சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 81 வது தேவாரத்தலம் ஆகும்.*
அருள்மிகு முல்லைவனநாதர் திருக்கோயில், திருக்கருகாவூர்.
இது ஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் ஆகியோரால் தேவாரப்பாடல் பெற்ற சிவதலம்
சுவாமி : முல்லைவனநாதர்
அம்பாள் : கர்ப்பகரஷட்சம்பிகை
கருகாத்த நாயகி
*தல விருட்சம்:முல்லை*
*தீர்த்தம்:பால்குளம், ஷீரகுண்டம், பிரம்மதீர்த்தம்*
*புராண பெயர்:கருகாவூர், திருக்களாவூர்*
.*கி.பி. ஏழாம் நூற்றாண்டு கோயில் இது.
**பிரார்த்தனை**மகப்பேறு:*
*திருமணம் ஆகி பல ஆண்டுகள் கழித்தும் குழந்தை வரம் இல்லாதவர்கள் இத்தலத்தில் வந்து வழிபடுவதற்கும்,கர்ப்பிணிப் பெண்கள் சுகப்பிரசவம் அடைவதற்காக செய்யும் பிரார்த்தனைக்கும் புகழ்பெற்றது இத்தலம்.*
*மேலும் மாதவிடாய் கோளாறு உள்ள பெண்கள் , கர்ப்பப்பை சம்பந்தமான நோயுள்ள பெண்கள், திருமணம் தடைபடும் பெண்கள் ஆகியோரும் இத்தலத்திற்கு பெருமளவில் வந்து வழிபட்டு தங்கள் பிரச்சினைகள் நீங்க பெறுகின்றனர்*
*தீராத நோய் உடையவர்கள், குறிப்பாக சரும நோய் உள்ளவர்கள் சுவாமிக்கு புனுகுச் சட்டம் சாத்தி தம் நோய் நீங்கப் பெற்று வருகிறார்கள்.இது இன்றளவும் நடைபெற்று வரும் கண்கூடான உண்மையாகும்.*
*இத்தலத்து முல்லைவனநாதனை வணங்குவோர்களுக்கு துயரம் நீங்கி மனஅமைதி கிடைக்கும். மேலும் வேலை வாய்ப்பு, தொழில் விருத்தி ,உத்தியோக உயர்வு, ஆகியவற்றுக்காகவும் இங்கு பிரார்த்தனை செய்தால் சுவாமி பக்தர்களது வேண்டுதல்களை நிச்சயம் நிறைவேற்றி கொடுப்பார்.
முல்லைக்காடாக இருந்த இந்த இடத்தில் சிவலிங்கத்திருமேனியை முல்லைக் கொடிகள் தழுவிப்படர்ந்திருந்தன. குழைவான இத்திருமேனியில் இன்றும் முல்லைக் கொடி படர்ந்து இருந்த வடுவை காணலாம்.*
வைகாசி – வைகாசி விசாகம் – 10 நாட்கள் – பிரம்மோற்சவம் – கொடி ஏற்றி தீர்த்தவாரி திருவிழா *புரட்டாசி – நவராத்திரி – அம்பாளுக்கு லட்சார்ச்சனை – 10 நாட்கள் திருவிழா*
*ஆடிபூரம் – பிரகாரம் வருவார் – 10 ம் நாள் காவேரி ஆற்றில் தீர்த்தவாரி நடைபெறும்.*
*இவை தவிர நடராஜருக்கு ஆறு அபிசேகங்கள், நிறைபணி அன்னாபிசேகம் , கந்தர் சஷ்டி, கார்த்திகை சோமவார நாட்கள் அனைத்து கார்த்திகை ஞாயிறுகளில் தீர்த்தவாரி, கார்த்திகை தீபம் மகாசிவராத்திரி, பங்குனி உத்திரம் ஆகியவை தலத்தின் விழாக்கள்.
*இத்திருத்தலம் மிகப்பழைய காலந்தொட்டு கருவுற்ற மகளிருக்கு, மிகச்சிறந்ததோர் ஆரோகியஸ்தலமாக இருந்து வந்துள்ளது. இத்திருக்கோயிலில் மூர்த்தியும், அம்பாளும் மகளிரின் கருச்சிதையா வண்ணம் காத்து, அவர்கள் எளிதில் மகப்பேறு எய்தி திருவருள் பாலித்த வண்ணம் உள்ளனர்.*
*சுவாமி, விநாயகர், நந்தி மூன்றுமே இத்தலத்தில் சுயம்பு மூர்த்திகள்.இதில் சுவாமி மட்டும் மண்ணால் ஆனது.மற்ற இரண்டும் சிலா அம்சங்கள்.*
*சுவாமிக்கும் அம்பாளுக்கும் நடுவில் சுப்ரமணியர்(சோமாஸ்கந்தர்) உள்ளார்.இவரை வழிபட்டால் புத்திர பாக்கியம் கிடைக்கும்.*
*நவகிரகங்களில் எல்லா கிரகங்களும் சூரியனை நோக்கியே இருக்கும்.சூரியனுக்கு எதிரில் குரு.எல்லாமே அனுகிரக மூர்த்தி.*
*வக்கிர மூர்த்திகள் கிடையாது.*
*அம்பாள் இடது கையை இடுப்பில் வைத்தபடி கர்ப்பத்தை தாங்கியபடி உள்ளது சிறப்பம்சம்.
*சுவாமி சுயம்பு மூர்த்தியாக இங்குள்ளார் என்பது சிறப்பு. லிங்கம் புற்று மண்ணினால் ஆகியதாகும்.*
*எனவே சுவாமியின் திருமேனியில் சுவாமிக்கு நேரடியாக அபிசேகம் செய்வது இல்லை.சுவாமியின் திருமேனியில் புனுகுச் சட்டம் மட்டுமே சாத்தப்படுகிறது*
*சுவாமி, விநாயகர், நந்தி மூன்றுமே இத்தலத்தில் சுயம்பு மூர்த்திகள்.இதில் சுவாமி மட்டும் மண்ணால் ஆனது.மற்ற இரண்டும் சிலா அம்சங்கள்.*
*சுவாமிக்கும் அம்பாளுக்கும் நடுவில் சுப்ரமணியர்(சோமாஸ்கந்தர்) உள்ளார்.இவரை வழிபட்டால் புத்திர பாக்கியம் கிடைக்கும்.*
*நவகிரகங்களில் எல்லா கிரகங்களும் சூரியனை நோக்கியே இருக்கும்.சூரியனுக்கு எதிரில் குரு.எல்லாமே அனுகிரக மூர்த்தி.*
*வக்கிர மூர்த்திகள் கிடையாது.*
*அம்பாள் இடது கையை இடுப்பில் வைத்தபடி கர்ப்பத்தை தாங்கியபடி உள்ளது சிறப்பம்சம்.*
மீள் தரிசனம்.
18.03.2023 மகாசிவராத்திரி/ சனி மகா பிரதோஷம்.
மேலும் பல முறை தரிசித்த ஆலயம்.
28.12.2025 மீள் தரிசனம்.
#சுப்ராம் தரிசனம்
#என்றும்அன்புடன்
#சுப்ராம்அருணாசலம்காரைக்கால்
#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று
#ஆன்மீகபாரதம்அகிலத்தின்சிகரம்
https://www.facebook.com/share/p/1GVowcdWsN/
No comments:
Post a Comment