற்று மிகவும் புனித இடமாக பக்தர்கள் நீராடி வழிபடுகிறார்கள்.  ஊற்று அருகில் ஒரு சில மடங்களும் ஆலயங்களும் உள்ளன.
இங்கிருந்து மிக மிக அருகில் நமது வேதாரண்யம் கோடியக்கரை அமைந்துள்ளது.
இக்கோவில் பெருமை அறிந்து  நம் பாரத பிரதமர் திரு மோடி அவர்கள் கடந்த 14.03.2015ல் இவ்வாலயத்திற்கு வந்திருக்கிறார்கள். கோவிலும். இவ்விடத்திற்கு அருகில் பழமையான  துறைமுகமும், புதிதாக Palay விமான நிலையமும் அருகில் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த இடம் வளர்ச்சிக்கு இந்தியா தாராளமாக நிதி உதவி செய்துள்ளது என்று கூறுகிறார்கள். 

அருகில் உள்ள நன்னீர் ஊற்று அருகில் ஒரு சில மடங்களும் ஆலயங்களும் உள்ளன.

இலங்கை பயணம் - 2018 - பதிவு - 24 கீரிமலை நகுலேஸ்வரம், யாழ் மாவட்டம்

_இலங்கை பயண பதிவு : 24_
 *கீரிமலை  நகுலேஸ்வரம்*

யாழ் மாவட்டம் கீரிமலையில்  அமைந்துள்ள புராதானமான சிவன் ஆலயம் 
நகுல முனிவர்.இராமன், சோழ அரசன், நளன், அருச்சுனன், முசுகுந்தன் வழிபட பெற்றது. 
நகுலேஸ்வரர், நகுலாம் பிகை அம்மன் வழிபட வேண்டிய தெய்வங்கள்.
உள்நாட்டு யுத்தத்தால் சிதை பட்ட இந்த ஆலயத்தை ஆதீனகர்த்தா குருக்கள் அயராத  முயற்சியினால் தற்போது இக்கோவில் பொலிவுடன் , முறையான பூசை வழிபாட்டுடன் நல்ல முறையில் பராமரிக்கப்பட்டு வருகிறது.
2012ல் கும்பாபிஷேகம் நடைபெற்றிருக்கிறது.

இந்தக் கோவிலில்
ஒரு வயதான காளை உள்ளது. பிரதோஷம் அன்று அதற்கு முறையான பூசை செய்து சிவன் அம்பாளை வழிபாடு செய்கிறார்கள்.
வயது முதிர்ந்த அக்கோவிலின் ஆதின கர்த்தாவும் முதிய குருக்களுமான திரு நகுலேஸ்வரகுருக்கள் அவர்களிடம் ஆசியும் பெற்றுக் கொண்டோம். 

14.03.2015ல் பாரத பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள் இங்கு வந்து தரிசனம் செய்துள்ளார்கள். வேண்டிய உதவிகளையும் இந்தியா சார்பாக கொடுத்திருக்கிறார்கள் என்று அறிந்தோம்.
அவசியம் தரிசிக்க வேண்டிய தலம்
இலங்கையின் 5 ஈஸ்வரன் கோவிலில் இதுவும் ஒன்று.

இலங்கை பயணம் - 2018 பதிவு - 23 நல்லூர் கந்தசாமி ஆலயம், யாழ்பானம்,

_இலங்கை பயண பதிவு : 23_ 
 *நல்லூர் கந்தசாமி கோவில் யாழ்பானம்*
மிகவும் புராதானமான புகழ் பெற்ற முருகன் தலம். 
புவனேசுவாகு என்ற அரசால் கட்டப்பட்டு பிறகு பல்வேறு இலங்கை அரசர்களால் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. போர்த்துக்கீசியர்களால் முற்றிலும் இடிக்கப்பட்டும் பல மாறுதலுக்கு உட்பட்டு புதிய கட்டுமானத்தில் இந்த ஆலயத்தை புனரமைத்தவர் ஆறுமுகநாவலர் அவர்கள். அவரைத் தொடர்ந்து அவர் தம் மாணாக்கர்கள் சிரிய முறையில் இக்கோவிலை  பராமரித்து வருகிறார்கள்.  
கருவரையில் வேல் வைத்து தான் வணங்குகிறார்கள்.  தென்புறம் வள்ளி தெய்வாணையுடன் தனி சன்னதியில் முருகன். கோவிலின் உள் பிரகாரத்தில் தென்புறம் மிக அழகிய தீர்த்தக் குளம் கட்டப்பட்டுள்ளது. கோவில் முழுதும் மிக அருமையான  முறையில் பரமரித்து வருகிறார்கள்.
நித்திய பூசைகள் மிகவும் அருமையாக செய்து வருகிறார்கள். நாள் தோறும் திருப்பள்ளியெழுச்சியும் பள்ளியறை உற்சவமும் நடைபெறுகின்றன.
வருட திருவிழா மிகச் சிறப்பாக நடைபெறுகிறது.
ஆன்மீக மேம்பாட்டுக்காக பல நிகழ்ச்சிகளும் தொடர்ந்து நடைபெறுகிறது. ஆண்கள் பனியன் சட்டை போட அனுமதி இல்லை. மிக அவசியம்  தரிசிக்க வேண்டி தலம்.

இலங்கை பயணம் - 2018 - பதிவு 22 யாழ்பாணம்

_இலங்கை பயண பதிவு : 22_ 
18.12.2018
 *யாழ்பாணம்*
யாழ்பானம் நகரம் மிகப் பழமை. 
அதிகம் தமிழர்கள் வசிக்கும் பகுதி. அதிகம் கோவில்கள் சுற்றுப்புறங்களிலும் உள்ளது.
இன்று வைகுண்ட ஏகாதேசி (18.12.2018)
நாங்கள் தங்கியிருந்த Hotel SUBHAS லிருந்து புறப்பட்டு அருகில் உள்ள 

 யாழ்பாணம் - வண்ணை  ஸ்ரீ வேங்கடேச வரதராஜப் பெருமாள் ஆலயத்திற்கு சென்று பெருமnள் சேவித்து சொர்க்கவாசல் நிகழ்வு கண்டோம். 
அதன் பின் அருகில் உள்ள நல்லூர் கந்தசாமி கோவில் தரிசனம்

இலங்கை பயணம் 2018 பதிவு - 21 நயினார் தீவு நாகபூசனி அம்மன் ஆலயம்

_இலங்கை பயண பதிவு : 21_ 
 *நயினார் தீவு நாகபூசனி அம்மன் ஆலயம்*
ஈழத்தில் நாகர்களின் முக்கிய பிரதேசம். ஆதியில் நாகர்களால் வழிபடபட்ட இடம் . கருவறையிலுள்ள சீறும் ஐந்தலை நாகம் 8000 வருட பழமை. மகா சக்தி பீடங்களில் ஒன்று.

