#பசுபதிநாதர்ஆலயம்
#காத்மாண்டு
#முக்திநாத்திருப்பயணம் -
#NepalYatra 20.04.2024 - 4.5.2024
12
🕊️பயண அனுபவக் குறிப்புகள்.
🚍24.04.2024 அன்று காலையில் சுனோலியிருந்து புறப்பட்டு, அன்று இரவு தான் காத்மாண்டு வர முடிந்தது. நேப்பாளம் எல்லா முக்கிய சாலைகளிலும்
புதிய அகலப் பாதை வேலை நடைபெற்று வருகிறதால், மிக மிக கடினமான பயனமாக இருந்தது.
🏢Hotel Narayana என்ற இடத்தில் தங்கினோம். 5 வருடங்களுக்கு முன்பு முக்திநாத் பயணத்தின் போதும், இதே Hotel ல் தான் தங்கியிருந்தோம்.
பசுபதிநாதர் ஆலயம் மிகவும் அருகாமையில் உள்ள இடம்.
🌟காட்மண்டு
⛳ நேபாளத்தின் தலைநகரமாகும். இது மத்திய நேபாளத்தின் காத்மாண்டு சமவெளியில் பாக்மதி ஆற்றின் கரையில் அமைந்துள்ளது.
⛳நேபாள நாட்டில் உள்ள நான்கு உலகப் பாரம்பரியக் களங்களில் காத்மாண்டு சமவெளியும் ஒன்றாக உள்ளது.
⛳காத்மாண்டு சமவெளியில் அமைந்த ஏழு பண்பாட்டு உலக பாரம்பரியக் களங்கள்;
⚡காத்மாண்டு நகரச் சதுக்கம்
⚡பக்தபூர் நகர சதுக்கம்
⚡பதான் தர்பார் சதுக்கம்
⚡பசுபதிநாத் கோவில்
⚡சங்கு நாராயணன் கோயில்
⚡பௌத்தநாத்து
⚡ (சுயம்புநாதர் கோயில்)Amideva Buddha Park
மேலும்,
⚡காத்மாண்டு சமவெளி
⚡திரிபுவன் பன்னாட்டு வானூர்தி நிலையம்
⚡திரிபுவன் பல்கலைக்கழகம்
⚡சிங்க அரண்மனை
⚡நாராயணன்ஹிட்டி அரண்மனை
⚡என்று பல இடங்களை முதன்மையாக சுற்றுலா வழிகாட்டிகளில் குறிப்பிட்டு இருந்தாலும்,
பாரதத்திலிருந்து செல்லுபவர்கள் குறிப்பாக தமிழகத்தில் இருந்து செல்பவர்கள், ஆன்மீகம் சார்ந்த இடங்களையே விரும்பி தரிசித்து வருகிறோம்.
இவற்றுள், இந்த பயணத்தில் சில இடங்களை மட்டும் ஒரு நாளில் தரிசித்து / சுற்றிப் பார்த்து வர வாய்புக்கிடைத்தது.
1. பசுபதிநாதர் ஆலயம்
2. குஹ்யேஸ்வரி கோவில்
3. சங்கு நாராயணன் கோயில்
4. நாராயணன்ஹிட்டி அரண்மனை
5. காத்மாண்டு நகரச் சதுக்கம்
மற்றும்...
(சுயம்புநாதர் கோயில்)Amideva Buddha Park
✨இந்த இடங்களை பற்றி வலைதளங்களில் காணப்படும் முக்கிய சில குறிப்புகளையும், சென்று வந்த அனுபவக் குறிப்புகளையும் இணைத்து பகிர்ந்து கொள்கிறேன்.
1. பசுபதிநாதர் ஆலயம்.
பசுபதிநாத் ஆலயம் :
💫உலகிலுள்ள மிகப்பெரிய இந்துக் கோவில்களுள் ஒன்று. நேபாளத் தலைநகரான காத்மாண்டுவின் கிழக்குப் பகுதியில் ஓடும் பாக்மதி ஆற்றின் கரையிலுள்ள இக்கோவில் சிவனுக்கான ஒரு கோவிலாகும்.
