#பீகார்
#முக்திநாத்திருப்பயணம் -
#NepalYatra 20.04.2024 - 4.5.24
35
🕊️ #பயணஅனுபவக்குறிப்புகள்.
💥30.04.24 அன்று சீதாமரி தரிசனம் செய்துவிட்டு பீகார் தலைநகர் பாட்ணா வழியாக கயா வந்து சேர்ந்தோம்.
இரவு உணவிற்குப் பிறகு உறங்கினோம்.
நாங்கள் தங்கியிருந்த இடத்திலிருந்து 100 மீ. தூரத்தில் விஷ்ணுபாத ஆலயம் இருந்ததால்,
1.05.2024 அன்று
காலை 6 மணிக்கு மேல் கயாவின் விஷ்னு பாதம் உள்ளஆலயம்
நடந்து சென்று தரிசித்தோம்.
செல்போன் முதலியவைகள் ஆலயம் முன்புறம் உள்ள Locker ல் வைத்துவிட்டோம்.
கயாவில் மற்ற இடங்களில் இவைகள் பயன்படுத்த அனுமதி உண்டு.
💥புண்ணிய கர்மாக்கள் செய்ய விரும்பியவர்களுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
நாங்கள் பல முறை இங்கு வந்து இருந்ததாலும், ஏற்கனவே கர்மாக்கள் திருப்தியாக செய்து முடித்து விட்டிருந்ததாலும் நாங்களும்
ஆலயம் சென்று தரிசித்து வந்தோம்.
💥 காலை உணவிற்குப் பிறகு,
தனிவாகண வசதிகள் செய்து கொண்டு
கயாவில் உள்ள சில முக்கிய ஆலயங்களையும் தரிசித்து வந்தோம்.
💥பகல் உணவிற்குப் பிறகு, புத்தகயா சென்றோம்.
கயா - விஷ்னுபாத ஆலயம் - தர்ப்பனம் - பல்கு(னி) ஆறு பற்றிய சில குறிப்புகள்.
- (நன்றி - வலைதளப்பதிவுகள்)
🩸கயா தர்ப்பணம் : 100 தலைமுறை பாவம் போக்கும் தலம்
🩸இந்தியாவில் உள்ள தலைசிறந்த புனித தலங்களில் ஒன்று கயா. பால்கு (னி) நதிக்கரையில் அமைந்துள்ள இந்த தலம்.
🩸இங்குள்ள விஷ்ணு பாதம் கோவிலில் மகாவிஷ்ணுவின் பாதங்கள் வழிபடப்படுகின்றன.
🩸இங்குள்ள மூலவர் திருமேனி முற்றிலும் கருங்கல்லால் ஆனதாகும். இதனை தர்மசிலா என அழைக்கின்றன.
🩸கயா தலமும் சரி, விஷ்ணு பாதம் கோவிலும் சரி முன்னோர் வழிபாட்டிற்கும், தர்ப்பணம் மற்றும் பிண்ட தானம் அளிப்பதற்கு மிகவும் புகழ்பெற்ற தலங்களாகும்.
🩸இங்கு இறந்தவர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தால் அவர்கள் முக்தி அடைவார்கள் என்பது ஐதீகம். இங்கு வருடத்தின் அனைத்து நாட்களிலும் சிராத்தம் கொடுக்கிறார்கள். முன்னோர்களுக்கு மட்டுமின்றி உறவினர்கள், நண்பர்கள், மிருகங்கள், தெரிந்தவர்கள், தெரியாதவர்கள் என யாருக்கு வேண்டமானாலும் பிண்டம் அளித்து, நீத்தார் கடன் செலுத்தலாம்.
🩸வட இந்தியாவில் காசிக்கு அடுத்தபடியாக மிகவும் புகழ்பெற்ற புனித தலமாக விளங்குவது கயா.
இந்துக்களின் மிக முக்கியமான புனித தலம் இந்த கயா.
🩸முன்னோர் வழிபாடு, தர்ப்பணம், பிண்ட தானம் வழிபடுவதற்கு புகழ்பெற்ற தலம் இந்த கயா. கயாவில் ஒருவருக்கு தர்ப்பணம் கொடுத்தால் வேறு எங்கும், எப்போதும் தர்ப்பணம் கொடுக்க வேண்டியதே இல்லை என்பார்கள். கயாவை நோக்கி எத்தனை அடி எடுத்து வைக்கிறீர்களோ அத்தனை தலைமுறை பாவங்களும் நீங்கி, அத்தனை தலைமுறையினருக்கு பிரம்ம லோகத்தில் இடம் உண்டு என மகாவிஷ்ணுவே அருளிய தலம் இதுவாகும்.