கருவரை உள்ள மண்டபம் உள்ளடங்கி இருப்பதால் குருக்கள் தீபாரதனை செய்யும்போது கவனித்து வணங்க வேண்டும்.
புராணம். ஆதியில் நாகம் ஒன்று பூ எடுத்து வந்து சுயம்பு லிங்கத்தை வழிபட்டதாகவும். வழிபட வரும் வழியில் கருடனுக்கும் நாகத்திற்கும் போர் ஏற்ட்டதாகவும்  பிறகு ஒரு தமிழ் வியாபாரிக்கு காட்சி கொடுத்து கோவில் கட்டியதாகவும். பின் அக்கோவில் போர்த்துக்கீசியரால் அழிக்கப்பட்டபோது. சிவலிங்கத்தை மரப்பொந்தில் வைத்து மறைத்த வழிபட்ட குருக்கள்  தலைமுறையே (ஏழாவது) இன்றும் பூசை செய்கிறார்கள்.
இத்தீவில் வசித்து இந்த அம்மணை வணங்கி வந்தவர்கள் உலகின் பல பாகங்களில் வசித்து வருகிறார்கள். பின்னாலில் மிகப் பெரிய அளவில் இக்கோவில் கட்டப்பட்டு யாழ் மாவட்டத்தின் புகழ் பெற்ற இந்துக் கோவிலாக உள்ளது. தல வரலாறு ஓவியமாக வரையப்பட்டுள்ளது.
63 நாயன்மார்கள் சிலைகள் வைத்து வழிபடுகிறார்கள். பைரவர் தனி சன்னதி .மிக பழமையான வண்ணி மரமும் உள்ளது.
மிகப் பெரிய தேர் உற்சவம் நடைபெறுகிறது. உற்சவ காலத்தில் உலகில் எல்லாப் பகுதிகளிலிருந்தும் பக்தவர்கள் வருகிறார்கள்.  காலை 6 மணி பூசை.  மாலை 6. மணிக்கு பூசை முடிந்து அர்த்தஜாம பூசையும் முடிந்து உடன் ஆலயம் மூடிவிடுவர்கள்.

கோவிலுக்கு வெளியில் வடகடல்புறத்தில் சற்று தூரத்தில் உள்ள இரண்டு கற்பாறைகள் கருடன் நாகம் போர் புரிந்த இடம் என்று குருக்கள் சுட்டக் காட்டினார்.
அருகில் ஒரு பெளத்த கோவில் உண்டு. அந்த இடத்திற்கு புத்தர் சீடர்கள் வந்துள்ளதாக புராணம் .ஏராளமான பெளத்தர்கள் அந்த இடத்தை புனிதமாக போற்றி இங்கு வந்து வழிபடுகிறார்கள். 
யாழ்பாணத்திலிருந்து கLற்கரை பகுதி வந்து அங்கிருந்து மோட்டார் படகில் நயினா தீவு வரவேண்டும்.  தீவிற்குள் பஸ் மோட்டார் வாகனங்கள் வருவதற்காக மிக பெரிய மோட்டர் சரக்கு போக்குவரத்து படகும் உண்டு.
https://m.facebook.com/story.php?story_fbid=2451339808274595&id=100001957991710

இலங்கை பயணம் - 2018 - பதிவு - 20 திரிகோணமலையிலிருந்து யாழ்ப்பானம்

_இலங்கை பயண பதிவு : 20_
 *திரிகோணமலையிலிருந்து யாழ்ப்பானம்* 
17.12.2018 காலை திரிகோணமலையிலிருந்து புறப்பட்டு முல்லைத்தீவில் உள்ள புகழ் பெற்ற அம்மாச்சி கடையில் சிறிது ஓய்வு எடுத்து Beach பார்த்துவிட்டு முள்ளிவாய்க்கால் மேலும் பல ஊர்கள் தாண்டி யாழ்பாணம் சென்றோம். இந்த பகுதியில் செல்லும் போது நமது தமிழர்கள் எத்துணை வேதனைகளை சுமந்து வாழ்ந்து வருகிறார்கள் என்ற சோகம் நெஞ்சில் வந்தது. வழியெல்லாம் 2 கீ மீக்கு ஒரு இலங்கை இராணுவம் குழn ம் அமைத்து இருக்கிறார்கள். சில இடங்கள் புனரமைப்பு வேலைகள் நடந்து வருகின்றது. 

 *மக்கள் நடைமுறை வாழ்வில் இருந்தாலும் தமிழர்கள் இன்னும் இயல்பான முழுமையான சுதந்திரமான வாழ்வு முறையை அடைய வேண்டிய தூரம் மிகவும் அதிகம்.

ரயில் பாதை பற்றி குறிப்பிட வேண்டும்.
யாழ்ப்பானம் வரை 95% எந்த லெவல் கிராஸிங்கிலிலும் கேட் கிடையாது. மக்கள் வாகனங்களை நிறுத்தி கவனமாக
 - அவதானம் - செய்து செல்கிறார்கள்.

 இலங்கையின் எல்லா சாலைகளும் மிகவும் நன்றாக உள்ளது.
 No Speed  brakes. Minimum Signals. All are wearing Helmets including back seaters. All are Follow road rules.

யாழ் நகரத்தில் MANGOS என்ற உணவகத்தில் அவ்வூரில் மருத்துவராக பணிபுரியும்  சிவனடியார் ஒருவர் எங்களை  அன்புடன் வரவேற்று மதிய விருந்து ஏற்பாடளித்து இரண்டு நாள் கூட இருந்து அன்பு செய்தார்.

உணவு முடித்து
 *நயினார் தீவு* 
நாகபூஷனி அம்மன் கோவில் சென்றடைந்தோம்.
(இரண்டு நாட்களாக பருவநிலை காரணமாக  அங்கு யாரும் சென்று தரிசிக்க முடியவில்லை என்றும் இன்று (17. 12. 2018) ல் தான் படகு செல்கிறது என்று கூறினார்கள்.
https://m.facebook.com/story.php?story_fbid=2450112145064028&id=100001957991710

இலங்கை பயணம் - 2018 பதிவு - 19 திரிகோணமலை வடக்கில் 5 கீ.மீ யில் Sri Lakshmi Narayana Perumal Kovil,

இலங்கை பயண பதிவு : 19 
திரிகோணமலை வடக்கில் 5 கீ.மீ யில்
Sri Lakshmi Narayana Perumal Kovil,  
17.12.2018 அன்று
 லக்ஷ்மி நரசிம்மர் பெருமாள் கோவில் தரிசனம். 

தனியார் ஆலயம் மிகச் சிறப்பு வாய்ந்த பராமரிப்பு .  முறையான பூசைகள். 16-12-2018 இரவும் தரிசனம் செய்திருந்தோம். அங்கேயே இரவு உணவும் முடித்திருந்தோம்.

