பதிவு - 5
#Uttarakhand #ADIKAILASH #OMPARVAT_YATRA_2024
#ஆதிகைலாஷ் #ஓம்பர்வத்யாத்திரை
26.05.2024 முதல் 6.06.24 வரை
CHITAI கொலு தேவதா ஆலயம்
28.05.24- செவ்வாய்
#பயணஅனுபவக்குறிப்புகள்🕊️
🛐பிரசித்தி பெற்ற Kainchi Dham என்ற ஊரில் உள்ள பிரபலமான ஹனுமன் ஆலயம்
நீம் கரோலி பாபா ஆலயம் அடுத்து, அல்மோரா என்ற நகரம் தாண்டி சிட்டாய் (Chitai) என்ற இடத்தில் உள்ள கொலு தேவதா ஆலயம்சென்று தரிசித்தோம்....
🛐இந்த ஆலயத்திற்கு 2022 ல் ஏற்கனவே
வந்து தரிசனம் செய்து உள்ளோம். மீண்டும் மீள் தரிசனம் செய்ய இன்று இறையருள் கூட்டியது.
🏵️💮💮💮💮💮💮💮💮💮💮💮💮💮💮💮💮🏵️
இது பற்றிய நம்முடைய பயன அனுபவக் குறிப்புகள் (2022) தனி பதிவில் உள்ளது.
LINK:
https://www.facebook.com/share/p/8Wzg4c2GfDV1fZ8B/?mibextid=oFDknk
#uttrakhant tour_2022
மீள்பதிவு
https://www.facebook.com/share/p/8Wzg4c2GfDV1fZ8B/?mibextid=oFDknk
#uttrakhant tour_2022
#GOLU DEVA TEMPLE, CHITAI. #பயணஅனுபவக்குறிப்புகள்🕊️
🏵️போவாளி என்ற ஊரில் Hotel VISTA வில் தங்கியிருந்தோம். இங்கிருந்து 9-4-2022 காலையில் புறப்பட்டு, சுமார் 30 கி.மீ. தூரத்தில் உள்ள Mukteshwar Maha Dev. ஆலயம் சென்றோம்.
ஆலயம் தரிசனம் முடிந்து, அங்கிருந்து சுமார் 75 கி.மீ தூரத்தில் உள்ள, மிகப்பழமையான ஜோகேஸ்வரர் என்ற புராதான ஆலயம் செல்ல புறப்பட்டோம்.
🛣️வழியில், Almora District ல் CHITAI என்று ஊர் சென்றோம்.
உத்திரகாண்ட்டின் எங்கள் சுற்றுலாவின் எல்லாப் பாதைகளும் மலைப்பாதைகள் தான், சில இடங்கள் மிகக் குறுகலானது. எங்கள் வாகனம் சற்று நீளமானது. வசதியானது.
🚍இதுவரை எந்த பிரச்சனையும் இல்லாமல் புதுடெல்லியிலிருந்து 7.4.2022 முதல் நன்றாக இயங்கிக்கொண்டு வந்தது. இப்போது நின்றுவிட்டது. எல்லாவித உடனடி முயற்சிகளும் செய்தார்கள்.
💢
நாங்கள் சாலையை ஒட்டி ஒரு ஆலயம் அமைந்துள்ளதைப் பார்த்தோம். இந்த ஆலயம் தரிசனம் எங்கள் Programmல் இல்லை. மதிய நேரம் மங்கிக் கொண்டிருந்தது. மாலைக்குள் ஜாகேஸ்வரர் சென்று விட வேண்டும். மிகவும் சிரமமான மலைப் பாதை என்பதால், என்ன செய்வது? என்று சுற்றுலா இயக்குனர் அருமை அண்ணா பாலு சார் சமயோஜிதமாக யோசித்துவிட்டு, வாகனத்தை நிறுத்திவிட்டு, அனைவரும் அருகில் உள்ள இந்த ஆலயத்தை சென்று தரிசித்து வாருங்கள் என்று அனுப்பிவைத்தார்.
