#முக்திநாத்திருப்பயணம் -
#NepalYatra 20.04.2024 - 4.5.24
41
🕊️ #பயணஅனுபவக்குறிப்புகள்
02.05.24
🕉️1.05.24 இரவு காசி வந்து சேர்ந்தோம்.
2.05.24 அன்று விடியற்காலையில் நாங்கள் தனிக்குழுவாக பிரிந்து தனிவாகனம் ஏற்பாடுகளில், காசியில் உள்ள ஆலயங்களை தரிசனம் செய்தோம்.
🕉️நாங்கள் பலமுறை காசியில் வந்து தங்கி இருந்து ஆலயங்கள் தரிசனம் செய்து இருப்பதாலும், இந்த முறை ஒரு நாள் மட்டுமே காசி தரிசனம் என்பதால் சில முக்கிய இடங்களை மட்டுமே தரிசித்துவர முடிவு செய்தோம்
🛐நாங்கள் காசியில் தங்கியிருந்த
ராம்புரா Laxa Roadல் உள்ள Hotel Roshan என்ற Hotel லிருந்து விடியற்காலையில் புறப்பட்டு கேதார்காட் சென்று அடைந்தோம்.
🛐கங்கையில் நீர் அளவு மிகவும் குறைந்து, தரை தெரியும் அளவில் ஓடிக்கொண்டிருந்தது. நாங்கள் முதலில் கேதார்காட் அருகில் உள்ள கரையில் இறங்கி குளித்தோம்.
🕉️பின் உடைகள் மாற்றிக் கொண்டு, கேதார்நாத் ஆலயம் சென்று வணங்கினோம். திருப்பனந்தாள் ஸ்ரீமுத்துக்குமாரசாமி சுவாமிகள் மடத்தின் ஆளுமையில் உள்ள நல்ல பராமரிப்பில் உள்ள ஆலயம்.
🛐அதன் பிறகு, ஹனுமான் காட் பகுதி நடந்து சென்றோம்.
அருகில் உள்ள காஞ்சி மடத்தின் கட்டுப்பாட்டில் உள்ள ஸ்ரீகாமகோடீஸ்வரர் ஆலயம் சென்று வணங்கினோம். காலை பூசை நடைபெற்றுக் கொண்டிருந்த தருணம். திவ்ய தரிசனம்.
🛐இவ்வாலயத்தின் சிறப்பாக, ஸ்ரீசர்வமங்களாதேவி, சூரிய, சந்திர, சப்தரிஷிகளுடன் சிவபெருமான் ஆலகால விஷத்தை உண்டபின் மயக்கத்தில், சயனித்திருக்கும் அற்புத சிலைக் காட்சிகள், இவ்வாலயத்தினுள் தனி சன்னதி மண்டபத்துடன் உள்ளது.
🕉️ஆலய நுழைவுவாயிலில், ஒரு புறம் ஆதிசங்கரர் சிஷியர்களுடன் உள்ள சிலைகளும், மறுபுறம் ஸ்ரீராமர் பட்டாபிஷேக காட்சியளிக்கின்ற காட்சி சிலை உள்ளது.
🛐அடுத்துள்ள ஶ்ரீ மகாகவி சுப்பிரமணிய பாரதியார் சிலை உள்ள மண்டபம் கண்டோம். தற்போது அதற்கு புதிய அமைப்பில் கட்டட வேலைகள் நடைபெற்று வருகின்றன.
🕉️அருகில் உள்ள கடையில் காலை உணவு, இட்லி, தோசை, சாப்பிட்டுவிட்டு, அங்கிருந்து தனி Auto மூலம் ஸ்ரீவிசுவநாதர் ஆலயம் அருகில் சென்று, பிரதான (ஞானவாபி) சாலையில் உள்ள தனியார் Locker boxல் உடன் எடுத்து சென்ற அனைத்து பொருட்களையும் வைத்து விட்டு , Gate No 4 மூலம் வரிசையில் சென்று ஶ்ரீவிசுவநாதர் ஆலயம் சென்று சுவாமி வணங்கி பின் ஆலயம் முழுதும் உள்ள மற்ற சன்னதிகள் தரிசித்து விட்டு, Gate 1 மூலம் வெளியேறினோம்.
🛐அங்கிருந்து ஸ்ரீவிசாலாட்சியம்மன் ஆலயம் சென்றோம். தமிழ்நாட்டின் நாட்டுக்கோட்டை நகரத்தார் ஏற்படுத்தியுள்ள சிறந்த பராமரிப்பில் உள்ள ஆலயம்.
🛐அருகில் உள்ள தர்மேஸ்வரர் சிவன் ஆலயம். எமன் ஸ்தாபித்தது.
ஸ்ரீவிசாலாட்சி அம்மன் ஆலயம் மிக அருகில் உள்ளது.
(ஆதிஅன்னபூரணியம்மன் சன்னதிஉள்ளது) தரிசித்தோம்.
🛐பிறகு, அங்கிருந்து சில சிறு சந்து அளவு உள்ள தெருக்களில் நடந்து,
சாட்சி வினாயகர் ஆலயம், மற்றும் துண்டி கணபதி தரிசனம் செய்து கொண்டு ஶ்ரீ அன்னபூரணி ஆலயம் சென்றோம். ஶ்ரீ அன்னபூரணி மற்றும் அங்கு தனி மண்டபத்தில் உள்ள தெய்வங்களை வணங்கி, அன்னதானம் மண்டபம் சென்று பிரசாதம் வாங்கி உண்டுவிட்டு, ஸ்ரீவிசுவநாதர் செல்லும் பிரதான சாலை (ஞானவாபி சாலை) வந்து அடைந்தோம்.
