பதிவு : 8
#தார்ச்சுலா #Dharchula
நாள்: 4️⃣
29.05.24- புதன்
பித்தோர்கார் - to தார்ச்சுலா (96 kms. 4-5 hrs.)
(காலை 7.00 மணி உணவு முடித்து, பித்தோக்காரிலிருந்து தர்ச்சுலா புறப்படுதல்)
- மதியம் 1.00 Dharchula KMVN TRH வில் உணவு மற்றும் Hospital சென்று Medical Checkup. Inner Line Certificate பெறுதல்.
- Eve. Tea, Dinner,
-யாத்திரா பற்றிய Briefing meeting.
உணவு முடித்து இரவு தங்குதல்)
#பயணஅனுபவக்குறிப்புகள்🕊️
#DARCHULA
🏵️ #தார்ச்சுலா என்பது இந்தியாவின் வடக்கு மாநிலமான உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள பித்தோராகர் மாவட்டத்தில் உள்ள ஒரு நகரம் ஆகும், இது கடல் மட்டத்திலிருந்து 940 மீ உயரத்தில் அமைந்துள்ளது.
🏵️கைலாஷ்-மானசரோவர் யாத்திரை செல்லும் பாதையில் பித்தோராகர் நகருக்கு வடக்கே 92 கிமீ (57 மைல்) தொலைவில் தர்சூலா அமைந்துள்ளது.
🏵️இது பித்தோராகாக்-லிபுலேக் பாஸ் நெடுஞ்சாலையில் (PLPH) அமைந்துள்ளது.
🏵️அனைத்து பக்கங்களிலிருந்தும் சிகரங்களால் சூழப்பட்டுள்ளது மற்றும் காளி நதி நடுவில் உள்ளது
💥 SARADA or காளி என்ற நதிக்கரையில் ஒரு பள்ளத்தாக்கில் அமைந்துள்ளது தார்ச்சுலா.
🏵️காளி நதி லிபுலேக் கணவாயில் இருந்து உருவாகிறது மற்றும் இந்தியா மற்றும் நேபாளத்தின் எல்லையை உருவாக்குகிறது. காளி நதி இரண்டு மலைகளுக்கு இடையில் இமாலயத்திலிருந்து பாய்ந்து வருகிறது. ஒரு புறம் பாரத தேசம் எதிர்புரம் நேப்பாள நாடு உள்ளது. இரண்டிற்கும் நடுவாக காளி நதி செல்கிறது.
💥Api மலைத்தொடர், இமயத்தில் உள்ள பல சிகரங்கள், மலைத் தொடர்கள் , இயற்கை அன்னையின் அழகினை இப்பகுதியில் காணலாம்.
🏵️தார்ச்சுலா இமயமலைக்கு இடையேயான வர்த்தகப் பாதையில் உள்ள ஒரு பழங்கால வர்த்தக நகரமாகும்.
🏵️வர்த்தகம் பண்டமாற்று முறையை அடிப்படையாகக் கொண்டது மற்றும் தார்ச்சுலாவில் வசிப்பவர்களுக்கு ஒரே வருமான ஆதாரமாக இருந்தது. இங்கு 'டான்' என்று அழைக்கப்படும் தரைவிரிப்பு போன்ற உள்ளூர் கைவினைப் பொருட்கள், உணவு மற்றும் உடைக்காக திபெத்தியர்களுடன் பரிமாறப்பட்டன.
🏵️1962 இல் நடந்த இந்திய-சீனப் போருக்குப் பிறகு, திபெத்தியர்களுடனான அனைத்து வர்த்தக உறவுகளும் நிறுத்தப்பட்டன, இது தார்ச்சுலா மக்களுக்கு எண்ணற்ற கஷ்டங்களை ஏற்படுத்தியது. சிரமம் மக்கள் மாற்று வழிகளைத் தேடும் நிலைக்குத் தள்ளப்பட்டது.
🏵️தற்போது உள்ளூர்வாசிகள் விவசாயம், சிறு தொழில்கள் மற்றும் கால்நடை வளர்ப்பில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டனர். அரசின் தலையீட்டால், ஊரில் நல்ல சுற்றுலா வசதிகள் உருவாகியுள்ளன.
💥 தற்போது, இது ஒரு முக்கியமான நகர். இதுதான் கைலாச பாதையில் வரும் தற்போதைய காலத்தில் பெரிய நகர். எல்லாவித வசதிகளும் நிறைந்துள்ள, நெருக்கடி நிறைந்த நகரமாகக் காணப்படுகிறது.