🛕 இந்த ஆலயத்திற்கு சென்று தரிசித்து வருவோம் என்று முடிவு செய்து
நான் கடைசியாக பஸ் விட்டு இறங்க முயன்றுபோது, Bus Driver மிகவும் அன்பானவர், நல்ல திறமையானவர்.
என் அருகில் வந்து, ரூ 51 என்னிடம் கொடுத்து இந்த ஆலயத்தில் செலுத்து விட சொன்னார்.
#GOLU DEVA TEMPLE, CHITAI.
🏔️தேவபூமி எனப்படும் உத்தரகாண்ட் மாநிலத்தில் ஏராளமான பிரசித்திப் பெற்ற ஆலங்கள் உள்ளன.
Chittai GOLU MATHA TEMPLE, ஒரு முக்கிய பிரார்த்தனை தலம்.
🙇🏼♂️GOLU DEVA என்பவர் சிறந்த கடவுளாகப் போற்றப்படுகிறார். சிவனின் அவதாரம்: தன்னுடைய வெள்ளைக் குதிரையில் விரைவில் வந்து, பக்தர்களின் வேதனையை போக்கி விடுவார். மலையில் தூரம் செல்பவர்களுக்கு உடன் பாதுகாப்பாக வந்து உதவி செய்யும் கடவுளாக வணங்கப்படுகிறார்.
⚜️மிகப் பழங் காலத்திலிருந்து சிறந்த ராஜாவாக வாழ்ந்தவர். தன்னுடைய பிரதேசத்தில் வாழும் மக்களின் தேவைகளை அறிந்து வேண்டிய உதவிகளை வேண்டுபவர்களுக்கு இன்றும் செய்து வருகிறார்.
🎠🛎️தங்கள் வேண்டுதல் கோரிக்கைகளை எழுதி, ஒரு மணிகட்டி ஆலயத்தில் வைத்துவிடுகிறார்கள்.
தங்கள் அனத்து வேண்டுதல்களையும் நல்ல முறையில் முடித்தவுடன் இவ்வாலயம் வந்து வணங்கி செல்கிறார்கள்.
🌺யாககுண்டம் வைத்து, பூசை செய்தும் பிரார்த்தனைகள் நடை பெற்று வருகிறது.
🔔🛎️ஆலயம் முழுவதும் எல்லா இடங்களிலும் மணிகள் சிறியது முதல், மிகப் பெரிய, அளவிலும் கட்டிவிடப்பட்டுள்ளது. அங்கேயே, நமது பிரார்த்தனைக்காக அனைத்து வித ஏற்பாடுகளும் செய்து தர பண்டாக்கள் உள்ளனர். கட்டிடங்களிலும் வசதிகள் உண்டு.
🎠முக்கிய கருவரை கட்டிடத்தில் சிறிய உருவில் குதிரையில் அமர்ந்து இருக்கும் கோலத்தில் சுவாமி உள்ளார்.
❤️உங்கள் வேண்டுதலை எழுதி மணிகட்டுங்கள் அத்தனையும் நிறைவேறும் என்ற நம்பிக்கை.
💥 சிலர் பத்திரப் பேப்பர் STAMPED DOCUMENTS ல் தங்கள் வேண்டுதல் உறுதியை எழுதிக் கட்டி வைக்கும் முறை உள்ளது.
🙇🏼♂️நம்ம ஊர் வீரன், முனீஸ்வரர், குல தெய்வம், மற்றும் பிரார்த்தனை தலங்கள் போன்று, மக்களின் அன்றாட வாழ்வியல் பிரச்சனைகள் அடிப்படையில் நம்பிக்கை கொண்டு வழிபடுகின்ற சிறப்பான ஆலயங்களைப் போன்றது.
🛕இந்திய மண் எங்கும் ஒரே மாதிரியான வாழ்வியல் வணக்கம். வேண்டுதல்கள்
இதுதான் இந்துக்களின் ஆன்மீகத்தின் நம்பிக்கை. ஒற்றுமையான ஒரே மாதிரியான சிந்தனைகளின் அடிப்படையில் தான் வாழுகிறோம் என்று தெரிந்து கொள்ள வேண்டும்.
