Saturday, January 17, 2026

தஞ்சை: பஞ்ச வைத்தியநாத ஸ்தலங்கள்:5. சுரைக்காயூர் :ஸ்ரீபுஜபதீஸ்வரர் ஆலயம்

தஞ்சை: பஞ்ச வைத்தியநாத ஸ்தலங்கள்:

5. சுரைக்காயூர் :
ஸ்ரீபுஜபதீஸ்வரர் ஆலயம்

💥சுரைக்காயூர்:
திருக்கருகாவூர் - திட்டை சாலையில் வரும் வெட்டாறு பாலம் கடந்து வடக்குகரையில் செல்லும் பாதையில் ஒன்பத்து வேலி, கொடுகிழி என்ற சிற்றூர்கள் கடந்துள்ளது. வடக்குப்புறம் உள்ளது. அருகில் தெற்கில், வெட்டாறு பாலம் கடந்து 2 கி.மீ.தூரத்தில் திட்டை செல்லும் வழியில் மெலட்டூர் வைப்புத்தலம் உள்ளது.

🌼வெட்டாறு வட கரையில் உள்ளது
🌼கிழக்கு நோக்கிய ஆலயம்.

🌼சுவாமி ஸ்ரீபுஜபதீஸ்வரர் - ஸ்ரீ ஒளடதாம்பாள்
நந்தி, அடுத்துள்ள மண்டபம் பெரியது, சுவாமி, அம்பாள் சன்னதிகளை இணைத்து கட்டப்பட்டுள்ளது.

🔰சுவாமி கிழக்கு நோக்கியும்
அம்பாள் தெற்கு நோக்கியும் உள்ளார்கள்.

⛳சுற்று பிரகாரத்தில், விநாயகர், தெட்சினாமூர்த்தி, சண்டிகேஸ்வரர், துர்க்கை உள்ளனர்.
⛳கிழக்கில் பைரவர், சனிஸ்வரர், முதலிய தெய்வங்களும் உள்ளது.

🔱புராதானமான தலம், இராமாயண தொடர்புள்ளது. ராமர் வழிபட்டத்தலம்.

🔱ஆயுஷ் தேவி தஞ்சை மாவட்டத்தில் உள்ள இரண்டு ஆலயங்களில் இதுவும் ஒன்று. மற்றொன்று இவ்வூர் அருகில் உள்ள அரிமங்கை ஆலயத்தில் உள்ளது.

🌼புனரமைக்கப்பட்டு வழிபாட்டில் உள்ளது.
ஒரு காலம் மட்டும் நடைபெறுகிறது.

ஆலயம் எப்போதும் திறந்திருக்கிறது.
அருகில் அய்யனார் ஆலயம். ஒரு குளம் ஒன்றும் உள்ளது.

🌼தஞ்சாவூர் சுற்றியுள்ள பஞ்சவைத்தியதலங்களில் இதுவும் ஒன்று
நவராத்திரி அம்மன் ஆயூஷ் தேவியை தசமி திதியில் இங்கு தரிசிக்க வேண்டும்
சுரைக்காய் சித்தர் திருவடிபட்ட புண்ணியதலம்.

🌼ஆலயம் நல்ல பராமரிப்பில் உள்ளது.  அருகில் உள்ள பெரிய தலம் - மெலட்டூர்.
தனித்தனி சன்னதிகளில், விநாயகர், வள்ளிதெய்வானையுடன் முருகன்,
கிழக்குப்புறத்தில் ஒரு குளம் மற்றும் ஒரு அய்யனார் ஆலயமும் உள்ளது.

#சுப்ராம்அருணாசலம்
28.12.25 மீள் தரிசனம்
(17.10.2021 - தரிசனம்)
4.3.2023 பிரதோஷம் தரிசனம்.
#பிரதோஷம் - சனி மகாபிரதோஷம்
https://www.facebook.com/share/p/1BsNErLSJp/
(சுரைக்காயூர்)
#சுப்ராம்தரிசனம் 
#என்றும்அன்புடன் 
#சுப்ராம்அருணாசலம்காரைக்கால் 
#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று 
#ஆன்மீகபாரதம்அகிலத்தின்சிகரம்

No comments:

Post a Comment

சுவாமிமலை முருகன் கோவில் (Arulmigu Swaminatha Swamy Temple) அறுபடை வீடுகளில் நான்காவது படைவீடு.

சுவாமிமலை முருகன் கோவில் (Arulmigu Swaminatha Swamy Temple) அறுபடை வீடுகளில் நான்காவது படைவீடு. ⛳தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே காவிரி ...