தஞ்சை:: பஞ்ச வைத்தியநாத ஸ்தலங்கள்:
4.
🛕மாத்தூர் - ஸ்ரீ வைத்தீஸ்வரர் (எ) மருந்தீஸ்வரர் ஆலயம் :
🔱தஞ்சைக்கு வடக்கே 12 கி.மீ. திருப்புள்ளமங்கை என்னும் பசுபதி கோவில் அடுத்து வரும் அய்யம்பேட்டை பிரதான சாலைக்குத் தெற்கில் உள்ள புராதான தலம். முழுவதும் செங்கல் தளி .
🌟ஆலயம் கிழக்கு நோக்கியுள்ளது.
சில நூற்றாண்டுகளுக்கு முன் சிதலமடைந்து தரைமட்டமாகி பிறகு புனரமைப்பு செய்யப்பட்டு 2002 ல் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டுள்ளது.
காட்சி கோபுர அமைப்புடன் நுழைவு வாயில் முன்மண்டபம் வெளவால் நெற்றி அமைப்பு.
🔱கருவரை கோபுரம் மிகவும் உயரமானது. மிக மிக வித்தியாசமான அமைப்புடையது.
ஆலயம் சுற்றுச் சுவர் உள்ளது.
🌟ஸ்ரீமருந்தீஸ்வரர் , கிழக்கு நோக்கியும்,
ஸ்ரீ பிருஹன்நாயகி தெற்கு நோக்கியும் அமைந்த ஆலயம்.
🏵️புராதான தலம். சுந்தரர் வைப்புத்தலம்.
🏵️தன்வந்திரி அகத்தியர் பிரதிஷ்ட்டை செய்துள்ளனர்.
🏵️குபேரலிங்கம் முற்காலத்திலிருந்து உள்ளது.
🏵️சனி பகவான் காகத்தின் மீது காலை மடக்கியுள்ளார்.
🏵️இங்குள்ள காயத்திரி சக்கரம், மனம், உள்ளத்திற்கு நலம் தரும்.
🏵️கோமுக சிறப்பு: பகீரதன் அமிர்த கங்கை தீர்த்த சிறப்புடையது.
🏵️ஸ்ரீ பிரஹன் நாயகியம்மனை பிரார்த்தனை செய்தால், சுப மங்களம்
🏵️நெற்றிக்கண்ணுடைய நந்தி, சூரியன், பைரவர், சண்டேஸ்வரர் வழிபட மிகவும் நலமும் வளமும் பெறலாம்,
🏵️தன்வந்திரி, அகத்தியர், - நோய் தீர்த்தருளுபவர்.
🏵️குபேரர் வழிபட்டது.
28.12.2025 #சுப்ராம்தரிசனம்
#என்றும்அன்புடன்
#சுப்ராம்அருணாசலம்காரைக்கால்
#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று
#ஆன்மீகபாரதம்அகிலத்தின்சிகரம்
ஆலயம் தொழுவது சாலவும் நன்று
https://www.facebook.com/share/p/17nPhr82xN/
(மாத்தூர்)
No comments:
Post a Comment