#பயணஅனுபவக்குறிப்புகள்🕊️
💥 தார்ச்சுலாவில் பாரத ரானுவ அமைப்பின் ஒரு பகுதியான இந்தோ - திபெத்தியன் எல்லைப்பாதுகாப்புப் படையின் கேந்திரம் உள்ளது. இமாலயப்பகுதிகளின் முழு பாதுகாப்பும் இவர்கள் கட்டுப்பாட்டில் உள்ளன. இவர்களின் சீரிய பணிகள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்பதையும் எவ்வளவு கடினமான பணி என்பதையும் நாம் இந்தப் பயணத்தில் நேரில் அனுபவித்து உணரலாம். அவர்களுக்கு நமது நன்றிகள்.
💥தார்ச்சுலா மலைகளின் சரிவில் உள்ளப் பகுதி. இரண்டு மூன்று சிறிய அகலமான பாதைகள் இருந்தாலும், கைலாஷ் - மாசைரோவர் பாதை மிகவும் முக்கியமானது. ஏராளமான ஜீப் கள் உள்ளன. இமயப்பகுதிகளில் பயணம் செய்ய உதவுகின்றன. சிறிய ரக Van - Bus போக்குவரத்து வாகனங்கள் தார்ச்சுலாவிற்கு மேல் செல்ல இயலாது.
💥நெருக்கடியான பிரதான சாலை இந்தோ - நேப்பாள் சாலையில், கடைத்தெரு நடுவில் மகாத்மா காந்தியடிகள் சிலை ஒன்றும் வைக்கப்பட்டுள்ளது.
💥 நிறைய கடைகள் Hotels கள் உள்ளன. ஏராளமான வாகனங்கள் உள்ளன. இந்த ஊர் வரை மட்டுமே சிறியரக வேன்கள் சிறியரக பேருந்துகள் வர முடியும். இதற்கு அப்பால் Bolero, போன்ற ஜீப் வாகனங்கள் மட்டுமே சாலைப் பயணத்திற்கு நிறைய வாடகை வாகனங்கள் கிடைக்கின்றன.
தனிக்குழுவாக இயங்குகின்றனர். அவர்களுக்குள் Team உள்ளன.
நாங்கள், தார்ச்சுலாவிலிருந்து மேல செல்ல, எமது வாகன ஓட்டியிடம் அவர்கள் குழுவில் வந்து பணம் பெற்று பிறகு அனுமதிக்கின்றனர்.
💥 மேலும், கைலாச யாத்திரை தொடர Innner Line Permit இருந்தால் மட்டுமே அனுமதி என்பதால். இங்கு அதற்கு ஏற்பாடுகள் செய்து தருகிறார்கள். பரபரப்பும், கூட்டமும் நிறைந்து காணப்படுகிறது.
🌟தார்ச்சுலாவில் நாங்கள் K M V N Tourist home, MANAS HOTEL என்ற வசதிகள் நிறைந்த பெரிய Hotel லில் தங்க வைக்கப்பட்டோம். வளைந்து பாய்ந்து ஓடும் காளி நதிக்கரையில் உள்ள பெரிய Hotel. மிகவும் அற்புதமான இடமாக உள்ளது. சுற்றிலும் இயற்கை காட்சிகள் அற்புதம்.
🌟மிகவும் சிறந்த முறையில் Hotel
பாராமரிக்கப்பட்டு வருகிறது.
இந்த இடம் மிக மிக முக்கிய இடம் என்பதால் பரபரப்பாக உள்ளது.
🌼நாங்கள் சென்றதும் முதலில் பழச்சாறு கொடுத்து உபசரித்தார்கள்.
அனைவருக்கும் தங்கும் இடம் ஒதுக்கப்பட்டது.
🌟மதிய உணவுக்குப் பிறகு, பயணிகள் அனைவருக்கும் மருத்துவ சோதனைக்காக அருகில் உள்ள Sub District Hospital, சென்றோம். அங்கு மருத்துவ சோதனை BP, Check up செய்து ஒரு சான்றிதழ் வழங்குகிறார்கள். மருத்துவ ஆலோசனைகளும் தருகிறர்கள்.
நமது Aadhar card கொண்டு செல்ல வேண்டும். முறையாக பதிந்து Documentation செய்து நமது KMVN Guide விடம் கொடுத்து விடுகின்றனர்.