 இரவு திரிகோணமலை அருகில் கடல் அருகில் உள்ள Hotelலில் தங்கி 17-12-2018 காலை சூரிய உதயதரிசனம். பின் இந்த கோவிலுக்கு வந்து மீண்டும் தரிசனம் 
25 ஏக்கர் நிலத்தில் ஓர் அற்புதமான ஆலயம் கட்டி ஆகம நியமனங்களுடன் பராமரித்து வருகின்ற டிரஸ்ட் ன் உரிமையாளர் very very simple ஆக காட்சியளித்தது வியக்கவைத்தது. ஒரு TVS வண்டியில் வந்து எங்கள் Tour Director திரு பாலசுப்பிரமணியன் அவர்களை நலம் விசாரித்து எங்கள் அனைவரையும் வரவேற்றார். மறுநாள் அக்கோவிலில் மிகச் சிறப்பாக கொண்டாடப்படும் வைகுண்ட ஏகா தேசி விழாவில் கலந்து கொள்ள அன்புடன் கேட்டுக் கொண்டார்.

 ஒரு restaurant ம் கோவில் நிர்வாகத்தில் உள்ளது. அருமையான சைவ உணவுகள்.  காலை உணவு முடித்து முல்லைத்தீவு வழியாக யாழ்பnனம் சென்றோம்.
https://m.facebook.com/story.php?story_fbid=2449668131775096&id=100001957991710

இலங்கை பயணம் 2018 - பதிவு - 18 திரிகோணமலை

_இலங்கை பயண பதிவு : 18_ *திரிகோணமலை*
 
இலங்கையில் உள்ள புராதான இடம். பாடல் பெற்ற சிவஸ்தலம். பல முறை சிதைக்கபட்டு புதியதாக கட்டப்பட்டு நன்றாக பராமரிப்பில் உள்ளது. முறையாக பூசைகள் செய்யப்பட்டு வருகிறது. மகா சக்தி பீடங்களில் ஒன்று. கோனேச்சுரரும், மாதுமை யாளும் அருள் புரிகின்றனர். அருணகிரி நாதர் திருப்புகழ் இயற்றி உள்ளார். 

புதிய கோவில் முன் உள்ள மிகப் பெரிய சிவன் சிலை புனரைப்பு வேலை நடந்து வருகிறது. திரிகோணமலை கோட்டை பகுதி வரை பேருந்து, கார்களில் சென்று அங்கிருந்து சுமார் 2 கீ மீ ஆட்டோவில் செல்ல வேண்டும். அதன் பிறகு 100 மீ. நடந்து செல்ல வேண்டும். இரு புறமும் கடைகள் வியாபாரம் நடைபெறுகிறது. ஒருபுறம் மரங்கள் அடர்ந்த பகுதியில் மnன்கள் இருந்தன.
 
 கோவில் எதிரில் கிழக்கு புறம் சிறிய அரசமரத்தை சுற்றி வர பாதை அமைத்துள்ளார்கள். சுற்றி வரும் போது மார்கண்டேயருக்கு அருளியது முதலிய கதை சிற்பங்கள், விநாயகர், சோமஸ்கந்தர் உருவங்கள் அமைக்கப்பட்டுள்ளது. சற்று கீழ்புறம் இராவணன் கை கூப்பி வணங்கும் சிலையும் உள்ளது. ஒருபுறம் மிக உயரமான மலை மீது இருந்து கொண்டு கீழே அலைமோதும் கடல். 

கோவில் ஒரே பிரகாரம் . கிழக்கு பார்த்து சுவாமியும், தெற்கு பார்த்து அம்பாளும் அருள் தருகிறார்கள். முன் மண்டபத்தை தாண்டி உள்ளே செல்ல சாதாரணமாக அனுமதியில்லை. மண்டபத்தில் கடம் வைத்து  தினம் பூசை செய்து வருகிறார்கள். நிரந்தரமாக அமைப்பு உள்ளது. 
 கோவில் முன்புறம் சற்று அருகில் கிழக்கு புறத்தில் மலை பிளவுபட்டு இரண்டாக உள்ளது. இந்த இடத்தை *இரவணன் வெட்டு* என்று கூறுகிறார்கள். சிவன் தன் கோரிக்கையை ஏற்காததால் அந்த மலையை பிளந்து விட்டதாக புராணம்.
அருகில் ஒரு இடத்தில் லெட்சுமி நாராயணர் சிலை வைக்கப்பட்டுள்ளது. அருகில் இருக்கும் கோட்டை பகுதியில் அகழ்வராய்ச்சியில் கிடைத்தது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இக்கோவிலை நிர்மாணித்த குளக்கோட்டு மன்னனுக்கு சிலையும் அவருடைய Prediction வார்த்தைகளையும் எழுதி வைத்துள்ளார்கள். இந்த கோவில் போர்த்துக்கீசியர்கள், ஆங்கிலேயர்கள் வந்து இடித் தாலும், மீன்டும் இந்த கோவில் கட்டப்படும் என்பது எழுதப்பட்டுளது.
https://m.facebook.com/story.php?story_fbid=2449549761786933&id=100001957991710

இலங்கை பயணம் - 2018 - பதிவு - 17 கண்டி, மாத்தளை, தம்புளா, கன்னியா நன்னீர் உற்று, திரிகோணமலை.

16- 12. 2018 கண்டி, மாத்தளை, தம்புளா, கன்னியா நன்னீர் உற்று, திரிகோணமலை.

இலங்கை பயண பதிவு : 17
 கன்னியா வென்னீர் ஊற்று _ திரிகோணமலை

இலங்கையின் வடகிழக்கில் திரிகோணமலைக்கு மிக அருகில் உள்ளது.
ராவணன் தன் வாளால் பூமியைக் கீறி 7 கிணறுகளை தன் தாயாருக்காக உற்பத்தி செய்ததாக புராணம்.
கிணறுகள் 3 - 4 அடி ஆழத்தில் தான் உள்ளது. ஏழு கிணறுகளும் வெவ்வேறு வெப்பநிலையில் உள்ளது. கயிறும் வாளியும் உண்டு. அதைக் கொண்டு கிணற்றிலிருந்து நீர் எடுத்து மக்கள் புனித நீராடுகிறார்கள். நுழைவுக்கட்டணம் LKR.10 Other Countries RS.50 
டிக்கெட் வாங்கிய பின் தான் அந்த பகுதிக்கு செல்ல இயலும். அருகில் ஒரு கட்டடத்தில் சிவன் ஆலயம் இருக்கிறது. திரிகோணமலை கோவில் செல்வதற்கு முன்பு இங்கு சென்றோம்.

https://m.facebook.com/story.php?story_fbid=2449246528483923&id=100001957991710

இலங்கை பயணம் - 2018 பதிவு - 16 தம்புளா - GOLDEN BUDHA

_இலங்கை பயண பதிவு : 16_ *தம்புளா*
GOLDEN BUDDHA
இலங்கையின் மத்திய பகுதியில் முக்கிய இடத்தில் உள்ள நகரம். மொத்த காய்கறிகளையும் இங்கிருந்து தான் இலங்கையின் அனைத்து பகுதிகளுக்கும் நேரடியாக Distribution செய்யப்படுகிறது. 
இங்கு உள்ள மிகப் பெரிய புத்தர் சிலை புகழ் பெற்றது.
Largest Budda Statue in the world Height 100 ft. With Darmachkkara posture and Museum.
 
