#Hanuman Ghari
#அயோத்தி
22.04.2024
6.
#பயணஅனுபவக்குறிப்புகள்
அயோத்தியில் உள்ள மிக முக்கிய ஆலயம்
ஶ்ரீ ஹனுமான் ஆலயம் தரிசித்து ஸ்ரீ ராம் ஆலயம் செல்ல வேண்டும் என்றும் கூறுகிறார்கள்.
எப்போதும் பக்தர்கள் கூட்டம் அதிகம் உள்ள ஆலயம்.
நாங்கள் இந்த முறை (இன்று 22.04.24) ராமர் ஆலயம் சென்று தரிசித்துப்பின் இந்த ஹனுமன் ஆலயம் தரிசித்தோம்.
மீள் தரிசனம்
🛕🙏🏻🛕🙏🏻🛕🙏🏻🛕🙏🏻🛕🙏🏻🛕🙏🏻🛕🙏🏻🛕🙏🏻🛕
[ 2024 மார்ச் மாதம் தரிசனம் செய்து வந்த போது உள்ள பதிவு - மீள்.]
🙏🏻🛕🙏🏻🛕🙏🏻🛕🙏🏻🛕🙏🏻🛕🙏🏻🛕🙏🏻🛕🙏🏻🛕🙏🏻🛕
🙏🏻
💥அனுமன் ஆலயம்:
ஹனுமான் ஆலயம்
✨லால் செளக்கிலிருந்து Rs.20/- கொடுத்தால், மின் Auto மூலம், அனுமன் கோயில் வளாகம் மிக அருகில் இறக்கி விடுகிறார்கள்.
✨அங்கிருந்து நடை தூரத்தில் அனுமன் ஆலயம் உள்ளது.
✨சிலர் ஷேர் ஆட்டோ மூலமாகவும் Rs.25 / - (ஒரு நபருக்கு) கொடுத்து ஒரு சுற்றுப்பாதையில் அனுமன் ஆலயம் மிக அருகில் கொண்டு சேர்த்து விடுகிறார்கள்.
🌟மகாராஜாவிக்ரமாதித்தியாவால் கட்டப்பட்ட ஆலயம். ஆலயம் அழிக்கப்பட்டு மக்களால் ஹனுமன் திலா என்று அழைக்கப்பட்ட இடம், நவாப் காலத்தில், டி கைத் ராய் என்பவரால் மீண்டும் கட்டப்பட்டது.
🌟தற்போது ஹனுமாங்ஹரி என்று உள்ளது.
🌟இராமர் ஆலயம் அருகில் உள்ள இந்த ஆலயத்தை ராமர் ஆலயம் தரிசிக்கும் முன் அவசியம் இதையும் தரிசிக்க வேண்டும் என்று. கூறுகிறார்கள்.
🌟அனுமன் ஆலயம் உயரமான இடத்தில் உள்ளது. இந்த ஆலயம் முதலில் 30 படிகள் மேலே ஏறிய பிறகு முன் மண்டபம் ஒன்று உள்ளது.
அதனைத் தொடர்ந்து ஒரு 10-15 படிகள் மேல் ஏறினால் ஆலயம் கருவறை மண்டபம் அடைந்து விடலாம்.
🌟ஆலயம் ஒரு பெரிய மண்டப அமைப்புடன் உள்ளது. நடுவில் கருவறை அதில் சிறிய அனுமன் சிலை உள்ளது. பின்புறம் ராமர், பட்டாபிஷேகம் உருவம் உள்ள சிலைகள் வெள்ளி கவசத்துடன் அமைக்கப்பட்டுள்ளது.
🌟இந்த கருவறை மண்டபத்தை ஒட்டிய பிரகார மண்டபத்திலும் பூசைகள் வழிபாடுகள் நடைபெறுகிறது.
🌟அயோத்தியில், மிக மிக அதிக எண்ணிக்கையிலான பக்தர்கள் ஒரே நேரத்தில் இந்த இடத்தில் தான் கூடுகிறார்கள்.
🌟காவல்துறை மிக அருமையாக, கண்ணியத்துடனும், மிகக் கட்டுப்பாடுடனும் வழிநடத்தினார்கள்.
🌟நமக்கு அனுமன் கோயில் சென்று தரிசனம் செய்யும் நேரம் சற்று அதிகமாக உள்ளது. மேலும் அனுமன் ஆலயம் அனைத்து பக்தர்களும் வந்து செல்வதாலும் ஒரு நெருக்கடியான இடத்தில் இருப்பதாலும், கூட்டம் அதிகம் இருந்தவாரே உள்ளது.
🌟ஹனுமன் ஆலயத்தை தரிசித்து பின் வெளிவருவதற்கு தனி வழி உள்ளது. அதன் வழி நாம் வெளியிலும் வரலாம். அதன் வழியாக கூட்ட நேரங்களில் பக்தர்கள் மற்றும் சிறப்பு பூசை செல்பவர்களும், VIP களும் உள்ளே செல்ல அனுமதி அளிக்கின்றனர்.
🌟ஹனுமன் ஆலயம் தரிசித்து பிறகு அந்த ஆலயத்தின் பின்புறம் வெளியே செல்ல ஒரு சிறிய வழி உள்ளது. அதன் வழியாக சென்று ராமர் கோயில் செல்லும் பாதையை அடைந்து விடலாம்.
🛕🙏🏻🛕🙏🏻🛕🙏🏻🛕🙏🏻🛕🙏🏻🛕🙏🏻🛕🙏🏻🛕🙏🏻🛕🙏🏻🛕
22.04.24 மீள் தரிசனம்
#முக்திநாத்திருப்பயணம் -
#Nepal Yatra 20.04.2024 - 4.5.2024 -
#சுப்ராம்ஆலயதரிசனம்
#என்றும்_அன்புடன்
#சுப்ராம்_அருணாசலம்_காரைக்கால்
#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று
#ஆன்மீகபாரதம்அகிலத்தின்சிகரம்
No comments:
Post a Comment