🛕இக்கோவிலில் வழிபடப்படும் பசுபதிநாதர், நேபாளம் இந்து நாடாக இருந்து மதச்சார்பற்ற நாடாக மாறும் வரை அந்நாட்டின் தேசியக் கடவுளாக இருந்து வந்தார்.
🛕இக்கோவில் யுனெஸ்கோவின் உலகப் பாரம்பரியச் சின்னங்களின் பட்டியலில் இடம்பெற்றுள்ளது.
🛕இக்கோவில் எப்போது நிறுவப்பட்டது என்பது உறுதியாக அறியப்படவில்லை.
🛐தலபுராணம்:
🔱நேபாள புராணங்களான மகாத்மயா மற்றும் ஹிம்வத்கந்தா என்பனவற்றின் கூற்றுப்படி, அஃது, கைலாய மலையில் வாழ்வது சிவனுக்கு மிகவும் அலுத்து விட்டதால் அதிலிருந்து விடுபடும் பொருட்டு ஒரு நாள் புதிய இடமொன்றைத் தேடினார். இறுதியில் காத்மாண்டுப் பள்ளத்தாக்கைக் கண்டுபிடித்தார். யாரிடமும் கூறாமல் தன்னிடத்தை விட்டுப் பிரிந்துப் பள்ளத்தாக்கில் வசிக்கலானார். பிற கடவுளர் அவரது மறைவிடத்தைக் கண்டுபிடிப்பதற்குள், அவர் அங்கு பசுபதி என்ற பெயரில் விலங்குகளின் கடவுளாகப் புகழ் பெற்றுப் போற்றப்பட்டார்.
🔱பிற கடவுளர் அவரைத் தேடி அங்கு வந்த போது அவர் ஒரு பெரிய மான் வடிவில் மாறுவேடம் பூண்டார். அவர்கள் அவரிடத்து உதவி கேட்டபோதும் அவர் உதவாமல் அம்மான் வேடத்திலேயே சுற்றித் திரிந்தார். மேலும் சிவன் பிற கடவுளரது கோரிக்கைகளை ஏற்க மறுத்ததால் அவர்கள் தங்களது ஆற்றலைப் பயன்படுத்தத் திட்டமிட்டனர்.
🔱திருமால் அவரது கொம்புகளை திடீரெனப் பிடித்ததில் அவை துண்டுகளாக உடைந்து சிதறின. பின்னர் திருமால் பாக்மதி ஆற்றங்கரையில் ஒரு கோவிலை நிறுவி அங்கு உடைந்த மான் கொம்புகளைக் கொண்டு லிங்கச் சிலையை உருவாக்கினார்.
🔱காலப்போக்கில் அக்கோவிலானது சிதைவடைந்தது. மேலும் அது யாராலும் கண்டுகொள்ளப்படவும் இல்லை. பின்னர் ஒரு நாள் ஓர் ஆடு அம்மண்மேட்டின் மீது பாலைச் சுரந்தது. அவ்விடத்தைச் சுற்றி அந்த ஆடு தன் கால்களால் தோண்டப் புதையுண்ட கோவில் வெளிப்பட்டது. பின்னர் அந்த லிங்கச் சிலை கண்டறியப்பட்டு மீண்டும் கோவில் நிறுவப்பட்டது.
🔱கறையான்களால் அரிக்கப்பட்டு பாழடைந்ததால் நேபாள மன்னர் பூபேந்திர மல்லா என்பவரால் இக்கோவில் முதன்முதலில் பதினேழாம் நூற்றாண்டில் புணரமைக்கப்பட்டது.
🔱இதில் 11 மற்றும் 14 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கையெழுத்துப் பிரதிகளில் குறிக்கப்பட்டுள்ள வைணவக் கோவிலாகிய ராமர் கோவிலையும், குஹ்யேஸ்வரி கோவிலையும் உள்ளடக்கிய இரண்டு அடுக்குகள் கொண்ட மேலும் எண்ணற்ற கோயில்கள் இந்தக் கோவிலை சுற்றிலும் நிறுவப்பட்டன.
