Saturday, January 17, 2026

கூடலூர் - தஞ்சை வெண்ணாற்றங்கரை வடகரையில் ..கூடலூர் - காசிவிஸ்வநாதர் விசாலாட்சி ஆலயம்.

🔰கூடலூர் - தஞ்சை வெண்ணாற்றங்கரை வடகரையில் ..
கூடலூர் - காசிவிஸ்வநாதர் விசாலாட்சி ஆலயம்.

⛳கூடலூர் சேர்ந்த பகுதியில்,  தனியார் பரமரிப்பில் கிழக்கு நோக்கிய காசி விசுவநாதர் ஆலயம் ஒன்றும், வெண்ணற்றங்கரை வட கரையில் உள்ளது. 

🔱ஆலயம் கிழக்கு நோக்கியது.
சுவாமி, கிழக்கு நோக்கியும், அம்பாள் தெற்கு நோக்கியும் தனித்தனியாக கருவரை அமைப்பில், மிக சிறிய ஆலயமாக உள்ளது. ஆலய வளாகம் பெரியதாக வெற்று இடமாக உள்ளது.

வெளிப்புறம் சுற்று சுவர் ஒன்றும் உள்ளது.

🌼சிறிய ஆலயம் மிகவும் சீர்கெட்டு உள்ளது. முழுவதுமான திருப்பணிகளைத் தொடங்கி ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும். 

🌼பழமையான ஆலயம், புனரமைப்பு செய்யப்பட வேண்டிய அவசியத்தில் / அவசரத்தில் உள்ளது.
கிழக்குப் பார்த்த சிவன் மற்றும் தெற்கு நோக்கிய அம்மனும் சிறிய கருவரை மண்டபத்துடன்  உள்ளது. 

⛳விநாயகர் மற்ற சில சிலைகள் கருவறைமுன் மண்டபத்திலேயே உள்ளது.

வேறு தனி சன்னதிகள் எதும்   இல்லை.

 கூடலூர் மீனாட்சி சொக்கநாதர் ஆலயக் குருக்கள்,  இந்த ஆலயம் வந்து பூசை செய்கிறார்.

வழி:  வெண்ணாற்றங்கரை வடகரையில் உள்ள பாதையில் ஓரத்தில்  ஒரு கால பைரவர் ஆலயம்  உள்ளது. அருகில்  கரை ஓரம் கிழக்கில்பிரிந்து செல்லும் மன் சாலையில் சுமார் 100 மீட்டர் தூரத்தில் ஆலயம் உள்ளது.

28.12.2025 #சுப்ராம்தரிசனம் 
#சுப்ராம் 
#என்றும்அன்புடன் 
#சுப்ராம்அருணாசலம்காரைக்கால் 
#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று 
#ஆன்மீகபாரதம்அகிலத்தின்சிகரம்

https://www.facebook.com/share/p/1JyQTQntdV/
கூடலூர் - விஸ்வநாதர் ஆலயம்

No comments:

Post a Comment

சுவாமிமலை முருகன் கோவில் (Arulmigu Swaminatha Swamy Temple) அறுபடை வீடுகளில் நான்காவது படைவீடு.

சுவாமிமலை முருகன் கோவில் (Arulmigu Swaminatha Swamy Temple) அறுபடை வீடுகளில் நான்காவது படைவீடு. ⛳தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே காவிரி ...