#நாராயணன்ஹிட்டிஅரண்மனை
#காத்மாண்டு
#முக்திநாத்திருப்பயணம் -
#NepalYatra 20.04.2024 - 4.5.2024
15
🕊️ #பயணஅனுபவக்குறிப்புகள்.
25.04.2024
✨25.04.2024 அன்று மதியம் காட்மண்டு மற்றும் அருகில் உள்ள சில இடங்களை தனி வாகன வசதிகள் ஏற்பாடுகள் செய்து கொண்டு சென்று தரிசித்து விட்டு மாலை மீண்டும் பசுபதிநாதர் தரிசனம் செய்து பாக்மதி நதி ஆர்த்தி தரிசனம் செய்து Narayana Hotel தங்கினோம்.
⛳ சென்று வந்த சுற்றுலா இடங்கள் /ஆலயங்களைப் பற்றிய வலைதளக் குறிப்புகளும் எமது அனுபவ குறிப்புகளும்
தங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
நன்றி🙏🏻
🏰நேப்பாள் காட்மண்டுவில் ஏராளமான அரண்மணைக் கட்டிடங்கள் மற்றும் ஆன்மீக சுற்றுலா இடங்கள் உண்டு.
✨காத்மாண்டு நகரச் சதுக்கம்
⚡பக்தபூர் நகர சதுக்கம்
⚡பதான் தர்பார் சதுக்கம்
⚡பசுபதிநாத் கோவில்
⚡சங்கு நாராயணன் கோயில்
⚡பௌத்தநாத்து
⚡ (சுயம்புநாதர் கோயில்)Amideva Buddha Park
மேலும்,
⚡காத்மாண்டு சமவெளி
⚡திரிபுவன் பன்னாட்டு வானூர்தி நிலையம்
⚡திரிபுவன் பல்கலைக்கழகம்
⚡சிங்க அரண்மனை
⚡நாராயணன்ஹிட்டி அரண்மனை
இவற்றுள் எங்களுக்குக் கிடைத்த நேரத்தில் 2, 3 இடங்கள் மட்டும் சென்று பார்க்கும் வாய்ப்புக் கிடைத்தது.
#நாராயணன்ஹிட்டிஅரண்மனை (Narayanhiti Palace or Narayanhiti Durbar) :
🏰காத்மாண்டில் உள்ள நேபாள மன்னர்களின் வாழிடமாகும்.
🏩தற்போதைய நாராயணன்ஹிட்டி அரண்மனை, மன்னர் மகேந்திரன் 1963ல் புதிதாக நிறுவினார்
🏩நாராயணன் என்பதற்கு திருமாலையும், நேவாரி மொழியில் ஹிட்டி என்பதற்கு நீர்த் தாரையையும் குறிக்கும். இந்நீர்த் தாரை, கோயிலின் கிழக்கு நுழைவு வாயிலில் உள்ளது.
🏰நேபாள இராச்சியத்தின் ஷா வம்சக் காலத்திற்கு முன்னர், நாராயணன்ஹிட்டி அரண்மனை அமைந்த பகுதியை, தற்கால இந்தியாவின் உத்தரகாண்ட் மாநிலத்தின் குமாவுன் மற்றும் கார்வால் நாட்டின் படைத்தலைவரின் இளையமகன் சிவராம் சிங் பஸ்யந்த் என்பவர் நாராயணன்ஹிட்டி அரண்மனையை நிறுவினார்.
🏰பின்னர் நேபாள இராச்சியத்தின் ஆறாவது தலைமை அமைச்சரான பதே ஜங் ஷா, காட்மாண்டுப் போரில் நாராயணன்ஹிட்டி அரண்மனையை, மல்லர் வம்ச மன்னர் ஜெயப்பிரகாஷ் மல்லாவிடமிருந்து கைப்பற்றினார்.
🏰19 செப்டம்பர் 1846ல் தலைமை அமைச்சர் பதே ஜங் ஷா நாடு கடத்தப்பட்ட பின்னர், புதிய தலைமை அமைச்சர் ஜங் பகதூர் ராணாவின் தம்பி ரணதீப் சிங் குன்வர், நாராயணன்ஹிட்டி அரண்மனையின் பழுதுகளை நீக்கி தனது குடியிருப்பாகக் கொண்டார்.
