Saturday, June 29, 2024

பதிவு: 11 இந்த பதிவில் 0m Parvat செல்லும் வழியில் உள்ள சில முக்கிய இடங்கள் பற்றியது .கணேஷ் பர்வத், Mt. Ape Darshan from Gunji, Nagparvat, வியாசர் குகை , காளிமாதாக்கோவில் - காலாபாணி.நாள் - 6 குன்ஞ்ஜி - KALAPANI -நாபிடாங் - குன்ஞ்சி

பதிவு: 11
இந்த பதிவில் 0m Parvat செல்லும் வழியில் உள்ள சில முக்கிய இடங்கள் பற்றியது .
கணேஷ் பர்வத், Mt. Ape Darshan from Gunji, Nagparvat, 
வியாசர் குகை , காளிமாதாக்கோவில் - காலாபாணி.
நாள் - 6  குன்ஞ்ஜி - KALAPANI -நாபிடாங் - குன்ஞ்சி
22 + 22 Kms. 6-7 hrs.
31.05.24- வெள்ளி
காலை 7.00 - குன்ஞ்ஜியில் காலை உணவு முடித்து, Bolero/Camper மூலம் புறப்பாடு.
நபிடாங் (4266 mts.) சென்று ஓம்பர்வத் தரிசனம்,
மதியம் 12.00 உணவு நபிடாங் 
மாலை - 4.00 மாலை டீ, இரவு உணவு & இரவு தங்குதல் at
KMVN Yatra Campaign in Gunji.
பார்க்கும் இடங்கள்.
கணேஷ் பர்வத், Mt. Ape Darshan from Gunji, Nagparvat, 
வியாசர் குகை , காளிமாதாக்கோவில் - காலாபாணி, நபி பர்வத், மற்றும் OM PARVAT, at Nabihdhang is the Last Camp of KMVN, for Kailash - Mansarovar Yatra மீண்டும் குன்ஞ்ஜி வந்து இரவு உணவு முடித்து தங்குதல்.

#பயணஅனுபவக்குறிப்புகள்🕊️

🕉️காலை 7 மணிக்குள் காலை உணவு முடித்துக் கொண்டு அவரவர் ஜீப்பில் கிளம்பினோம். நல்ல பருவநிலை. வெய்யில் இருந்தாலும், இமயமலையின் குளிர் காற்று வீசிக் கொண்டு இருந்ததால், Swetter, மற்றும் கம்பளி உடைகளுடனும் Shoe ம் அனிந்து இருந்தோம். மேலே செல்ல செல்ல குளிர் இருந்தாலும், இறையருள் துணையிருந்ததால், அருமையான வெய்யிலும், Clear Blue Sky ஆக அமைந்து இருந்ததால், பயணம் மிகச்சிறப்பாக அமைந்தது.

🛐குன்ஞ்ஜி பள்ளத்தாக்கிலிருந்து மெல்ல உயரம் சென்றோம். சில இடங்கள் சாலை மிக நன்றாகவும், சில இடங்கள் மிக மிக மோசமாகவும் இருந்தது. சாலைப்பணி வேலைகள் நடந்து கொண்டு இருக்கிறது.

🕉️குன்ஞ்ஜியிலிருந்து நடைபாதையாக மட்டுமே இருந்த மலைப் பாதையை, அரசாங்கம், BRO மூலம்
சிறிது சிறிதாக மலைக்கற்களை வெட்டி அகற்றியும், மன் சரிவுகளை கெட்டிப்படுத்தியும், தற்போது Bolero Camper ஜீப் செல்லும் வழியாக்கி சவால் நிறைந்த பணியை மிகச் சிறப்பான செய்து வருகிறார்கள். மிகவும் போற்றத்தக்க காரியங்கள்.

💥வழியில் இரு இடங்களில் INNER PERMIT Check செய்து பயண அனுமதி தருகிறார்கள்

 🕉️ஒரு புறம் காளி நதி நம்மோடு கூட வந்து கொண்டே இருக்கிறது. காளி நதி பாரதத்திற்கும், நேப்பாள நாட்டிற்கும் எல்லைப்பகுதியாக உள்ளது.

🕉️செல்லும் வழியிலேயே கனேஷ்பர்வத்,ஷீஷ் நாக் பர்வத் என்ற நாகபர்வத், காலபாணி, வியாசர் குகை இருந்தாலும், OM Parvat தரிசித்துப் பிறகு வரும் போது காளி ஆலயம் தரிசித்தோம். 

🛐கனேஷ் பர்வத் 
வழியில் பெரிய பணி சிகரம் கண்டோம் அதை கனேக்ஷ் பர்வத் என்று கூறுகின்றார்கள். இது போன்ற பல மலைசிகரங்களைப் பார்த்துக் கொண்டே சென்றோம். சில புல்வெளி இடங்கள், அருமையான மிக உயரமான மலையின் அற்புதக் காட்சிகள்.

🛐ஷீஷ் நாக் பர்வத்: நாகபர்வத்

நாக் பர்வத் ஓம் பர்வத்திற்கு செல்லும் வழியில் அமைந்துள்ளது. மற்றும், மலை நாகின் வடிவத்தை உருவாக்குகிறது. நாக் என்பது சிவபெருமானுடன் எப்போதும் காணப்படும் பாம்பின் கடவுளைக் குறிக்கிறது.

🛐மிகவும் அற்புதமான கால சீதோஷண நிலை, Blue Sky மேகங்களின் விளையாட்டு மிக ரம்மியமாக இருந்தது.

🛐#காலாபாணி காளி மாதா மந்திர்:

🏞️குன்ஞ்சி - நபிதாங் பாதையில், 
காலாபாணி உள்ளது. ஓம் பர்வத் தரிசித்து,
திரும்ப வரும் போது காலா பாணி என்ற இடம் வந்தோம். காளி மந்திர், காலாபானி காளி நதி தோன்றிய இடம் இது.
இங்கே காளி நதி உற்பத்தி ஆகிறது. இதை ஒட்டி ஒரு சிறிய ஆலயம் கட்டப்பட்டுள்ளது.

🏞️ஆலயத்தில் இரண்டு கருவரை உள்ளது.
ஒன்றில், காளி உருவம் உள்ள சிலையும், நீர் உற்பத்தியாகும் சிறிய தொட்டியும் உள்ளது. அதிலிருந்து நீர் எடுத்து தெளித்து விடுகிறார்கள். 

🏞️இன்னொரு கருவரைப் பகுதியில், சிவலிங்கம் ஒன்றும், சிவ பார்வதி உருவமும் உள்ளது. முன்புறம் ஒரு மண்டபம் உள்ளது. அதில் அமர்ந்து பஜணை, பூசை செய்ய இடம் உள்ளது.
வெளிப்புறம்.

🏞️நீர் தொட்டி குளம்போல அமைத்து அதில், சிவன் பார்வதி சிலை அழகாக வைத்து அமைத்துள்ளனர்.

🌼அருகில் ITB ராணுவ Camp ஒன்றும் உள்ளது. அருகில் ஒரு Refreshment Shop உள்ளது.

🛐வேத் வியாஸ் குஃபா (குகை): 

🏵️ஓம் பர்வத்துக்குச் செல்லும் பாதையில் அமைந்துள்ளது, _ இங்கு வியாஸ் முனி (மஹரிஷி வேத் வியாஸ் என்று பிரபலமாக அறியப்படுகிறார்) மகாபாரதத்தை விநாயகப் பெருமானுக்குக் கட்டளையிட்டார்.

🏵️காலாபாணி ஆலயம் எதிர்புறம் உள்ள உயரமான மலையின் மிகஉயரமான இடத்தில் இந்த குகை உள்ளது. கீழே இருந்து நன்றாக பார்க்க முடிகிறது. உள்ளது.

🛐💚🤎💜❤️
பயணம் தொடருகிறது...... .....
#Uttarakhand #ADIKAILASH #OMPARVAT_YATRA_2024
#ஆதிகைலாஷ் #ஓம்பர்வத்யாத்திரை
26.05.2024 முதல் 6.06.24 வரை 
#பயணஅனுபவக்குறிப்புகள்🕊️
#என்றும்அன்புடன்
#சுப்ராம்அருணாசலம்காரைக்கால்
🙏🏻🕉️🙏🏻🛐🙇🏻🕉️🙏🏻🙇🏻🛐🙏🏻🕉️🙇🏻🛐🙏🏻🕉️🙇🏻🛐🙏🏻

Thursday, June 27, 2024

பதிவு: 6#Uttarakhand #ADIKAILASH #OMPARVAT_YATRA_2024#ஆதிகைலாஷ் #ஓம்பர்வத்யாத்திரை26.05.2024 முதல் 6.06.24 வரை #ஜாகேஸ்வரர்.#பயணஅனுபவக்குறிப்புகள்🕊️28.05.24- செவ்வாய்

பதிவு: 6
#Uttarakhand   #ADIKAILASH  #OMPARVAT_YATRA_2024
#ஆதிகைலாஷ்  #ஓம்பர்வத்யாத்திரை
26.05.2024 முதல் 6.06.24 வரை 
#ஜாகேஸ்வரர்.
#பயணஅனுபவக்குறிப்புகள்🕊️
28.05.24- செவ்வாய் 

ஜாகேஸ்வரர் என்ற ஊரில் இருக்கும் KUMAN MANDAL VIKAS NIGAM Tourists Home  சென்றதும் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. பிறகு மதிய உணவும் வழங்கப்பட்டது. 
அங்கேயே சற்று ஓய்வு எடுத்துக் கொண்டோம்: பிறகு, அங்குள்ள மிகவும் பிரசித்தி பெற்ற   ஸ்ரீ ஜாகேஸ்வரர், ஸ்ரீ மிருதுஞ்சிய சிவன் ஆலயம், மற்றும், ஆலய வளாகத்தில் உள்ள  சன்னதிகள் நிறைந்த 120 சிவலிங்கங்களை தரிசித்தோம்.

இந்த ஆலயத்திற்கு 2022 ல்  ஏற்கனவே
வந்து தரிசனம் செய்து உள்ளோம். மீண்டும் மீள் தரிசனம் செய்ய இன்று
(28.05.24- செவ்வாய்)இறையருள் கூட்டியது

🏵️💮💮💮💮💮💮💮💮💮💮💮💮💮💮💮💮🏵️
இது பற்றிய நம்முடைய பயன அனுபவக் குறிப்புகள் தனி பதிவில் உள்ளது.
LINK:
https://www.facebook.com/share/p/HaoonzoZv5E5NdGD/?mibextid=oFDknk

மீள் பதிவு :
https://www.facebook.com/share/p/HaoonzoZv5E5NdGD/?mibextid=oFDknk
#uttrakant_tour_2022 
#பயணஅனுபவக்குறிப்புகள்🕊️
🛕#ஜாகேஸ்வரர். 1
(9 &10.04.2022)
பயண அனுபவக் குறிப்புகள்

🛕ஜாகேஸ்வரர் என்ற புனித தலம் உத்தரகாண்ட் மாநிலத்தில், Kumaon பகுதியில் Almora மாவட்டத்தில் அமைந்துள்ளது.

🏔️இந்த இடம் சுமார் 6140 அடி 1870mts உயரத்தில் இமாலயத்தில் உள்ளது.
நயினிட்டால், நகரிலிருந்து, சுமார் 100 கி.மீ. மற்றும், Almora நகரிலிருந்து 36 கி.மீ. தூரம்,  வட கிழக்கில் உள்ளது.

🔱மத்திய இமயமலைப்பகுதியில், பன்னெடுங்காலமாக கைலாசமலை தரிசனம் செய்ய செல்லும் பாதையில் இப்பகுதி உள்ளது.

⚜️இவ்வாலயங்கள் இப்பகுதியின் ஜோதிர்லிங்கங்கள் என்றே வழங்கப்படுகிறது.

🛕வைத்திநாதர் என்ற மற்றொரு புகழ் பெற்ற ஆலயம் இங்கிருந்து 100 கி.மீ. தூரத்தில் உள்ளது.

