Saturday, January 17, 2026

தஞ்சை பஞ்ச வைத்திநாதர் ஆலயங்கள் 28.12.25 பதிவு - 1

💥தஞ்சை:
   
💥 ⛳பஞ்ச வைத்திநாதர் ஆலயங்கள் ⛳💥
பதிவு -1
புராண வரலாற்றுப்படி அகஸ்தியர் முனிவரால் நிறுவப்பட்ட தஞ்சாவூரைச் சுற்றியுள்ள பஞ்ச வைத்தியநாத ஸ்தலங்கள்:

இவ்வாலயங்கள் அனைத்தும் தஞ்சைப் பகுதியில் உள்ளன. புராண புகழ்பெற்ற இவ்வாலயங்கள் சென்று வழிபடும் முறைகள், கால சூழலில் மறைந்து பின் அருணாசல சத்ருவேங்கட ராமசுவாமி என்னும் ஆன்மீக பெரியவர் அவர்களால் புராணம் மீண்டும் எடுத்துரைக்கப்பட்டது. பூசை வழிபாட்டு முறைகள் மீண்டும் பின்பற்றப்படுகிறது.

🌟இவ்வைந்து ஆலயங்களையும் பஞ்ச வைத்திலிங்க ஆலயங்கள் என்று போற்றி, நடைபயணமாகவும் கூட சுற்றி வந்தார்கள் என்று கூறுகிறார்கள்.

🌟கற்கடேஸ்வரர் ஆலய தேவாரப்பதிகங்கள்
 ( 'மருந்து வேண்டின்.. ' ) இங்கு மருந்தாக வைத்து செவ்வாய், அஸ்வினி, சஷ்டி, பிரதோஷத்தில் வணங்கி பராயணம் செய்தால், நோய் நீங்கும் என்பதாக ஐதீகம். 

🛐ஒரே நாளில் இவ்வைந்து தலங்களையும் தரிசித்து பலன் பெறுகிறார்கள் என்பது, சிறப்பு.

வழி | இருப்பிடங்கள்.

1. 🛕தஞ்சாவூர் கீழவாசல்,பூமாலை ராவுத்தர் வீதியில் உள்ள ஸ்ரீ வைத்திநாத சுவாமி ஆலயம்.
(அரண்மனை ஆலயம்)

2. 🛕கடகடப்பை: (தற்போது கூடலூரில் உள்ளது) .
தஞ்சை புறவழி சாலையில் வெண்ணாற்றங் கரையில் கிழக்கில் 2 கி.மீ.வந்து, கொளமங்கலம் பிரிவுப்பாதையில் (கரையில் ஒரு அய்யனார் ஆலயம் உள்ளது - அதன் அருகில்) பிரியும் பாதையில் மேலும் 1 கி.மீ சென்றால், வரும் கூடலூர் மீனாட்சி சுந்தரேஸ்வரர் சுவாமி ஆலயத்தின் கருவரை ஒட்டியுள்ள தனியரையில் கடகடப்பை சுவாமி மூர்த்தங்கள்உள்ளது.
(குருந்தளூர் - கடகடப்பை கிராமத்தில் அஹ்ரகாரத்தில் இருந்த)
 சிவாலயம் முற்றிலும் சிதைந்து விட, அங்குள்ள மூலவர் ஸ்ரீ ராஜராஜேஸ்வரர் மற்றுமுள்ள மூர்த்தங்கள் இங்கு வைத்து வணங்கப்பட்டு வருகிறது.

3.🛕 வீரசிங்கம்பேட்டை : கண்டியூர் - பசுபதி கோவில் பிரதான வழியில் வரும், கல்யாணபுரம் அருகில் தென்புறம் உள்ளது ஸ்ரீ வைத்திநாத சுவாமி ஆலயம்,
276 சிவலிங்கங்கள் உள்ள ஆலயம். வைப்புத்தலம்.

4.🛕 மாத்தூர் :
தஞ்சை அருகில் கும்பகோணம் சாலையில் வரும் அம்மாப்பேட்டைக்குத் தெற்கில் அமைந்துள்ள, சிற்றூர். இவ்வூரில் உள்ள ஸ்ரீ வைத்திநாத சுவாமி ஆலயம். வைப்புத்தலம்.

5.🛕 சுரைக்காயூர்:
 திட்டை - மிலட்டூர் - திருக்கருகாவூர் சாலையில், மெலட்டூர் தாண்டி வெட்டாற்றங்கரை வடகரையில் உள்ள சுரைக்காயூர் என்ற சிற்றூரில் உள்ள ஸ்ரீ புஜபதீஸ்வரர் ஆலயம்.

🛐 நாங்கள் மேற்கண்ட 5 தலங்களையும் மேலும் சில ஆலயங்களையும் இணைத்து, 28.12.2025 அன்று தரிசித்து வந்தோம்.

தொடரும்......

#சுப்ராம் 
#என்றும்அன்புடன் 
#சுப்ராம்அருணாசலம்காரைக்கால் 
#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று 
#ஆன்மீகபாரதம்அகிலத்தின்சிகரம்

No comments:

Post a Comment

சுவாமிமலை முருகன் கோவில் (Arulmigu Swaminatha Swamy Temple) அறுபடை வீடுகளில் நான்காவது படைவீடு.

சுவாமிமலை முருகன் கோவில் (Arulmigu Swaminatha Swamy Temple) அறுபடை வீடுகளில் நான்காவது படைவீடு. ⛳தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே காவிரி ...