#முக்திநாத்
#முக்திநாத்திருப்பயணம் -
#NepalYatra 20.04.2024 - 4.5.2024
19
🕊️ #பயணஅனுபவக்குறிப்புகள்.
27.04.2024
✨26.04.2024 அன்று விடியற்காலையில் காட்மண்டிலிருந்து புறப்பட்டு போக்ரா இரவு சென்று சேர்ந்தோம். Hotel Mount Everest என்ற Hotel லில் இரவு உணவுக்குப் பின் தங்கினோம்.
🚕27.04.24 அன்று விடியற்காலையில் 5 - 6 பேர்களாக தனித்தனிக்குழுவாக Bolero வண்டியில் புறப்பட்டு காலை உணவு வழியில் முடித்துக் கொண்டு, ஜாம்சம் சென்று முக்திநாத் அடைந்தோம்.
#முக்திநாத்
🛐108 திவ்ய தேசத்தில் முக்கியமான தலமாக இது விளங்குகிறது.
முக்திநாத் பெருமாளின் அற்புத தரிசனம்.
🛐முக்திநாத், நேபாள நாட்டின், முஸ்தாங் மாவட்டம் அமைந்த இமயமலையில், முக்திநாத் பள்ளத்தாக்கில், 3,710 மீட்டர் உயரத்தில் அமைந்த, இந்து
மற்றும் பௌத்தர்களின்
புனித தலமாகும்.
🛐வைணவர்கள் போற்றும் 108 திவ்ய தேசங்களில், முக்திநாத் சிறந்த திவ்ய தேசமாகும்.
🛐பயண காலம் & வழி
🛐ஆண்டின் மார்ச் மாதம் முதல் சூன் மாதம் முடிய முக்திநாதரை தர்சனம் செய்ய ஏற்ற காலமாகும்.
கடும் குளிர் மற்றும் மேக மூட்டத்தால் முக்திநாத் பயணம் கடுமையானது. எனவே முதலில் காட்மாண்டிலிருந்து, பொக்காராவை அடைந்து, அங்கிருந்து வான் வழியாக ஹெலிகாப்டர் அல்லது சிற்றுந்து மூலம் முக்திநாதரை தரிசிக்கலாம்.
🛐பொக்காராவிலிருந்து முக்திநாத் செல்லும் வழியில் ராணிபௌவா, ஜோர்கோட், ஜார்கோட், சோங்கூர், காக்பெனி அல்லது ஜோம்சோம் ஆகிய இடங்களில் தங்க வசதியுள்ளது. சிற்றுந்து மூலம் காத்மாண்டிலிருந்து 377 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள முக்திநாத் கோயிலை அடைய 10 மணி நேரமாகும். காத்மாண்டிலிருந்து வான் வழியாக 194 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.
🛐எனவே முதலில் காட்மாண்டிலிருந்து,
பொக்காராவை அடைந்து,
ஜீப் மூலம் ஜொம்ஸம் சென்று, பின்னர் ஜுப் மூலமே அடிவாரம் அடைந்து சுமார் 300 படிகள் மூலம் நடந்தோ அல்லது மற்றும் சிறிது துரம் குதிரை மூலம் அல்லது தோலி மூலமாகவோ, முக்திநாதர் ஆலயம் சென்று தரிசிக்கலாம்
🛐திருமங்கையாழ்வார் மற்றும் பெரியாழ்வார் ஆகியவர்கள் முக்திநாதரை போற்றிப் பாடி மங்கள்சாசனம் செய்துள்ளனர்.
🛐ஆழ்வார்கள், இத்தலத்தை, 12-பாசுரங்களால்,
சாளக்கிராமம் என்றே மங்களாசாசனம் செய்துள்ளனர்.
வடதிசை மதுரை சாளக்கிராமம் வைகுந்தம் துவரை அயோத்தி
இடமுடை வதரி யிடவகை யுடைய எம் புருடோத்த மனிருக்கை
தடவரை யதிரத் தரணி விண்டிடியத் தலைப்பற்றிக் கரை மரம் சாடி
கடலினைக் கலங்கக் கடுத்திழி கங்கைக் கண்ட மென்னும் கடி நகரே.
🛐பெரியாழ்வார் திருமொழி-4.7.9 (399)
கலையும் கரியும் பரிமாவும் திரியும் கானம் கடந்து போய்,
சிலையும் கணையும் துணையாகச் சென்றான் வென்றிச் செறுக்களத்து,
மலை கொண்டலை நீரணைகட்டி மதிள் நீரிலங்கை வாளரக்கர் தலைவன்,
தலை பத்தறுத்துகந்தான் சாளக்கிராமமடை நெஞ்சே.
