Thursday, June 27, 2024

அட்சயவடம் கயா#முக்திநாத்திருப்பயணம் 38 -#NepalYatra 20.04.2024 - 4.5.24

#அட்சயவடம் கயா
#முக்திநாத்திருப்பயணம் -
#NepalYatra 20.04.2024 - 4.5.24
38
🕊️ #பயணஅனுபவக்குறிப்புகள்
01.05.24
38
#அட்சயவடம் , கயா
சிறப்புகள்

🏵️இது, விஷ்ணுபாத ஆலயத்திற்கு சற்று தென்மேற்கில், மங்கள கௌரி மந்திர் ஆலயம் செல்லும் வழியில் உள்ளது.

🏵️இந்த அட்சயவடம் என்ற ஆலமரம் உள்ள இடம் கயாவில் காணப்படுகிறது.

🏵️கயாவிற்கு வருபவர்கள் இந்த இடத்தில் வந்து சிரார்த்தம் முடிக்க வேண்டும் என்கிறர்கள்

🌼கங்கை புனித யாத்திரை செல்பவர்கள் முதலில் பிரயாகை-அடுத்து காசி - மூன்றாவதாக கயாவிற்கு வந்து சிரார்த்தம் முடிக்க வேண்டும் காரணம் என்னவென்றால் இல்லங்களில் மூதாதையருக்கு திதி கொடுக்கும் போது அட்சயவடம் என்ற குறிப்பிடப்படுகிறது அக்ரம் மத்யம் மூலம் என்றும் கூறப்படுகிறது.

🌼அட்சயவடம் என்ற ஆலமரம் கயாவில் காணப்படுகிறது. இந்த ஆலமரத்தின் மூலவேர் பிரயாகையில் இருக்கிறது. நடுப்பாகம் மத்யம் காசியில் உள்ளது. நுனிப்பாகம் அகரம் கயாவில் உள்ளது. இந்த மூன்று தலங்களையும் இந்த ஆலமரம் இணைத்து வைக்கிறது.

புராணம்:

🌟கயாவில் சிரார்த்தம் செதன்ய்வதில் உள்ள விசேஷம் பிரம்மனின் வரம் பெற்ற கயாசுரன் என்ற அசுரன் உடலைத் தொட்டவர்கள் அனைவரும் சொர்க்கம் சேர வேண்டும் என்று மகாவிஷ்ணுவிடம் வேண்டினான். அவரும் வரத்தை தரவே விபரீத பலனாக நல்லவர் கெட்டவர் யாராயிருப்பினும் கயாசுரன் மீது பட்டு சொர்க்கம் அடைந்தனர். அதனால் புண்ணியம் செய்தவர், செய்யாதவர் எல்லாம் ஒன்றாகி விட்டது.
🌟அதனால் மகாவிஷ்ணுவை சரணடைந்து தேவர்கள் வரத்தை திரும்ப பெற கோரினர். விஷ்ணுவும் கயாசுரன் சிரசில் நமது பாதத்தை வைத்து அழுத்தி பாதாளலோகத்திற்கு அனுப்பிவிட்டார். விஷ்ணு பாதம் பட்டதால் கயாசுரன் புனிதமாகி விஷ்ணுவிடம் வரம் கேட்டார். உலகில் மகனாகப் பிறந்தவன் பெற்றோர் உயிருடன் இருக்கும் வரை அவர்கள் மனம் கோணாமல் நடக்க வேண்டும் பெற்றோர் காலமான பிறகு அவர்களுக்கு திதி கொடுத்து அன்னதானம் செய்ய வேண்டும்.

🏵️என் சரீரமாகிய இந்த இடத்திற்கு வந்து பல்குனி நதி, விஷ்ணு பாதம், அட்சய வடம் ஆகிய மூன்று முக்கிய இடங்களில் பதவி அடைய வேண்டிய வரம் கேட்டார். அதனால் கயாசுரனின் உடலான கயா புனித தலமாக விளங்குகின்றது. பல்குனி நதி, விஷ்ணு பாதம் ஆகிய இடங்களில் இரண்ய சிரார்த்தம், அட்சய வடத்தில் அன்ன சிரார்த்தமும் செய்ய வேண்டும் என்பது புராணம்.