🏰நேபாள மன்னர்களின் இளவரசர் தீபேந்திரா, மன்னர் பிரேந்திரா, அரசி ஐஸ்வரியா உட்பட 10 பேர்களை சுட்டுக் கொன்றார். பின்னர் திபேந்திரா தன்னைத் தானே சுட்டுக் கொண்டு, நான்கு நாட்களுக்கு பிறகு இறந்தார். உலகம் துயர அதிர்ச்சியில் உறைந்தது
இந்த நிகழ்வுக்குப் பிறகு அரண்மனைக் கட்டிடத்தை அரசு கைப்பற்றியது.
🏰2006ல் நேபாளத்தில் நடைபெற்ற தொடர் ஜனநாயக புரட்சியின் காரணமாக, மன்னர் ஞானேந்திரா பதவி பறிக்கப்பட்டதுடன், நேபாளத்தின் புதிய நாடாளுமன்றம், ஞானேந்திராவை நாராயணன்ஹிட்டி அரண்மனையிலிருந்து 15 நாட்களுக்குள் வெளியேற கட்டளையிட்டது.
🏰தற்போது நாராயணன்ஹிட்டி அரண்மனை பொது அருங்காட்சியகமாக மாற்றப்பட்டுள்ளது.
🏰இவ்வருங்காட்சியகத்தில் நேபாள அரண்மனைவாசிகளின் நகைகள் மற்றும் அரிய பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.
🏰அரண்மனை கட்டிட வளாகம் மிகப்பெரிது.பல பகுதிகள் கொண்டது.
🏩மகேந்திரா மன்ஸில் என்பது மகேந்திரா பிர் பிக்காராம் ஷா மன்னர் அரண்மனை.
இந்து கோவிலின் கோபுரம் அமைப்பில் முன்புற உள்ள Tower அமைந்துள்ளது.
அரண்மணைக்கு வெளிப்புரம் உள்ள நாராயணன் ஆலயம் முன்பு ஒரு கருடன் சிலை உள்ளது.
🏩உட்புறம்
சுமார் 40838 ச.அடி பரப்பளவில் இது அமைந்துள்ளது.
3 பகுதிகளாக உள்ளது.
விருந்தினர் அறை பகுதி
அரச நிர்வாக பகுதி
தனிப்பட்ட அறை பகுதி
அரண்மனையில் 52 அறைகள் உள்ளன இவைகள் Sadan என்றும் அழைக்கப்படுகின்றன. நேப்பாளத்தில் உள்ள 75 மாவட்டங்களின் பெயர்களில் இவை உள்ளன.
அரண்மனை உட்பகுதி விக்டோரியன் கட்டிட அமைப்பைச் சார்ந்தது.
🏰சில முக்கிய இடங்கள்:
🏩KASKI SADAN என்று அழைக்கப்படும், வரவேற்பு அறையில்
மகந்திரா, பிரேந்திரா அரசர்கள் காலத்தில் வேட்டையாடிய, இரண்டு வங்காள புலியின் தோல்கள் பாடம் செய்து காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
படிக்கட்டுகளின், ஷா அரச குடும்பத்தினர் படங்கள் உள்ளன.
🏩KASKI SADAN இடத்தில், ஷா அரச குடும்பத்தினர் அரசு தலமை அதிகாரிகளும், பிரதமர்களும் நேப்பாள சட்டங்களின்படி , உறுதிமொழி எடுக்கும் இடமாகும்.
🏩Gorkha Baithak என்ற இடம் அரண்மனையில் நடுநாயகமானது. இது இந்து ஆலயக் கட்டிட அமைப்பு உடையது. நல்ல உயர அமைப்பு கொண்டது.
அஷ்ட நாக மந்திர தூண்களுடன் அஷ்ட பைரவர்கள் சூழ 48 X 60 அடி அளவில் உள்ள இந்த மண்டபம் இந்து ஆலய அமைப்பில் உள்ளது. இங்கு நடுவில் ராஜ மகுடம் வைக்கப்பட்டுள்ளது.
அரச நிகழ்வுகள் முக்கியமான நடைமுறை விழாக்கள் இங்கே செயல்படுகிறது.
அரசு குடும்பத்தினர் பங்கு பெறும் நிகழ்வுகள் நடைபெறும் இடம்
🏩அரசர்கள் விருது வழங்கும் இடம்.
