மெலட்டூர் - உண்ணதபுரீஸ்வரர் ஆலயம்
⛳மெலட்டூர்
திட்டை - திருக்கருக்காவூர் சாலையில், உள்ள ஊர்.
ஊரில் உள்ள பிரதான சாலையிலிருந்து, தென்புறத்தில் உள்ள ஊரின் பெரிய சிவன் ஆலயம்.
வைப்புத்தலங்களின் ஒன்று.
🛐ஸ்ரீ உன்னதபுரீஸ்வரர்
ஸ்ரீசிவப்பிரியாம்பிகை - ஸ்ரீசிவகாமி அம்பாள்
🛕கிழக்கு நோக்கிய ஆலயம்.
🛕5 நிலை ராஜகோபுரம் உள்ளது.
🔱கொடிமரம், பலிபீடம், நந்தி கடந்து
முன் மண்டபம்.
உள் மண்டபம் சுவாமி கிழக்கு நோக்கிய தனி கருவரையும், அம்பாள் தனி கருவரையில், தெற்கு நோக்கியும் அருள் புரிகிறார்கள்.
🔱கோஷ்ட்டம் - பிரகாரத்தில், கிழக்கு நோக்கிய தனி விநாயகர், தட்சினாமூர்த்தி,
பெருமள், பிரும்மா, துர்க்கை மற்றும், சண்டிகேஸ்வரர் அமைக்கப்பட்டுள்ளது.
பிரகாரமண்டபங்கள் வெளவால் நெற்றி மண்டபங்களாக உள்ளது.
🔱சுப்பிரமணியர், மகாலெட்சுமி அமைந்துள்ளது.
💦ஆலயம் முன்பு சற்று தூரத்தில் மிகப்பெரிய குளம் உள்ளது
'சப்தசாகர ஷேத்திரம். அரசனுக்காக சப்தசாகரங்களும் வந்ததாக ஐதீகம்.
வெட்டாற்றின் தென்கரையில் உள்ள தலம்.
பராசக்தி, சப்தமாதாக்கள், ஆதி மூல துவாரபாலகிகள் இருவர் நவராத்திரியின் போது வழிபடும் சிவபெருமான் இவர் ' என்கிறர்கள்.
🌴'வன்னி, பனைமரங்கள் தலவிருட்சம்''
🏵️'கி.பி.12ம் நூற்றாண்டில் விக்ரம சோழன் காலத்தில் இருந்த ஊர் என்பது கல்வெட்டு. நிருத்தவிநோத வளநாடு என்பது பழைய பெயர்.
சுவாமியின் பெயரால், உன்னதபுரி
என்றயாயிற்று.
🌟விஜயநகரப் பேரரசின் அபிமானியாக இருந்த அச்சுதப்ப நாயக்கர் என்கிற தஞ்சைத் தலைவர் குச்சிப்புடி நடனக் கலைஞர்களுக்கு இந்த உன்னதபுரியை இனாமாகத் தந்தார். அவரது மந்திரி கோவிந்த தீக்ஷதரால் திருப்பணி செய்யப்பட்டிருக்கிறது.
பின்னர் 1888 ல் உதயமான புகழ்பெற்ற பாகவத மேளா என்கிற நாட்டிய மரபுக்கலையை உருவாக்கிய ஊர்.'
🔰'துக்காஜி மகராஜ் காலத்தில் காஞ்சியிலிருந்து முற்கால அத்தி (தற்கால திவ்ய தேசம்) இவ்வூரின், வடமேற்கு அக்ரஹாரத்தில், வரதராஜப் பெருமாள் கோயிலாக் கட்டினார்கள் என்பது வரலாறு'.
🔰'மேல ஊர் என்பதே மெலட்டூர் ஆனது.
உன்னபுரி, அச்சுதாப்தி, அச்சுதபுரி என்பது இதர பெயர்கள்'.
🙏🏼நன்றி.🏵️-(வேண்டுவன வழங்கும் வைப்புத்தலங்கள் - கே. சாய்குமார்)
🛐இவ்வூரில் உள்ள சித்தி புத்தி சமேத தெட்சினாமூர்த்தி விநாயகர் ஆலயம் - 'விவாஹ வரமருளும் விநாயகர்' ஆலயம் இவ்வாலத்திற்கு மேற்கில் சற்று தூரத்தில் உள்ளது.
நல்ல பராமரிப்புடன் உள்ள அற்புத ஆலயம்.
⛳இவ்வூர், வடக்கில் அய்யம்பேட்டை கிழக்கில், திருக்கருக்காவூர், தெற்கில் இருப்பு தலை, சாலியமங்கலம்,
மேற்கில் திட்டை முதலிய சிறப்புவாய்ந்த தலங்கள் அருகில் உள்ளன.
28.12.2025 மீள் தரிசனம்
4-03-2023 - தரிசனம்
#பிரதோஷம் சனி மகாபிரதோஷம்
#என்றும்அன்புடன்
#சுப்ராம்_அருணாசலம்_காரைக்கால்
#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று
#ஆன்மிகபாரதம்அகிலத்தின்சிகரம்
https://www.facebook.com/share/p/17pubf784n/
No comments:
Post a Comment