பதிவு - 10
நாள் - 5️⃣
30.05.24 - வியாழன்
தார்ச்சுலா விலிருந்து குன்ஞ்ஜி சென்று தங்குதல். 3200 mts. உயரம்
தூரம் 71 Kms. காலம் 5 - 6 hrs.
தார்ச்சுலாவில் காலை டீ மற்றும் காலை உணவு முடித்து Bolero Camper மூலம் புறப்பட்டு,
BUDHI (புத்தி) என்ற இடத்தில் மதிய உணவு
உண்டு,
வழியில், Chiyalekh புல்வெளிகள், Ape mountain, Namjing Parvat, Garbyang , Napakchu இவைகளை கண்டு விட்டு
குன்ஞ்ஜி சென்று மாலை டீ இரவு உணவு, மற்றும் இரவு குன்ஞ்ஜி Camp ல் தங்கினோம்.
#பயணஅனுபவக்குறிப்புகள்🕊️
30.5.24 - வியாழன்.
#தார்ச்சுலா - BUDHI - GUNJI
#GUNJI #குன்ஞ்ஜி
🌟 குன்ஞ்ஜி இந்தியாவின் உத்தரகாண்டில் இமயத்தில் 3200 mts. உயரத்தில் உள்ள ஒரு சிறிய பள்ளத்தாக்கு கிராமம். இது திபெத் மற்றும் நேபாளத்தின் எல்லைகளுக்கு அருகில் உள்ளது.
🌟குத்தி / குனிஞ்ஜி என்ற பள்ளத்தாக்கின் கிழக்கு முனையில் குத்தி யாங்க்டி மற்றும் காலாபானி நதியின் சங்கமமாகும்.
🌟இந்த கிராமம் கைலாஸ்-மானசரோவர் செல்லும் பாரம்பரிய இந்திய வழித்தடத்தில் உள்ளது.
🌟 குன்ஞ்ஜி, குட்டி மற்றும் நபி கிராமங்கள் இந்தியாவைச் சேர்ந்தவை.
இந்த கிராமம் பருவகாலமாக மட்டுமே மக்கள்தொகை கொண்டது,
🌟குளிர்காலத்தில் மக்கள் தாழ்வான இடங்களுக்கு (பெரும்பாலும் தர்ச்சுலா, அதே மாவட்டத்தில்) இடம்பெயர்கின்றனர்.
🌟சஷாஸ்த்ரா சீமா பால், இந்தோ-திபெத் எல்லைக் காவல்துறை மற்றும் GREF பணியாளர்கள் (Sashastra Seema Bal, the Indo-Tibet Border Police and GREF personnel) ஆண்டு முழுவதும் அங்கேயே காவல் இருக்கிறார்கள்.
🌟குன்ஞ்ஜிக்கு ஹெலிகாப்டர் சேவை தர்ச்சுலாவில் இருந்து கிடைக்கிறது.
🌟மலையேற்றம் செய்பவர்கள் மற்றும் பிற பயணிகள் குன்ஞ்ஜியில் உணவு மற்றும் தங்குமிடத்தைப் பெறலாம்.
🌟குன்ஞ்ஜியை அடைவதற்கு, பயணிகள் தார்ச்சுலாவில் SDM வழங்கிய இன்னர் லைன் அனுமதியை (ILP) பெற வேண்டும்.
🌟இதை ஆன்லைனில் பெறலாம். ILP (Inner Line Permit) க்கு விண்ணப்பிக்க, பயணிகளுக்கு செல்லுபடியாகும் ஐடி, (Aadhar) மருத்துவ சான்றிதழ் (Health Fitness Certificate) மற்றும் Passport or Police Verification / Character Certificate தேவை.
🛣️குன்ஞ்ஜி யில் உள்ள பாதைகள் :
🌟தெற்கிலிருந்து தார்ச்சுலா-பித்தோராகர் மற்றும் இந்தியாவின் பிற பகுதிகளிலிருந்து, குன்ஞ்ஜியை நெருங்கும் போது, குன்ஞ்ஜிக்கு தென்கிழக்கே அருகில் உள்ள சாரதா ஆற்றின் (மஹாகாளி நதி என்றும் அழைக்கப்படுகிறது) மேற்குக் கரையில் உள்ள பாதை இரண்டு தனித்தனி பாதைகளில் பிரிகிறது;
முதல் வழி :
🏞️வடகிழக்கில் செல்லும் பாதை :
(PLPH (KMR))
பித்தோராகர்-லிபுலேக் பாஸ் நெடுஞ்சாலை (PLPH) அல்லது கைலாஷ்-மானசரோவர் சாலை (KMR),
(Pithoragarh-Lipulekh Pass Highway (PLPH) or Kailash-Mansarovar Road (KMR))
💮கைலாஷ் மானசரோவர் யாத்ரா பாதையின் ஒரு பகுதியாகும்.
💮இது கிட்டத்தட்ட 350 கிமீ நீளமுள்ள 2-வழி பாதை நெடுஞ்சாலை ஆகும்.
💮இது பித்தோராகார், தர்ச்சுலா, புத்தி, கர்பியுங், குன்ஞ்ஜியின் கிழக்குப் பகுதி, ITBP முகாம், நபிதாங் மற்றும் லிபுலேக் வழியாக, கைலாஸ்-மானசரோவர் வரை
செல்கிறது. வடகிழக்கே செல்கிறது.