Main Road லிருந்து பார்த்தாலே பிரமிப்பான Golden புத்தர் சிலை. அதன் கீழே பிரமாண்டமான Museum. ஒருபுறம் அந்த குன்றின் மீது ஏற வழி அதில் பெளத்தர்கள் சென்று வழிபாடு பூசை செய்கிறார்கள். பெரிய புத்தர் சிலையை எங்கிருந்தும் பார்க்கலாம். ஒருபுறம் சீடர்கள் அனைவரும் அவரை நோக்கி செல்வது போல சிலைகள் வைத்துள்ளார்கள். வெளிநாட்வர்கள் வருகிறார்கள். மிகப் பெரிய Tourist இடமாக மாற்றி உள்ளனர். Museum செல்ல நுழைவுக் கட்டணம் உண்டு. 
இந்த ஊரிலிருந்து திரிகோணமலை செல்ல அருமையான வழி அமைத்துள்ளர்கள். காட்டுப்பகுதி நிறைய இருப்பதால் யானைகள் நடமாட்டம் மிகுதி.
வழியில் ஒரு இடத்தில் உணவகத்தில் கையில் கொண்டு சென்ற உணவை உண்டு பயணத்தை தொடர்ந்தோம்.
https://m.facebook.com/story.php?story_fbid=2449084258500150&id=100001957991710

இலங்கை பயணம் - 2018 - பதிவு - 15 கண்டி - மாத்தளை, மாத்தளை முத்துமாரியம்மன்.

_இலங்கை பயண பதிவு : 15_ (16-12-2018)
 *கண்டி - மாத்தளை*

கண்டி இலங்கையின் முக்கிய நகரங்களில் ஒன்று இலங்கையின் நடுப்பகுதியில் இருப்பதால் எல்லா நகரங்களுக்கும் இங்கிருந்து செல்லலாம். 
நாங்கள் தங்கியிருந்த 
Hotel Ganga Addara
மகா வேலி கங்கா என்ற ஒரு ஆற்றின் கரையில் இருந்தது. 
வழியில் Ganesananda என்ற சைவ ஹோட்டல் சென்று காலை உணவு

 பக்கத்தில் உள்ள *மாணிக்க விநாயகர் ஆலயம்* தரிசனம்
கோவில் செட்டியார்கள் திருப்பணி பாணியில் அமைக்கப்பட்டுள்ளது. கிழக்கு நோக்கி மாணிக்க விநாயகர் மற்றும் சோமசுந்தரேஸ்வரர் மீனாட்சி அம்மன் தெற்கு நோக்கி அமைக்கப்பட்ட முழுவதும் கற்களால் திருப்பணி செய்யப்பட்டுள்ளது. துர்க்கை, சரஸ்வதி, லெட்சுமி, நவ கிரகங்கள் தனித்தனி சன்னதிகளில் வைத்திருக்கிறார்கள். பூசை முறைகள் மிகவும் நேர்த்தியானமுறையில் செய்யப்படுகிறது. இது மார்கழி மாதம் என்பதால் மாணிக்கவாசகரை எடுத்து நடராஜர் சன்னதிக்கு முன் வைத்து பூசை செய்து திருவெம்பாவை விடியலில் முறையாக ஒதுகிறார்கள். கோவில் சீரமைப்பு பணி நடைபெற்று வருகிறது. விரைவில் கும்பாபிஷேகம் நடைபெற இருக்கிறது. 

 **மாத்தளை முத்து மாரியம்மன்* 
வடக்கு பார்த்த மாரியம்மன், சுந்தரேஸ்வரர் மீனாட்சி அம்மன் எல்லோருக்கும் தனி தனி சன்னதி . மெயின் ரோட்டிலேயே கோவில் இருக்கிறது. கோவில் உள்ளே பார்க்கிங் வைத்துள்ளனர்.
கிழக்கு கோபுர வாசல் எதிரில் மிகச் சிறிய தெப்பக்குளம் . கோவில் முழுதும் புதிய தோற்றத்தில் உள்ளது.
வடக்கு கோபுரம் உயரம் நல்ல பராமரிப்பு . 
நல்ல தரிசனம் கிடைத்தது. 

அங்கிருந்து *தம்புளா* சென்றோம்.

https://m.facebook.com/story.php?story_fbid=2447985821943327&id=100001957991710

இலங்கை பயணம் - 2018 பதிவு - 14 கண்டி புத்தர் கோவில் (3)

இலங்கை பயண பதிவு :14
கண்டி புத்தர் கோவில் (3)
அருகிலேயே ஒரு புராதானமான சோழர் பாணி சிவன் ஆலயம் இருந்து முற்றிலும் அழிக்கப்பட்டு மிச்சம்  உள்ளது. கோவில் கருவரை அர்த்த மண்டபம் முன் மண்டபம் மேலும் அதன் அமைப்பை பார்த்த உடனே கூறிவிடலாம். கல் குதிர் /தாழி, கல்லால் ஆன மனி மண்டபம் ஸ்தல விருஷம் அணைத்துமே மிகப் பெரிய கோவில் இருந்து அழிக்கப்பட்டிருக்கலாம். சிதைந்த பல பாகங்கள் பல பரவிக் கிடக்கின்றன.
இதையெல்லாம் தரிசித்து இரவு Hotel Gange Addara Star Hotel தங்கினோம்.
https://m.facebook.com/story.php?story_fbid=2447582218650354&id=100001957991710

இலங்கை பயணம் - 2018 பதிவு - 13 கண்டி புத்தர் கோவில் (2)

இலங்கை பயண பதிவு : 13.
கண்டி புத்தர் கோவில் (2)

நடுநாயகமாக ஒரு பெரிய புத்தர் விகாரில் புத்தர் கதை Paintings அற்புதமாக உள்ளது.
முக்கியமாக புத்தரின் புனித பாதம் Golden Suclpture கருவரையில் உள்ளது. இன்னோரு இLத்தில் நமது பள்ளியரை பல்லாக்கு மற்றும் பல்வேறு சோடச உபசார பொருள்களும் இருக்கிறது.

