Thursday, June 27, 2024

முக்திநாத்திருப்பயணம் 30 -#NepalYatra 20.04.2024 - 4.5.2430

#மணிமண்டம் 
#ஜனக்பூர் 
#முக்திநாத்திருப்பயணம் -
#NepalYatra 20.04.2024 - 4.5.24
30
🕊️ #பயணஅனுபவக்குறிப்புகள்.

30.04.24 தரிசனம்
💥நாங்கள் ஜனக்பூர் 29.04.20 24 அன்று மாலை வந்து Hotel லில் தங்கினோம். தனித்தனி குழுவாகப்பிரிந்து, தனியாக வாகனங்கள் ஏற்பாடுகள் செய்து கொண்டு மாலை நகரின் முக்கிய இடங்களில் உள்ள
சில மிக முக்கிய ஆலயங்களை தரிசித்து வந்தோம்.

🩸ஜானகி மாளிகை
💧ராமர் - சீதாவிவாக மண்டபம்
🩸மகாகங்கா ஆர்த்தி காட்
💧பாபாபூதநாத் மகாதேவர் ஆலயம்
🩸புருஷோத்தமன் ஆலயம்
💧ராம் - ஜானகி ஆலயம்

🌟இவற்றை தரிசித்துவிட்டு Hotel இரவு உணவு முடித்துக் கொண்டு தங்கினோம்.

💥30.04.2024  காலை உணவுக்கு முன்  
 நகருக்கு வெளியில்  வடக்குப் புறத்தில் 3. கி.மீ. தூரத்தில்உள்ள இடம். மனி மண்டபம் முதலிய சில இடங்களை  தனிக் குழுவாக சென்று தனிப்பட்ட முறையில் சுற்றிப் பார்த்துவிட்டு Hotel திரும்ப வந்தோம். பிறகு பயணிகள் எல்லோரும் காலை உணவு முடித்துக் கொண்டு தனுஷ்தாம் என்ற இடத்திற்குச் சென்றோம்.

💥30.04.2024 காலை சென்று வந்த இடங்களைப்பற்றிய குறிப்புக்கள்
🕊️ #பயணஅனுபவக்குறிப்புகள்

#மணிமண்டபம் ஜனக்பூர்

 🌟ராம் - சீதா திருமணம் நடந்த இடம்.
தற்போது நகரில் உள்ள பிரபலமான ஜானகி மந்தீரின் ஒரு புறம் உள்ள திருமணம் மண்டபத்தில் தான் திருமணம் நடந்தது என்று குறிப்பிட்டு வருகிறார்கள்.
 🩸ஆனால், இந்த இடத்தில் ராமர் - சீத்தா திருமணம் முடிந்து வரவேற்பு  சடங்குகள் தான் நடைபெற்றது. திருமணம் நடந்த இடம் தற்போதுள்ள ஜானகி மந்தீர் வடக்கில் 3 கி.மீ. தூரத்தில் உள்ள மணிமண்டபம் என்ற இடம் தான் என்றும், இதற்கான புராணக் காலத்தில் உள்ள சான்றுகளுடன் இது விளங்குகிறது. என்று கூறுகிறார்கள்.

💧புராதானக் கட்டிடங்களைப் பொருத்தவரையில் எல்லாக் கட்டிடங்களுமே முக்கியமானதுதான்.

🌼புராண காலத்தில் காடுகளும், தோட்டங்களும், மலைகளும் நீர் அமைப்புகளும் நிறைந்து இருந்ததால், வாழுமிடங்கள் நிலம் முழுதும் பரவிக் கிடந்தன. வாழ்க்கை  நிகழ்வு இடங்களும் பரவிக் கிடந்தன.

🌼கால வளர்ச்சியில், புராதான கட்டடங்கள், மறைந்தும், சிதைந்தும், அழிந்தும் சென்று விட்டன. புதிய புதிய மன்னர்கள், மக்கள்கள் பெருகி வளர வளர தாம் தம் வசதிகளுக்கு ஏற்ப புராணங்களின் அடிப்படை மாறாமல், கட்டடங்கள் மட்டும் மாற்றி மாற்றி அமைக்கப்பட்டு அவற்றிலேயே பூசை முறைகள், வழிபாடுகள் நடைமுறைப்படுத்தப்பட்டது என்று அறிய முடிகிறது.

