🛕 2.1.கடகடப்பை: ஸ்ரீ ராஜராஜேஸ்வரர்
🏵️ புராண வரலாற்றுப்படி அகஸ்தியர் முனிவரால் நிறுவப்பட்ட தஞ்சாவூரைச் சுற்றியுள்ள பஞ்ச வைத்தியநாத ஸ்தலங்கள்:
1.வைத்தியநாதர், பூமாலை. கீழவாசல், தஞ்சாவூர்.
2.ஆதி வைத்தியநாதர், வீரசிங்கம்பேட்டை, 3.ஔஷதபுரீஸ்வரர், மாத்தூர்
4.ராஜராஜேஸ்வரர், கடகடபை,
(தற்போது கூடலூர் - மீனாட்சி சொக்கநாதர் ஆலயத்தில் உள்ளது).
5.பூஜாபதீஸ்வரர், சுரைக்காயூர்
கடகடப்பை: ஸ்ரீ ராஜராஜேஸ்வரர் ஆலயம்
🛐தஞ்சை புறவழி சாலையில் வெண்ணாற்றங் கரையில் கிழக்கில் 2 கி.மீ.வந்து, கொளமங்கலம் பிரிவுப்பாதையில் (கரையில் ஒரு அய்யனார் ஆலயம் உள்ளது - அதன் அருகில்) பிரியும் பாதையில் மேலும் 1 கி.மீ சென்றால், வரும் கூடலூர் மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்தின் கருவரை அருகில் தனியரையில் கடகடப்பை ஆலய மூர்த்தங்கள் உள்ளது.
🛐 கூடலூர் - கடகடப்பை கிராமத்தில் அஹ்ரகாரத்தில் இருந்த சிவாலயம் முற்றிலும் சிதைந்து விட, அங்குள்ள மூலவர் ஸ்ரீ ராஜராஜேஸ்வரர் மற்றுமுள்ள மூர்த்தங்கள் கூடலூரில் வைத்து வணங்கப்பட்டு வருகிறது.
🛕 2.2. கூடலூர் - சொக்கநாதர் - மீனாட்சியம்மன் ஆலயம்
🛐தஞ்சாவூர்...வெண்ணற்றங்கரை வடகரையில் உள்ள சிற்றூர். புண்னைநல்லூர் வழியில் வந்து கும்பகோணம் By Pass வழியில் சிறிது தூரத்தில் வரும் வெண்ணாற்றங்கரையில் வடகரையில் 2 கிமீ. அய்யனார் ஆலயம் எதிரில் வடகிழக்கில் இறங்கும் பாதையில் சென்றால் கூடலூர் அடையலாம்.
🛐 தஞ்சாவூர் வட்டத்தில் உள்ள பழமையானசிவாலயங்களில் ஒன்று. திருப்பணிகளை எதிர்நோக்கியுள்ளது. இத்திருத்தலத்தில் மேற்கு நோக்கி சுவாமியும், தனி சன்னதியில் அம்பிகை தெற்கு நோக்கியும் காட்சியளிக்கின்றனர்.
🏵️ஆனித்திருமஞ்சனம் நடைபெறுகின்ற
பஞ்ச ஆதித்ய தலங்களில் ஒன்றானஇச்சிவன் கோயில், சூரிய தோஷம் போக்கிடும் தலம் என்பதும், இங்குள்ள பைரவருக்கு ஒவ்வொரு அஷ்டமியிலும், சூரிய அஸ்தமனத்திற்குப் பின்விசேஷ வழிபாடுகள் நடைபெறுவதும் தலச்சிறப்புக்களில் முதன்மையானதாகும்.
🏵️மாசி மாதம் 27,28,29 -தேதி நாட்களில், சூரிய பகவானின் ஒளிக்கதிர்கள்
இறைலிங்க திருமேனியில் படர்ந்து வழிபட்டு செல்வது மற்றுமொரு சிறப்பு.
🏵️தஞ்சை பெருவுடையாரின் ஆணைப்படி,அநபாய சோழர் ஆட்சிகாலத்தில் கட்டப்பட்ட இத்தலத்திற்கு, மதுரை சொக்கநாதர்
ஒரு ஆனி மாதம் உத்திர நாளில் வருகை தந்து அருள்புரிந்ததாக தலவரலாறு கூறுகிறது.
🏵️நம் ஈசன் தம்பதியருக்கு உகந்த அத்தனை விழாக்களும் சிறப்பாக கொண்டாடப்படும் இத்தலத்தில், சித்திரை தமிழ் வருடப்பிறப்பும், சித்ரா பவுர்ணமியும் மிகச்சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
🏵️இரண்டு பிரகாரம் முழுதும் வெளவால் நெற்றி மண்டபம் கொண்டது.
🌟நுழைவு வாசல் தெற்கு புறம் காட்சி கோபுரத்துடன் அமைந்துள்ளது.
💥திருப்பனி வேலைகள் நடைபெற்று வருகிறது.
🏵️சுவாமி மேற்கு நோக்கியும், அம்பாள் தெற்கு பார்த்தும் தனி தனி சன்னதிகளில்
முழுவதும் செங்கற்கள் கொண்ட திருச்சுற்று மதில் சுவரும் உள்ளது. அலங்கார மண்டபம், உள் மண்டபம். அனைத்தும் உடையது.
https://www.facebook.com/share/p/1DciRQvGWa/
#சுப்ராம் - 28.12.2025
#என்றும்அன்புடன்
#சுப்ராம்அருணாசலம்காரைக்கால்
#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று
#ஆன்மீகபாரதம்அகிலத்தின்சிகரம்
No comments:
Post a Comment