💮 இந்தப்பாதையில் காலாபாணி, ஓம் பர்வத், லிபுலேக் கணவாய் மற்றும் கைலாஷ் மானசரோவர் செல்லலாம். (தற்போது நபிதாஸ் வரை தான் செல்ல அனுமதி)
இரண்டாவது பாதை :
🛣️வடமேற்கே செல்லும் பாதை.
குன்ஞ்ஜி-லம்பியா துரா பாஸ் சாலை (GLDPR) :
💮குன்ஞ்ஜி, குட்டி பள்ளத்தாக்கு, ஆதி கைலாஷ் மற்றும் குன்ஞ்ஜி-லம்பியா துரா
(Lampiya Dhura Pass) கணவாய்க்கு செல்கிறது.
💮இது ஜூலை 2020 இல் கட்டப்பட்ட பிறகு, ஆதி கைலாசத்திற்கான மலையேற்ற நேரத்தை இரண்டு மணிநேரமாகக் குறைத்துள்ளது.
#பயணஅனுபவக்குறிப்புகள்🕊️
🌼30.5.24 அன்று, மாலை குன்ஞ்ஜி சென்றபோது மிகுந்த மழை. மிகவும் சிரமமாக இருந்தது. அங்கு இருந்தவர்கள் இங்கு மதியம் மற்றும் மாலையில் அடிக்கடி மழை பொழியும் என்று கூறினர்.
🌟இங்கு உள்ள KMVN டூரிஸ்ட் ரெஸ்ட் ஹோமில், தங்கினோம். அன்று உணவு அளிக்கப்பட்டது. தங்க வசதியும் செய்யப்பட்டிருந்தது. சிறந்த முறையில் கவனித்தார்கள்.
🌟இரவில், கடுமையான குளிர் இருந்தது.
கம்பளி போர்வைகள், Swetter மற்றும் குளிர் தாங்கும் உடைகள், கால், கையுரைகள், நல்ல Shoe அல்லது அது போன்ற காலனிகள் மிகவும் அவசியம்.
🌟இது ஒரு பெரிய பள்ளத்தாக்கு பகுதியாக உள்ளது. சுற்றிலும், இமயமலையின் மிக உயரமான மலைத் தொடர்கள், பல பணி சிகரங்கள்.
🌟விடியற்காலை முதல் நல்ல Claimate இருந்தது. பகலிலும் வெய்யில் இருந்தது.
இருந்தாலும், இதமான குளிர் இருந்து கொண்டும், திடீர் என்று மழையும் பொழியும் சூழலும் இருந்து வந்தது.
🍙இரண்டு மூன்று கல் கட்டிடங்களும், அதிக அளவில் (இரும்பு + plastic கலந்த) கூண்டு TENT களும் உள்ளன.
🎪TENT கள் கூண்டு அமைப்பில் உள்ளது. ஒரு கூண்டில் அல்லது TENT ல் 6 முதல் 8 பேர் தங்க வசதி செய்யப்பட்டிருக்கிறது.
🌼அதன் அருகில் பொது கழிவறைகள் தனியாக உள்ளது. மிகவும் சுத்தமாக பராமரிக்கின்றனர்.
⛺இரும்பு கட்டில், அதன் மேல் மெத்தை, கம்பளிப்போர்வை, மற்றும் ரஜாய் எனப்படும் மெத்தைகள் கொடுக்கின்றனர்.
⛱️ சூரிய ஒளி மூலம் மின்சாரம் எடுத்து பேட்டரி power கொண்டு மின்சாதனப் பொருட்கள் இயக்குகின்றார்கள்.
மாலை 6 முதல் TENT க்குள் மின்விளக்கு வெளிச்சம் கொடுக்கப்படுகிறது.
நாம் Cell Charge அந்த நேரத்தில் போட்டுக் கொள்ளலாம். TENTல் plug point Board ம் உள்ளது.
🌼தினந்தோறும், காலை 6-30 - Tea / Coffee. காலை 7.00 மணிக்குள் காலை உணவு கொடுத்து நாம் 8.00 மணிக்குள் புறப்பட ஆயத்தம் ஆகிவிட வேண்டும்.
🏵️இந்தப் பகுதிகளில் இரவு நேரம் குறைவாக உள்ளது. மாலை நேரம் அதிக வெளிச்சத்துடன் உள்ளது.
விடியற்காலையில் விரகு அடுப்பில் வென்னீர் போட்டு தருகிறார்கள்.
31.05.2024 அன்று காலை உணவு முடித்துக் கொண்டு OMPARVAT தரிசனம் செய்ய புறப்பட்டோம்.
🛐💚🤎💜❤️
பயணம் தொடருகிறது...... .....
#Uttarakhand #ADIKAILASH #OMPARVAT_YATRA_2024
#ஆதிகைலாஷ் #ஓம்பர்வத்யாத்திரை
26.05.2024 முதல் 6.06.24 வரை
#பயணஅனுபவக்குறிப்புகள்🕊️
#என்றும்அன்புடன்
#சுப்ராம்அருணாசலம்காரைக்கால்
🙏🏻🕉️🙏🏻🛐🙇🏻🕉️🙏🏻🙇🏻🛐🙏🏻🕉️🙇🏻🛐🙏🏻🕉️🙇🏻🛐🙏🏻
No comments:
Post a Comment