🛕மிக மிக புராதானமாக ஆலயங்கள் நிறைந்த பகுதி. 
எப்போது இந்த ஆலயங்கள் எழுப்பப்பட்டன என்பதை உறுதிப்படுத்துவதற்கான வரலாற்று, அல்லது  கல்வெட்டு மற்ற உறுதியான சான்றுகளை இன்னமும் கண்டுபிடிக்க முடியவில்லை.

🏯எழுத்துப்பூர்வமான ஆதாரங்கள் கிடைக்காவிட்டாலும், இவ்வாலயங்கள் சுமார் 1400 வருடங்களுக்கு முற்பட்டதே என்று நம்பப்படுகிறது.

🌟சிலர் கருத்துப்படி ஆதி சங்கரர் ஸ்தாபித்தார் என்றாலும், 
கட்டிட அமைப்புகள், அவருடைய காலத்திற்கு 100 வருடத்திற்கு முன்பே கட்டப்பட்டிருக்க வேண்டும் என்று ஊர்ஜிதம் செய்கிறார்கள்..

🛕இமயமலையின் இந்தப் பகுதியில் சுமார் 151 ஆலயங்கள் உள்ளன அனைத்தும் இந்திய தொல்லியல் துறையால் அடையாளம் காணப்பட்டு, இவைகள் 7ம் நூற்றாண்டு முதல் 10ம் நூற்றாண்டு வரை உள்ள காலகட்டத்தைச் சேர்ந்தவைகள் தான் என்று உறுதிப்படுத்தப்படுள்ளது. 

🛕இவைகள் Group of Temples எனப்படும் ஒரே இடத்தில் பல ஆலயங்களைக் கொண்ட அமைப்பாகும்.

🌼இந்த ஆலயங்கள், பல நூறு வருடத்திற்கு முன்பு இந்தியாவின் பகுதிகளிலிருந்து இந்த இடங்களுக்கு வந்து இவ்வாலயங்களை அமைத்து வழிபட்டதால், இதை உத்திரகாசி என்றும் வழங்கியுள்ளதாகத் தெரிகிறது.

🍁சில ஆலய அமைப்புக்கள், கட்டிடக் கலை நுட்பங்களைக்கொண்டு 7ம் நூற்றாண்டு முதல் 12 நூற்றாண்டுகளிலும், சில ஆலயங்கள், பிற்காலத்திலும் கட்டப்பட்டது.
என்று நம்பப்படுகிறது. பல  நூற்றாண்டுகளுக்கு முன்பாக கட்டப்பட்டுள்ள இவ்வாலயங்கள் மிகவும் சிறப்பு வாய்ந்தவைகள். 

🥀இது போன்று Group of temples இந்தியாவில் மத்திய பிரதேசம், மற்றும் மத்தியப்பிரதேசத்தில் உள்ள புவனேஸ்வரர் அருகில் உள்ள ஆலயங்கள் அமைப்பை ஒப்புநோக்கத்தக்கது.

⚜️வடஇந்திய நாகரா கட்டிடக்கலை அமைப்பையும், சில ஆலயங்கள் மத்திய மற்றும் தென் இந்திய கட்டிடக்கலை அமைப்பையும், பிரமிடு போன்ற கட்டிட அமைப்பையும்  சார்ந்த கற்கோவில்கள்,
இங்கே சுமார் 200 ஆலயங்கள் உள்ளன. 
சிவன், சக்தி, விஷ்ணு ஆலயங்கள் உள்ளன.

🌟அனைத்து ஆலயங்களும் ASI இந்திய தொல்லியல் துறையினரால் பராமரிக்கப்பட்டு வருகிறது.

🛕#ஜாகேஸ்வரர்ஆலயங்கள் :

🛕இரண்டு முக்கிய ஆலயப் பகுதிகள் ஜாகேஸ்வரில் உள்ளன.

1. ஜாகேஸ்வரர் ஆலயங்கள்.
2. தான்டேஸ்வரர் ஆலயங்கள். 
இரண்டுக்கும் சுமார் 2 - 3 கி.மீ.தூரம் உள்ளது.

🛕ஜடாகங்கா என்ற நதிக்கரையில் இவ்வாலயங்கள் அமைந்துள்ளன. 

🥀தேவதாரு, பைன் மரக்காடுகள், மலைகள் சூழ்ந்த இப்பிரதேசம் காண மிக ரம்மியமாக உள்ளது.
 
🛕மேலும் சில பிரசித்திப் பெற்ற ஆலயங்களும் அருகில் உள்ளன.

🛕இங்கு மேலும், சில ஆலயங்கள் இருப்பினும் மிகவும் அதிகமாக சுமார் 124 ஆலயங்களைக் கொண்டு பிரசித்துப் பெற்றது ஜாகேஸ்வரர் ஆலயமே.

 🛕தண்டிஸ்வரர் ஆலயத்தில் பல ஆலயங்கள் பழமையால் சிதலமடைந்து மூடப்பட்டுவிட்டன எனக் கூறப்படுகிறது.

#ஜாகேஸ்வரர்_மகாதேவர்_ஆலயம்
🛕இவ்வாலயத்திற்கு உள்ளே நுழைய, பிரதான சாலையை ஒட்டியே இரண்டு நுழைவுவாயில்கள் அமைக்கப்பட்டு உள்ளன.  உள்நுழைந்ததும், இவ்வாலயங்களை தரிசிக்கும் வழிகளும், முறைகளும், படங்களுடன் குறிப்பிடப்பட்டுள்ளது.

🛕சுமார் 124 சிவலிங்கங்கள் ஒரே ஆலயத்துள் தனித்தனியாக  அமைக்கப்பட்டு உள்ளன. இவைகள் பல்வேறு சன்னதிகள், கோபுர அமைப்புகளுடன் உள்ளன. முழுவதும் கற்றளிகள். அடுக்குக் கற்களைக் கொண்டு அமைக்கப்பட்டுள்ளன.

தண்டி ஆலயம்,
குபேரர் ஆலயம்,
மிருத்யுஞ்சயர் ஆலயம்
நந்தாதேவி ஆலயம்
நாகதுர்க்கா ஆலயம்
நவகிரக ஆலயம்

🛕ஜாகேஸ்வரர் ஆலயத்தில், சிறியதும், பெரியதும், பலவகைகளில் சதுர அமைப்பில் அடிப்பகுதி காணப்படுகின்றது. 

🛕அடிப்பகுதி நான்குபுரமும் உயர்ந்த சுவர்கள்.  மேல் பகுதி பிரமீடு அமைப்புகள். உச்சிப் பகுதியில் தாமரை பீடமும், கலசமும் கற்றளிகளாக உள்ளன. 

 🛕சில முக்கிய  கோபுரங்கள் தனி சிங்கம் அல்லது தனி ரிஷபம் காவல் தெய்வம் போல  அமைத்துள்ளமை சிறப்பு.  எல்லாமே கற்றளிகள். 

🛕ஆலய முன் கோபுர  பகுதிகளிலும்,  நிலைப் படிகளிலும், பல்வேறு  கலைநுட்பமான சிலைகள் அமைக்கப்பட்டுள்ள. சிறிய சிறிய அளவுகளில்  நுட்பமான சிலை அமைப்புகள் நம்மை வியக்க வைக்கின்றன.

🛕இவைகளில்  வீனாதார சிவன், கனேசர், மகாலெட்சுமி, சப்தமாதார்கள், யோக தட்சினாமூர்த்தி, உருவங்கள், முன்று முகம் கொண்ட சிவவடிவம், எல்லாம் கற்களால் வடிக்கப்பட்டுள்ளது.

🛕இவைகள் 7,8ம் நூற்றாண்டுகளை ஒட்டிய காலம் என்று கூறுகிறார்கள்.

#ஜாகேஸ்வரர் ஆலயம்:

🛕இங்குள்ள அணைத்து ஆலயங்களுக்கும் நடுநாயகமாக, மிக முக்கிய இடத்தில் பெரிய ஆலயமாக உள்ளது. கருவறை மேற்கு பார்த்து அமைந்துள்ளது. இவ்வாலயம் ஜோதிர்லிங்கமாக வழிபடப்படுகின்றது.

🛕ஆலயம் முன்புறம் சிறிய நந்தி. 
நுழைவு பகுதியில், இருபுறமும் உயரமான, பெரிய அளவிலான துவார பாலகர்கள்.

🛕இடது துவார பாலகர் கரத்தில் கபாலம் ஏந்தியுள்ளார். மற்ற கரங்களில் சில ஆயுதங்கள் தாங்கியுள்ளார்.
வலது துவாரபாலகர், பெரிய நாகத்தைப் பிடித்துள்ளர். மற்ற காரங்களில் ஆயுதங்கள். உள்ளன.

🛕மனித வாழ்வுநிலையற்றது, மரணத்தை வெல்லவும், வினை நீங்கவும், இவ்வாலயத்தில் உள்ள சிவனை நாம் வணங்க வேண்டும் என்பது இவை உணர்த்தபடுகிறது.

🛕அடுத்து உள் மண்டபம் சற்று பெரிது. பக்தர்கள் இருந்து வழிபாடு செய்வதற்கு மிகவும் வசதியாக அமைந்துள்ளது.

🛕உள் மன்டபம் தாண்டினால், மேற்கு பார்த்த சிவன் கருவறை,
சற்று விஸ்த்தாரமாக உள்ளது.
சிறிய ஜோதிர்லிங்கம். ஆவுடைப்பகுதி, தரையுடன் ஒட்டி உள்ளது. நாம் அருகில் உள்ள பாத்திரத்தில் உள்ள நீரை மொண்டு, சிவனை அபிஷேகம் செய்யலாம்.

🛕நமது ஊர்களில் உருத்திராட்சங்களைப் பயன்படுத்தி, சிறிய அளவில் பந்தல் போல; உருத்திராட்சத்தைக் கொண்டு, லிங்கம் அமைப்பார்கள் அது போல. அழகாக நாகாபரணம் மற்றும். அலங்கரங்கள், மேலிருந்து ஒரு தாமரை மலர் மூடி போல வெள்ளியால், அமைத்துள்ளார்கள். லிங்க சிவனை பாதுகாத்து வருகிறன,  இவைகள்.

🛕இந்த ஆலய கருவரையின் அமைப்பு மட்டும்  நான்குபுறமும் பலகனி உடையது. 

🛕மத்திய இமாலயப் பகுதியில் உள்ள முக்கிய ஜோதிர்லிங்கமாகக் வணங்கப்படுகிறது.  ஆதியிலிருந்து, கைலாசமானசரோவர், பத்திரி, கேதார், ஆதி கைலாச யாத்திரையில் இவ்வாலயம்  முக்கியத்துவம் உடையது என்கிறார்கள்.

🏯ஆலய நாற்புர சுற்று சுவர்கள் சற்று உயரமானது. மேல்பகுதி பிரமீடு அமைப்பில் உள்ளது. உச்சிக் கோபுரம் மரத்தினால் மூடி போன்று அமைத்து பாதுகாக்கப்படுகிறது.  இந்த அமைப்புகள் பிற்காலத்திய அரசர்கள் செய்துள்ளார்கள் என்ற குறிப்புள்ளது. 

🛕இவ்வாலயம் சுற்றிலும் சிறிய, நடுத்தர லிங்கங்களை வைத்து சிறுசிறு கற்கோவில்கள் அமைக்கப்பட்டுள்ளது.

🛕இவ்வாலயத்தில் உள்ள ஜாகேஸ்வரர் என்னும் யோகேஸ்வரரை உளமார வணங்கினால், என்றும்  யோகத்தையும் தந்து, நமது வாழ்வின்  வினை நீக்கம் தந்து, மகிழ்வான வாழ்வு அமையும் என்பது நம்பிக்கை.

🛕இவ்வாலயத்தின் முன் பண்டாக்கள் அமர்ந்து கிரியைகள் /  யாகங்கள் ... முதலியவைகள் செய்து தருகிறார்கள். 