🛕பாக்மதி ஆற்றின் கரையிலிருக்கும் பசுபதிநாத் கோவில் பகோடா கட்டடக்கலை முறைப்படி கட்டப்பட்டுள்ளது.
🛕பகோடா முறையின் அனைத்து சிறப்புகளையும் உள்ளடக்கியவாறு கோவிலானது கனசதுர வடிவில் மரங்களைக் கொண்டும் தாமிர மேற்கூரையில் தங்க முலாம் பூசப்பட்டும் கட்டப்பட்டுள்ளது.
🛕இக்கோவில் நான்கு முதன்மை வாயில்களைக் கொண்டுள்ளது. இவ்வாயில்கள் அனைத்துமே வெள்ளியால் செய்யப்பட்டவையாகும். கோவிலின் மேல் ஒரு தங்கத்தால் ஆன கலசம் உள்ளது.
🛕பசுபதிநாத் சிலையானது ஆறடி உயரத்தில் ஆறடி சுற்றளவில் கருங்கல்லால் செய்யப்பட்டிருக்கிறது. பசுபதிநாதரின் கிழக்குப் பகுதியில் 'வாசுகிநாதர்' வீற்றுள்ளார்
🏞️ஆர்ய காட்:
ஆர்ய காட்டில் எரியும் பிணமும் அமர்ந்திருக்கும் உறவினரும்
⛳இக்கோவில் அமைந்துள்ள பாக்மதி ஆற்றங்கரையில் ஆர்ய காட் என்றழைக்கப்படும் சுடுகாடும் உள்ளது.
🌟இங்கு உயிர் பிரிந்து உடல் எரியூட்டப்படின் நற்கதி கிட்டும் என்பது இந்துக்களிடையே உள்ள ஒரு நம்பிக்கை ஆகும். இந்தியாவில் காசியும் இதே நம்பிக்கையைப் பெற்றிருக்கக்கூடிய ஒரு தலம் என்பது குறிப்பிடத்தக்கது.
🌼விழாக்கள்
பசுபதிநாத் கோவில் இந்து மதத்தைப் பின்பற்றுபவர்களின் புனிதப் பயணத்திற்கான மிக முக்கியமான இடங்களில் ஒன்றாக கருதப்படுகிறது.
🌟நேபாளத்திலிருந்தும், இந்தியா போன்ற வெளிநாடுகளிலிருந்தும் வரும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஒவ்வொரு நாளும் பசுபதிநாதரை வழிபாடு செய்து வருகின்றனர்.
🌟ஏகாதசி, சங்கராந்தி(தை முதல் நாள்), மகாசிவராத்திரி, தீஜ் அட்சயா, ரட்சா பந்தன், கிரகணம் மற்றும் முழு நிலவு நாள் போன்ற சிறப்பு நாட்களில் மக்கள் மிக அதிக எண்ணிக்கையில் இங்கு கூடுவதால் அந்நாட்கள் விழாக்கோலம் காணுகின்றன. மேலும், இக்கோவிலில் கொண்டாடப்படும் மிக முக்கியமான திருவிழா சிவராத்திரி ஆகும்.
🌟சிவராத்திரி நாளில் இங்கு நேபாளம் மற்றும் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து நூற்றுக்கணக்கான சாதுக்களும் (முனிவர்கள்) பல்லாயிரக்கணக்கான பக்தர்களும் வருவதுண்டு. நெய் விளக்குகள் ஏற்றப்பட்டு இரவு முழுவதும் இக்கோவில் திறந்தே இருக்கும்.ஆயிரக்கணக்கான பக்தர்கள் இந்நாளில் பாக்மதி ஆற்றில் நீராடி, நாள் முழுதும் உண்ணாநோன்பு இருக்கும் புனிதச் சடங்கை மேற்கொள்வர்.
🛐கோவில் பூசாரிகள்
🕉️கடந்த 350 ஆண்டுகளாக அக்கோவிலில் பூசாரிகளாகத் தென்னிந்தியாவின் கர்நாடக மாநிலம் சிமோகா மாவட்டத்திலுள்ள பட்டர்கள் என்ற சமூகத்தைச் சேர்ந்த பிராமணர்கள் மட்டுமே தெரிவு செய்யப்படுகின்றனர்.