🏵️மகாவிஷ்ணு இங்கு பாதம் பதித்ததற்கும், இந்த தலத்திற்கு எப்படி இத்தனை புனித தன்மை வந்தது, இந்த தலத்திற்கு கயா என பெயர் வரக் காரணம் என்பதற்கு தனி கதை ஒன்று புராணத்தில் சொல்லப்படுகிறது.
கயா வரலாறு :
🎍கயாசுரன் என்று அசுரன் பல ஆயிரம் ஆண்டுகள் மூச்சை அடக்கி கடும் தவம் புரிந்தான். அவன் என்ன நோக்கத்திற்காக இந்த தவத்தை செய்கிறான் என எவருக்கும் தெரியவில்லை. இருந்தாலும் அவனுடைய சக்திவாய்ந்த கடுமையான தவத்தை கண்டு தேவர்கள் உள்ளிட்ட அனைவரும் நடுங்கினர்.
🎍இது குறித்து மகாவிஷ்ணுவிடம் சென்று முறையிட்டனர். இதனால் கயாசுரனுக்கு காட்சி அளித்த மகாவிஷ்ணு, அவனிடம் என்ன வரம் வேண்டும் என கேட்டார். அனைத்து புனித தலங்கள், புனித நதிகள் ஆகியவற்றை விட மிகவும் புனிதம் வாய்ந்ததாக தனது உடல் மாற வேண்டும் என வரம் கேட்டான். அவன் கேட்ட வரத்தை மகாவிஷ்ணு அளித்தார்.
🎍இருந்தாலும் அவன் தனது தவத்தை கைவிடாமல் தொடர்ந்தான். மகாவிஷ்ணு இவ்வளவு உயர்வான வரத்தை அளித்த பிறகும் இன்னும் எதற்காக தவம் செய்கிறான் என அனைவரும் குழம்பிப் போயினர்.
🎍இது பற்றி பிரம்ம தேவர், மகாவிஷ்ணுவிடம் சென்று முறையிட்டார். கயாசுரனிடம் சென்று, ஒரு பெரும் யாகம் நடத்துவதற்காக அவனுடைய உடலை கேட்கும் படி பிரம்ம தேவரை அனுப்பினார் மகாவிஷ்ணு. பிரம்மாவும் அதே போல் கேட்க, கயாசுரனும் அதற்கு சம்மதித்தான். கயாசுரனின் உடல் முழுவதும் பல ஆயிரம் தேவர்கள், ரிஷிகளைக் கொண்டு மிகப் பெரிய யாகத்தை நடத்தினார் பிரம்ம தேவர். பல காலம் நடந்த இந்த யாகம் முடிந்ததும் மீண்டும் எழ முயன்றான் கயாசுரன். அவனை மீண்டும் எழ விடாமல் செய்வதற்காக பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. ஆனால் அவன் எழ முயன்றான். இறுதியாக அனைத்து தெய்வங்களுடன் சென்று மகாவிஷ்ணுவே கயாசுரனின் தலை மீது எழுந்தருளினார். இதனால் வீழ்ந்த கயாசுரனின் உடல் இந்தியாவின் வடகிழக்கு பகுதியில் விழுந்தது. அவனது தலை விழுந்த இடம், அவனுடைய பெயராலேயே கயா என்று அழைக்கப்படுகிறது.
சிறப்புகள்
🏵️பல தலைமுறை பாவம் போக்கும் தலம் :
🏵️பீகார் தலைநகர் பாட்னாவில் இருந்து 100 கி.மீ., தொலைவில் அமைந்துள்ள கயா.
🏵️பீகார் மட்டுமின்றி இந்தியாவின் முதன்மை புனித தலமாக விளங்குகிறது.
🏵️ கயாவில் உள்ள விஷ்ணு பாதத்தில் வழிபட்டு, இங்கு பிண்டம் பிடித்து தர்ப்பணம் செய்தால் பல தலைமுறைக்கு பித்ருதோஷம், பித்ருசாபம் என்பது ஏற்படாது. அவர்கள் அனைவருக்கும் சொர்க்கத்தில் இடம் உண்டு என சொல்லப்படுகிறது.
🏵️இந்துக்கள் அனைவரும் வாழ்நாளில் ஒரு முறையாவது அவசியம் சென்று வர வேண்டிய தலம் இதுவாகும்.