🕉️Locker லிருந்து எமது பொருட்களை திரும்ப வாங்கிக் கொண்டோம்.
பிறகு ஸ்ரீவிசுவநாதர் ஆலயம் Gate 4 அருகில் உள்ள திருப்பத்திலிருந்து, ஸ்ரீகால பைரவர் ஆலயம் சென்று அடைந்தோம். ஸ்ரீ பைரவர் ஆலயம் தொழுது வணங்கி விட்டு சற்று தூரம் நடந்து பிரதான சாலை அடைந்தோம்.
தனி வாகனம் பிடித்து, காசியில் உள்ள மேலும், சிலஆலயங்கள் தரிசிக்கப் புறப்பட்டோம்.
🛐அங்கிருந்து, தென் பகுதியில் உள்ள,
துர்க்கா மந்தீர் ,
துளசிமானசர் ஆலயம் (முன்பு அளவில் பொலிவாக இல்லை - சில புனரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன). தரிசித்து, பின் பிரபலமான சோளி மாதா ஆலயம், மற்றும் சங்கடஹர ஹனுமான் ஆலயம் சென்றோம்.
🛐இத்துடன் ஆலய தரிசனங்கள் முடித்துக் கொண்டு Hotel சென்று அடைந்தோம்.
🕉️மாலையில், நடந்து சென்று கோடாவில் அருகில் உள்ள இடங்களில் கடைத்தெரு சுற்றிப் பார்த்து விட்டு திரும்பினோம். சிலர் தஸ்அஸ்வமேகாட் சென்று கங்கா ஆர்த்தி காணச் சென்றனர்.
🛐நாங்கள் வாரனாசியில் தங்கியிருந்த ராம்புரா Laxa Roadல் உள்ள Hotel Roshan,விலிருந்து 22 கி.மீ. தூரத்தில் உள்ள தீன்தயால் உபத்யாய ரயில்வே ஜங்சன் (முன்பு மொகல் சாராய்) வர வேண்டியிருந்ததால் முன்கூட்டியே வந்து DDU வந்து அடைந்து இரவு 11.00 மணிக்கு Chennai புறப்படும் சங்கமித்ரா விரைவுவண்டியில் ஏறி 3.05.2024 முழு நாள் பயணம் செய்து 4.05.2024 அன்று பெரம்பூர் (Chennai) வந்து அவரவர்கள் ஊருக்குப் புறப்பட்டு இல்லம் அடைந்தோம்.
🛐எனது பெரும்பான்மையான வட நாட்டு ஆன்மீக பயனங்களில் இணைந்தும், இந்த இனிய புனித பயணத்திலும் எனக்கு மிகவும் உதவியாகவும், எப்போதும் சிறந்த நட்புக்கு இலக்கணமாகவும் இருக்கும் நன்பர் திரு ராஜேந்திரன் அய்யா அவர்களுக்கு நமஸ்காரம் மற்றும் நன்றிகள்.
🛐மற்றும் பயணம் முழுதும் ஆன்மீக விஷயங்களும் யோகா பற்றிய விழிப்புணர்வு மற்றும் உடல்நிலை பராமரிப்பில் சிறந்த ஆன்மீக யோகா கருத்துக்களை உணர்த்தி பகிர்ந்து கொண்ட வள்ளலார் அருந்தொண்டர் திரு குணசேகர் அய்யா, மற்றும் உடன் பயனித்த நல்ல நட்புகள் ஆவடி திரு ஜெயக்குமார் சார், ICE ராகவன் சார்,, நந்தகுமார் சார், R.நந்தகுமார் சார், சிவாசார், கிருஷ்ணன் சார், குடும்பத்தினர், மற்றும் என்னுடன் உடன் வந்த அனைத்து நண்பர்களுக்கும் அவர்கள் குடும்பத்தினர் மற்றும் அனைவருக்கும் எமது இதயபூர்வமான நன்றிகளும் வணக்கங்களும் வணங்கித்தெரிவித்துக் கொள்கிறேன்.🙏🏻
🕉️மேலும், இந்த முழு சுற்றுலாவும் சென்னை ஸ்ரீ விஜயலெட்சுமி டிராவல் சர்வீஸ், திருவல்லிக்கேனி அவர்கள் ஏற்பாட்டில் நடைபெற்றது. உடன் வந்து உதவிய திரு கிருஷ்ணன், மற்றும்ஸ்ரீராம் உள்ளிட்ட அனைத்து Staff நண்பர்களுக்கும் வணக்கங்களும், நன்றிகளும்🙏🏻
🙏🏻ஸ்ரீ சுந்தராம்பாள் உடனாகிய ஸ்ரீகைலாசநாதர் என்றும் துணையிருக்க வேண்டுகிறேன்🙏🏻
#மீள்தரிசனம்
நன்றி🙏🏼 2.05.2024
#முக்திநாத்திருப்பயணம் -
#Nepal Yatra 20.04.2024 - 4.5.2024 -
#சுப்ராம்ஆலயதரிசனம்
#என்றும்_அன்புடன்
#சுப்ராம்_அருணாசலம்_காரைக்கால்
#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று
#ஆன்மீகபாரதம்அகிலத்தின்சிகரம்
No comments:
Post a Comment