https://m.facebook.com/story.php?story_fbid=2447565788651997&id=100001957991710

இலங்கை பயணம் - 2018 - பதிவு : 12 கண்டி புத்தர் கோவில்*SRI DALADA MALIGAWAWorld Buddist MuseumRaja Tusker MuseumRajal Palace Archeology Museum

_இலங்கை பயண பதிவு - 12_ 
 *கண்டி புத்தர் கோவில்*
SRI DALADA MALIGAWA
World Buddist Museum
Raja Tusker Museum
Rajal Palace Archeology Museum

இந்த இடம் கண்டியின் முக்கிய இடத்தில் உள்ளது. ஏராளமான உள் மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் பக்தர்களும் குவிகிறார்கள்.
இந்த PALACE Museum Vihar ல் புத்தரின் பல் தங்க பேழையில் பூட்டி வைத்திருப்பதாகவும் வருடத்தில் 1 நாள் மட்டும் வெளியில் எடுப்பார்கள் என்றும் கூறுகிறார்கள். வெளிநாட்டவர்களுக்கு ஒரு நுழைவுக் கட்டணமும். இலங்கை பக்தர்களுக்கு ஒரு நுழைவுக் கட்டணம் உண்டு.
Dres Code உண்டு. No Cheppels , Shoes
வெளிநாட்டவர் Shoes cheppal போடக்கூடாது.
விளக்கு போடுவதற்கு தனி மண்டபம் Standஉண்டு மிக பிரமாண்டமான கட்டிடம் அகழி அமைப்பு .
விகார் மிகப் பெரிய இடத்தில் உள்ளது ஒருபுறம் ஏரி ஒன்றும் உள்ளது. இந்தக் கட்டிடத்திற்கு முன்பு பெரிய புத்தர் விகார் தனியே உள்ளது. 

பல இடங்களில் தனிதனிசிலைகள் உள்ளது. அந்த அரச மாளிகை புணரமைப்பு வரலாற்றில் சம்பந்தப்பட்டவர்களின் சிலைகள் ஆங்காங்கே கnணப்படுகிறது. மிகப் பெரிய ஏரியாவில் உள்ளது. பெளத்தர்களின் புனித இடங்களில் இதுவும் ஒரு முக்கிய இடமாகும்.

https://m.facebook.com/story.php?story_fbid=2447546218653954&id=100001957991710

இலங்கை பயணம் - 2018 - பதிவு - 11 Ramboda* *ஆஞ்சனேயர் ஆலயம்* மற்றும் *GLENLOCH Tea Factory**

_இலங்கை பயண பதிவு :  11_ (15.12.2018)
 **Ramboda* *ஆஞ்சனேயர் ஆலயம்*  மற்றும்
 *GLENLOCH Tea Factory** 

நுவரெலியா காயத்ரி பீடத்திலிருந்து புறப்பட்டு கண்டி செல்லும் பாதையில் *Ramboda* என்ற இடத்தில் சின்மயா மிஷன் உதவியால் *ஆஞ்சனேயர் ஆலயம்* ஒன்று கட்டப்பட்டு பராமரிக்கப் படுகிறது.
மெயின் ரோட்டிலிருந்து சில நூறு மீட்டர் மலையின் மீது உள்ளது. தனியாக அருமையான Road வசதி உள்ளது. நடந்தோ Auto விலோ செல்ல வேண்டும். போக Rs.150 மலை மீது புதியதாக எழுப்பப்பட்ட ஆலயம். இந்த இடத்தில் ஆஞ்சனேயர் வருகை புரிந்துள்ளார் என்று ஆய்வு செய்துள்ளார்கள்.
ஆலய தரிசனம் முடிந்து சில கீ.மீ சென்று
 *GLENLOCH என்றTea Estate மற்றும் இனைந்த FACTORY* 
பார்த்தோம்
தேயிலை பறித்து உலர வைத்து தரம் பிரித்து பின்அரைத்து தூள் தரம் மற்றும் Packing செய்கிறார்கள். அங்குள்ள Restaurant ல் இலவசமாக தேனீர் கொடுக்கிறார்கள். அதன் அருகில் TEA விற்பனை . TEA தூள் விதவிதமான சுவை சேர்த்து பல்வேறு விலைகளிலும் தரங்களிலும் அங்கேயே விற்பனை செய்கிறார்கள். உலக தேயிலை உற்பத்தியில் இலங்கைக்கு சிறப்பு உண்டு அல்லவா. நேரில் கண்டு வியந்தோம்.
கண்டி செல்லும் வழியில் ஒரு திருமண Hall நிறுத்தி அங்கே கொண்டு சென்ற உணவை முடித்து 
கண்டி அடைந்தோம்.

கண்டியில் *HANDUNIs GEMS & JEWALLERY* 
சென்றோம்.
முதலில் மூன்றாவது மாடியில் உள்ள தனி MINI Theatre ல் Gems எப்படி பூமியிலிருந்து கஷ்ட்டப்பட்டு எடுக்கிறார்கள். தரம் பிரித்து விற்பனை செய்கிறார்கள் என்று Short Flim போட்டுக் காட்டிய பிறகே Shopping.
கல்  நகை வைர நகை வியாபாரம். விலையெல்லாம் பற்றி கவலைப்படாதவர்கள் சென்று வாங்கலாம். வாங்கிய பொருளுக்கு Gurantee certificate தர சான்றிதழ் தருகிறார்கள்.

அடுத்து
கண்டியில் உள்ள புகழ் பெற்ற புத்தர் கோவிலுக்கு சென்றோம் *DALADAMALIGAWA* (தனி பதிவு)
இரவு
Hotel Ganga Addara, Kandi. தங்குதல்.

