Saturday, January 17, 2026

சுவாமிமலை முருகன் கோவில் (Arulmigu Swaminatha Swamy Temple) அறுபடை வீடுகளில் நான்காவது படைவீடு.

சுவாமிமலை முருகன் கோவில் (Arulmigu Swaminatha Swamy Temple) அறுபடை வீடுகளில் நான்காவது படைவீடு.

⛳தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே காவிரி ஆற்றங்கரையில் அமைந்துள்ளது;

 🏵️இங்கு முருகன், தந்தைக்கு பிரணவ மந்திரம் (ஓம்) உபதேசித்ததால் சுவாமிநாதன் எனப் பெயர் பெற்றார்; இது குரு அம்சமாகத் திகழ்வதாலும், தகப்பனுக்கே உபதேசம் செய்ததால் இத்தலம் சுவாமிமலை என அழைக்கப்படுகிறது. 
60 படிகள் கொண்டது.

🔱கீழ்க்கோவில் ஶ்ரீ மீனாட்சிசுந்தரேஸ்வரர் அம்மையும், அப்பனுமாக இருந்து அருள் புரிகிறார். தனி சிவன் ஆலய அமைப்பில உள்ளது.

🔱தந்தைக்கு உபதேசம் செய்த முருகன் மலைக்கோவிலில் தனி அமைப்பில் உள்ளார்.
கிழக்கு நோக்கிய தனி விநயகர் சிறப்பு அம்சம்.

🔱 வாழ்வில் தரிசிக்க வேண்டிய சிறப்பான அற்புத பலன் தரும் ஆலயம்.

🛕தல வரலாறு & சிறப்பு அம்சங்கள்:

🌟குரு-சிஷ்ய உறவு: சிவபெருமானுக்கு 'ஓம்' மந்திரத்தை உபதேசித்ததால், முருகன் 'சுவாமிநாதன்' (குரு) ஆனார்; சிவன் 'சுவாமி' ஆனார்.
அறுபடை வீடு: முருகனின் நான்காவது படைவீடு.

 🌟இங்குள்ள மலை, உண்மையில் மண் குன்றே, ஆனால் கட்டுமலையாக உருமாறியது.

🌟திருப்படி பூஜை: 60 தமிழ் ஆண்டுகளின் பெயரால் அமைந்த 60 படிகளைக் கடந்து செல்வது சிறப்பு.

🌟பிரம்மகத்தி தோஷ நிவர்த்தி: பதினாயிரம் பிரம்மகத்தி தோஷங்களை நீக்கும் வல்லமை கொண்டது.

🌟ஐராவதம்: தேவேந்திரன் வழங்கிய வெள்ளை யானையான ஐராவதத்தின் சிலை மூலவர் சன்னதி முன் உள்ளது. 

⛳அமைவிடம் & நேரம்:
இடம்: தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்திலிருந்து சுமார் 6-8 கி.மீ தொலைவில் உள்ளது.

🍀பூஜைகள்:
விபூதி அபிஷேகத்தில் ஞானியாகவும், சந்தன அபிஷேகத்தில் பாலசுப்ரமணியனாகவும் காட்சி தருவார்.

🔰பல்வேறு அபிஷேகங்கள், அர்ச்சனைகள் மற்றும் சிறப்புப் பூஜைகள் நடைபெறும். 

பல தகவல்கள் வலை தளத்தில் வந்தது.

🛐எமக்கு எம் குலதெய்வமான சுவாமிநாதர் என்றும் துணையிருப்பார்🙆🏼

🛐வாய்ப்பு கிட்டும் போது எல்லாம் தரிசனம் செய்ய வேண்டிய ஆத்மார்த்த ஆலயம்🙇

5-01-2026
28.12.2025 தரிசனம்.
# சுப்ராம் அருணாசலம்.
#சுப்ராம் 
#என்றும்அன்புடன் 
#சுப்ராம்அருணாசலம்காரைக்கால் 
#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று 
#ஆன்மீகபாரதம்அகிலத்தின்சிகரம்

No comments:

Post a Comment

சுவாமிமலை முருகன் கோவில் (Arulmigu Swaminatha Swamy Temple) அறுபடை வீடுகளில் நான்காவது படைவீடு.

சுவாமிமலை முருகன் கோவில் (Arulmigu Swaminatha Swamy Temple) அறுபடை வீடுகளில் நான்காவது படைவீடு. ⛳தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே காவிரி ...