🛕ஆலயம் வணங்கி வந்தபோது, இந்த உணர்வு இருக்கிறது. நம்பிக்கைகள், பிரார்த்தனைகள் வெளிப்படுத்தும் விதம், வகை எல்லாம் ஒரே மாதிரியாகத்தான் வாழுகிறோம். இந்தியா முழுதுமே இப்படித்தான் வாழுகிறோம். இமயமலையிலும் இதே உணர்வுதான்.
🛕ஆலயத்தின் கருவரை செல்லும் வழியியல்லாமுமும், மணிகள். கருவரைப் பிரகாரம், பிரார்த்தனை செய்யும் மண்டபம் பிற பகுதிகள் அனைத்து இடங்களிலும் ஏராளமான மணிகளும் கோரிக்கைகளும் வைக்கப்பட்டுள்ளன.
🚍பஸ் ஓட்டுநர் என்னிடம் கொடுத்த Rs.51ஐ உண்டியலில் செலுத்தி விட்டு, அங்கிருந்து பிரசாதம் பெற்றுக் கொண்டு, ஒட்டுநரிடம் கொண்டு சென்றுக் கொடுத்த போது மிகவும் திருப்தியும், சந்தோஷத்தையும் அவர் அடைந்ததை உணர்ந்தேன்.
🛕நாங்கள் ஆலயம் முழுதும் சுற்றிப் பார்த்துவிட்டு அருகில் எதிர்புறம் இருந்த,
இன்னெரு ஆலயத்திற்கும் சென்றோம்.
🙏🏻 கருவரையில் அம்மன் அடுத்த பகுதியில் சிவலிங்கம், இன்னெரு பகுதியில், ராதா கிருஷ்ணன். அமைக்கப்பட்டுள்ளது. கருவரை கோபுரம் மிக உயரமாக அமைத்துள்ளனர்.
🙇🏼♂️அருகில் சென்று வணங்கினோம்.
🚍காலம் அருமை கருதி, சுற்றுலா இயக்குநர் பாலு சார் அவர்கள் எங்களுக்கு எங்களுக்கு வேறு புதிய வாகனத்தை ஏற்பாடு செய்துகொடுத்து, உடனடியாக ஜோகேஸ்வரர் ஆலயம் சென்று, மாலை பூசைகளில் கலந்து கொள்ள வைத்த நிகழ்வு மறக்க முடியாதது.
🛕புராதானமான, ஜோகேஸ்வரர் ஆலயம் .... ....வரும் பதிவில்.
9.04. 2022🙏🏻நன்றி🙏🏻
#ஆலயதரிசனம்
#UTRAKANT_TOUR_2022
#என்றும்அன்புடன்
#சுப்ராம்_அருணாசலம்_காரைக்கால்
🏵️💮💮💮💮💮💮💮💮💮💮💮💮💮💮💮💮🏵️
28.05.24- செவ்வாய்
#பயணஅனுபவக்குறிப்புகள்🕊️
இந்த முறை 28.05.24ல் சென்ற போது, பக்தர்கள் கூட்டம் மிகவும் அதிகமாக இருந்தது. சுவாமியை கருவரையில் சென்று தரிசிக்க நீண்ட q வரிசை இருந்தது. சுமார் 1 - 2 மணி நேரம் நின்று தரிசனம் செய்து விட்டு, அதன் பிறகு ஜாகேஸ்வரர் புறப்பட்டோம்.
💜💚💙💛🤎❤️
பயணம் தொடருகிறது...... .....
#Uttarakhand #ADIKAILASH #OMPARVAT_YATRA_2024
#ஆதிகைலாஷ் #ஓம்பர்வத்யாத்திரை
26.05.2024 முதல் 6.06.24 வரை
#பயணஅனுபவக்குறிப்புகள்🕊️
#என்றும்அன்புடன்
#சுப்ராம்அருணாசலம்காரைக்கால்
🙏🏻🕉️🙏🏻🛐🙇🏻🕉️🙏🏻🙇🏻🛐🙏🏻🕉️🙇🏻🛐🙏🏻🕉️🙇🏻🛐🙏🏻
No comments:
Post a Comment