https://m.facebook.com/story.php?story_fbid=2447406978667878&id=100001957991710

இலங்கை பயணம் - 2018 பதிவு - 10 நுவரெலியா

இலங்கை பயண பதிவு : 10. *நுவரெலியா :* 

இலங்கையின் உயரமான மலை பிரதேசத்தில் அமைந்துள்ள இடம் . நம் ஊர் ஊட்டி கொடை போல. இலங்கையின் தென் புறத்தில் மத்திய பகுதியில் உள்ளது. மிகப் பெரிய ஏரி அமைக்கப்பட்டுள்ளது. ரேஸ்கோர்ஸ் மைதானம் போன்று பழமையான ஒரு பகுதியும் உள்ளது. Tea Estates உள்ள பகுதி. ஆங்கிலேயர்கள் அதிகம் வசித்த பகுதி போல தோன்றுகிறது. 
நாங்கள் தங்கியிருந்த Hotel விருந்து ஏரி view தெரிகிறது. குளிர் அதிகம். வயதானவர்கள் அவசியம் கம்பளி வைத்துக் கொள்வது நலம்.
காலையில் Lake View hotel லிலிருந்து புறப்பட்டு முதலில்
முருகேசு சதுக்கம் என்ற இடத்தில் உள்ள
 *காயத்ரி பீடம் ஆலயம்,* மேகநாதன் பூசை செய்த *லங்காதீஸ்வரர்* *ஆலயம் .* *முருகேசு சுவாமிகள் ஜீவ சமாதி பீடம்* தரிசனம் செய்தோம். 
பல வருடங்களுக்கு முன்பு *சிவயோகி சுவாமிகள்* என்பவர் *மேகநாதன்* (இரவணன் மகன்) சுயம்பு லிங்கம் வைத்து நிகும்பளா யாகம் பூசை செய்த இடம் இந்த இடம் தான் என்று ஆய்ந்து வளரக்கூடிய நர்மதை நதியில் கிடைத்த, ஓர் சுயம்பு லிங்கத்தைக் கொண்டு இந்த இடத்தில் வழிபட்டார். அதன் தொடர்ச்சியாக காயத்திரி உபாசகராக இருந்த *முருகேசு சுவாமிகள்* இந்த இடத்தில் ஸ்ரீ காயத்திரி தேவிக்கு தனி ஆலயமும் அமைத்து வழிபடலானார். 

ஞான அருளால் இதே போன்ற லிங்கங்கள் 108 ஜெர்மனியில் இருக்க கண்டு அதை பெற்று இங்கு அந்த 108 லிங்கத்தை வைத்து வழிபாடும் யாகமும் செய்து வந்தார்.
அவர் ஜீவ சமாதி அடைந்த பிறகு இப்போது உள்ளவர்கள் அந்த 108 லிங்கத்தைக் கொண்டு தனிக் கோவில் கட்டி வருகிறார்கள்.
 108 ஆவுடைகள் பிரதிஷ்ட்டை செய்து இப்போது வழிபடும் 108 புனித லிங்கங்களை வைத்து கும்பாபிஷேகம் செய்ய வேலை துரிதமாக நடைபெறுகிறது.

தனியாக முருகேசு சுவாமிகளுக்கு *ஜீவ சமாதி, காட்சி அரங்கம்* அமைக்கப்பட்டுள்ளது. காட்சி அரங்கத்தில் சுவாமி தயாரித்த நவபாஷானம் கோடிலிங்கம் சுயம்பு, மற்றும் ஏராளமான பொருள்கள் அவர் பயன்படுத்திய அணைத்து பொருட்களையும் காட்சியில் வைத்துள்ளனர்.

இதை பராமரித்து வரும் ஒரு தமிழர் குடும்பத்தினர் நடத்தி வரும் Restaurant ல் காலை உணவு முடித்து மதிய உணவும் பெற்று நுவரேலியா விலிருந்து புறப்பட்டோம்.
https://m.facebook.com/story.php?story_fbid=2447297515345491&id=100001957991710

இலங்கை பயணம் - 2018 - பதிவு - 9 *அசோகவனம் சீதா கோவில் அனுமன் சீதா பிராட்டியிடம் கணையாழி கொடுத்த இடம் .*

_இலங்கை பயண பதிவு 9_ 
 *அசோகவனம் சீதா கோவில் அனுமன் சீதா பிராட்டியிடம் கணையாழி கொடுத்த இடம் .* 

நுவரெலியா செல்லும் மலை பாதை மெயின் ரோட்டில் இந்த ஆலயம் உள்ளது. பெரிய காடு நிறைந்த கருப்பு நிறம் அடர்ந்துள்ள மலை பிரதேசம். குறிப்பிட்ட இடத்தில் ஓர் அழகிய இந்துக்கோவில் 
பிரதான சாலையில் கட்டியுள்ளார்கள். இராமன், லெட்சுமணன், சீதை அனுமnன் ஒரு கருவரையிலும், அனுமானுக்கு ஒரு தனிசன்னதியும் உண்டு. அனுமார் முதன் முதலில் பிராட்டியாரை சந்தித்து கணையாழி அளித்தது. லங்காபுரியை அழிக்க விசுவரூபம் எடுத்த இடமும் இதுவே. கீழே சிறிய நதி ஒன்று ' ஓடுகிறது. அதில் சீதாபிராட்டி குளித்து வந்தார்கள் என்கிறார்கள். அருகில் அனுமார் கணையாழி பெற்ற சிற்பம் உள்ளது. அனுமாரின் ஒரு பாதம் மட்டும் அடையாளமாக உள்ளது. அதை வணங்க ஏணிப்படி பாலம் அமைத்துள்ளார்கள். Main Road லிருந்து சற்று தொலைவில் மிக உயரமாக ஒரு மலை தெரிந்தது அது *இராவணன் கோட்டை* என்று கூறுகிறார்கள். இந்தக் கோவில் நல்ல பராமரிப்பு . புதியதாக புணரமைப்பும் செய்து உள்ளனர். எலியா என்றால் வெளிச்சம் என்று பொருள். இந்த இடத்தை *சீதா எலியா* என்றும் அழைப்பர். 

இத்துடன் இன்று (14.12.2018) தரிசனம் முடித்து நுவரேலியா LAKE VIEW HOTEL Stay.🙏🙏🙏🙏🙏
https://m.facebook.com/story.php?story_fbid=2447208325354410&id=100001957991710

இலங்கை பயணம் - 2018 - பதிவு - 8 *சீதா தேவி அக்னி பிரவேசம் செய்த புராதான இடம்.* Divurumwela, Welimada, Sri Lanka.