🌼எனவே, தொல்லியல் ஆராய்ச்சி, அதிகரிக்க, அதிகரிக்க,  உண்மையாக புராண நிகழ்வுகள் நடந்த இடங்கள் திரும்ப கண்டுபிடிக்கப்படும் போது, அவற்றின் உண்மைத்தன்மை உறுதி செய்யப்படுகிறது. அதுவரை  அவ்வூர் எல்லையில் உள்ள மதிப்பு மிக்க எல்லா இடங்களையுமே இந்து மக்கள் ஏற்று மரியாதையும், வழிபாடுகளையும் செலுத்தி வருகிறார்கள்.

🌼இந்த அடிப்படையில்
ஜனகபுரி போன்ற பல இடங்களில், ஒரே  மாதிரியான புராண நிகழ்வுகளை பல இடங்களில் காட்சிப்படுத்தி வழிபாடுகளை பிரபலமாக்கிவிடுகிறார்கள் என்று தோன்றுகிறது. எல்லாவற்றையுமே இந்து மக்கள் ஏற்கும் தன்மையால் அவைகள் வளர்ச்சி அடைந்து விடுகிறது என்பதே நடைமுறை உண்மை.

🌼இந்த வகையில்  - மணி மண்பம் என்றஇந்த இடம் தான் புராண காலத்தில் ராமர் - சீதா திருமணம் நடந்த இடம் என்று ஆராய்ச்சி செய்து இந்த இடத்தையும், இதன் வளாகத்தையும் புதிய ஆலயங்கள் கட்டப்பட்டு பிரபலபடுத்தி வருகின்றனர். 

 🌼இந்த ஆலயம் முன்பு  உள்ள அழகிய குளம் புனரமைப்பு செய்யப்பட்டுள்ளது.
குளத்தை ஒட்டி பெரிய அரசமரம். மற்றும் கிழக்குப் பார்த்த சிறிய ஆலயம்.
ஆலயத்தில், ராமர் - சீதா இருவரும் மனக்கோலத்தில், இரு கைகளில் மாலை ஏந்தி நிற்கும் காட்சி.
எதிரில், தனி அனுமான் சன்னதி.
மிகவும் அமைதியான பகுதி.

🌼இதற்கு அடுத்தாற்போல உள்ள இடங்களில் பிரம்மாண்டமான ஆலயங்களும் எழுப்பப்பட்டு வருகின்றன. அங்கும் ஒரு குளம் உள்ளது.

💥இந்த வகையில் ஜனக்பூரில் உள்ள பிரபலமான மேலும் சில இடங்களையும் பார்த்து வந்தோம் அது பற்றிய குறிப்புகள் அடுத்த பதிவில் ....

நன்றி🙏🏼 30.04.2024
#முக்திநாத்திருப்பயணம் -
#Nepal Yatra 20.04.2024 - 4.5.2024 -
#சுப்ராம்ஆலயதரிசனம் 
#என்றும்_அன்புடன் 
#சுப்ராம்_அருணாசலம்_காரைக்கால் 
#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று 
#ஆன்மீகபாரதம்அகிலத்தின்சிகரம்



No comments:

Post a Comment

KERALAYATRA2024பகுதி - 5- வைக்கம் - (எர்னாகுளம்)பதிவு - 25 - #சுப்ராம்ஆலயதரிசனம் #சுப்ராம்ஆலயதரிசனம் 13.8.2024 #பயணஅனுபவக்குறிப்புகள்🕊️29. வைக்கம் சிவன் கோவில்(Vaikom Temple):

#KERALAYATRA2024 பகுதி - 5- வைக்கம் - (எர்னாகுளம்) பதிவு - 25 - #சுப்ராம்ஆலயதரிசனம்  #சுப்ராம்ஆலயதரிசனம் 13.8.2024  #பயணஅனுபவக்குறிப்புகள்🕊...