Thursday, June 27, 2024

முக்திநாத்திருப்பயணம் - 8 Nepal Yatra 21.04.2024 - 4.5.2024

#கோரக்ப்பூர்
8
பயண அனுபவக் குறிப்புகள்.

🕊️ 23.04.24 அன்று, அயோத்தியிலிருந்து காலை உணவு முடித்துக்கொண்டு மதியம் கோரக்பூர் வந்து சேர்ந்தோம்.

🛕கோரக்கநாதர் ஆலயம்
மற்றும் மடம் (Gorakhnath Mutt).

 இந்து சமயத்தில் நாத சைவம் பிரிவை நிறுவிய மச்சேயந்திரநாதர் கோரக்கநாதர் மடத்தை, கிழக்கு உத்தரப் பிரதேசத்தில் உள்ள கோரக்பூரில் நிறுவினார்.

🎪 இம்மடத்தின் பூசகர்களாக பிராமணர் அல்லாதோர் உள்ளனர்.
18 சித்தர்களில் ஒருவரான கோரக்கருக்கு, 12-ஆம் நூற்றாண்டில் கோரக்கர் மடம் மற்றும் கோயில் நிறுவப்பட்டது. இம்மடத்தில் சித்தரான கோரக்கநாதரின் சமாதி உள்ளது.

 🎪இம்மடம் கிழக்கு உத்தரப் பிரதேசம் மாநிலத்தின், தராய் பகுதியில் உள்ள கோரக்பூர் எனும் நகரத்தில் உள்ளது.

🎪 துறவியான யோகி ஆதித்தியநாத் தற்போது இம்மடத்தின் தலைவராக 14 செப்டம்பர் 2014-இல் பொறுப்பேற்றார்.

🎪கோரக்கநாதர் மடம் சார்பில், நேபாள நாட்டின் கோர்க்கா மாவட்டத்தில் உள்ள கோரக்கநாதர் மடத்தில் கோரக்கநாதருக்கு ஒரு கோயில் கட்டப்பட்டுள்ளது.

🎪மிகப்பெரிய மடவளாகம். வெளிப்புறத்தில் தனியாக வாகன நிறுத்த இடவசதிகள் உள்ளது.

🎪சிறு குறு கடைகளும் நிறைந்த வணிக வளாகப் பகுதி அருகாமையில் உள்ளது.

🎪ஆலயப் பகுதி முழுவதும் சுற்று சுவருடன், 4 புறங்களிலும் தனித்தனி வாசல் பகுதிகள் உள்ளது. கிழக்கு நுழைவாயிலே பிராதானமானது.
ஆலயம் உள்ளே, பொருட்கள், காலணிகள் வைக்கும் இடம் தனியாக உள்ளது. எதற்கும் கட்டணம் கிடையாது. கைப்பேசிகள் அனுமதிக்கப்படுகின்றன.

🛕ஆலயவளாகம்

🛕மத்தியப் பகுதியில் கிழக்கு நோக்கிய வெள்ளை பளிங்கினால் கட்டப்பட்டுள்ள ஆலயம். நீண்ட முன்மண்டபம். மூன்று தனித்தனி கருவரைகள் சன்னதிகள் கொண்டது.

🛕ஆலயம் முன் பகுதியில் தென்புறம் சிறிய குளம் உள்ளது.

🛕பிரதான ஆலயத்தின் முன்பகுதியில் வடபுறம் ஒரு யாக குண்டம் மண்டபத்துடன் உள்ளது.
அடுத்து இந்து மதத்தின் வேராகவிளங்கும் சித்தர்கள், ஞானிகள், துறவிகள், மிகப்பிரபலமான பக்திமான்கள், பண்டிதர்கள், முழு சிலைவடிவில் பெரிய மண்டபத்தில் அமைத்துள்ளர்கள் .

🛕வடபகுதியில், மேலும், சற்று உயரமான பகுதியில், தனித்தனி சன்னதிகளில் பல்வேறு இந்து தெய்வங்களுக்கும் கருவரை அமைக்கப்பட்டு பூசைகள் நடைபெற்று வருகின்றன.

🛕ஆலயம் பின்புறம், மிகப்பெரிய மாநாட்டுக் கூடம் / தியான மண்டபம் / கலைக்கூடம் அமைந்துள்ளது.

🛕தெற்குப் பகுதியில் மடத்தின் அலுவலகம், மற்றும் துறவிகளின் இருப்பிடம், வாழ்விடங்கள் அமைக்கப்பட்டு உள்ளது.

🛕மடத்தின் முதன்மை துறவியான திரு யோகி ஆதித்திய நாதர் மாநில முதல்வராகவும் உள்ளதால், காவல் கட்டுப்பாடுகள் இப்பகுதியில் உள்ளன.

🛕பொதுவாக, தெய்வீக அமைதி நிறைந்த வளாகமாக உள்ளது.

🛕ஆலய வளாகத்தின் வடக்குப் புறத்தில் பொது மண்டபம், சமையல் கூடம், உணவுக்கூடம் உள்ளது.

🛕உள்ளூர் வெளியூர் பொதுமக்கள்
தங்கள்  திருமணம் முதலிய பல குடும்ப விழாக்களை இங்கு வந்து
நடத்திக்கொள்கிறார்கள்.

🛕சுனோலி வழியாக நேப்பாள் செல்பவர்கள், இங்கு வரத்தவறுவதில்லை.

🛕ஏற்கனவே, 5 ஆண்டுகளுக்கு முன்பு முக்திநாத் சென்ற போதும் 
மீண்டும் வரும் போதும் இந்த ஆலயம் தரிசித்து சென்றோம்.

🛕இந்த முறை, நாங்கள் இங்கு ஆலய தரிசனம் முடிந்து, மதிய உணவும் முடித்துக் கொண்டு சுனோலி புறப்பட்டோம்.

🙏🏻🕊️🌏🇮🇳🙏🏼
23.04.2024 மீள் தரிசனம்

#முக்திநாத்திருப்பயணம் -
#Nepal Yatra 21.04.2024 - 4.5.2024 -
#சுப்ராம்ஆலயதரிசனம் 
#என்றும்_அன்புடன் 
#சுப்ராம்_அருணாசலம்_காரைக்கால் 
#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று 
#ஆன்மீகபாரதம்அகிலத்தின்சிகரம்
https://whatsapp.com/channel/0029Va5eOh59Bb67425WOR1A

No comments:

Post a Comment

KERALAYATRA2024பகுதி - 5- வைக்கம் - (எர்னாகுளம்)பதிவு - 25 - #சுப்ராம்ஆலயதரிசனம் #சுப்ராம்ஆலயதரிசனம் 13.8.2024 #பயணஅனுபவக்குறிப்புகள்🕊️29. வைக்கம் சிவன் கோவில்(Vaikom Temple):

#KERALAYATRA2024 பகுதி - 5- வைக்கம் - (எர்னாகுளம்) பதிவு - 25 - #சுப்ராம்ஆலயதரிசனம்  #சுப்ராம்ஆலயதரிசனம் 13.8.2024  #பயணஅனுபவக்குறிப்புகள்🕊...