இலங்கை பயண பதிவு - 8
 *சீதா தேவி அக்னி பிரவேசம் செய்த புராதான இடம்.* 
Divurumwela, Welimada, Sri Lanka.
இராவணனால் சிறைபிடிக்கப்பட்டு வந்த சீதா பிராட்டியார் மூன்று இடங்களில் வைத்திருந்ததாகவும் அதில் இந்த இடத்தில்தான் ராமர் இலங்கையை வென்று அயோத்தி செல்வதற்கு முன் சீதா அம்மாள் அக்னி பிரவேசம் செய்த இடம். இங்கு அசோக மரம் மலருடன் இருந்ததை அங்குள்ள கைடு சுட்டிக் காட்டினார். 
இந்த இடம் மிக மிக புராதானமான இடம் என்றும், அங்குள்ள அரச மரம் ஓட்டி உள்ள கட்டிடங்கள் மிக பழமையானவையாகும். அதை ஒட்டி ஒர் கட்டிடமும் கட்டப்பட்டு சீதை வரலாற்றையும், அக்னி பிரவேசம் செய்த புராண காட்சிகளை ஓவியமாகவும் வைத்து இருக்கிறார்கள். சுற்றி புத்தர் சிலைகள் இருக்கின்றது. ஒருபுறம் தனி சன்னதி போன்ற அறையில் சீதா தேவிக்கு அக்னி பகவான் அருள் புரிந்த காட்சி வைக்கப்பட்டுள்ளது. பெளத்த விகாரம் பெரிய புத்தர் சிலையும் அமைந்துள்ளது. ஒரு சிறிய கட்டிடத்தில் (கோயில்) சிவன் மற்றும் சில தெய்வங்களின் சிலை களும் வைக்கப்பட்டு வழிபடுகிறார்கள். அந்த பகுதியில் தமிழர்கள் மிக மிக குறைவு என்பதால் பெளத்தர்கள் ஆளுமையில் இந்தக் கோவில் இருக்கிறது. அருகில் வசிக்கும் முதியவர் ஒருவர் இந்தக் கோயில் வருபவர்களுக்கு வழிகாட்டியாக இருந்து அற்புதமான முறையில் விளக்கி கூறுகிறார்.
நுழைவுக் கட்டணம் உண்டு. இந்தியா ௹ 120 இலங்கை ரூ250. ராவணனின் ஒரு புகைப்படம் வைத்திருக்கிறார்கள் அதில் உள்ளது போன்ற பெரிய சிலை லண்டனில் இருக்கிறதாம். அந்த சிலையும் இங்கிருந்து எடுத்துச் செல்லப்பட்டதே. அருகில் ஒரு பெளத்த மடத்தின் கட்டுப்பாடில் இந்தப் பகுதி உள்ளது. ராவணன் அருவியிலிருந்து நுவரெலியா செல்லும் வழியில் இந்த இடம் உள்ளது. இராமாயண சுவடுகள் இந்தப் பகுதியில் மிக அதிகம்.
https://m.facebook.com/story.php?story_fbid=2447149752026934&id=100001957991710

இலங்கை பயணம் - 2018 - பதிவு - 7 இராவணன் அருவி

இலங்கை பயண பதிவு 7: ராவணன் அருவி

நுவரெலியா செல்லும் மலைப் பகுதியில் இரண்டு மலைகளுக்கு இடையில் ஒரு அருவி இருக்கிறது. ராவணன் அருவி என்கிறார்கள். மிக மிக உயரத்திலிருந்து கரடு முரடான மலைப் பகுதிகளில் நீர் பெருகி அருவியாக பொங்கி வருகிறது. மலையின் ஒரு திருப்பத்தில் SH Road ல் இருப்பதால் அனைவரும் தவறாமல் நின்று சென்று கண்டு களிக்கிறார்கள். குளிப்பதற்கு அனுமதி இல்லை. அருமையான இடம். ஒரே ஒரு இடத்தில் நீர் தொட்டி ஒன்று கட்டி அதன் மூலம் நீர் வெளியேறுகிறது. யாரும் குளிக்க முயற்சி செய்யவில்லை. ஏராளமான இளைஞர்கள் புகைப்படம் எடுப்பதில் தான் ஆர்வம். இடம் நன்றாக இருந்ததால் கொண்டு சென்ற மதிய உணவை சாப்பிட்டு புறப்பட்டோம்.
https://m.facebook.com/story.php?story_fbid=2445567308851845&id=100001957991710

இலங்கை பயணம் 2018 - பதிவு - 6 மாணிக்க விநாயகர் ஆலயம் (கதிர்காமம் அருகில்)

இலங்கை பயண பதிவு 6: 
மாணிக்க விநாயகர் ஆலயம் :

 இலங்கை தென்பகுதி மற்றும் வட பகுதிகள் அனைத்தும் மலை காடு பிரதேசங்கள். அப்படியே நமது கேரளாவை ஒத்து இருக்கிறது. மக்கள் உடைகள் கூட அப்படியே இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
கதிரைமலை தரிசித்து மீண்டும் பேருந்து பயணம் சில கி.மீ பயணம் செய்து மாணிக்க விநாயகர் ஆலயம் இருக்கும் பகுதி அங்கு ஒரு புராதானமான பெரிய பெளத்த விகாரம் சற்று கீழ் பகுதியில் ஒரு புராதனமான மாணிக்க கங்கை என்ற ஆறு ஓடுகிறது. ஆற்றின் கரை ஓரத்தில் மிக அருமையான தமிழக முறையில் புதிதாக சீர் செய்யப்பட்ட விநாயகர் ஆலயம். சமீபத்தில் கும்பாபிஷேகம் செய்யப்பட்டுள்ளது. கருவறையில் மாணிக்க விநாயகர் மற்றும் ஒரு சுயம்பு சிவலிங்கம் உள்ளது. நவகிரகம் அனுமார், பெருமாள் மற்றும் ஒரு விநாயகர் சன்னதியும் சுற்றி உள்ளன. ஏராளமான பக்தர்கள் வருவதால் அந்த இடம் முழுவதும் சிறு சிறு கடைகள் Tourists நம்பிவியாபாரம் நடைபெறுகிறது. காட்டு பகுதியில் கிடைக்கும் பல பொருள்கள் விற்பனை செய்யப்படுகிறது. மnணிக்க கங்கையில் குளித்து விநாயகரை வழிபடலாம். சற்று மேல உயரத்தில் உள்ள பெளத்தர் ஆலயமும் பெரியது புராதானமானது. அதன் அருகில் ஒரு சிவன் ஆலயம் இருக்கிறது. தனியாக ஒரு விநாயகர் ஆலயமும் சுற்று பிரகாரத்தில் உள்ளது. மிக அற்புதமாக இந்த இடங்கள் உள்ளது.. தமிழர் வழிபாடு கீழே உள்ள மாணிக்க விநாயகர் ஆலயத்தில் செய்யப்படுகிறது. விநாயகர் ஆலயத்தில் எல்லா கருவரை களிலும் விக்ரக வழிபாடு நடைபெறுகிறது.
இதன் பிறகு நுவரேலியா என்ற ஊருக்கு செல்லும் வழியில் சில ஆலயங்களை தரிசனம்
https://m.facebook.com/story.php?story_fbid=2445509548857621&id=100001957991710