உயர் மட்ட அரசு மற்றும், ராணுவ அதிகாரிகளுக்கான இடம். இந்த இடம் அரசின் முக்கிய முடிவுகள் எடுத்து அறிவிக்கப்படும் கூடம்.
🏩Dolpa Sadan
இந்த அறையானது, Gorkha Baithak அருகில் உள்ளது. அரசு நிகழ்வுகளை, அரச குடும்பத்தினர் மட்டும் இருந்து காண்பதற்காக அமைக்கப்பட்டுள்ளது. வெளியில் பொதுவில் இருந்து யாரும் இவர்களை காண இயலாதவாறு ஏற்பாடுகள் உள்ளது.
இது தவிர,
🏰விருந்தினர்கள் தங்கும் இடத்தில் அவர்களுக்கான தனித்தனி தங்குமிட அறைகள், உணவுக்கூடம், முக்கிய ஆலோசனைகள் செய்ய தனிக் கூடங்கள்
ஒரு பகுதியிலும்,
அரசின் முதன்மை அதிகாரிகளுக்கு தனி அலுவலக அறைகள், ஓய்வு எடுக்கும் அறைகள். அதிகாரிகள் கூடும் இடம்.
விருந்தளிக்கும் இடங்கள்.
மற்றும்,
🏰அரச குடும்பத்தினர் வாழுமிடங்கள் தனி உபயோகத்திற்கும், பொதுமக்களுடன் கலந்து தரிசனம் தருவதற்கும் தனி தனி இடங்கள் உண்டு. அரசர் மற்றும் அரசியாரின் தனிப்பட அறைகளும் உள்ளன.
🏰 20010 ஆண்டு ஜுன் மாதம் முதல் நாளில்
இளவரசர் தீபேந்திரா, மன்னர் பிரேந்திரா மற்றும் ராணி ஐஸ்வர்யா மற்றும் குடும்ப உறுப்பினர்கள் அனைவரையும் சுட்டு விட்டு தானும் தற்கொலை செய்து கொண்டது உலகம் முழுதும் அதிர்ச்சியை ஏற்படுத்திய துயரமான நிகழ்வு.
துப்பாக்கியால் சுட்ட இடம் அடையாளப்படுத்தி வைக்கப்பட்டுள்ளது.
🏰இது தவிர அரண்மனை பின்புறம் வளாகத்தை ஒட்டி மிகப்பெரிய பொழுதுபோக்கு பூங்கா தோட்டம் அமைக்கப்பட்டுள்ளது.
🏰அரண்மனை மற்றும் தோட்டப் பகுதி தாண்டி வெளிப்புறம் நாராயணர் ஆலயம் ஒன்றும் உள்ளது.
மேலும் சில தகவல்கள்:
✨நுழைவுக்கட்டணம் ஒருவருக்கு ரூ500/- SARC நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு உண்டு.
✨கைப்பேசிகள், பெரிய Bags கண்டிப்பாக அனுமதி கிடையாது. இலவச Cloack Room ல் வைத்து விடலாம்.
✨மொத்தமாக அவரவர்கள் ஆர்வத்தைப் பொறுத்து 1 மணி முதல் 1.1/2மணி நேரம் ஆகலாம்.
✨அரண்மணைப் பகுதிகளிலோ, உட்புறமோ எந்தவித கடைகளும் கிடையாது.
✨வாகனங்கள் நிறுத்தும் இடம் அரண்மணை நுழைவு பகுதியில் உள்ளது.
✨நாங்கள் இருந்த NARAYANA Holel லிருந்து இந்த அரண்மணை அருங்காட்சியகம், மற்றும் காத்மாண்டு நகரச் சதுக்கம் சென்று வர 10 பேர் சென்றுவர ரூ 2500 ஆனது.
நன்றி🙏🏼
25.4.24
#சுப்ராம்ஆலயதரிசனம்
#முக்திநாத்திருப்பயணம் -
#Nepal Yatra 20.04.2024 - 4.5.2024 -
#சுப்ராம்ஆலயதரிசனம்
#என்றும்_அன்புடன்
#சுப்ராம்_அருணாசலம்_காரைக்கால்
#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று
#ஆன்மீகபாரதம்அகிலத்தின்சிகரம்
No comments:
Post a Comment