🛕ஜாகேஸ்வரா ஆலய தென் பகுதியில் இவ்வாலயம் பின்புறம் (கிழக்கு புறம்) இரண்டு தனி தனி ஆலயங்கள் ஒவ்வொன்றிலும், தனித்தனியாக லிங்கங்கள்.  தென்புறம் ஒரு ஆலயமும் இருக்கிறது. அனைத்து ஆலயத்தின் முன் பகுதிகளிலும்,  சிறிய அளவில் மகாலெட்சுமி, விநாயகர், தெட்சினாமூர்த்தி முதலிய சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளது.

🛕தென்கிழக்கு மூலையில் மிகப்பெரிய தேவதாரு மரம் உள்ளது. அதைச் சுற்றி பீடம் அமைத்துள்ளார்கள்.

🛕அனைத்து ஆலயங்களின் கோபுர உச்சிப் பகுதிகள் தாமரைமலர் பீடம் மற்றும் கற்கலசங்களுடனும் இருக்கிறது.  முக்கிய கோபுரங்களில் ரிஷபம் அல்லது சிங்கம் போன்ற ஒரு அமைப்பும் உள்ளது.

🛕ஜகேஸ்வரர் ஆலயம் தென் பகுதியில்,
ஜடாகங்கா என்ற ஆறு உள்ளது. ஆலயத்திலிருந்து, ஆற்றுக்குச் செல்ல சிறிய படிகளுடன் ஒரு வழியும் இருக்கிறது.

🛕ஆலயத்தின் தென் பகுதியில், ஒரு சிறிய குளம் கருங்கற்கள் படிகளால் அமைக்கப்பட்டுள்ளது. இதைப் புன்னியகுளமாகக் கருதுகிறார்கள்.  குளம் நீர் அபிஷேகத்திற்கு பயன்படுகிறது.

🛕ஜாகேஸ்வரர் ஆலயம் எதிரில் ஒரு அனுமன் ஆலயம், இன்னும், பல்வேறு முனிவர்கள், ரிஷிகள் பெயரில் பல ஆலயங்கள் இருக்கின்றன.

🔱மிருத்யுஞ்சயர் மகாதேவர் ஆலயம் :

இந்த ஆலயம், ஜாகேஸ்வரர் ஆலய அடுக்கில் ஜாகேஸ்வரர் ஆலயத்திற்கு அடுத்து. மிகப்பெரிய ஆலயமாக உள்ளது.

🛕மிகப் பெரியது. கிழக்குப் பார்த்த ஆலயம். முன்புறம் சிறிய மண்டபத்துடன் கூடிய  நந்தியுடன் 4 கற்றூன்களுடன் கூடிய முன்மண்டபம், அடுத்து சற்று பெரிய உள் மண்டபம் அதில் வலது புறம், ஒரு விநாயகர் சிலை அடுத்து உள் கருவரை மண்டபத்தில் நல்ல கம்பீரமான உருவத்தில் சிவலிங்கம். ஆவுடைப்பகுதி  தரைமட்டத்திலிருந்து சிறிதே உயரமானது.
சிவபெருமானுக்கு நாக அலங்காரத்துடன் அம்சமாக காட்சி தருகிறார். நாம் மிக அருகில் சென்று தரிசனம் செய்யலாம்.
தினம்தோறும் மிக அருமையாக பூசைகள் முறையாக நடைபெற்று வருகிறது. 

🙏மிருத்யுஞ்சய மகாதேவர் எமபயம் போக்குபவர், மரண அவஸ்த்தை தவிர்க்கவும், ஆயூள் யோகத்திற்கும், மிருத்யுஞ்சய மகாதேவரே காரணகர்த்தாவாக இருப்பதால், இவரை வழிபட வேண்டியது மிகச் சிறப்பு.

🛕முக்கியத்துவம் வாய்ந்த இந்த ஆலயம் ஜாகேஸ்வரர் ஆலங்களில் பெரியது ஆகும், இதன் அமைப்பைக் கொண்டே இவரின் முக்கியத்துவம் தெரியும்.

🛕இவ்வளவு சிறப்பு மிக்க புராதான ஆலயத்தில்  மிருத்யுஞ்சய ஹோமம் செய்து வழிபட்டால் மிகமிக நல்லது என்பதால், சுற்றுலா இயக்குநர் திரு பாலு சார் அவர்களின் முயற்சியால்,  எல்லோரும் சேர்ந்து 10.04.2022 அன்று விடியற்காலையில் இவ்வாலத்திலேயே அனைவரும் இணைந்து மிருதயுஞ்சய ஹோம பூசை செய்து கொள்ள வாய்ப்புக் கிடைத்தது. 

 🛕#ஸ்ரீபுஷ்டிதேவி ஆலயம்:

🌟இவ்வாலயம் கிழக்கு நோக்கி மிருத்யுஞ்சயர் ஆலயத்திற்கு பின்னாலும் அமைந்துள்ளது. இவ்வாலயம் கருவரை கிழக்கு நோக்கியது. ஸ்ரீபுஷ்டிதேவி அம்மன் ஆலயம் அமைந்துள்ளது. இதுவும் கற்கோவில் ஆலய கோபுரம் வித்தியாசமாக இருந்தது. பொதுவாக, தேவி ஆலயங்கள் முன்புறம் பட்டையாகவும் கோபுர உச்சிப் பகுதி நீண்ட பகுதியாகவும் இருபுறமும், சிங்கம் அல்லது ரிஷபம் போன்ற சிலை அமைப்பும் உடையதாக இருக்கிறது.

🌟மேலும், தன்டேஸ்வரர், நயினா தேவி, நவகிரக ஆலயம், எல்லாம் தனித்தனியாக உள்ளது.
ஆலயம் உள்நுழைவுப் பகுதி தாண்டி மிருத்யுஞ்சர் ஆலயம் முன்புறம் காலதேவர் (பைரவர்) ஆலயமும் உள்ளது.

🌼பல ஆலயங்கள், புனரமைப்பு இல்லாமல், சிதைந்தும் உள்ளது, வெட்டவெளியில் சில சிவலிங்கங்கள், சில ஆலயங்களில், எவ்வித சிலைகள் இல்லாமலும் உள்ளது.

🛕#குபேரர் ஆலயம்:

💥ஜாகேஸ்வரர் ஆலயம் தரிசித்தப்பின், 
சற்று தூரத்தில் கிழக்கே சுமார் 100 மீட்டர் தூரத்தில் சற்று உயரத்தில், ஜடாகங்கா ஆற்றின் மீது குறுக்கே அமைந்துள்ள பாலத்தை தாண்டினால், இவ்வாலயம் உள்ளது. குபேரர் ஆலயம் மேற்கு பார்த்த சன்னதி கொண்டது.  வழிபாடுகளும் நடைபெற்று வருகிறது. பராமரிப்பில் உள்ளன.

🍁ஜடாகங்கா ஆற்றின்கரையில், திதி, தர்ப்பனம் செய்வது மிகப் புண்ணியம் என்பதால், பலர் வந்து செய்துகொண்டு இருக்கிறார்கள். இதற்கான ஏற்பாடுகள் செய்வதற்கும், பக்தர்கள் வசதியை முன்னிட்டும் Toilet வசதியுடன், சிறிய மண்டபம் உள்ளது.

🛕இவ்வாலயங்கள் அனைத்தும் பிரதான சாலையை ஒட்டியே உள்ளன. ஒரு புறம் மலைப்பகுதியை ஓட்டி வீடுகள், கடைகள், மறுபுறம், ஜடாகங்கா ஆறும், அதை ஒட்டி ஆலயங்களும், ஆற்றின் மறுகரையில் அடர்த்தியான, தேவதாரு, பைன் மரங்கள் ஏராளமாக உள்ளன.

💥இவ்வூர் ஆலயங்கள் பற்றிய ஒரு MUSEUM ஒன்றும் தனியாக அமைத்துள்ளனர் பிரதான சாலையில் உள்ளது.

2022 ...ல்..
🌼நாங்கள் பிரதான சாலையை ஒட்டிய வசதியான HOTEL MANUDEEP வந்து  தங்கியிருந்தோம்.  9.4.2022 அன்று மாலை இவ்வூருக்கு வந்து உடனடியாக ஆலயம் சென்றோம். அன்று மாலை பூசை முழுவதும் கண்டு தரிசித்தோம். 
இரவு Hotel வந்து தங்கினோம்.

🙏🏻10.04.2022 விடியற்காலையில் சுமார் 5 மணிக்கு மிருத்யுஞ்சயர் ஆலயத்திற்கு அனைவரும் சென்று, மிருத்யுஞ்ச பூசை செய்து கொண்டோம்.  மேலும், 
ஜாகேஸ்வரர், ஆலயம் முழுதும் வணங்கி பின்பு குபேரர் ஆலயம் சென்று தரிசித்துவிட்டு, Hotel MANUDEEP வந்து காலை உணவுக்குப் பிறகு பாதால் புவனேஸ்வரர் என்ற முக்கிய ஸ்தலம் தரிசனத்திற்குப் புறப்பட்டோம்.

🛕புராதானமான, பாதால்புவனேஸ்வரர் என்ற ஆலயம் .... அடுத்து ..வரும் ...பதிவுகளில்....

9-10.04.2022
🙏🏻நன்றி🙏🏻 

#ஆலயதரிசனம் 
#UTTRAKANT_TOUR_2022
#என்றும்அன்புடன்
#சுப்ராம்_அருணாசலம்_காரைக்கால்.
https://whatsapp.com/channel/0029Va5eOh59Bb67425WOR1A
💮💮💮💮💮💮💮💮💮💮💮💮💮💮💮💮💮
❤️🤎💛💙💚💜
28.05.24- செவ்வாய் 

#பயணஅனுபவக்குறிப்புகள்🕊️

💥ஜாகேஸ்வரர் ஆலயம் தரிசித்து , பிறகு K M V N Tourists Home வந்து, பிறகு எங்கள் சிற்றுந்தில் புறப்பட்டு பித்தோராகார் (Pithoragarh) என்ற ஊர் சென்று சேர்ந்தோம். அங்குள்ள KMVN Tourists Rest Home சென்றோம்.

💥 இங்கும் மிகச்சிறந்த வரவேற்பும், ஒவ்வொருவருக்கும், மாலை மரியாதை, உபசரிப்பும், உணவும் அளிக்கப்பட்டு, சிறந்த தங்கும் வசதியும் செய்யப்பட்டிருந்தது.

💥இரவு நமது யாத்திரையின் முக்கியத்துவம் பற்றியும், இமாலய புனித பயணம் பற்றியும், செய்ய வேண்டிய செய்யக்கூடாத விஷயங்கள், நமது கவனங்கள், நாம் நடந்து கொள்ள வேண்டிய முறைகள் பற்றி மிகவும் உபயோகமாகவும், உணர்வுபூர்வமாக KMVN - Manager நெடும் விளக்கம் அளித்தார்.

🌼இரவு உணவுக்குப் பிறகு எமக்கு என்று ஒதுக்கப்பட்டிருந்த வசதியான அறைகளில் தங்கினோம்.

பயணம் தொடருகிறது...... .....
#Uttarakhand   #ADIKAILASH  #OMPARVAT_YATRA_2024
#ஆதிகைலாஷ்  #ஓம்பர்வத்யாத்திரை
26.05.2024 முதல் 6.06.24 வரை 
#பயணஅனுபவக்குறிப்புகள்🕊️
#என்றும்அன்புடன்
#சுப்ராம்அருணாசலம்காரைக்கால்
🙏🏻🕉️🙏🏻🛐🙇🏻🕉️🙏🏻🙇🏻🛐🙏🏻🕉️🙇🏻🛐🙏🏻🕉️🙇🏻🛐🙏🏻

பதிவு - 10 நாள் - 5️⃣30.05.24 - வியாழன் தார்ச்சுலாவிலிருந்து குன்ஞ்ஜி சென்று தங்குதல். 3200 mts. உயரம்தூரம் 71 Kms. காலம் 5 - 6 hrs. GUNJI #குன்ஞ்ஜி

பதிவு - 10
நாள் - 5️⃣
30.05.24 - வியாழன்
தார்ச்சுலா  விலிருந்து  குன்ஞ்ஜி  சென்று தங்குதல். 3200  mts. உயரம்
தூரம் 71 Kms. காலம் 5 - 6 hrs.

