கொறுக்கை: புஷ்பவல்லியம்மன் சமேத
பிரம்மஞானபுரீஸ்வரர் ஆலயம்.
அவிட்ட நட்சத்திர பரிகார கோவில்.
கிழக்குப் பார்த்த ஆலயம்.
இராஜ கோபுரம் இல்லை. மிகவும் புராதான தலம். சிதைந்து போய் மீட்டு தற்போது புனரமைப்பு செய்யப்பட்டு கும்பாபிஷேகம் செய்யப்பட்டுள்ளது.
சுவாமி கிழக்கு நோக்கியது. அர்த்த மண்டபம், நிருத்த மண்டபம் மற்றும் முன் மண்டபம் கொண்டது.
அம்பிகை தனியாக தெற்கு நோக்கி அமைப்பில் உள்ளார்.
ஏகபிரகாரம். கோஷ்ட்டத்தில் தட்சினாமூர்த்தி, அர்த்த நாரீஸ்வரர், பிரும்மா, துர்க்கையும்.
மேற்கில் பிரகார விநாயகர், சுப்பிரமணியர், மகாலெட்சுமி, சண்டிகேஸ்வரர் அமைந்துள்ளனர்.
கிழக்கில், பைரவர், சூரியன்
தகவல் தெரிவித்து தரிசனம் செய்யலாம்.
வழி: 1. பட்டீஸ்வரம் கிழக்கில், 3 கி.மீ.
2. குடந்தை - ஆலங்குடி வழியில், சாக்கோட்டை அடுத்து மருதாநல்லூர் வந்து மேற்கில் பட்டீஸ்வரம் செல்லும் சாலையில் 2 கி.மீ.தூரத்தில் கொறுக்கை உள்ளது. பிரதான சாலையில் வரும் சிற்றூரில் நடுவில் உள்ளது.
28.12.2025- #மீள் தரிசனம்
#சுப்ராம்
#சுப்ராம்அருணாசலம்காரைக்கால்
#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று
#ஆன்மிகபாரதம்அகிலத்தின்சிகரம்
https://www.facebook.com/share/p/1PUG3LMVeK/
No comments:
Post a Comment