இரும்புதலை
இரும்புதலை ஸ்ரீ திருலோகநாதர் ஆலயம்.
⛳சாலியமங்கலம் - (திருக்கருக்காவூர்) - பாபநாசம் செல்லும் சாலை, தெற்கு வடக்கு சாலையில் வரும் ஊர்.
🛕கிழக்குப்புறம் சாலை அடுத்து ஆலயம் உள்ளது.
🔱ஸ்ரீ திருலோகநாதர், ஸ்ரீ திருலோகநாயகி அம்பாள் ஆலயம்.
🔰அப்பரின் திருத்தாண்டகத்தில் இடம்பெற்ற வைப்புத்தலம்.
🛐சம்பந்தர், மற்றும் அப்பர் பெருமானின் பாடல்பெற்று கிடைக்காமலிருக்கலாம்.
என்று நம்பப்படுகிறது.
🍃⛳திருவிரும்புதல் - சொல் மருவி திரு இரும்புதல் ஆனது. திரு = மகாலெட்சுமியைக் குறிப்பது.
இங்கு மகாலெட்சுமி விசேசம் என்கிறார்கள்
🍃வில்வாரண்ய க்ஷேத்திரமாகவும் விளங்குகிறது.
🔱அம்பாள் ஜடாமகுடி ரூபமாக, இரண்டு கரங்களில் தாமரையுடன்,
மற்றிருகைகள் அபய வரதம்..
நின்ற கோலம்.
🔱சுவாமி கிழக்கு நோக்கி உள்ளார்.
அர்த்த மண்டபம், வெளி மண்டபம் உள்ளது.
🔱அம்பிகை தனி சன்னதி தெற்கு பார்த்து உள்ளார்.
🔱ஏக பிரகாரம் உள்ளது.
🔱கோஷ்ட்டத்தில் தட்சினாமூர்த்தி, பெருமாள்,
வாராஹி, சனி, சூரியன், பைரவர், விநாயகர், துர்க்கை. உள்ளனர்.
ஆலயம் கிழக்குப் பகுதியில் தீர்த்தக்குளம் ஒன்றும் உள்ளது.
ஆலயத்திற்குள் நுழைய தென்புறம் வாசல் உள்ளது.
💥பராமரிப்பில் உள்ள ஆலயம்.
28.12.2025மீள் தரிசனம்
(18.02.2023 ல்சிவராத்திரி தரிசனம்)
மீள் தரிசனம்
#சுப்ராம்
#என்றும்அன்புடன்
#சுப்ராம்அருணாசலம்காரைக்கால்
#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று
#இறையருள்என்றும்துணையிருக்கும்
https://www.facebook.com/share/p/1GX5Mnbgry/
No comments:
Post a Comment