#சீதாமரி (Sitamarhi)
#முக்திநாத்திருப்பயணம் -
#NepalYatra 20.04.2024 - 4.5.24
34
🕊️ #பயணஅனுபவக்குறிப்புகள்
#சீதாமரி (Sitamarhi)
30.04.24 தரிசனம்
🎋30.04.2024 காலை தனுஷ்தாம் தரிசித்து, ஜனக்பூர் வழியாக, வந்து நேப்பாள் இந்தியா எல்லை கடந்தோம்.
எல்லைப்பகுதியில், பேருந்தில் இருந்தவாரே, நமது Adahar Check செய்து விடுகிறார்கள். பின் அங்கிருந்து புறப்பட்டு பீகார் மாநில வடக்குப் பகுதியில் உள்ள சீதாமரி வந்து சேர்ந்தோம்.
🎋சீதாமரி (Sitamarhi),
வட இந்தியாவின் பிகார் மாநிலத்தின் வடக்கில், நேபாளம் நாட்டின் எல்லையை ஒட்டிய மிதிலைப் பிரதேசத்தில் அமைந்த சீதாமரி மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிட நகரம் மற்றும் நகராட்சி ஆகும்.
🎋 இந்நகரத்தில் சீதைக்கான கோயில் உள்ளது. இது மாநிலத் தலைநகரான பாட்னாவிற்கு வடக்கே 135.4 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.
🎋நேபாளத்தின் சோன்பர்சா மற்றும் பிகாரின் ஹாஜிப்பூர் நகரத்தை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை எண் 77 (பழையது) சீதாமர்கி நகரம் வழியாகச் செல்கிறது.
🎍சீதா தேவிக்கு அர்ப்பணிக்கப்பட்ட சீதா கோயில் சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது.
🎍கோவிலின் உள்ளே ராமர் மற்றும் லட்சுமணன் சீதையின் கல் சிலைகளைக் காணலாம்.
🎍தசரதர் ஆட்சியில் ஒரு முறை,
மிதுலா ராஜ்யத்தில், தொடர்ந்து மழையின்றி வரட்சி ஏற்பட்ட போது, இறையுணர்வு அறிவுரையைப் பின்பற்றி ஜனகமன்னர் பூமியை கலப்பையால் உழுவ, சீதாமாத குழந்தையாகக் கிடைக்கப் பெற்றாள்.
🎍கோயிலுக்கு அருகில் ஒரு நீரூற்று உள்ளது. சீதை ஒரு குழந்தையாக, ஒரு பள்ளத்தில் படுத்திருந்த இடம் இது என்று நம்பப்படுகிறது.
🎍 பீர்பால் தாஸ் என்ற இந்து சாது தற்செயலாக இந்தக் கோயிலைக் கண்டுபிடித்ததாக உள்ளூர் நாட்டுப்புறக் கதைகள் கூறுகின்றன.
🎍இந்த இடம் ரயில் நிலையத்திலிருந்து 1.5 கிமீ தொலைவில் உள்ளது,
🎍மேலும் இந்த கோவிலின் தெற்கே ஜானகி குண்ட் அருகில் இருக்கும் போது சீதை பிறந்த இடமாக கொண்டாடப்படுகிறது.
🎍ஜானகி குண்ட் என்பது சீதையை தத்தெடுத்த ஜனக் மன்னனால் குழந்தை சீதாவை குளிப்பாட்டிய இடமாக இருக்க வேண்டும்.
🎍 நவராத்திரி மற்றும் ராம நவமி பண்டிகைகளின் இங்கு விழா கொண்டாட்டம் உள்ளது.
🌟ஒரு சிவன் மற்றும், அனுமன் சன்னதிகளும் தனித்தனியாக உள்ளது.
🌟முக்கிய கருவைரை மண்டபம் உயர கூம்பு அமைப்பு.
வெளிப்புற இடங்கள் நல்ல பூங்கா அமைப்பும் உள்ளது.
இந்த வளாகம் நன்றாக பராமரிப்பில் உள்ளது. அருகில் உள்ள குளம் சீரமைக்கப்பட்டுள்ளது.
🌟ஏராளமான பக்தர்கள் வந்து செல்லுகிறார்கள்.
🌟குடும்ப விழாக்கள் செய்து கொள்ள, மண்டப வசதிகள் கட்டணத்துடன் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
🌟அருகில் நிர்வாக அலுவலகம் ஒன்றும் உள்ளது.
🌟பூசை காலங்களில் மட்டும் கருவரையில் தரிசனம் உண்டு.
இவ்வாலயம் ஓட்டி காயத்திரி சக்திபீடம் என்ற ஒரு சிறு ஆலயமும் உள்ளது.
🌟சீதாமரி ஆலயம் வளகத்தில் நாங்கள் கொண்டு சென்ற மதிய உணவை உண்டு மீண்டும் பயணத்தைத் தொடங்கி பீகார் தலைநகர் பாட்னா கடந்து, இரவு கயா வந்து சேர்ந்தோம்.
நன்றி 30.04.2024
நன்றி🙏🏼 30.04.2024
#முக்திநாத்திருப்பயணம் -
#Nepal Yatra 20.04.2024 - 4.5.2024 -
#சுப்ராம்ஆலயதரிசனம்
#என்றும்_அன்புடன்
#சுப்ராம்_அருணாசலம்_காரைக்கால்
#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று
#ஆன்மீகபாரதம்அகிலத்தின்சிகரம்
No comments:
Post a Comment