🌼மகாளய பட்சம் : பித்ரு தர்ப்பணம் கொடுப்பதற்கு ஏற்ற புண்ணிய தலங்கள்
🌟ராமர் தர்ப்பணம் கொடுத்த தலம் :
இங்குள்ள விஷ்ணு பாதத்தில் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து வழிபட்டு செல்கின்றனர். ஸ்ரீராம பிரானே இந்த தலத்திற்கு வந்து தனது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட்டதாக புராணங்கள் சொல்கின்றன.
🌟காசியில் விஸ்வநாதரை சாட்சியாக வைத்து தர்ப்பணம் கொடுப்பதாகவும், கயாவில் நாராயணனை சாட்சியாக வைத்து தர்ப்பணம் கொடுப்பதாகவும் ஐதீகம்.
🌟இந்தியாவின் கலாச்சார மற்றும் மத கடந்த காலத்துடன் தொடர்புடைய சில குறிப்பிடத்தக்க அடையாளங்களின் இருப்பிடமாகும்.
🌟இது நாட்டின் பழமையான நகரங்களில் ஒன்றாகும்,
🌟இது புகழ்பெற்ற பால்கு ஆற்றின் கரையில் அமைந்துள்ளது.
விஷ்ணுபாத ஆலயம் தவிர,.
மங்கள-கௌரி, சீதா குண்ட்,
சிருங்கா-ஸ்தான், ராம்-ஷிலா மற்றும் .
பிரம்மயோனி என்று பெயரிடப்பட்ட பாறை மலைகள், ஒவ்வொன்றும் குறிப்பிடத்தக்க வரலாற்று முக்கியத்துவம் பெற்ற ஆன்மீக சுற்றுலாவிற்கு ஏற்ற இடமாகவுள்ளது.
🌼 எண்ணற்ற ஆண்டுகளாக இந்த பிரமிக்க வைக்கும் கயா சுற்றுலா தலங்களுக்கு பயணிகள் அடிக்கடி வந்து சென்றுள்ளனர்.
🌼கயா, ராமர், சீதை மற்றும் லக்ஷ்மணன் ஆகியோர் தங்கள் தந்தையான தசரதருக்கு பிண்டம் கொடுக்கச் சென்ற இடம்.
🌼விஷ்ணுவைப் பின்பற்றிய அரக்கன் (அசுரன்) மன்னன் கயாசரின் நினைவாக கயா என்று பெயரிடப்பட்டது.
🌼ஒவ்வொரு ஆண்டும் மில்லியன் கணக்கான மக்கள் பிண்ட தர்ப்பம் செய்வதற்காக இந்நகரத்திற்கு வருகிறார்கள், பாரம்பரியத்தைப் பேணுகிறார்கள்.
🌼கயா, கௌதம புத்தர் ஞானம் பெற்ற இடமான போத கயாவின் தாயகமாகவும் உள்ளது. மகாபோதி கோயில் வளாகம் பௌத்தர்களுக்கு மிகவும் புனிதமான இடம் மற்றும் யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளமாகும்.
🌠விமானம் மூலம்: கயா விமான நிலையம் : போத்கயா விமான நிலையம் என்றும் அழைக்கப்படுகிறது,
🌠ரயிலில்: கயா சந்திப்பு ரயில் நிலையம் கயா மாவட்டம் மற்றும் மகத்தின் தலைமையகமான கயா நகருக்கு சேவை செய்யும் ஒரு சந்திப்பு நிலையமாகும்.
🩸விஷ்ணுபாத் கோவில்
பீகார் மற்றும் இந்தியாவில் உள்ள மிகவும் பிரபலமான மற்றும் நன்கு அறியப்பட்ட இந்து கோவில்களில் ஒன்று விஷ்ணுபாத் கோவில் ஆகும். இந்த கோவிலுக்கு நாடு முழுவதிலுமிருந்து வரும் வழிபாட்டாளர்களை ஈர்க்கிறது,
🩸குறிப்பாக பிண்ட்-டான் விழாவின் போது. விஷ்ணுபத் மந்திர், விஷ்ணுவுக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு கோயில், இது ஒரு பிரபலமான இடமாகும், மேலும் கயாவில் பார்க்க வேண்டிய முக்கியமான இடங்களில் ஒன்றாகும். ராமர், மாதா சீதா மற்றும் லட்சுமணன் ஆகியோர் இந்த கோவிலுக்கு சென்றிருப்பதால், இதன் வரலாறு திரேதா யுகத்திற்கு முந்தையது என்று கூறப்படுகிறது.