மாதா சீதா பித்ருர்தர்ப்பணம் செய்த இடம்

🌟இந்த இடம் அக்ஷய வாத விருட்சம் என்று நன்கு அறியப்பட்டதாகும், மேலும் இந்த மரம் ஸ்ரீ.தசரத மகாராஜாவுக்கு பிருர் தர்ப்பணம் செய்யும் போது ஸ்ரீ சீதா தேவியிடம் இருந்து வரம் பெற்றது. தசரத மஹாராஜாவுக்கு பிருஹர் தர்ப்பணம் கொடுக்க ஸ்ரீராமர், சேய் லக்ஷ்மணர் மற்றும் ஸ்ரீ.சீதாதேவி ஆகியோர் இத்தலத்திற்கு வந்தபோது, ​​ஸ்ரீராமரும் ஸ்ரீலக்ஷ்மணரும் தர்ப்பணப் பொருட்களைச் சேகரிக்கச் சென்றனர், ஆனால் சீதாதேவி மட்டும் அங்கே இருந்தார். ஆனால் தசரத மகாராஜா ஆன்மா அங்கு வந்து அவளை தர்ப்பணம் செய்யும்படி கேட்டு, பசு, பல்குனி நதி, அக்ஷய விருக்ஷம் மற்றும் ஒரு பண்டிதர் ஆகியோரின் சாட்சியுடன் செய்தார். 

🌟ஸ்ரீராமர் திரும்பி வந்த பிறகு, சீதை எப்படி அந்த பூஜையை கொடுக்க முடியும் என்று கோபமடைந்தார், ஆனால் அவர் அதை ஏற்கவில்லை. பசு, பல்குனி நதி, பண்டிதர் போன்றவர்களுக்கு பிதுர் தர்ப்பணம் கொடுக்கவில்லை என்று பொய் சொல்லப்பட்ட இந்த 4 பேரையும் சாட்சியுடன் விளக்கினாள். ஆனால் அக்ஷய விருட்சம் மட்டும் ராமனிடம் உண்மையைச் சொன்னது. அதனால் சீதா தேவி திருப்தியடைந்து வரம் கொடுத்தாள் ஆனால் மீதமுள்ள 3 பேரையும் சபித்தாள்.
 எனவே இந்த அக்ஷய விருக்ஷம் நமது பிதுர் ஆத்மாக்கள் சொர்க்கத்தை அடைய உதவுகிறது. எனவே கண்டிப்பாக நம் வாழ்நாளில் ஒரு முறையாவது இந்த கோவிலுக்கு செல்ல திட்டமிடுங்கள். ஜெய் ஸ்ரீ ராம்

🕉️அட்சயவடம் சற்று உயரத்தில் உள்ளது இதன் அருகிலே ருக்மணி குளம் என்ற மிகப்பெரிய குளம் அழகாக பராமரிக்கப்பட்டுவருகிறது.

🛐மகேஸ்வரர் சிவன் ஆலயம்
இதனை அடுத்து ஒரு சிவன் ஆலயம் ஒன்றும் உள்ளது.
மகேஸ்வரன் ஆலயம். கருவரை உயர் கோபுர அமைப்பு. கருங்கல் முன் மண்டபம். கருவரை முன்புறம் அமைந்துள்ளது. விநாயகர், ஹனுமன், துர்க்கை சிலைகளும் சிறிய அளவில் உள்ளன.

🏝️ஒரு ஆலமரம் ஒன்றும் ஆலயம் முன்பு உள்ளது.

💥இங்கும் ஆலயத்தினுள் சென்று பூசைகள் செய்து வழிபடுகிறார்கள்.

🎍மிக மிக அமைதியான சூழல்.

🌟இத்துடன் இந்த முறை கயாவில் தனிக்குழுவாக சென்று இந்த ஆலயங்களை தரிசனம் செய்து வந்தோம்.

🏬இதை அடுத்து நாங்கள் Hotel மதியம் வந்து சேர்ந்தோம்.
நன்றி
#மீள்தரிசனம்
நன்றி🙏🏼 1.05.2024
#முக்திநாத்திருப்பயணம் -
#Nepal Yatra 20.04.2024 - 4.5.2024 -
#சுப்ராம்ஆலயதரிசனம் 
#என்றும்_அன்புடன் 
#சுப்ராம்_அருணாசலம்_காரைக்கால் 
#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று 
#ஆன்மீகபாரதம்அகிலத்தின்சிகரம்

No comments:

Post a Comment

KERALAYATRA2024பகுதி - 5- வைக்கம் - (எர்னாகுளம்)பதிவு - 25 - #சுப்ராம்ஆலயதரிசனம் #சுப்ராம்ஆலயதரிசனம் 13.8.2024 #பயணஅனுபவக்குறிப்புகள்🕊️29. வைக்கம் சிவன் கோவில்(Vaikom Temple):

#KERALAYATRA2024 பகுதி - 5- வைக்கம் - (எர்னாகுளம்) பதிவு - 25 - #சுப்ராம்ஆலயதரிசனம்  #சுப்ராம்ஆலயதரிசனம் 13.8.2024  #பயணஅனுபவக்குறிப்புகள்🕊...