#அனுமன்தோகா #நகரச்சதுக்கம் அல்லது #காத்மாண்டுநகரச் சதுக்கம் அல்லது #வசந்தபூர்நகரச்சதுக்கம் (Kathmandu #DurbarSquare), #BasantapurDarbar Kshetra):
#குமாரிபாஹல்கோயில்:
#காத்மாண்டு
#முக்திநாத்திருப்பயணம் -
#NepalYatra 20.04.2024 - 4.5.2024
16
🕊️ #பயணஅனுபவக்குறிப்புகள்.
25.04.2024
✨25.04.2024 அன்று மதியம் காட்மண்டு மற்றும் அருகில் உள்ள சில இடங்களை தனி வாகன வசதிகள் ஏற்பாடுகள் செய்து கொண்டு சென்று தரிசித்து விட்டு மாலை மீண்டும் பசுபதிநாதர் தரிசனம் செய்து பாக்மதி நதி ஆர்த்தி தரிசனம் செய்து Narayana Hotel தங்கினோம்.
⛳ சென்று வந்த சுற்றுலா இடங்கள் /ஆலயங்களைப் பற்றிய வலைதளக் குறிப்புகளும் எமது அனுபவ குறிப்புகளும்
தங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
நன்றி🙏🏻
🏰நேப்பாள் காட்மண்டுவில் ஏராளமான அரண்மணைக் கட்டிடங்கள் மற்றும் ஆன்மீக சுற்றுலா இடங்கள் உண்டு.
✨காத்மாண்டு நகரச் சதுக்கம்
⚡பக்தபூர் நகர சதுக்கம்
⚡பதான் தர்பார் சதுக்கம்
⚡பசுபதிநாத் கோவில்
⚡சங்கு நாராயணன் கோயில்
⚡பௌத்தநாத்து
⚡ (சுயம்புநாதர் கோயில்)Amideva Buddha Park
மேலும்,
⚡காத்மாண்டு சமவெளி
⚡திரிபுவன் பன்னாட்டு வானூர்தி நிலையம்
⚡திரிபுவன் பல்கலைக்கழகம்
⚡சிங்க அரண்மனை
⚡நாராயணன்ஹிட்டி அரண்மனை
இவற்றுள் எங்களுக்குக் கிடைத்த நேரத்தில் 2, 3 இடங்கள் மட்டும் சென்று பார்க்கும் வாய்ப்புக் கிடைத்தது.
அனுமன் தோகா நகரச் சதுக்கம் அல்லது காத்மாண்டு நகரச் சதுக்கம் அல்லது வசந்தபூர் நகரச் சதுக்கம் (Kathmandu Durbar Square), Basantapur Darbar Kshetra):
🏩 நேபாளத்தின் காத்மாண்டு அரண்மனை முன் அமைந்துள்ள நகர மைய வணிக வளாகமாகும். இது காத்மாண்டு சமவெளியில் உள்ள மூன்று நகரச் சதுக்கங்களில் ஒன்றாகும். இம்மூன்று நகரச் சதுக்கங்களும் யுனேஸ்கோவால் உலகப் பாரம்பரியக்களங்களாக ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன.
🏩மற்ற இரண்டு நகரச் சதுக்கங்கள் பாதன் நகரச் சதுக்கம், பக்தபூர் நகரச் சதுக்கம் ஆகும்.
🏩சதுக்க அரண்மனையின் வடக்குப் புறத்தில் துளேஜு அம்மன் கோயிலைக் கட்டினார்.
நாராயணன் கோயிலில் இருந்த திருமாலின் விக்கிரகம் காணாமல் போனதால், அக்கோயிலைப் பகவதி அம்மன் கோயிலாக, மன்னர் பிரிதிவி நாராயணன் ஷா மாற்றி அமைத்தார்.
🏩இச்சதுக்கத்தின் பழமையான கோயில்கள், மகேந்திர மல்லர் 1560-1574 இல் எழுப்பியவை. அவை ஜெகன்நாதர் கோயில், கோடிலிங்கேஸ்வர மகாதேவர் கோயில் மற்றும் துளேஜூ கோயில்கள் ஆகும்.
