அன்னப்பன்பேட்டை - ஸ்ரீ கைலாசநாதர் - ஸ்ரீ அன்னபூரனியம்மன் ஆலயம்.
திருக்கருகாவூர் - மெலட்டூர் - திட்டை பிரதான சாலையில் சாலையை ஒட்டி தென்புறத்தில், அமைந்துள்ளது.
பழமையான சிவ ஆலயம் முழுவதும் சிதைந்து விட முழு திருப்பணிகளும் செய்யப்பட்டு, தற்போது நல்ல பராமரிப்பில் உள்ளது. 2011ல், கும்பாபிஷேகம் நடைபெற்றுள்ளது.
சுவாமி கிழக்கு நோக்கியும், அம்பாள் தெற்குநோக்கியும், தனித்தனி கருவரை சன்னதியாக அமைந்துள்ளது.
நீண்ட பெரிய முன்மண்டபம் உள்ளது.
தனி விநாயகர், முருகர், சன்டிகேஸ்வரர், ஆலய சுற்றில் உள்ளனர்.
வடகிழக்கில் பைரவர், சூரியன், சனிஸ்வரர் உண்டு. ஆலயம் நீண்ட சுற்றுச்சுவர் ஒன்றும் இருக்கிறது.
ஆலயம் தென்பகுதியில் ஒரு தனி வ
2011 ல் கும்பாபிஷேகம் நடை பெற்றுள்ளது.
ஆலயத்தின் தென் பகுதியில் 32 அடி உயர அனுமன் சிலை வைத்து பூசிக்கின்றார்.
ஆலயம் பூசை வழிபாடுகள் முறைகளக நடைபெறுகின்றன.
|
குருக்கள் தகவல் தந்தால் வந்து தரிசனம் செய்து வைக்கிறார்.
இந்த சிவஆலயம் பிரான சாலையில் உள்ளது. அருகில், அன்னப்பன்பேட்டை சிற்றூரில் திருவாடுதுறை ஆதினம் மடத்தின் சார்பில்
ஸ்ரீ தாயுமானசுவாமிகள் குருமூர்த்தம் உள்ளது. அதையும் தரிசிக்கலாம்.
மீள் தரிசனம்
28.12.2025
#சுப்ராம்அருணாசலம்
#என்றும்அன்புடன்
#சுப்ராம்அருணாசலம்காரைக்கால்
#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று
#ஆன்மிகபாரதம்அகிலத்தின்சிகரம்
https://www.facebook.com/share/p/19iC6F1g5o/
No comments:
Post a Comment