தார்ச்சுலாவில்  காலை டீ மற்றும் காலை உணவு முடித்து Bolero Camper மூலம் புறப்பட்டு,
BUDHI (புத்தி) என்ற இடத்தில் மதிய உணவு
உண்டு, 
வழியில்,  Chiyalekh புல்வெளிகள், Ape mountain, Namjing  Parvat, Garbyang , Napakchu இவைகளை கண்டு விட்டு
குன்ஞ்ஜி சென்று மாலை டீ இரவு உணவு, மற்றும் இரவு குன்ஞ்ஜி Camp ல் தங்கினோம்.

 #பயணஅனுபவக்குறிப்புகள்🕊️
30.5.24 - வியாழன்.
#தார்ச்சுலா  - BUDHI - GUNJI

#GUNJI   #குன்ஞ்ஜி

🌟 குன்ஞ்ஜி இந்தியாவின் உத்தரகாண்டில் இமயத்தில் 3200 mts. உயரத்தில் உள்ள ஒரு சிறிய பள்ளத்தாக்கு கிராமம். இது திபெத் மற்றும் நேபாளத்தின் எல்லைகளுக்கு அருகில் உள்ளது.

🌟குத்தி / குனிஞ்ஜி என்ற பள்ளத்தாக்கின் கிழக்கு முனையில் குத்தி யாங்க்டி மற்றும் காலாபானி நதியின் சங்கமமாகும். 

🌟இந்த கிராமம் கைலாஸ்-மானசரோவர் செல்லும் பாரம்பரிய இந்திய வழித்தடத்தில் உள்ளது.

🌟 குன்ஞ்ஜி, குட்டி மற்றும் நபி கிராமங்கள் இந்தியாவைச் சேர்ந்தவை. 
இந்த கிராமம் பருவகாலமாக மட்டுமே மக்கள்தொகை கொண்டது,

🌟குளிர்காலத்தில் மக்கள் தாழ்வான இடங்களுக்கு (பெரும்பாலும் தர்ச்சுலா, அதே மாவட்டத்தில்) இடம்பெயர்கின்றனர்.

🌟சஷாஸ்த்ரா சீமா பால், இந்தோ-திபெத் எல்லைக் காவல்துறை மற்றும் GREF பணியாளர்கள் (Sashastra Seema Bal, the Indo-Tibet Border Police and GREF personnel) ஆண்டு முழுவதும் அங்கேயே காவல் இருக்கிறார்கள்.

🌟குன்ஞ்ஜிக்கு ஹெலிகாப்டர் சேவை தர்ச்சுலாவில் இருந்து கிடைக்கிறது.

🌟மலையேற்றம் செய்பவர்கள் மற்றும் பிற பயணிகள் குன்ஞ்ஜியில் உணவு மற்றும் தங்குமிடத்தைப் பெறலாம். 

🌟குன்ஞ்ஜியை அடைவதற்கு, பயணிகள் தார்ச்சுலாவில் SDM வழங்கிய இன்னர் லைன் அனுமதியை (ILP) பெற வேண்டும்.

 🌟இதை ஆன்லைனில் பெறலாம். ILP (Inner Line Permit) க்கு விண்ணப்பிக்க, பயணிகளுக்கு செல்லுபடியாகும் ஐடி, (Aadhar) மருத்துவ சான்றிதழ் (Health Fitness Certificate) மற்றும் Passport or Police Verification / Character Certificate தேவை.

🛣️குன்ஞ்ஜி யில் உள்ள பாதைகள் :

🌟தெற்கிலிருந்து தார்ச்சுலா-பித்தோராகர் மற்றும் இந்தியாவின் பிற பகுதிகளிலிருந்து,  குன்ஞ்ஜியை நெருங்கும் போது, குன்ஞ்ஜிக்கு தென்கிழக்கே அருகில் உள்ள சாரதா ஆற்றின் (மஹாகாளி நதி என்றும் அழைக்கப்படுகிறது) மேற்குக் கரையில் உள்ள பாதை இரண்டு தனித்தனி  பாதைகளில் பிரிகிறது;

முதல் வழி :
🏞️வடகிழக்கில் செல்லும் பாதை :
(PLPH (KMR))
பித்தோராகர்-லிபுலேக் பாஸ் நெடுஞ்சாலை (PLPH) அல்லது கைலாஷ்-மானசரோவர் சாலை (KMR),

(Pithoragarh-Lipulekh Pass Highway (PLPH) or Kailash-Mansarovar Road (KMR))
💮கைலாஷ் மானசரோவர் யாத்ரா பாதையின் ஒரு  பகுதியாகும்.

💮இது கிட்டத்தட்ட 350 கிமீ நீளமுள்ள 2-வழி பாதை நெடுஞ்சாலை ஆகும்.

💮இது பித்தோராகார், தர்ச்சுலா, புத்தி, கர்பியுங்,  குன்ஞ்ஜியின் கிழக்குப் பகுதி, ITBP முகாம், நபிதாங் மற்றும் லிபுலேக் வழியாக, கைலாஸ்-மானசரோவர் வரை
செல்கிறது. வடகிழக்கே செல்கிறது. 

💮 இந்தப்பாதையில் காலாபாணி, ஓம் பர்வத், லிபுலேக் கணவாய் மற்றும் கைலாஷ் மானசரோவர் செல்லலாம். (தற்போது நபிதாஸ் வரை தான் செல்ல அனுமதி)

இரண்டாவது பாதை :
🛣️வடமேற்கே செல்லும் பாதை.
குன்ஞ்ஜி-லம்பியா துரா பாஸ் சாலை (GLDPR) :

💮குன்ஞ்ஜி, குட்டி பள்ளத்தாக்கு, ஆதி கைலாஷ் மற்றும் குன்ஞ்ஜி-லம்பியா துரா 
(Lampiya Dhura Pass) கணவாய்க்கு செல்கிறது.

💮இது ஜூலை 2020 இல் கட்டப்பட்ட பிறகு, ஆதி கைலாசத்திற்கான மலையேற்ற நேரத்தை இரண்டு மணிநேரமாகக் குறைத்துள்ளது.

#பயணஅனுபவக்குறிப்புகள்🕊️

🌼30.5.24 அன்று, மாலை  குன்ஞ்ஜி சென்றபோது மிகுந்த மழை. மிகவும் சிரமமாக இருந்தது. அங்கு இருந்தவர்கள் இங்கு மதியம் மற்றும்  மாலையில் அடிக்கடி மழை பொழியும் என்று கூறினர்.

🌟இங்கு உள்ள  KMVN டூரிஸ்ட் ரெஸ்ட் ஹோமில், தங்கினோம்.  அன்று உணவு அளிக்கப்பட்டது. தங்க வசதியும் செய்யப்பட்டிருந்தது. சிறந்த முறையில் கவனித்தார்கள்.

🌟இரவில், கடுமையான குளிர் இருந்தது.
கம்பளி போர்வைகள், Swetter மற்றும் குளிர் தாங்கும் உடைகள், கால், கையுரைகள், நல்ல Shoe அல்லது அது போன்ற காலனிகள் மிகவும் அவசியம்.

🌟இது ஒரு பெரிய பள்ளத்தாக்கு பகுதியாக உள்ளது. சுற்றிலும், இமயமலையின் மிக உயரமான மலைத் தொடர்கள், பல பணி சிகரங்கள்.

🌟விடியற்காலை முதல் நல்ல Claimate இருந்தது. பகலிலும் வெய்யில் இருந்தது.
இருந்தாலும், இதமான குளிர் இருந்து கொண்டும், திடீர் என்று மழையும் பொழியும் சூழலும் இருந்து வந்தது.

🍙இரண்டு மூன்று கல் கட்டிடங்களும், அதிக அளவில்  (இரும்பு + plastic கலந்த) கூண்டு TENT களும் உள்ளன.

🎪TENT கள் கூண்டு அமைப்பில் உள்ளது. ஒரு கூண்டில் அல்லது TENT ல் 6 முதல் 8 பேர் தங்க வசதி செய்யப்பட்டிருக்கிறது.

🌼அதன் அருகில் பொது கழிவறைகள் தனியாக உள்ளது. மிகவும் சுத்தமாக பராமரிக்கின்றனர்.

⛺இரும்பு கட்டில், அதன் மேல் மெத்தை, கம்பளிப்போர்வை, மற்றும் ரஜாய் எனப்படும் மெத்தைகள் கொடுக்கின்றனர்.

⛱️ சூரிய ஒளி மூலம் மின்சாரம் எடுத்து பேட்டரி power கொண்டு மின்சாதனப் பொருட்கள் இயக்குகின்றார்கள்.
மாலை 6 முதல் TENT க்குள் மின்விளக்கு வெளிச்சம் கொடுக்கப்படுகிறது.
நாம் Cell Charge அந்த நேரத்தில் போட்டுக் கொள்ளலாம். TENTல் plug point  Board ம் உள்ளது.

🌼தினந்தோறும், காலை 6-30 - Tea / Coffee. காலை 7.00 மணிக்குள் காலை உணவு கொடுத்து நாம் 8.00 மணிக்குள் புறப்பட ஆயத்தம் ஆகிவிட வேண்டும்.

🏵️இந்தப் பகுதிகளில் இரவு நேரம் குறைவாக உள்ளது.  மாலை நேரம் அதிக வெளிச்சத்துடன் உள்ளது.
விடியற்காலையில் விரகு அடுப்பில் வென்னீர் போட்டு தருகிறார்கள்.

31.05.2024 அன்று காலை உணவு முடித்துக் கொண்டு OMPARVAT தரிசனம் செய்ய புறப்பட்டோம்.
🛐💚🤎💜❤️
பயணம் தொடருகிறது...... .....
#Uttarakhand   #ADIKAILASH  #OMPARVAT_YATRA_2024
#ஆதிகைலாஷ்  #ஓம்பர்வத்யாத்திரை
26.05.2024 முதல் 6.06.24 வரை 
#பயணஅனுபவக்குறிப்புகள்🕊️
#என்றும்அன்புடன்
#சுப்ராம்அருணாசலம்காரைக்கால்
🙏🏻🕉️🙏🏻🛐🙇🏻🕉️🙏🏻🙇🏻🛐🙏🏻🕉️🙇🏻🛐🙏🏻🕉️🙇🏻🛐🙏🏻

பதிவு - 9 நாள் - 5️⃣30.05.24 - வியாழன் தர்ச்சுலாவிலிருந்து குன்ஞ்ஜி சென்று தங்குதல். 3200 mts. உயரம்தூரம் 71 Kms. காலம் 5 - 6 hrs.BUDHI

பதிவு - 9

நாள் - 5️⃣
30.05.24 - வியாழன்
தார்ச்சுலா  விலிருந்து  குன்ஞ்ஜி  சென்று தங்குதல். 3200  mts. உயரம்
தூரம் 71 Kms. காலம் 5 - 6 hrs.

காலை 7 - காலை டீ மற்றும் காலை உணவு முடித்து Bolero Camper மூலம் புறப்படுதல்.

1.30 - BUDHI (புத்தி) யில் மதிய உணவு
குன்ஞ்ஜி சென்று மாலை டீ இரவு உணவு, மற்றும் இரவு குன்ஞ்ஜி Camp ல் தங்குதல்.

வழியில்,  Chiyalekh புல்வெளிகள், Ape mountain, Namjing  Parvat, Garbyang , Napakchu இவைகளை கண்டு தரிசிக்கலாம்

#பயணஅனுபவக்குறிப்புகள்🕊️
30.5.24 - வியாழன்.

#தார்ச்சுலா  - BUDHI - GUNJI

🏵️காலையில் 7.00 மணி அளவில் உணவு முடித்துக் கொண்டு தார்ச்சுலாவிலிருந்து சிறியரக வாகனம் - Bolero ஜீப் மூலம் புறப்பட்டோம். ஒவ்வொரு வண்டியிலும் 4 பேர் மட்டும் அனுமதி. சிறிய அளவில் luggage எடுத்து அவரவர் வாகனங்களில் வைத்துக் கொண்டோம்.