பசுபதிநாதரின் பூசாரிகள் 'பட்டர்கள்' என்று அழைக்கப்படுகின்றனர். கோவிலின் தலைமைப் பூசாரியானவர் 'மூல பட்டர்' என்றும் இராவல் (வட நாட்டு மரபு) என்றும் அழைக்கப்படுகிறார். இவர்களுள் மூல பட்டர் குறிப்பிட்ட கால இடைவெளிகளில் நேபாள மன்னரிடம் கோவில் பற்றிய தகவல்களைத் தெரிவிப்பவராக இருந்தார்.
🕉️இக்கோவிலின் மூலவரான பசுபதிநாதரை நான்கு வம்சாவளியைச் சேர்ந்த பூசாரிகள் மட்டுமே தொடமுடியும்.
🕉️ஒன்பதாம் நூற்றாண்டில் இந்து சமய எழுச்சியைத் தோற்றுவிக்க மூல காரணமாக விளங்கிய ஆதி சங்கரர் அவர்கள் கேட்டுக் கொண்டதற்கிணங்க இக்கோயிலின் நடை முறைகள் கடைபிடிக்கப்பட்டன. இந்நடைமுறைகள் இந்தியா எங்கும் உள்ள, ஆதி சங்கரரால் மேம்படுத்தப்பட்ட மேலும் சில இந்து கோயில்களிலும் கடைபிடிக்கப்பட்டு வந்துள்ளன. பின்னாட்களில் ஆண்ட இந்து சமய 'மல்லா' மன்னர்களும் ஆதிசங்கரரின் இந்தக் கோரிக்கையை விடாது போற்றி வந்தனர்.
🕉️எவ்வாறிருப்பினும் அண்மையில் இந்நடைமுறை மாற்றம் கண்டது. நேபாளத்தில் முடியாட்சி அகற்றப்பட்டு குடியாட்சி ஏற்பட்ட பின்னர் நேபாள பூசாரிகள் இந்து எதிர்ப்பு மாவோயிச அரசினால் ஆதரிக்கப்பட்டனர்.
ஆனால் நேபாள மக்கள் இதனை தங்கள் மதத்தில் ஏற்பட்ட குறுக்கீடாகக் கருதுகின்றனர்
🌟2009ஆம் ஆண்டு ஏற்பட்ட சச்சரவுகள்
🛐மல்லா சகாப்தத்திலிருந்து தொடர்ந்து தென்னாட்டிலிருந்து வந்த பிராமணப் பூசாரிகள் (பட்டர்கள்) கோவில் நிர்வாகத்தில் நுழைந்தது நேபாளிகளிடையே பெரும் சர்ச்சையை கிளப்பியிருந்தது.
🛐சனவரி 2009-இல் மூல பட்டரின் திடீர்ப் பதவி விலகலைத் தொடர்ந்து மாவோயிச ஆதரவு நேபாள அரசு, ஒரு நேபாளியை உடனுக்குடன் மூல பட்டராக பணியமர்த்தியது. இவ்வாறாகக் கோவிலின் நீண்ட கால தேவைகளுக்கு அவ்வரசு வழியேற்படுத்தியது. நேபாளியின் பணியமர்த்தலுக்கு தாங்கள் ஆதரவாக இருப்பதாகவும் ஆனால் பணியமர்த்தல் ஒரு வரைமுறையின்றி இருப்பதாகவும் கூறி கோவிலின் பண்டாரிகளால் எதிர்க்கப்பட்டது. இவ்விவகாரம் நீதிமன்றத்திற்குக் கொண்டு செல்லப்பட்டதால், பட்டர் பணியமர்த்தல் நேபாள உச்சநீதிமன்றத்தின் கட்டுப்பாட்டிற்குச் சென்றது.