இலங்கை பயணம் - 2018 பதிவு - 5 கதிரைமலை

இலங்கை பயண பதிவு _ 5. கதிரைமலை
கதிர்காமம் முருகன் மற்றும் அருகில் அமைந்துள்ளஅனைத்து ஆலய சன்னிதிகளையும் தரிசித்து பஸ் ஏறி சில கி.மீ அருகில் உள்ள கதிரைமலை ஆலய அடிவராம் சென்றோம். ஏழுமலை உயரத்தில் ஒரு முருகன் ஆலயம் ஒரு ஈஸ்வரன் ஆலயம் மற்றும் ஒரு பெளத்த விகnர் உள்ளது. மலை ஏறி நடந்தும் செல்லலாம் மிக மிக செங்குத்து வழி. மலைக்கு செல்ல அடிவாரத்தில் .ஒரு பெளத்த விகராம் சென்று அங்கிருந்து Open Jeep | truck வசதி உள்ளது. வித்தியாசமான அனுபவம். மிக செங்குத்து பாதை பயங்கரமான வளைவுகள் பள்ளம் மேடுகள். முழுவதும் concrete போடப்பட்டு இருந்தாலும். 2 .3 பேர் மட்டும் ஜீப் உள்ளே .மற்றவர்கள் பின்புறம் open.வழியில் Seat கெட்டியாக பிடித்துக் கொள்ள வேண்டும். மேலே சென்று வர Ticket உண்டு.
மலை மீது :
முதலில் முருகன் ஆலயம் சற்று மேலே சென்றால் அரச மரம் பெளத்த விகார் மற்றும் ஒரு ஈஸ்வரன் ஆலயம் பூசை நடந்த நேரத்தில் சென்றோம். இங்கும் அனைத்து சன்னதிகளும் திரைச்சீலை தான் வழிபாடு. நவகிரகம் வைத்துள்ளார்கள். மலை உச்சியில் இருந்ததால் கீழே உள்ள பகுதிகள் அனைத்தும் பார்த்து களிக்கலாம். முருகன் ஆலயத்தில் மூலிகை சாம்பிராணி விற்கிறார்கள். சற்று கீழே வந்தால் அன்னதானக் கூடமும் உண்டு. நல்ல வழிபாடு அனுபவம். திரும்ப ஜீப் மூலம் இறங்கினோம். ஒரு வழிப் பாதையில் எதிர் எதிராக வாகனத்தை அனாசியமாக ஓட்டுகிறார்கள்.
https://m.facebook.com/story.php?story_fbid=2445434372198472&id=100001957991710

இலங்கை பயணம் - 2018 - பதிவு : 4 கதிர்காமம் முருகன் ஆலயம்...

இலங்கை பயண பதிவு 4. கதிர்காமம்

கதிர்காமம் முருகன் ஆலயம் வடக்கு புறம் தெய்வாணை க்கு என்று தனி சன்னதி உண்டு. மேலும், குரு மடம் ஒன்றும், வேலாயுத சுவாமி, மற்றும் ஒரு விநாயகர் சன்னதிகளும் உண்டு. 
ஆலயத்தின் கிழக்கே எதிர்புறம் தனியே ஒரு காளி. மற்றும் வள்ளி ஆலயம் அரச மரத்தில் தனி வள்ளியம்மன் சன்னதி மற்றும் ஒரு தனி ஈஸ்வரன் ஆலயம் இருக்கிறது.
https://m.facebook.com/story.php?story_fbid=2445372732204636&id=100001957991710

இலங்கை பயணம் - 2018 - பதிவு - 3 கதிர்காமம்

இலங்கை பயண பதிவு 3
14.12.2018 வெள்ளிக்கிழமை காலை : 
புகழ் பெற்ற 
புராதனமான கதிர்காமம் முருகன் ஆலயம் தரிசனம். 
கோவில் செல்லும் முன் புனித நதி ஒன்று செல்கிறது. அதற்கு பிறகு நடந்து தான் செல்ல வேண்டும். சிறிய பாலம் உண்டு. 200 மீட்டர் இருக்கும். பெரிய காட்டு/தோட்டத்தில் அமைந்துள்ளது. மிகப் பெரிய இடம் பல இடங்களில் சிறிய ஆலய சன்னதிகள் பெளத்தர் வழிபாட்டு முறை தான் தென் மற்றும் மத்திய இலங்கைப் பகுதிகளில் . பழங்களை மிக நேர்த்தியாக தட்டுகளில் வைத்து சுவாமிக்கு நிவேதனம் செய்து பிரசாதமாக எடுத்துச் செல்கிறார்கள். 
கோவிலுக்கு கிழக்கு, மேற்கு புறத்தில் அழகான புராதானமான Arch 2ள்ளது. 
கருவரையில் திரைச்சீலை தான் உள்ளது. பெரும்பாலும் எல்லா கருவரையிலும் திரைச்சீலை யில் சுவாமி வரைந்து உள்ளார்கள் அதையே தான் வணங்க வேண்டும். திரைக்குள்ளே சென்று பூசை நேரம் மட்டும் மந்திரம் சொல்லப்பட்டு வருகிறது திரைச்சீலை விலகக் கப்படுவதேயில்லை. 
கதிர்காமம் கோவில் சுற்றி நான்கு திசைகளிலும் சிறிய சன்னதிகள் இருக்கிறது. பொதுவாக எல்லா கருவரையின் 
பின்னே ஒரு தனி அரச மரம் புத்தர் சிலை ஸ்துபி கண்டிப்பாக உண்டு இந்து மற்றும் பெளத்தர்கள் இணைந்தே அமைதியாக வழிபாடு செய்கிறார்கள்.
https://m.facebook.com/story.php?story_fbid=2445325185542724&id=100001957991710

இலங்கை பயணம் 2018 பதிவு - 2 கொழும்பு - கதிர்காமம்

இலங்கை பயண பதிவு 2

கொழும்பு விமான நிலயம் கொழும்பு நகரத்திலிருந்து சுமார் 30 கிமீ வடக்கில் உள்ளது. Express வழி அமைத்துள்ளார்கள். நாங்கள் கதிர்காமம் சென்று இரவு Hotel OKRIN தங்கினோம் வழியில் இரண்டு உணவகங்களின் Tea snaks சாப்பிட நிறுத்தினோம்.
 (Costs மிக அதிகம் இந்திய ரூ 100க்கு இலங்கை ரூ 200) எல்லாப் பொருள்களும் இந்திய ரூபாய்க்கு மிக அதிகமே
பொதுவாக அணைத்து இலங்கை 
  மக்களும் மிக ஒழுக்கமாக உள்ளார்கள். 
பாதசாரிகள் கோட்டில் செல்லும் போது அனைத்து வாகன ஓட்டிகளும் நிறுத்தி பாதசாரிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். 
கிராமங்களில் கூட சிறுவர்களுக்கு கூட Helmet அணிவித்து செல்லுவது ஆச்சரியப்படுத்துகிறது.
https://m.facebook.com/story.php?story_fbid=2445280962213813&id=100001957991710

KERALAYATRA2024பகுதி - 5- வைக்கம் - (எர்னாகுளம்)பதிவு - 25 - #சுப்ராம்ஆலயதரிசனம் #சுப்ராம்ஆலயதரிசனம் 13.8.2024 #பயணஅனுபவக்குறிப்புகள்🕊️29. வைக்கம் சிவன் கோவில்(Vaikom Temple):

#KERALAYATRA2024 பகுதி - 5- வைக்கம் - (எர்னாகுளம்) பதிவு - 25 - #சுப்ராம்ஆலயதரிசனம்  #சுப்ராம்ஆலயதரிசனம் 13.8.2024  #பயணஅனுபவக்குறிப்புகள்🕊...