🏵️ஒவ்வொரு வாகன முகப்பிலும் Batch No. vehicle Sl.No. ஒட்டப்படுகிறது. நாம்  எங்கு சென்று இறங்கினாலும், நமது வண்டியை தவற விடாமல் சரி பார்த்து ஏறிக்கொள்ளவும், மற்ற சில காரணங்களுக்காகவும் இந்த ஏற்பாடு.
எங்கள் குழு Batch  6 மொத்தம் 33 பேர் 9 வாகனங்கள்.  (எங்கள் வாகனம் Sl.No.2.).

🏵️வழியெங்கும் பல பகுதிகள் சாலை ஏற்றம் இறக்கம் கொண்டது. சாலை பராமரிப்பு, Land Sliding சரி செய்தல், புதிய சாலை அமைக்கும் பணி, இப்படிப்பட்ட வேலைகள் நடைபெறுகிறதால். அதற்குத் தக்கவாறு நமது வாகனங்கள் செல்லுகின்றன.

🏵️வழியில் வரும் உள்ள ஊர்களின் சோதனையிடங்களில் நமது Permit Checking.  அவ்விடத்தில் ஒரு Register கொண்டு எல்லாவற்றையும் பதிந்து பிறகு அனுப்புகிறார்கள்.

#BUDHI (புத்தி) 

💥புத்தி
இமாலயத்தில், தர்ச்சுலாவிலிருந்து கைலாஷ் மாசைரோவர் பாதையில் உள்ள சிறு கிராமம். இங்கு KMVN ன் Tourist Rest House, மற்றும் ராணுவ பிரிவு Camp ம் உள்ளது.

🏵️இந்தப்பகுதிக்கு வரவோ அல்லது மேற்கொண்டு செல்லவோ, INNER LINE PERMIT அவசியம் தேவை.
சுற்றிலும், இமாலய மலைத் தொடர்; வெள்ளிப் பணி சிகரங்கள் உடைய பகுதி.

🌼இந்தப் பகுதியில் உள்ளChiyalekh புல்வெளிகள், Ape mountain, Namjing  Parvat, Garbyang , Napakchu இவைகளின் அற்புத காட்சிகளை காணலாம்.
உயரமான மரங்கள் கிடையாது. செடி கொடிகள் மிகக்குறைவு. சில இடங்களில் பசுமையான புல்வெளிகள் இருக்கின்றன. பல உயரமான மலைகள் கெட்டி மனல் பகுதிகளாக காணப்படுகின்றன. அவைகள் சரிந்து விழுந்து பாதைகளை அடைத்து விடுகின்றன. அவற்றை சமப்படுத்தி பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன.

🌼ஆக்ஸிஜன் குறைபாட்டினால், மக்கள் வசிப்பிடங்கள் மிக மிகக் குறைவாக உள்ளது.
நடமாட்டம் போக்குவரத்து எதுவும் கிடையாது. கம்பளி ஆடுகள் மேய்த்தல், சில மலைச் சருகல் பகுதிகளை விவசாயம் செய்யப்பயன்படுத்த முயலுகின்றனர்.  குதிரைகளைக் கொண்டு, ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு பொருட்களைக் கொண்டு செல்கிறார்கள்.
சில இடங்களில் மாடுகள் தென்படுகின்றன.

🌼கையலை யாத்திரா செல்பவர்கள், மற்றும் மலையேற்றத்தில் அக்கரை கொண்டவர்கள் மட்டுமே இங்கே வருகிறார்கள். இவர்களின் தேவைகளுக்கு தகுந்த சில கடைகள், Hotel ல்கள், TENT அமைத்துக் கொடுத்துக் கொண்டும், வாகனம், உணவு முதலிய அத்யாவசிய பொருட்கள் தருவித்து தருவதே இவர்கள் பொருளாதாரம் அமைந்துள்ளது.
பனிக்காலம் ஆரம்பம் ஆகிவிட்டால், இங்குள்ளோர் அனைவருமே, தார்ச்சுலா போன்ற நகரப்பகுதிகளுக்கு சென்று விடுகிறார்கள்.
ராணுவ அமைப்பான இந்தோ - திபெத் காவல்
படை கண்காணிப்பு 24 மணி நேரமும்  உண்டு. இந்த ராணுவ அமைப்பினர்கள் மட்டுமே இந்தப் பகுதியில், தொடர்ந்து வசிக்கின்றனர்.
❤️💜🤎💚
🏔️மேலும்,   புத்தியில் உள்ள KMUN TRHல் 1.06.2024 அன்று ஆதிகைலாஷ் தரிசனம் முடிந்து இங்கு மாலை வந்து தங்கினோம்.

🏞️சிறிய குடில் போன்ற நீண்ட அறைகள். ஒரு குடியில் 6 - 7 பேர் தங்கலாம்.
தனித் தனி படுக்கை வசதிகள். இரவு உணவுக்குப் பிறகு தங்கி ஓய்வு எடுத்துக் கொண்டோம். விடியற்காலையில் வெந்நீர் போட்டு குளித்தோம்.

 ⛰️2.06.24 அன்று காலை காபி, உணவும் உட்கொண்டுவிட்டு தர்ச்சுலா  புறப்பட்டோம்.
💚🤎💜❤️

#பயணஅனுபவக்குறிப்புகள்🕊️

💥புத்தி ஒரு மிகச் சிறிய கிராமம்; இங்கு சென்றவுடன் இங்குள்ள KMVN Tourist Rest House ல் மதிய உணவு எடுத்துக் கொண்டோம். பிறகு இங்கிருந்து புறப்பட்டு குன்ஞ்சி சென்றோம். வழியில் உள்ள Check post ல் permit entry போட்ட பிறகு மேல் செல்ல வேண்டும்.

🏞️நாங்கள் செல்லும் பாதை வளைவு, நெளிவுகள் அதிகம். பல பகுதிகள் சாலைகள் அகலப்படுத்தப்பட்டு புதிய சாலைகள் போடப்பட்டுள்ளன. மலைகளும், சிகரங்களும், இயற்கை காட்சிகள், இமாலயப்பகுதிகள் மிக ரம்மியமாக இருந்தது. 

⛰️சாலையின் ஒருபுரம் மிகவும் பள்ளமாகவும், SARADA என்ற காளி நதியும் உள்ளது.

🏔️வழியில், குன்ஞ்ஜி செல்லும் முன், வழியில் ஒரு Roadside Tea shop ல் Tea snacks சாப்பிட்டோம்.

🏞️குன்ஞ்ஜி மிகவும் பள்ளத்தாக்குப் பகுதி நெருங்கிய போது, மாலை நேரம்  நல்ல மழை வந்துவிட்டது. குளிர் அதிகம் உள்ள பகுதி. குன்ஞ்ஜியில் உள்ள KMVN ன் Camp சென்றடைந்து, பத்திரமாகத் தங்கினோம்.

💥குன்ஞ்ஜி என்ற இந்த இடம், பயணத்தின் மிக முக்கிய பகுதி .

🛐💚🤎💜❤️
பயணம் தொடருகிறது...... .....
#Uttarakhand   #ADIKAILASH  #OMPARVAT_YATRA_2024
#ஆதிகைலாஷ்  #ஓம்பர்வத்யாத்திரை
26.05.2024 முதல் 6.06.24 வரை 
#பயணஅனுபவக்குறிப்புகள்🕊️
#என்றும்அன்புடன்
#சுப்ராம்அருணாசலம்காரைக்கால்
🙏🏻🕉️🙏🏻🛐🙇🏻🕉️🙏🏻🙇🏻🛐🙏🏻🕉️🙇🏻🛐🙏🏻🕉️🙇🏻🛐🙏🏻

பதிவு : 8#தார்ச்சுலா #Dharchulaநாள்: 4️⃣29.05.24- புதன்பித்தோர்கார் - to தார்ச்சுலா (96 kms. 4-5 hrs.)

பதிவு : 8
#தார்ச்சுலா  #Dharchula
நாள்: 4️⃣
29.05.24- புதன்
பித்தோர்கார் -  to தார்ச்சுலா (96 kms. 4-5 hrs.)
(காலை 7.00 மணி உணவு முடித்து, பித்தோக்காரிலிருந்து தர்ச்சுலா  புறப்படுதல்)
- மதியம் 1.00 Dharchula  KMVN TRH வில் உணவு மற்றும் Hospital சென்று Medical Checkup. Inner Line Certificate பெறுதல்.
- Eve. Tea, Dinner, 
-யாத்திரா பற்றிய Briefing meeting. 
உணவு முடித்து இரவு தங்குதல்)

#பயணஅனுபவக்குறிப்புகள்🕊️

#DARCHULA

🏵️ #தார்ச்சுலா என்பது இந்தியாவின் வடக்கு மாநிலமான உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள பித்தோராகர் மாவட்டத்தில் உள்ள ஒரு நகரம் ஆகும், இது கடல் மட்டத்திலிருந்து 940 மீ உயரத்தில் அமைந்துள்ளது.

🏵️கைலாஷ்-மானசரோவர் யாத்திரை செல்லும் பாதையில் பித்தோராகர் நகருக்கு வடக்கே 92 கிமீ (57 மைல்) தொலைவில் தர்சூலா அமைந்துள்ளது.

 🏵️இது பித்தோராகாக்-லிபுலேக் பாஸ் நெடுஞ்சாலையில் (PLPH) அமைந்துள்ளது.

🏵️அனைத்து பக்கங்களிலிருந்தும் சிகரங்களால் சூழப்பட்டுள்ளது மற்றும் காளி நதி நடுவில் உள்ளது

💥 SARADA or காளி என்ற நதிக்கரையில் ஒரு பள்ளத்தாக்கில் அமைந்துள்ளது தார்ச்சுலா.

🏵️காளி நதி லிபுலேக் கணவாயில் இருந்து உருவாகிறது மற்றும் இந்தியா மற்றும் நேபாளத்தின் எல்லையை உருவாக்குகிறது. காளி நதி இரண்டு மலைகளுக்கு இடையில் இமாலயத்திலிருந்து பாய்ந்து வருகிறது. ஒரு புறம் பாரத தேசம் எதிர்புரம் நேப்பாள நாடு உள்ளது. இரண்டிற்கும் நடுவாக காளி நதி செல்கிறது.

💥Api மலைத்தொடர், இமயத்தில் உள்ள பல சிகரங்கள், மலைத் தொடர்கள் , இயற்கை அன்னையின் அழகினை இப்பகுதியில் காணலாம்.

🏵️தார்ச்சுலா  இமயமலைக்கு இடையேயான வர்த்தகப் பாதையில் உள்ள ஒரு பழங்கால வர்த்தக நகரமாகும்.

🏵️வர்த்தகம் பண்டமாற்று முறையை அடிப்படையாகக் கொண்டது மற்றும் தார்ச்சுலாவில் வசிப்பவர்களுக்கு ஒரே வருமான ஆதாரமாக இருந்தது. இங்கு 'டான்' என்று அழைக்கப்படும் தரைவிரிப்பு போன்ற உள்ளூர் கைவினைப் பொருட்கள், உணவு மற்றும் உடைக்காக திபெத்தியர்களுடன் பரிமாறப்பட்டன.

🏵️1962 இல் நடந்த இந்திய-சீனப் போருக்குப் பிறகு, திபெத்தியர்களுடனான அனைத்து வர்த்தக உறவுகளும் நிறுத்தப்பட்டன, இது தார்ச்சுலா மக்களுக்கு எண்ணற்ற கஷ்டங்களை ஏற்படுத்தியது. சிரமம் மக்கள் மாற்று வழிகளைத் தேடும் நிலைக்குத் தள்ளப்பட்டது. 

🏵️தற்போது உள்ளூர்வாசிகள் விவசாயம், சிறு தொழில்கள் மற்றும் கால்நடை வளர்ப்பில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டனர். அரசின் தலையீட்டால், ஊரில் நல்ல சுற்றுலா வசதிகள் உருவாகியுள்ளன.

💥 தற்போது, இது ஒரு முக்கியமான நகர். இதுதான் கைலாச பாதையில் வரும் தற்போதைய காலத்தில்  பெரிய நகர். எல்லாவித வசதிகளும் நிறைந்துள்ள, நெருக்கடி நிறைந்த நகரமாகக் காணப்படுகிறது.