🛐ஆனாலும் நேபாளத்திற்கு வெளியிலும் உள்ளும் இருக்கின்ற இந்துக்களின் தொடர் எதிர்ப்பினால் அம்முறை கைவிடப்பட்டு பழைய நிலைமையே தொடரும் என்று அறிவிக்கப்பட்டது.
🌟இக்கோவில் 2015 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 25 ஆம் தெகதி ஏற்பட்ட பூகம்பத்தில் எந்த வித இடிபாடுகளும் இன்றி தப்பித்தது. ஆனால் அங்கிருந்த அதிகமான அதிசய சின்னங்கள் அழிந்தன.
✨பசுபதிநாதரின் பக்தர்கள் (பொதுவாக இந்துக்கள்) மட்டுமே கோவில் வளாகத்திற்குள்
அனுமதிக்கப்படுகின்றனர்.
🌟இந்துக்கள் அல்லாதோர் பாக்மதி ஆற்றின் மற்றொரு கரையிலிருந்து மட்டுமே கோவிலைப் பார்க்க அனுமதிக்கப்படுகின்றனர்.
🌟மேலும் தோல் ஆடை அணிந்து வருவோரும் கோவிலுக்குள் அனுமதிக்கப்படுவதில்லை.
கைப்பேசிகள் (off mode) மூடப்பட்டு அனுமதிக்கப்படுகிறோம்.
🕊️பயண அனுபவக் குறிப்புகள்
✨இந்த ஆலயம் இந்துக்களால் போற்றப்பட்டு, மிகவும் புன்னிய தலமாக இது விளங்குவதால், இந்த ஆலயவளாகத்தில் பிரார்த்தனை, தர்பனம், திதி முதலியவைகள் செய்து வருகிறார்கள். இதற்கு தகுந்த பண்டாக்கள் - பூசை செய்பவர்கள் ஏற்பாடுகள் வசதிகள் செய்யப்படுகின்றன.
✨ஆலயம் மிகப் பெரிய வளாகமாக உள்ளது.
பல இடங்களில் மண்டபத்துடன் சிவலிங்கங்கள் வைக்கப்பட்டு பூசைகளுடன் வணங்கப்பட்டு வருகிறது.
✨மூலவர் உள்ள ஆலயம் முன்வாசல் பெரிய அழகிய உயரமான அமைப்பில் நிலைப்படி உள்ளது.
✨மூலவர் உள்ள கருவரை உள்ள பகுதி
சற்று உயரமானது. மூலவர் 6 அடி உயரம் உள்ளவர். நான்கு புறமும் பூசை நேரங்களில் தரிசிக்கக்க கூடியது.
✨ஆனாலும், மேற்கு வாசலே முதன்மையாக பூசிக்கப்படுகிறது.
✨மூலவர் கருவரை மண்டபம் முன்புறம் நல்ல உயர அமைப்பில் பெரிய நந்தி சுவாமியை நோக்கி அமைக்கப்பட்டுள்ளது.
🌟அருகில் உயரமான சூலம் ஒன்றும் உள்ளது.
கருவரையில், பசுபதிநாதர் சிவலிங்கம்
உயரம், பருமன் அதிகம் உள்ள சிவலிங்க அமைப்பில், 5 முகம் கொண்டது.
✨நான்கு புறமும் முகமும், ஒரு முகம் மேல் பகுதியிலும் உள்ளது.
(நிர்மான்ய தரிசனத்தில் காணலாம். இறையருளால் எமக்கு நல்ல தரிசனம் செய்ய வாய்ப்புக் கிடைத்தது)
✨மூலவர் கருவரை சுற்றி வரும் போது, கீழ் புறத்தில் 'வாசுகி நாதர் -- ', சிறிய மண்டபத்துடன் சில சன்னதிகள் உள்ளன. மேலும், தெற்கு பகுதியில் 'கால பைரவர் ' மிகப்பெரிய உருவத்தில் தனி கருவரையில் உள்ளார்.