🛕இந்தூரின் மராட்டிய ஆட்சியாளரான தேவி அஹில்யா பாய் ஹோல்கர் தற்போதைய கட்டிடத்தை 1878 இல் கட்டினார். ஃபல்கு ஆற்றின் கரையில் உள்ள இந்த மந்திர் நகரின் ஆன்மீக வரலாற்றின் தலைநகரமாக உள்ளது. நேரம்: காலை 6 மணி – இரவு 9 மணி வரை நுழைவு கட்டணம்: இலவசம்.
செல்போன் புகைப்படம் எடுக்க ஆலயத்தின் உள்பகுதியில் அனுமதி கிடையாது.
🩸ஆலயம் கிழக்கு நோக்கிய கருவரை,
கருவரை முன்பு மிகப் பிரமாண்டமான அமைப்பில் கருங்கள் உள் மண்டபம்
தனி கருவரை சன்னதியில் சிவலிங்கம் .
🩸கருவரையில் தரைப்பகுதியில், விஷ்ணுவின் ஒரு பாதம் மட்டும் கருங்கல் அமைப்பு. பிரார்த்தணை முடிந்து மலர்கள், மற்றும் நீரால் அபிஷேகம்.
பாதம் சற்று பள்ளமான பகுதியாக இருப்பதால், அமர்ந்து குனிந்து மண்டியிட்டு தலைவைத்தும் வணங்கலாம்.
🩸கருவரை உட்புறம், விநாயகர்,
தாத்தரேயர், துர்க்கை முதலிய தெய்வ உருவங்கள் தூண்களில், என்கோன அமைப்பு. வடக்குப்புரம் ஒரு வாசல் உண்டு.
🩸கருவரையியின் மீது மிக உயரந்த கல் கோபுரம் கம்பீரமாக காட்சியளிக்கின்றது. என்கோன வடிவம்.
கருவரையும், உள் மண்டபம் தவிர்த்து ஆலய வளாகத்தின் தென்புறம் சிறிய மண்டபம் மற்றும், பிண்டகாரியங்கள் செய்ய பெரிய புதிய மண்டபங்கள்.
இதே போன்று வடபுறமும் புதிய மண்டபம்.
🩸கிழக்குப்புறம் பெரிய ஆலமரம் தனி மேடையில் அட்சயவடம் என்றும் கூறுகிறார்கள். (தனியே 2. கி.மீ. தூரத்தில் கயாவின் அட்சய வடம் உள்ளது).
கிழக்கு புறம் பல்வேறு தெய்வ உருவங்கள், சிறிய மண்டபங்கள் சிவலிங்கம், விநாயகர், மற்றும் துர்க்கை உள்ளன.
🩸கிழக்கு புரங்களும் தற்போது மண்டபங்கள் வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
🩸ஆலயம் உட்பகுதியில் வட கிழக்கு மூலையில் சிறியவழியாக, பல்கு (னி) நதிக்கரைக்கு வந்து விடலாம்.
நல்லபடி துறை அமைப்புகள் கட்டப்பட்டு உள்ளன. மேலும், பல்வேறு மண்டபங்களும், தனியார் ஆலயங்களும் உள்ளன.
🏵️(இந்த முறை நீர் இன்றி மிகவும் அழுக்காகவும், தூய்மை இன்றியும், ஆறு காணப்பட்டதால், நதியில் குளியல் இல்லை)
🌟பல்குனி தரிசித்து, அருகில் கரையில் உள்ள சிற்றாலயங்கள் வணங்கி விட்டு, மீண்டும் பிரதான விஷ்ணு ஆலயம் வந்து வணங்கி, தங்குமிடம் வந்து சேர்ந்தோம்.
🌟காலை உணவிற்குப் பிறகு,
தனியார் வாகனம் வாடகைக்குப் பேசி, தனிக்குழுவாக சில இடங்கள் சென்று வந்தோம். அவை பற்றி அடுத்த பதிவில் .....
#மீள்தரிசனம்
நன்றி🙏🏼 1.05.2024
#முக்திநாத்திருப்பயணம் -
#Nepal Yatra 20.04.2024 - 4.5.2024 -
#சுப்ராம்ஆலயதரிசனம்
#என்றும்_அன்புடன்
#சுப்ராம்_அருணாசலம்_காரைக்கால்
#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று
#ஆன்மீகபாரதம்அகிலத்தின்சிகரம்
#முக்திநாத்திருப்பயணம் -
#NepalYatra 20.04.2024 - 4.5.24
No comments:
Post a Comment