#பயணஅனுபவக்குறிப்புகள்🕊️

💥 தார்ச்சுலாவில் பாரத ரானுவ அமைப்பின் ஒரு பகுதியான இந்தோ - திபெத்தியன் எல்லைப்பாதுகாப்புப் படையின் கேந்திரம் உள்ளது. இமாலயப்பகுதிகளின் முழு பாதுகாப்பும் இவர்கள்  கட்டுப்பாட்டில் உள்ளன. இவர்களின் சீரிய பணிகள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்பதையும் எவ்வளவு கடினமான பணி என்பதையும் நாம்  இந்தப் பயணத்தில் நேரில் அனுபவித்து உணரலாம். அவர்களுக்கு நமது நன்றிகள்.

💥தார்ச்சுலா மலைகளின் சரிவில் உள்ளப் பகுதி. இரண்டு மூன்று சிறிய அகலமான பாதைகள் இருந்தாலும், கைலாஷ் - மாசைரோவர் பாதை மிகவும் முக்கியமானது. ஏராளமான ஜீப் கள் உள்ளன. இமயப்பகுதிகளில் பயணம் செய்ய உதவுகின்றன. சிறிய ரக Van - Bus போக்குவரத்து வாகனங்கள் தார்ச்சுலாவிற்கு மேல் செல்ல இயலாது.

💥நெருக்கடியான பிரதான சாலை இந்தோ - நேப்பாள் சாலையில், கடைத்தெரு நடுவில் மகாத்மா காந்தியடிகள் சிலை ஒன்றும் வைக்கப்பட்டுள்ளது.

💥 நிறைய கடைகள் Hotels கள் உள்ளன.  ஏராளமான வாகனங்கள் உள்ளன. இந்த ஊர் வரை மட்டுமே சிறியரக வேன்கள் சிறியரக பேருந்துகள் வர முடியும். இதற்கு அப்பால் Bolero, போன்ற ஜீப் வாகனங்கள் மட்டுமே சாலைப் பயணத்திற்கு நிறைய  வாடகை வாகனங்கள் கிடைக்கின்றன.
தனிக்குழுவாக இயங்குகின்றனர். அவர்களுக்குள் Team உள்ளன.
நாங்கள், தார்ச்சுலாவிலிருந்து மேல செல்ல, எமது வாகன ஓட்டியிடம் அவர்கள் குழுவில் வந்து பணம் பெற்று பிறகு அனுமதிக்கின்றனர்.

💥 மேலும், கைலாச யாத்திரை தொடர Innner Line Permit இருந்தால் மட்டுமே அனுமதி என்பதால். இங்கு அதற்கு ஏற்பாடுகள் செய்து தருகிறார்கள். பரபரப்பும், கூட்டமும் நிறைந்து காணப்படுகிறது.

🌟தார்ச்சுலாவில் நாங்கள்  K M V N Tourist home, MANAS HOTEL என்ற வசதிகள் நிறைந்த பெரிய Hotel லில் தங்க வைக்கப்பட்டோம். வளைந்து பாய்ந்து ஓடும் காளி நதிக்கரையில் உள்ள பெரிய Hotel. மிகவும் அற்புதமான இடமாக உள்ளது. சுற்றிலும் இயற்கை காட்சிகள் அற்புதம்.

🌟மிகவும் சிறந்த முறையில் Hotel
பாராமரிக்கப்பட்டு வருகிறது.
இந்த இடம் மிக மிக முக்கிய இடம் என்பதால் பரபரப்பாக உள்ளது.

🌼நாங்கள் சென்றதும் முதலில் பழச்சாறு கொடுத்து உபசரித்தார்கள். 
அனைவருக்கும் தங்கும் இடம் ஒதுக்கப்பட்டது.

🌟மதிய உணவுக்குப் பிறகு, பயணிகள் அனைவருக்கும் மருத்துவ சோதனைக்காக அருகில் உள்ள Sub District Hospital, சென்றோம்.  அங்கு மருத்துவ சோதனை BP, Check up செய்து ஒரு சான்றிதழ் வழங்குகிறார்கள். மருத்துவ ஆலோசனைகளும் தருகிறர்கள்.
நமது Aadhar card கொண்டு செல்ல வேண்டும்.  முறையாக பதிந்து Documentation செய்து நமது KMVN Guide விடம் கொடுத்து விடுகின்றனர்.

💥இதற்குப் பிறகுதான் INNER PERMIT தருகிறார்கள்.  எல்லோருக்கும் தனித்தனியாக Mobile ல் அனுப்பி விடுகிறார்கள். இருப்பினும் ஒரு போட்டா காப்பி தனித்தனியாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். எங்கள் கைடு அனைவருக்கும் photo Copy ஒன்று எடுத்துக் கொடுத்தார்கள். பத்திரமாக கையில் வைத்துக் கொள்ள வேண்டும்.

💥அருகில் நேப்பாள நாடு இருப்பதால், சிலர், அங்கு சென்று Shopping செய்ய விரும்பியதால் அங்கும் சென்றோம்.

🏵️ காளி என்ற நதி தார்ச்சுலா பகுதியை இரு கரைகளிலும் இரண்டு நகரங்களாகப் பிரிக்கிறது. நதியின் - ஒன்று இந்தியாவில்; மற்றொன்று நேபாளத்தில். 

🏵️இரண்டு நகரங்களின் மக்கள் ஒரே மாதிரியான மரபுகள், கலாச்சாரம் மற்றும் வாழ்க்கை முறையைக் கொண்டுள்ளனர், 

🏵️மென்மையான எல்லையைக் கடக்க இந்தியர்களுக்கும் நேபாளிகளுக்கும் பாஸ்போர்ட் அல்லது விசா தேவையில்லை என்பதால் அவர்கள் ஆற்றின் குறுக்கே சுதந்திரமாக நகர்கிறார்கள். 

💥நமது பாரத ராணுவ Checkpost உள்ளது. அங்கு சென்று, நமது Aadhar card காண்பித்தால், அவர்கள் Register ல் பதிந்து கொண்டு நேப்பாள் செல்ல அனுமதிக்கின்றனர். 

💥ஒரு நீண்ட இரும்பு தொங்குபாலத்தில் நடந்து நேப்பாளம் சென்று வரலாம்.

💥நேப்பாளம் பக்கம் உள்ள பகுதியும் காளி நதி ஒட்டி பல்வேறு கடைகள் உள்ளன.

🌼ரெடிமேடு ஆடைகள், மற்றும் பல்வேறு விதமான பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன. நமது ஊர் விலைகளை விட மிக அதிகம்.

💥பாரதம் பக்கத்திலிருந்தே அதிக பொருட்கள் எடுத்துச் செல்லப்படுகின்றன.
பல பொருட்களை எடுத்துச்செல்ல அனுமதி கிடையாது. எந்த எந்த பொருட்கள் எடுத்து செல்லக்கூடாது என்று பாரதம் பக்கம் எழுதியும் வைத்துள்ளனர்.

🌟 பாரதம் பக்கம் சோதனைகள் செய்யப்பட்டாலும், நேப்பாள் சேர்ந்த பலர் சாமான்களை சிறு சிறு பைகளில் மூட்டையாகக் கட்டி தோளிலும், தலையிலும் சுமந்து அக்கரை செல்கிறார்கள்.

🌟நேப்பாள் அதிகாரிகளும் நுழைவுப்பகுதியில் அலுவலகம் வைத்து இருக்கின்றனர்.

💥நேப்பாளில் காளி நதி கரை ஓரம் 3 கி.மீ. தூரத்தில், சற்று உயரமான இடத்தில் மலைப்பகுதியில் ஒரு அம்மன் கோவில் இருக்கிறது. 

🌟 நாங்களும் அருகில் உள்ள தொங்குபாலம் கடந்து நேப்பாளம் சென்று கடைத்தெரு கண்டு திரும்பி ஹோட்டல் வந்தோம்.

🌼இரவு KMVN Tourist Manager, அடுத்த நாள் முதல் தொடர்ந்து 4 நாட்களுக்கு உரிய பயண திட்டம் குறித்து ஒரு நெடுவிளக்கம் (ஹிந்தியில்) கொடுத்தார்.
இந்த உரை நிகழ்வுக்குப் பின்   இரவு உணவு முடித்து  உறங்க சென்றோம்.

ஆதி கைலாஷ், ஓம் பர்வத் யாத்திராவில் தார்ச்சுலா முதல் தார்ச்சுலா வரை கவனத்தில் கொள்ள வேண்டிய சில முக்கிய குறிப்புகள்: 

💥INNER PERMIT Copy பயனம் முழுவதும் உடன் வைத்திருக்க வேண்டும். சுமார் 8 இடங்களில் Check செய்வார்கள். பிறகு, பயணம் தொடரும். இந்தியக் குடிமக்கள் மட்டுமே இந்த யாத்திரைக்கு அனுமதி'; என்பதையும் குறிப்பில் 

💥நம்முடைய  உடமைகளை Darchula வில் பிரித்து முக்கிய குளிர் தாங்கும் உடைகளுடன் + சில அவசியமான முக்கிய பொருட்கள் Medicine, Camera, Cell, Purse முதலியவைகள் மட்டுமே உடன் எடுத்துச் செல்லலாம்.  பெரிய Luggage unit ஐ தார்ச்சுலாவில் வைத்து விடலாம்.

💥அதிக பொருட்கள் எடுத்து செல்ல முடியாது. Bolero, போன்ற ஜீப்பில் 4 பேர் மட்டுமே பயணம் சென்று திரும்ப வேண்டும். Bolero | Campar ஜீப்பில் 4 பேரும் வசதியாக உட்கார்ந்து கொள்ள வேண்டும். பின் சீட்டில் நமது Luggage - Bags வைத்துக் கொள்ள அறிவுருத்தப்படுகின்றனர். எனவே தான்
4 பேரின் அதிக Luggages ஜீப்பின் கொள்ளலவுக்குத் தகுந்த  இடம் வேண்டியிருப்பதால் தான், தார்ச்சுலாவில் மீதி Luggages வைத்து விட வேண்டியிருக்கிறது.

💥பாதைகள் மிகவும் கடினம். சீதோஷன நிலை மாறிக் கொண்டே உள்ளதால், மிகவும் கவனம் தேவை.

💥சாலை ஓரங்கள் மிகவும் கவனம்.
படம் பிடிப்பதற்காகவோ, வேறு காரணங்களின் அடிப்படையில் அடிக்கடி இறங்க முயலாதீர்கள். சாலை ஓரங்களும், சாலைகளும் மிகவும் பள்ளம் / மோசம்.

💥எப்போதும் தனியாக எங்குமே செல்ல முயல வேண்டாம். பெரும்பாலும், மனிதர்கள் கூட்டம் குறைவுதான்.

💥 பயணம் செய்யும் போது ஒட்டுனர்களுடன் அதிகமாக Chatting செய்யாதீர்கள். அவர் கவனம் சிதராமல் இருக்க வேண்டும்.

💥தார்ச்சுலா முதல் குன்ஞ்ஜி வரையிலும், குன்ஞ்ஜி லிருந்து ஓம் பர்வத் செல்லும் பாதையும், மீண்டும் குன்ஞ்ஜி வந்து, தங்குவிட்டு,  அடுத்த நாள் அங்கிருந்து ஆதிகைலாஷ் சென்றவர வேண்டும். 

💥பாதைகளும்,மிகவும் குறுகியது. மன்சரிவுகள் மிக மிக அதிகம்.

💥மேலும், Border Road Organisation மூலம் பாதைகள் போட்டுக் கொண்டே உள்ளனர்.

💥பல இடங்கள் நல்ல அகலத்துடன், பாதுகாப்புடன் போடப்பட்டு வருகின்றன.

💥முழுவதும் சாலைப் பயணம்தான். குதிரை, டோலி தேவையில்லை.