💥இதற்குப் பிறகுதான் INNER PERMIT தருகிறார்கள். எல்லோருக்கும் தனித்தனியாக Mobile ல் அனுப்பி விடுகிறார்கள். இருப்பினும் ஒரு போட்டா காப்பி தனித்தனியாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். எங்கள் கைடு அனைவருக்கும் photo Copy ஒன்று எடுத்துக் கொடுத்தார்கள். பத்திரமாக கையில் வைத்துக் கொள்ள வேண்டும்.
💥அருகில் நேப்பாள நாடு இருப்பதால், சிலர், அங்கு சென்று Shopping செய்ய விரும்பியதால் அங்கும் சென்றோம்.
🏵️ காளி என்ற நதி தார்ச்சுலா பகுதியை இரு கரைகளிலும் இரண்டு நகரங்களாகப் பிரிக்கிறது. நதியின் - ஒன்று இந்தியாவில்; மற்றொன்று நேபாளத்தில்.
🏵️இரண்டு நகரங்களின் மக்கள் ஒரே மாதிரியான மரபுகள், கலாச்சாரம் மற்றும் வாழ்க்கை முறையைக் கொண்டுள்ளனர்,
🏵️மென்மையான எல்லையைக் கடக்க இந்தியர்களுக்கும் நேபாளிகளுக்கும் பாஸ்போர்ட் அல்லது விசா தேவையில்லை என்பதால் அவர்கள் ஆற்றின் குறுக்கே சுதந்திரமாக நகர்கிறார்கள்.
💥நமது பாரத ராணுவ Checkpost உள்ளது. அங்கு சென்று, நமது Aadhar card காண்பித்தால், அவர்கள் Register ல் பதிந்து கொண்டு நேப்பாள் செல்ல அனுமதிக்கின்றனர்.
💥ஒரு நீண்ட இரும்பு தொங்குபாலத்தில் நடந்து நேப்பாளம் சென்று வரலாம்.
💥நேப்பாளம் பக்கம் உள்ள பகுதியும் காளி நதி ஒட்டி பல்வேறு கடைகள் உள்ளன.
🌼ரெடிமேடு ஆடைகள், மற்றும் பல்வேறு விதமான பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன. நமது ஊர் விலைகளை விட மிக அதிகம்.
💥பாரதம் பக்கத்திலிருந்தே அதிக பொருட்கள் எடுத்துச் செல்லப்படுகின்றன.
பல பொருட்களை எடுத்துச்செல்ல அனுமதி கிடையாது. எந்த எந்த பொருட்கள் எடுத்து செல்லக்கூடாது என்று பாரதம் பக்கம் எழுதியும் வைத்துள்ளனர்.
🌟 பாரதம் பக்கம் சோதனைகள் செய்யப்பட்டாலும், நேப்பாள் சேர்ந்த பலர் சாமான்களை சிறு சிறு பைகளில் மூட்டையாகக் கட்டி தோளிலும், தலையிலும் சுமந்து அக்கரை செல்கிறார்கள்.
🌟நேப்பாள் அதிகாரிகளும் நுழைவுப்பகுதியில் அலுவலகம் வைத்து இருக்கின்றனர்.
💥நேப்பாளில் காளி நதி கரை ஓரம் 3 கி.மீ. தூரத்தில், சற்று உயரமான இடத்தில் மலைப்பகுதியில் ஒரு அம்மன் கோவில் இருக்கிறது.
🌟 நாங்களும் அருகில் உள்ள தொங்குபாலம் கடந்து நேப்பாளம் சென்று கடைத்தெரு கண்டு திரும்பி ஹோட்டல் வந்தோம்.
🌼இரவு KMVN Tourist Manager, அடுத்த நாள் முதல் தொடர்ந்து 4 நாட்களுக்கு உரிய பயண திட்டம் குறித்து ஒரு நெடுவிளக்கம் (ஹிந்தியில்) கொடுத்தார்.
இந்த உரை நிகழ்வுக்குப் பின் இரவு உணவு முடித்து உறங்க சென்றோம்.
ஆதி கைலாஷ், ஓம் பர்வத் யாத்திராவில் தார்ச்சுலா முதல் தார்ச்சுலா வரை கவனத்தில் கொள்ள வேண்டிய சில முக்கிய குறிப்புகள்:
💥INNER PERMIT Copy பயனம் முழுவதும் உடன் வைத்திருக்க வேண்டும். சுமார் 8 இடங்களில் Check செய்வார்கள். பிறகு, பயணம் தொடரும். இந்தியக் குடிமக்கள் மட்டுமே இந்த யாத்திரைக்கு அனுமதி'; என்பதையும் குறிப்பில்
💥நம்முடைய உடமைகளை Darchula வில் பிரித்து முக்கிய குளிர் தாங்கும் உடைகளுடன் + சில அவசியமான முக்கிய பொருட்கள் Medicine, Camera, Cell, Purse முதலியவைகள் மட்டுமே உடன் எடுத்துச் செல்லலாம். பெரிய Luggage unit ஐ தார்ச்சுலாவில் வைத்து விடலாம்.