🏩பிரதாப மல்லர் ஆட்சியில் மல்லர் குல மன்னர் இலட்சுமி நரசிம்மர் மகன் பிரதாப சிம்மர் ஆட்சிக் காலத்தில், காத்மாண்டு நகரச் சதுக்கம் பெரிய அளவில் விரிவடைந்தது. அரண்மனை, பழைய கோயில்கள், நினைவுத்தூண்களை அவர் விரிவுப்படுத்திக் கட்டினார்.
🏩காத்மாண்டு நகர சதுக்கத்தில், இந்திரப்பூர் கோயில் (இடது) மற்றும் விஷ்ணு கோயில் (வலது)
பிரதாப மல்லர் 1692 இல் இறந்த பின் அவரது மனைவி இரதிலட்சுமி என்பவர், காத்மாண்டு நகரச் சதுக்கத்திலேயே மிக உயரமான, எழு நிலைகள் கொண்ட மஞ்சு தேவர் எனும் சிவன் கோயிலை நிர்மாணித்தார்.
🏩பிரதாப மல்லரின் மகன் பூபாலந்திர மல்லரின் மனைவி புவனலெட்சுமி, காத்மாண்டு நகரச் சதுக்கத்தில் காகேஸ்வர மகாதேவர் எனும் சிவன் கோயிலைக் கட்டினார். 1934 நிலநடுக்கத்தில் சிதைந்த இக்கோயில் நேவாரி கட்டிடப்பாணியில் மறுசீரமைத்து கட்டப்பட்டது.
🏩ஷா வம்சத்தினரது ஆட்சியின் போது, 1770இல் மன்னர் பிரிதிவி நாராயணன் ஷா மன்னர், காத்மாண்டு அனுமன் நகரச் சதுக்கத்தில் பல்வேறு மாற்றங்கள் செய்தனர். இரண்டு கலைநயமிக்க கோயில்களை எழுப்பினர். அவற்றில் ஒன்று ஒன்பது நிலைகளைக் கொண்ட வசந்தபூர் அரண்மனை சதுக்க கோயில் ஆகும்.
🏩நேபாள இராச்சியத்தின் மன்னர் ராணா பகதூர் ஷா என்பவர் காத்மாண்ட் அனுமன் சதுக்கத்தில் செவ்வக வடிவத்தில் சிவன் - பார்வதிக்கு கோயில் எழுப்பினார். இக்கோயிலில் 12 அடி உயர பைரவர் சிலையை நிர்மாணித்தார்.
🏩1908ல் பிரதம அமைச்சர் சந்திர சம்செர் ஜங் பகதூர் ராணா காத்மாண்டு சதுக்கத்தில் சிங்க அரண்மனை எனும் புதிய அரண்மனயை ஐரேப்பிய கட்டிடக்கலை நயத்தில் காத்மாண்டிற்கு அருகே கட்டினார்.
🏩மல்லர், ஷா மற்றும் ரானா வம்ச மன்னர்கள் காத்மாண்டு சமவெளியை ஆண்ட காலத்தில், மூன்று நூற்றாண்டுகளில், அனுமன் நகரச் சதுக்கம் அரண்மனைகள், கோயில்கள், கட்டடம் சூழ்ந்த நாற்கட்டு வெளிகள், முற்றவெளிகள், குளங்கள், மரச் சிற்பங்களால் நிறைந்து இருந்தது
🏩இந்த இடம் மிகவும் ஜனசந்தடி மிக்கது.
ஏராளமான பழமையான கட்டிடங்கள் சூழ்ந்தது.
#குமாரி பாஹல் கோயில்:
🛕காத்மாண்டு சமவெளியின் இறுதி மல்ல மன்னரான ஜெயப்பிரகாஷ் மல்லா என்பவர் குமரி (சிறுமி) தெய்வத்திற்கும், துர்கைக்கும் கோயில்களை எழுப்பினா🔱ர். அக்கோயிலை நேவாரி கட்டிடக் கலை நயத்தில், புத்த விகாரம் போன்று எழுப்பி, குமரி பாஹல் கோயில் எனப் பெயரிட்டார். நேபாளிகளால் வாழும் தேவதையாக, குமரியாகப் பார்க்கப்பட்ட அச்சிறுமிக்குச் சுடுமண் ஓடுகளால் வேயப்பட்ட அரண்மனையும், ஒரு தேரும் உருவாக்கப்பட்டது.