🌼அடுத்த நாள் குன்ஞ்சி சென்று தங்கி ஓம்பர்வத் மற்றும் அதற்கு அடுத்த நாள் ஆதிகைலாஷ் தரிசித்து நேரடியாக குத்தி என்ற இடம் வழியாக மீண்டும் தார்ச்சுலா வந்து,  அவரவர் Bag களை திரும்ப எடுத்துக் கொள்ள வேண்டும்; என்பதால், எங்கள் முக்கிய உடமைகளை மட்டும் எடுத்துக் கொண்டு மற்ற உடைகள் முதலியவற்றை இங்கேயே பத்திரமாகவும், பாதுகாப்பாகவும், வைத்துக் கொள்ள செய்துவிடுகிறார்கள்.
  
🌼அடுத்த நாள் காலை உணவிற்குப் பிறகு, தார்ச்சுலாவிலிருந்து குன்ஞ்ஜி புறப்பட்டோம்.
🛐💚🤎💜❤️
பயணம் தொடருகிறது...... .....
#Uttarakhand   #ADIKAILASH  #OMPARVAT_YATRA_2024
#ஆதிகைலாஷ்  #ஓம்பர்வத்யாத்திரை
26.05.2024 முதல் 6.06.24 வரை 
#பயணஅனுபவக்குறிப்புகள்🕊️
#என்றும்அன்புடன்
#சுப்ராம்அருணாசலம்காரைக்கால்
🙏🏻🕉️🙏🏻🛐🙇🏻🕉️🙏🏻🙇🏻🛐🙏🏻🕉️🙇🏻🛐🙏🏻🕉️🙇🏻🛐🙏🏻

Pithoragarhபதிவு : 7நாள்: 4️⃣29.05.24- புதன் பித்தோர்கார் to தார்ச்சுலா (96 kms. 4-5 hrs.)

#Pithoragarh
பதிவு : 7
நாள்: 4️⃣
29.05.24- புதன்
பித்தோர்கார்  to தார்ச்சுலா (96 kms. 4-5 hrs.)
- காலை 7.00 மணி உணவு முடித்து,  தர்ச்சுலா  புறப்படுதல்.
 
- மதியம் 1.00 Dharchula  KMVN TRH வில் உணவு மற்றும் Hospital சென்று Medical Checkup. Inner Line Certificate பெறுதல்.
- Eve. Tea, Dinner, 
-யாத்திரா பற்றிய Briefing meeting. 
உணவு முடித்து இரவு தங்குதல்)

#பயணஅனுபவக்குறிப்புகள்🕊️

#பித்தோராகார் ( #Pithoragarh)

🏵️பித்தோராகர் என்பது இந்தியாவின் உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள பித்தோராகர் மாவட்டத்தில் உள்ள இமயமலை நகரமாகும். இது குமாவுன் பிரிவில் உள்ள மிகப்பெரிய மலை நகரமாகும். 

🏵️தேசிய நெடுஞ்சாலை 9 பித்தோராகர் வழியாக செல்கிறது.

🏵️ஹல்த்வானி மற்றும் தனக்பூர் ஆகியவை பித்தோராகருக்கு சாலை வழியாக நுழைவதற்கான இரண்டு நுழைவுப் புள்ளிகளாகும்.

🏵️இரண்டும் இரயில் சேவைகளால் இணைக்கப்பட்டுள்ளன, அருகிலுள்ள இரயில் நிலையங்கள் தனக்பூர் (151 கிமீ) மற்றும் கத்கோடம் (212 கிமீ) ஆகும்.

🏵️பித்தோராகர் உத்தரகாண்டின் மற்ற பகுதிகளுடன் அனைத்து வானிலையிலும் மோட்டார் வாகனங்கள் மூலம் இணைக்கப்பட்டுள்ளது.

🏵️பித்தோராகர் எந்த நேரடி ரயில் சேவைகளாலும் இணைக்கப்படவில்லை; இருப்பினும், இது சாலை மூலம் நன்கு இணைக்கப்பட்டுள்ளது, மேலும் இது ஒரு விமான நிலையத்தையும் கொண்டுள்ளது. 

🏵️நைனி சைனி விமான நிலையம் என்றும் அழைக்கப்படும் பித்தோராகர் விமான நிலையம் நகரின் வடகிழக்கில் 5 கிலோமீட்டர் (3.1 மைல்) தொலைவில் அமைந்துள்ளது. 

🏵️நிலச்சரிவுகள் மற்றும் மேக வெடிப்புகள், கோடை மழைக்காலத்தில் பெய்யும் கனமழையால் ஏற்படும், அடிக்கடி போக்குவரத்து நெட்வொர்க்குகள் குறுக்கிடுகின்றன.

🏵️இது சௌர் பள்ளத்தாக்கின் மேற்குப் பாதியின் மையத்தில் அமைந்துள்ளது.    
பள்ளத்தாக்கு சுமார் 50 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் பரவியுள்ளது.

🏵️பித்தோராகர் பருவமழையால் பாதிக்கப்படும் காலநிலையைக் கொண்டுள்ளது. 

🏵️ஏப்ரல் முதல் ஜூன் நடுப்பகுதி வரையிலான கோடைக்காலம் மிதமான வெப்பமாக இருக்கும், அவ்வப்போது இடியுடன் கூடிய மழை பெய்யும், அதே சமயம் ஜூன் நடுப்பகுதியிலிருந்து செப்டம்பர் நடுப்பகுதி வரையிலான பருவமழை கிட்டத்தட்ட தினமும் கனமழையுடன் ஈரப்பதமாக இருக்கும்

🏵️ஸ்கந்த புராணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளபடி, வடக்கே கைலாஷ் மலையிலிருந்து தெற்கே பாபர் & தேராய் வரை பரவியிருந்த மனஸ்கண்ட் பகுதியின் ஒரு பகுதியாக பித்தோராகர் நகரம் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகள் இருந்தன.

#பயணஅனுபவக்குறிப்புகள்🕊️

நாங்கள் தங்கியிருந்த KMVN hotel  Garden னில் உள்ள போர்டு:
(தமிழாக்கம்) :
"இமயமலையைக் காணவிட்டாலும், இமயமலையை சிந்திப்பவர்:
காசியில் பூரணவழிபாடு செய்தவரை விட பெரியவர்.

காலை சூரியனின் கதிர்களால்,
பணித்துளிகள் ஆவியாகி விடுவது போல
இமயமலையைப் பார்க்க, தரிசிக்க, மனிதகுலம் அறிந்தோ, அறியாமலோ செய்தபாவம் மறைந்துவிடும். "

💙❤️💜🤎💚
" காற்று எங்கே வீசுகிறது, 
தீர்மானங்களை எடுங்கள், 
மலைகள் பெருமை கற்பிக்கின்றன. 
ஏற்ற தாழ்வுகளும் வளைந்து நெளிந்து செல்லும் சாலைகளும் பக்தியின் தாளத்தில் பாடும் அந்த திவ்ய தேசத்தில் தியானம் செய்வதன் மூலம் நான் எப்பொழுதும் ஆசீர்வதிக்கப்படுகிறேன். இது என் தலைவிதி, என் அதிர்ஷ்டம்,

 நான் இந்த திவ்ய தேசத்தில் பிறந்தேன், இது என் கடமை, 
பூமி அன்னையின் பெயரில் ஒரு செடியை நட்டு, நான் உங்களுக்கு தலை வணங்கி ஆசீர்வதிக்கிறேன். 
இமயமலையை காப்பாற்ற உறுதிமொழி எடுப்போம்."
-தினேஷ் குஸ்னி
மேலாளர்
💚🤎💜❤️💙
KMVN  Tourist Rest House (Hotel) 
ULKA DEVI hotel -
அருகில் உள்ள இடங்கள்: 
மலைப்பிரதேசம் என்பதாலும், இந்த Hotel உயரமான இடத்தில் இருப்பதாலும், அற்புதமான உள்ளது. மேலும், அழகிய பூங்கள், தாவரங்கள் வைத்து நல்ல பாரமாரிப்பில் வைத்துள்ளனர்.

🌟காலையில் எழுந்து KMVN  Tourist Home 
அருகில் உள்ள சிற்றாலயங்கள் இரண்டும், பாரத ராணுவ வீரர்களின் நினைவாக அமைக்கப்பட்டிருந்த இடத்தையும் கண்டு வணங்கினோம்.

🛕Maa Ulka Devi Temple :

சிறிய ஆலயம்,  பராமரிப்பில் உள்ளது.  கருவரையில் அம்மன் சிலை. மலைப்பகுதியிலிருந்து இவ்வாலயம் வர படிகள் உள்ளன. இரண்டு பக்கங்களும் சிங்க சிலைகள் உள்ளன.  கருவரை சுற்றி வர வெளிப்பி, காரத்தில் தனியாக ஒரு மணி கட்டி வைத்திருக்கின்றனர்.  
இங்கிருந்து நகரின் தோற்றம் அருமையாக உள்ளது.  பக்தியுடன் வழிபட்டு செல்கிறார்கள்.
இந்த ஆலயத்தினை ஒட்டியே பாரத ராணுவ வீரர்கள் நினைவிடம் அமைந்துள்ளது.

🛕Hingla Maa Temple :

🌼சிறிய ஆலயம் ஆலயம். அரசு விருந்தினர் இல்லங்கள், Hotel கள் அருகில் உள்ளது. ஒரே ஒரு அம்மன் சிலை மிகச்சிறிய மண்டபம். அமைந்துள்ளது.
மலைப்பகுதியாக இருப்பதால், இங்கிருந்து கீழே உள்ள நகரம். அருமையான காட்சி

🌟காலையில் எல்லோரும் இணைந்து இந்த புனித யாத்திரை சிறப்பாக அமைய, இறை உணர்வுடன் நீண்ட வழிபாடுகள் செய்தோம்.
💥அற்புதமான, இறைவன் உறைவிடமான இமாலய மலையின் புனிதம் காக்க வேண்டி உறுதிமொழி எடுத்துக் கொண்டோம். மலையின் சுற்றுப்புறத்தை காக்க இமயமலையில், ஆதிகைலாஷ், மற்றும், ஓம்பர்வத் இடங்களில் மரக்கன்றுகள் நட வேண்டி, மரக்கன்றுகள் தந்தார்கள். 

🌟காலை உணவுக்கு பின், எங்கள் சிற்றுந்தில் புறப்பட்டு  #தார்ச்சுலா என்ற நகருக்குப் புறப்பட்டு சென்றோம்.

#JAULIJIBI
💥வழியில்,JAULIJIBI என்ற இடத்தில், கோரி கங்கா + காளி என்ற SARADA River சங்கமம்  பார்த்தோம். இது ஒரு முக்கிய இடமாகக் கருதப்படுகிறது.   

💥காளி அல்லது SARADA RIVER மிக முக்கியமான ஆறு. இது தேசிய எல்லையாகும். பாரதம் -நேப்பாளம்  எல்லை கோடாக கருதப்படுகிறது.

🌼இந்தப் பகுதியில் இருநாடுகளிலும் உள்ள மக்கள்  வருடத்தில் நவம்பர் மாதத்தில் வியாபார சந்தையில் ஒன்றாகக் கூடுகிறார்கள்.

🛕பிரமானந்த மகாராஜி என்ற சுவாமிகள் மூலம், ஜெளல்ஜிபி என்ற இந்த இடத்தில் உள்ள ஜ்வலேஸ்வர் மகாதேவ் என்ற ஆலயத்தின் புராதனத்தின் சிறப்பை உணர்த்தியுள்ளார்.

💥DARCHULA செல்லும் முன்  அருகில் vechicle செல்லும் அளவிற்கு பெரிய இரும்பு பாலம் SARADA (காளி) River மேல் போடப்பட்டு வருகிறது. இது அக்கரையில் உள்ள நேப்பாளத்தை பாரதத்துடன் இணைக்கிறது. கட்டுமான வேலைகள் முடியும் தருவாயில் உள்ளது.