💥அதிக பொருட்கள் எடுத்து செல்ல முடியாது. Bolero, போன்ற ஜீப்பில் 4 பேர் மட்டுமே பயணம் சென்று திரும்ப வேண்டும். Bolero | Campar ஜீப்பில் 4 பேரும் வசதியாக உட்கார்ந்து கொள்ள வேண்டும். பின் சீட்டில் நமது Luggage - Bags வைத்துக் கொள்ள அறிவுருத்தப்படுகின்றனர். எனவே தான்
4 பேரின் அதிக Luggages ஜீப்பின் கொள்ளலவுக்குத் தகுந்த இடம் வேண்டியிருப்பதால் தான், தார்ச்சுலாவில் மீதி Luggages வைத்து விட வேண்டியிருக்கிறது.
💥பாதைகள் மிகவும் கடினம். சீதோஷன நிலை மாறிக் கொண்டே உள்ளதால், மிகவும் கவனம் தேவை.
💥சாலை ஓரங்கள் மிகவும் கவனம்.
படம் பிடிப்பதற்காகவோ, வேறு காரணங்களின் அடிப்படையில் அடிக்கடி இறங்க முயலாதீர்கள். சாலை ஓரங்களும், சாலைகளும் மிகவும் பள்ளம் / மோசம்.
💥எப்போதும் தனியாக எங்குமே செல்ல முயல வேண்டாம். பெரும்பாலும், மனிதர்கள் கூட்டம் குறைவுதான்.
💥 பயணம் செய்யும் போது ஒட்டுனர்களுடன் அதிகமாக Chatting செய்யாதீர்கள். அவர் கவனம் சிதராமல் இருக்க வேண்டும்.
💥தார்ச்சுலா முதல் குன்ஞ்ஜி வரையிலும், குன்ஞ்ஜி லிருந்து ஓம் பர்வத் செல்லும் பாதையும், மீண்டும் குன்ஞ்ஜி வந்து, தங்குவிட்டு, அடுத்த நாள் அங்கிருந்து ஆதிகைலாஷ் சென்றவர வேண்டும்.
💥பாதைகளும்,மிகவும் குறுகியது. மன்சரிவுகள் மிக மிக அதிகம்.
💥மேலும், Border Road Organisation மூலம் பாதைகள் போட்டுக் கொண்டே உள்ளனர்.
💥பல இடங்கள் நல்ல அகலத்துடன், பாதுகாப்புடன் போடப்பட்டு வருகின்றன.
💥முழுவதும் சாலைப் பயணம்தான். குதிரை, டோலி தேவையில்லை.
🌼அடுத்த நாள் குன்ஞ்சி சென்று தங்கி ஓம்பர்வத் மற்றும் அதற்கு அடுத்த நாள் ஆதிகைலாஷ் தரிசித்து நேரடியாக குத்தி என்ற இடம் வழியாக மீண்டும் தார்ச்சுலா வந்து, அவரவர் Bag களை திரும்ப எடுத்துக் கொள்ள வேண்டும்; என்பதால், எங்கள் முக்கிய உடமைகளை மட்டும் எடுத்துக் கொண்டு மற்ற உடைகள் முதலியவற்றை இங்கேயே பத்திரமாகவும், பாதுகாப்பாகவும், வைத்துக் கொள்ள செய்துவிடுகிறார்கள்.
🌼அடுத்த நாள் காலை உணவிற்குப் பிறகு, தார்ச்சுலாவிலிருந்து குன்ஞ்ஜி புறப்பட்டோம்.
🛐💚🤎💜❤️
பயணம் தொடருகிறது...... .....
#Uttarakhand #ADIKAILASH #OMPARVAT_YATRA_2024
#ஆதிகைலாஷ் #ஓம்பர்வத்யாத்திரை
26.05.2024 முதல் 6.06.24 வரை
#பயணஅனுபவக்குறிப்புகள்🕊️
#என்றும்அன்புடன்
#சுப்ராம்அருணாசலம்காரைக்கால்
🙏🏻🕉️🙏🏻🛐🙇🏻🕉️🙏🏻🙇🏻🛐🙏🏻🕉️🙇🏻🛐🙏🏻🕉️🙇🏻🛐🙏🏻
No comments:
Post a Comment