தஞ்சையின் பஞ்ச வைத்திநாதர் ஆலயங்கள்
வைத்தியநாதர், பூமாலை. கீழவாசல், தஞ்சாவூர்
ஆலயம் - 1
🏵️ புராண வரலாற்றுப்படி அகஸ்தியர் முனிவரால் நிறுவப்பட்ட தஞ்சாவூரைச் சுற்றியுள்ள பஞ்ச வைத்தியநாத ஸ்தலங்கள்:
1.வைத்தியநாதர், பூமாலை. கீழவாசல், தஞ்சாவூர்.
2.ஆதி வைத்தியநாதர், வீரசிங்கம்பேட்டை, 3.ஔஷதபுரீஸ்வரர், மாத்தூர்
4.ராஜராஜேஸ்வரர், கடகடபை,
(தற்போது கூடலூர் - மீனாட்சி சொக்கநாதர் ஆலயத்தில் உள்ளது).
5.பூஜாபதீஸ்வரர், சுரைக்காயூர்
https://www.facebook.com/share/r/17pbLYCvX4/
🛕தஞ்சை கீழவாசல் :
ஸ்ரீ பாலம்பிகை சமேத பூமாலை வைத்தீஸ்வரர் ஆலயம்
தஞ்சையின் பஞ்ச வைத்திநாதர் க ஆலயங்களில் ஒன்று.
🔱இது அரன்மணை தேவஸ்தானம் கட்டுப்பாட்டில் உள்ள ஆலயம்.
சிறிய ஆலயம். கிழக்குப் பார்த்த சுவாமி கருவரையும், அம்பாள் கருவரை தெற்கு பார்த்த அமைப்பும் கொண்டது.
🔱ஆலயம் பண்டைய கால வெளவால் நெற்றி மண்டபத்துடன் உள்ளது. மிக அழகிய புராண கருத்துகள் உள்ள வரலாற்று ஓவியங்கள் சிறப்பாக அமைந்துள்ளது.
🔱முன்புறம் வாயில் மண்டபம் உண்டு.
🔱ஆலயமேற்கு புறத்தில் உள்ள வடபத்ர காளியம்மன் மிகவும் பிரசித்தமாக உள்ளது. சிறப்பு பூசைகள் நடைபெற்று பிரசித்தமாக உள்ளது.
🔱சுற்றுப்பிரகாரங்கள் ஆக்கிரமிப்பில் உள்ளது. இருப்பினும், நகர்புறத்தில் ஆலயம் உள்ளதால், ஏராளமான பக்தர்கள் வந்து வழிபட்டு செல்கிறார்கள்.
https://www.facebook.com/share/p/1DrGZ3nWgu/
கீழவாசல்
#சுப்ராம் - 28.12.2025
#என்றும்அன்புடன்
#சுப்ராம்அருணாசலம்காரைக்கால்
#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று
#ஆன்மீகபாரதம்அகிலத்தின்சிகரம்
No comments:
Post a Comment