✨இதற்கு அடுத்து, சற்று இணைப்பாக வெட்ட வெளி மண்டபத்தில் 1008 சிறிய சிவலிங்கங்கள் உள்ளது. இவற்றை ஸ்வஸ்திக் வடிவத்தில் அமைக்கப்பட்டுள்ள பாதையில் சென்று தரிசனம் செய்யலாம். நடுவில் ஒரு சிறிய மண்டபத்தில் சற்றுப் பெரியலிங்கம் அமைந்துள்ளது.
✨தென்பகுதியில், மூலவரை நோக்கிய வணங்கிய வடியில், இவ்வாலயத்தின் நிர்மான்யம் செய்த நேப்பாள மன்னார்கள் உருவம் அமைத்து உள்ளார்கள்.
🌟இவற்றையும் உடன் வணங்கி மூலவர் ஆலயம் வெளியில் வர வேண்டும்.
✨மூலவர் கருவரையை சுற்றி வந்து வணங்க பெரிய வரிசைகள் உள்ளன.
✨சில நேரங்களில் மிக மிகஅதிக கூட்டம் இருந்தாலும், சில நேரங்களில் சுமாரான அளவில் உள்ளது.
குறிப்பாக, மாலை ஆர்த்தி நேரத்தில் மூலவரிடம் அதிக கூட்டம் இருக்காது. குறையும் வாய்ப்புகள் உண்டு.
✨வளாகத்தில் பல்வேறு நிர்வாகக் கட்டடங்கள் தனித்தனியாக உள்ளன.
⚡காலனிகள் வைக்க தனி இடவசதி உள்ளது. மாலை 7 மணிவரை இந்த வசதி பெறலாம்.
✨பாக்மதி என்ற நதி ஆலயத்தின் பின் பகுதியில் உள்ளது. இருபுறமும் அழகிய கல் படித்துறைகள் அமைக்கப்பட்டுள்ளது.
ஆறு மிகக் குறுகிய அளவில் உள்ளது.
படித்துறையில் ஆற்றின் எதிர்புறம் தினமும மாலை நேரத்தில் 6 மணிக்கு ஆர்த்தி நடைபெறுகிறது. ஏராளமான கூட்டம் வருகிறது.
✨ஆலயத்தின் தென்புறத்தில் பாக்மதி ஆற்றின் கரையில் உள்ள ஆர்ய காட் என்ற இடத்தில், இறந்து போன உடல்களை வைத்து, பூசை செய்து அடக்கம் / எரியூட்டுதல் நடைபெறுகிறது.
ஆலயம் கிழக்குப் பகுதியும், வடக்குப் பகுதியும் குன்று போன்று இயற்கை அமைப்புடன் உள்ளது.
✨பசுபதீஸ்வரர் ஆலயம் பின்புறம் செல்லும் வழியில் சென்று, பாக்மதி ஆற்றின் பாலத்தின் வழியாக சென்று, சுமார் 1 கி.மீ. தூரத்தில் சென்றால், பிரபலமான குஹயேஸ்வரி ஆலயம் சென்றுவிடலாம்.
🌟நாங்கள் சென்ற முறை பசுபதிநாதரை வணங்கிப்பின், ஆலயம்பின் புறமாக சென்று அம்பாள் ஆலயம் அடைந்து வணங்கி பின் பசுபதிநாதர் ஆலயம் வந்தோம்.
✨25.04.2024 காலையில் ஆலயம் சென்று பசுபதீநாதரை வணங்கி விட்டு, காலை உணவு முடித்துக் கொண்டு, நேப்பாள் காட்மண்டு அருகில் உள்ள ஆலயங்கள் சிலவற்றை தனி வாகன வசதிகள் ஏற்பாடுகள் செய்து கொண்டு சென்று தரிசித்து விட்டு மதியம் Hotel வந்தோம்.
25.04.24 மீள் தரிசனம்
#சுப்ராம்ஆலயதரிசனம்
#முக்திநாத்திருப்பயணம் -
#Nepal Yatra 20.04.2024 - 4.5.2024 -
#சுப்ராம்ஆலயதரிசனம்
#என்றும்_அன்புடன்
#சுப்ராம்_அருணாசலம்_காரைக்கால்
#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று
#ஆன்மீகபாரதம்அகிலத்தின்சிகரம்
No comments:
Post a Comment