🏰குமாரி பாகல் கோவில் என்ற இந்த கட்டடம் மிகவும் பிரபலமானது. நேப்பாள் நாட்டின் வழக்கப்படி தேர்வு செய்யப்பட்ட தெய்வக் குழந்தை வாழுமிடம். அவர் முக தரிசனம் வேண்டி பல மணி நேரம் காத்திருக்கின்றனர்.
🏰மாடிப் பகுதியில் உள்ள சாளரத்தின் கதவுகள் திறக்கப்பட்டு பின் குழந்தை - குமாரி - முகதரிசனம் தோன்றும். சில நிமிடங்கள் தரிசனத்திற்குப் பிறகு கதவுகள் மூடப்பட்டு விடும்.
இந்த அரிய காட்சியை காண எராளமான வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும், உள்ளுர் மக்களும் அலை மோதுவார்கள்.
🏰அருகில் உள்ள ஆலயங்கள் மற்ற பொதுவான ஆலயம் அமைப்பில் இல்லை.
பலபடிகள் கொண்ட உயரமான மேடையில் உட்புறம் கருவரையில் தெய்வ சிலைகள் வைத்து பூசனை செய்கிறார்கள்.
🏩நாங்கள் சென்ற முறை இங்கு வந்து கட்டடத்தின் உள்ளே சென்று, குழந்தை - குமாரி - தரிசனம் கண்டோம்.
மேலும், 5 வருடம் முன்பு இங்கு வந்த நாளில் தேர்திருவிழா நடைபெற்றது
சிறிய மிக மிக உயர அமைப்பில், மிகவும் குறுகிய அளவில் அந்த தேர் அமைந்து இருந்தது. மிக மிக அதிக பக்தர்கள் கூட்டம் நிறைந்து இருந்தது. இந்தக் காட்சி மனதில் என்றும் நீங்க நினைவுகளில் உள்ளது. இவற்றை நினைவில் கொண்டு இந்த இடம் பார்த்துவிட்டு திரும்பி விட்டேன்.
🏰இந்த இடம் பொதுவாக சிறுசிறு சந்துகள் நிறைந்தது. பிரதான சாலையிலிருந்து உட்புற குறுகிய சாலையில் வந்து இந்த இடத்தை அடைய வேண்டும்.
🏰இந்த இடம் மிகவும் புராதனமானது. ;
இதை அனுமன் தோகா நகரச் சதுக்கம் அல்லது காத்மாண்டு நகரச் சதுக்கம் அல்லது வசந்தபூர் நகரச் சதுக்கம் (Kathmandu Durbar Square), என்று அழைக்கின்றனர். நேப்பாளத்தின், காட்மண்டு நகரத்தில் உள்ள மிக முக்கிய சுற்றுலா இடம்.
🏰இந்த இடம் UNESCO வால் அங்கிகரிக்கப்பட இடமாகும்.
SAARC நாடுகளைச் சார்ந்தவர்களுக்கு
நுழைவுக்கட்டணம் (ரூ 500 ) கட்ட வேண்டும். காவல் துறை கண்காணிப்பு உண்டு.
நன்றி🙏🏼
25.4.24 #மீள்தரிசனம்
#சுப்ராம்ஆலயதரிசனம்
#முக்திநாத்திருப்பயணம் -
#Nepal Yatra 20.04.2024 - 4.5.2024 -
#சுப்ராம்ஆலயதரிசனம்
#என்றும்_அன்புடன்
#சுப்ராம்_அருணாசலம்_காரைக்கால்
#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று
#ஆன்மீகபாரதம்அகிலத்தின்சிகரம்
No comments:
Post a Comment