🛐திருமங்கையாழ்வார்-பெரிய திருமொழி-1.5.1 (988)
🛐முக்திநாத்தை நூறு புனித நீர் நிலைகள் எனப் போற்றி வழிபடுகிறார்கள்.
🛐வைஷ்ணவ சம்பிரதாயத்தில் பிரதானமாக கருதப்படும் 108 புராண திவ்ய தேச ஆலயங்கள் சிலவற்றில் சாளக்கிராம கற்கள் கொண்டே மூல
மூர்த்தி சிலை அமைத்து வைக்கப்பட்டுள்ளது.
🛐அந்த சிலைகள் உச்சந்தலை தொடங்கி, நாபி வரையில் நீண்ட துளை உடையதாக இருக்கும்.
🛐உட்புறத்தில் சங்கு, சக்கரம், தாமரை ஆகிய விஷ்ணுவின் சின்னங்களும் இருக்கும்.
🛐*அப்படிப்பட்ட சாளக்கிராம* *சிலைகள் மூலவராக* *இருக்கும் ஆலயங்கள்* *பக்தர்களுக்கு விரைவில்* *பலன் தருவதாக* *கூறப்படுகிறது*.
🛐முக்திநாத்தில் பாயும் கண்டகி ஆற்றில் கிடைக்கும் சாளக்கிராமத்தை, வைணவர்கள் நாரயாணனின் அம்சமாக கருதி வீட்டின் பூஜை அறையில் வைத்து வழிபடுகிறார்கள்.
🛐நேபாளத்தில் உள்ள
முக்திநாத் என்னும் சாளக்கிராமத் தலம், தாமே சுயம்புவாக தோன்றியதால் ‘ஸ்வயம் வியக்தம்’ என்னும் சிறப்பினைக் கொண்டு விளங்குகிறது.
🛐அங்கு இறைவன் நிரந்தரமான நிலையில், நித்ய சாந்நித்யமாக எழுந்தருளியிருக்கிறார் என்று வைணவ பெரியோர்களால் குறிப்பிடப்படுகிறது.
🛐கண்டகி என்ற புண்ணிய நதியில் நீராடி முக்தி நாதன் எனப்படும் சாளக்கிராம மூர்த்தியை பக்தியுடன் வழிபடுபவர்கள், பூவுலகில் சுகமாக வாழ்ந்த பின்னர் வைகுண்டத்தில் வசிப்பார்கள் என்று ‘விஷ்ணு புராணம்’ தெரிவிக்கிறது.
🛐இப்படிபட்ட சிறப்புகளையுடைய
முக்திநாத் பெருமாளை
நேரில் சென்று தரிசிப்பது மிக மிக புன்னியம். நாங்கள் சென்ற போது மிக நல்ல தட்பவெட்ப நிலை. மிகவும் அதிகம் கூட்டம் இல்லை. அவ்வளவு அழகு, அவ்வளவு சிறப்பான தரிசனம்
🛐முக்திநாத் இருப்பிடத்தை 51 சக்தி பீடங்களில் ஒன்றாக சாக்தர்கள் கருதுகின்றனர்.
🛐திபெத்திய பௌத்தர்கள் முக்திநாத்தை நூறு புனித நீர் நிலைகள் எனப் போற்று வழிபடுகிறார்கள்.
🛐தாந்திரீக திபெத்திய பௌத்தர்கள், முக்திநாத்தில் உள்ள டாகினி என்ற பெண் தெய்வத்தின் இருப்பிடமாக கருதுகின்றனர்.
🛐ஆலயம் மலை மீது உள்ளது.
மலை அடிவாரத்தில் கடைகள், வீடுகள், சிறிய ஹோட்டல்கள் உள்ளன.
🛐நாங்கள் 2023 ல் இங்கு வந்து நல்ல தரிசனம் பெற்றோம். தற்போது, அடிவாரத்திலிருக்கும் Arch முதல், ஆலய வளாகம் வரை செல்ல நல்ல சாய்வுடன், அகலமான அளவில் கைப்பிடியுடன் தாழ்வான அமைப்புடன் சுமார் 300 படிகள் அமைத்துள்ளார்கள்.
வயதானவர்களும் மெல்ல ஏறி சென்று தரிசித்துவரலாம்.
🛐குதிரை, டோலி மூலமும், வாகன நிறுத்தும் இடத்திலிருந்து, ஆலய வளாகம் வரையிலும் செல்லலாம்.
🛐ஆலயம் மேற்கு நோக்கிய அமைப்பில் உள்ளது. முன்புறம் அழகிய இரண்டு குளங்கள் உள்ளன. அவற்றில் முதலில் நீராடினோம். பிறகு, கருவரை உள்ள ஆலயப்பகுதியின் பிரகாரத்தில் அரைவட்ட வடிவத்தில் ஆலயத்தைச்சுற்றி அமைக்கப்பட்டுள்ள 108 கற்குழாய்கள் மூலம், அருவி போல வெளியேறும் நீரில் குளித்தோம்.
🛐பிறகு உடை மாற்றிக் கொண்டு ஆலயம் சென்று கருவரையில் மிக அருகில் அமர்ந்த கோலத்தில் வீற்றிருக்கும் பெருமாளை சேவித்து, கருவரையை வலம் வந்தோம்.
🛐மிக நல்ல வெப்ப நிலை. அதிக கூட்டம் இல்லை.
🛐கருவரைப் பகுதியில் மட்டும் புகைப்படம் எடுக்க அனுமதி இல்லை.
🛐முக்திநாதரிடம் உலக ஷேமத்திற்காக
நல்ல பிரார்த்தனை செய்து கொண்டோம்.
💥ஜ்வாலா மாய் கோயில் :
💥வெட்டவெளிப்பகுதியாக இருந்தாலும், மிக அதிக குளிர் இல்லை.
தரிசனம் முடித்துக் கொண்டு, மலையின் தென் பகுதியில் அமைந்துள்ள புத்தர் ஆலயம், மற்றும், அனையா ஜோதியாக விளங்கும் ஜ்வாலா மாய் கோயிலும் சென்று தரிசித்தோம்.
💥ஜ்வாலா மாய் கோயிலும் அதன் நித்திய சுடரும்ஃ முக்திநாத் கோயில் வளாகத்தின் மற்றொரு குறிப்பிடத்தக்க அம்சம் ஜ்வாலா மாய் கோயில் ஆகும், இது ஜ்வாலா தேவிக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இந்த கோயில் அதன் நித்திய சுடருக்கு பிரபலமானது, இது இயற்கை எரிவாயு மூலத்திலிருந்து தொடர்ந்து எரியும் என்று கூறப்படுகிறது. இந்த சுடர் தெய்வத்தின் தெய்வீக சக்தியைக் குறிக்கும் என்று நம்பப்படுகிறது, மேலும் பக்தர்கள் அவரது ஆசீர்வாதங்களையும் பாதுகாப்பையும் பெற கோயிலுக்கு வருகை தருகின்றனர்.
💥ஜ்வாலா மாய் கோயிலும் பௌத்தர்களால் மதிக்கப்படுகிறது, அவர்கள் குரு ரின்போச்சே மேதியர் என்று நம்புகிறார்கள்.
💥இந்த ஆலயமும் சென்ற முறை தரிசனம் செய்தோம் தற்போது மிகவும் முன்னேற்றம் அடைந்து உள்ளது.
கட்டிடங்கள் பழமை நீக்கி பொலிவுடன் உள்ளது.
💥அருகில் உள்ள பிரமாண்டமான உருவத்தில் வைக்கப்பட்டுள்ள புத்தர் சிலையும் தரிசித்து, மலைப்பாதையில் இறங்கி அடிவாரம் அடைந்தோம்.
💥அடிவாரத்தில் எங்களுக்கான ஜீப்பில் ஏறி மாலையில் ஜோம்சம் என்ற ஊருக்கு வந்து Hotel லில் தங்கினோம்.
எல்லோரும் உணவு முடித்த பிறகு அவரவர்களுக்கான தங்குமிடங்கள் சென்று தங்கினோம்.
🌟வாழ்வில் மிக முக்கிய நாளாக அற்புத தரிசனம் பெற்ற நாளாக அனைவருக்கும் அமைந்தது.
🌟விடியற்காலையில் நாங்கள் தங்கியிருந்த ஜோம்சம் நகரில் இருந்து தவளகிரி சிகரம், மற்றும் அன்னபூர்ணா மலைகளின் சிகர அழகை கண்டு ரசித்தோம்.
🌟சூரிய உதயத்தின் போது பொன்சிகரமாகி அற்புத பொன்னார் மேனிய காட்சிகள் கண்டது என்றும் நினைவில் இருக்கும்.
🌟மறுநாள் 28.04.2024 அன்று காலை உணவு முடித்துக்கொண்டு Pokhara மதியம் வந்து சேர்ந்தோம்.
நன்றி🙏🏼
26.4.24 #மீள்தரிசனம்
#சுப்ராம்ஆலயதரிசனம்
#முக்திநாத்திருப்பயணம் -
#Nepal Yatra 20.04.2024 - 4.5.2024 -
#சுப்ராம்ஆலயதரிசனம்
#என்றும்_அன்புடன்
#சுப்ராம்_அருணாசலம்_காரைக்கால்
#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று
#ஆன்மீகபாரதம்அகிலத்தின்சிகரம்
No comments:
Post a Comment