பயணம் தொடருகிறது...... .....
#Uttarakhand   #ADIKAILASH  #OMPARVAT_YATRA_2024
#ஆதிகைலாஷ்  #ஓம்பர்வத்யாத்திரை
26.05.2024 முதல் 6.06.24 வரை 
#பயணஅனுபவக்குறிப்புகள்🕊️
#என்றும்அன்புடன்
#சுப்ராம்அருணாசலம்காரைக்கால்
🙏🏻🕉️🙏🏻🛐🙇🏻🕉️🙏🏻🙇🏻🛐🙏🏻🕉️🙇🏻🛐🙏🏻🕉️🙇🏻🛐🙏🏻

பதிவு - 5#Uttarakhand #ADIKAILASH #OMPARVAT_YATRA_2024#ஆதிகைலாஷ் #ஓம்பர்வத்யாத்திரை26.05.2024 முதல் 6.06.24 வரை CHITAI கொலு தேவதா ஆலயம்28.05.24- செவ்வாய்

பதிவு - 5
#Uttarakhand   #ADIKAILASH  #OMPARVAT_YATRA_2024
#ஆதிகைலாஷ்  #ஓம்பர்வத்யாத்திரை
26.05.2024 முதல் 6.06.24 வரை 
CHITAI கொலு தேவதா ஆலயம்
28.05.24- செவ்வாய் 
#பயணஅனுபவக்குறிப்புகள்🕊️

🛐பிரசித்தி பெற்ற Kainchi Dham என்ற ஊரில் உள்ள பிரபலமான ஹனுமன் ஆலயம் 
நீம் கரோலி பாபா ஆலயம் அடுத்து, அல்மோரா என்ற நகரம் தாண்டி சிட்டாய் (Chitai) என்ற இடத்தில் உள்ள  கொலு தேவதா ஆலயம்சென்று தரிசித்தோம்....

🛐இந்த ஆலயத்திற்கு 2022 ல்  ஏற்கனவே
வந்து தரிசனம் செய்து உள்ளோம். மீண்டும் மீள் தரிசனம் செய்ய இன்று இறையருள் கூட்டியது.

🏵️💮💮💮💮💮💮💮💮💮💮💮💮💮💮💮💮🏵️
இது பற்றிய நம்முடைய பயன அனுபவக் குறிப்புகள் (2022) தனி பதிவில் உள்ளது.
LINK:
https://www.facebook.com/share/p/8Wzg4c2GfDV1fZ8B/?mibextid=oFDknk

#uttrakhant tour_2022 
மீள்பதிவு
https://www.facebook.com/share/p/8Wzg4c2GfDV1fZ8B/?mibextid=oFDknk
#uttrakhant tour_2022 
#GOLU DEVA TEMPLE, CHITAI. #பயணஅனுபவக்குறிப்புகள்🕊️ 

🏵️போவாளி என்ற ஊரில் Hotel VISTA வில் தங்கியிருந்தோம். இங்கிருந்து  9-4-2022 காலையில் புறப்பட்டு, சுமார் 30 கி.மீ. தூரத்தில் உள்ள  Mukteshwar Maha Dev. ஆலயம் சென்றோம். 
ஆலயம் தரிசனம் முடிந்து, அங்கிருந்து சுமார் 75 கி.மீ தூரத்தில் உள்ள, மிகப்பழமையான ஜோகேஸ்வரர் என்ற புராதான ஆலயம் செல்ல புறப்பட்டோம். 

🛣️வழியில்,  Almora District ல் CHITAI என்று ஊர் சென்றோம்.  
உத்திரகாண்ட்டின் எங்கள் சுற்றுலாவின் எல்லாப் பாதைகளும் மலைப்பாதைகள் தான்,  சில இடங்கள் மிகக் குறுகலானது. எங்கள் வாகனம் சற்று நீளமானது. வசதியானது. 

🚍இதுவரை எந்த பிரச்சனையும் இல்லாமல் புதுடெல்லியிலிருந்து 7.4.2022 முதல் நன்றாக இயங்கிக்கொண்டு வந்தது. இப்போது நின்றுவிட்டது. எல்லாவித உடனடி முயற்சிகளும் செய்தார்கள்.
💢
நாங்கள் சாலையை ஒட்டி  ஒரு  ஆலயம் அமைந்துள்ளதைப் பார்த்தோம். இந்த ஆலயம் தரிசனம் எங்கள் Programmல் இல்லை. மதிய நேரம் மங்கிக் கொண்டிருந்தது. மாலைக்குள் ஜாகேஸ்வரர் சென்று விட வேண்டும். மிகவும் சிரமமான மலைப் பாதை என்பதால், என்ன செய்வது? என்று சுற்றுலா இயக்குனர் அருமை அண்ணா பாலு சார் சமயோஜிதமாக யோசித்துவிட்டு, வாகனத்தை நிறுத்திவிட்டு, அனைவரும் அருகில் உள்ள இந்த ஆலயத்தை சென்று தரிசித்து வாருங்கள் என்று அனுப்பிவைத்தார். 

🛕 இந்த ஆலயத்திற்கு சென்று தரிசித்து வருவோம் என்று முடிவு செய்து
நான் கடைசியாக பஸ் விட்டு இறங்க முயன்றுபோது,  Bus Driver மிகவும் அன்பானவர், நல்ல திறமையானவர்.
என் அருகில் வந்து, ரூ 51 என்னிடம் கொடுத்து இந்த ஆலயத்தில் செலுத்து விட சொன்னார். 

#GOLU DEVA TEMPLE, CHITAI. 

🏔️தேவபூமி எனப்படும் உத்தரகாண்ட் மாநிலத்தில் ஏராளமான  பிரசித்திப் பெற்ற  ஆலங்கள் உள்ளன.
Chittai GOLU MATHA TEMPLE,  ஒரு முக்கிய  பிரார்த்தனை தலம். 

🙇🏼‍♂️GOLU DEVA என்பவர் சிறந்த கடவுளாகப் போற்றப்படுகிறார்.  சிவனின் அவதாரம்:  தன்னுடைய வெள்ளைக் குதிரையில் விரைவில் வந்து, பக்தர்களின் வேதனையை போக்கி விடுவார். மலையில் தூரம் செல்பவர்களுக்கு உடன் பாதுகாப்பாக வந்து உதவி செய்யும் கடவுளாக வணங்கப்படுகிறார். 

⚜️மிகப் பழங் காலத்திலிருந்து  சிறந்த ராஜாவாக  வாழ்ந்தவர். தன்னுடைய பிரதேசத்தில் வாழும் மக்களின் தேவைகளை அறிந்து வேண்டிய உதவிகளை வேண்டுபவர்களுக்கு  இன்றும் செய்து வருகிறார். 

🎠🛎️தங்கள் வேண்டுதல் கோரிக்கைகளை எழுதி, ஒரு மணிகட்டி ஆலயத்தில் வைத்துவிடுகிறார்கள்.
தங்கள் அனத்து வேண்டுதல்களையும் நல்ல முறையில் முடித்தவுடன் இவ்வாலயம் வந்து வணங்கி செல்கிறார்கள். 

🌺யாககுண்டம் வைத்து, பூசை செய்தும் பிரார்த்தனைகள் நடை பெற்று வருகிறது. 

🔔🛎️ஆலயம் முழுவதும் எல்லா இடங்களிலும் மணிகள் சிறியது முதல், மிகப் பெரிய, அளவிலும் கட்டிவிடப்பட்டுள்ளது. அங்கேயே, நமது பிரார்த்தனைக்காக அனைத்து வித ஏற்பாடுகளும் செய்து தர பண்டாக்கள் உள்ளனர். கட்டிடங்களிலும் வசதிகள் உண்டு. 

🎠முக்கிய கருவரை கட்டிடத்தில் சிறிய உருவில் குதிரையில் அமர்ந்து இருக்கும் கோலத்தில் சுவாமி உள்ளார். 

❤️உங்கள் வேண்டுதலை எழுதி மணிகட்டுங்கள் அத்தனையும் நிறைவேறும் என்ற நம்பிக்கை.

💥 சிலர் பத்திரப் பேப்பர் STAMPED DOCUMENTS ல் தங்கள் வேண்டுதல் உறுதியை எழுதிக் கட்டி வைக்கும் முறை உள்ளது.

🙇🏼‍♂️நம்ம ஊர் வீரன், முனீஸ்வரர், குல தெய்வம், மற்றும் பிரார்த்தனை தலங்கள் போன்று, மக்களின் அன்றாட வாழ்வியல் பிரச்சனைகள் அடிப்படையில் நம்பிக்கை கொண்டு வழிபடுகின்ற சிறப்பான ஆலயங்களைப் போன்றது. 

🛕இந்திய மண் எங்கும் ஒரே மாதிரியான வாழ்வியல் வணக்கம். வேண்டுதல்கள்
இதுதான் இந்துக்களின் ஆன்மீகத்தின் நம்பிக்கை.  ஒற்றுமையான ஒரே மாதிரியான சிந்தனைகளின் அடிப்படையில் தான் வாழுகிறோம் என்று தெரிந்து கொள்ள வேண்டும். 

🛕ஆலயம் வணங்கி வந்தபோது, இந்த உணர்வு இருக்கிறது. நம்பிக்கைகள், பிரார்த்தனைகள் வெளிப்படுத்தும் விதம், வகை எல்லாம் ஒரே மாதிரியாகத்தான் வாழுகிறோம். இந்தியா முழுதுமே இப்படித்தான் வாழுகிறோம்.  இமயமலையிலும் இதே உணர்வுதான். 

🛕ஆலயத்தின் கருவரை செல்லும் வழியியல்லாமுமும், மணிகள். கருவரைப் பிரகாரம், பிரார்த்தனை செய்யும் மண்டபம் பிற பகுதிகள் அனைத்து இடங்களிலும் ஏராளமான மணிகளும் கோரிக்கைகளும் வைக்கப்பட்டுள்ளன. 

🚍பஸ் ஓட்டுநர் என்னிடம் கொடுத்த Rs.51ஐ உண்டியலில் செலுத்தி விட்டு,  அங்கிருந்து பிரசாதம் பெற்றுக் கொண்டு, ஒட்டுநரிடம் கொண்டு சென்றுக் கொடுத்த போது மிகவும் திருப்தியும், சந்தோஷத்தையும் அவர் அடைந்ததை உணர்ந்தேன். 

🛕நாங்கள் ஆலயம் முழுதும் சுற்றிப் பார்த்துவிட்டு அருகில் எதிர்புறம் இருந்த,
இன்னெரு ஆலயத்திற்கும் சென்றோம். 

🙏🏻 கருவரையில் அம்மன் அடுத்த பகுதியில் சிவலிங்கம், இன்னெரு பகுதியில், ராதா கிருஷ்ணன். அமைக்கப்பட்டுள்ளது. கருவரை கோபுரம் மிக உயரமாக  அமைத்துள்ளனர்.
🙇🏼‍♂️அருகில் சென்று வணங்கினோம். 

🚍காலம் அருமை கருதி, சுற்றுலா இயக்குநர் பாலு சார் அவர்கள்  எங்களுக்கு எங்களுக்கு வேறு புதிய வாகனத்தை ஏற்பாடு செய்துகொடுத்து, உடனடியாக ஜோகேஸ்வரர் ஆலயம் சென்று, மாலை பூசைகளில் கலந்து கொள்ள வைத்த நிகழ்வு மறக்க முடியாதது. 

🛕புராதானமான, ஜோகேஸ்வரர் ஆலயம் .... ....வரும் பதிவில். 

9.04. 2022🙏🏻நன்றி🙏🏻 
#ஆலயதரிசனம் 
#UTRAKANT_TOUR_2022
#என்றும்அன்புடன்
#சுப்ராம்_அருணாசலம்_காரைக்கால்
🏵️💮💮💮💮💮💮💮💮💮💮💮💮💮💮💮💮🏵️
28.05.24- செவ்வாய் 
#பயணஅனுபவக்குறிப்புகள்🕊️

இந்த முறை 28.05.24ல் சென்ற போது, பக்தர்கள் கூட்டம் மிகவும் அதிகமாக இருந்தது. சுவாமியை கருவரையில்  சென்று தரிசிக்க நீண்ட q வரிசை இருந்தது. சுமார் 1 - 2 மணி நேரம் நின்று தரிசனம் செய்து விட்டு, அதன் பிறகு ஜாகேஸ்வரர் புறப்பட்டோம்.
💜💚💙💛🤎❤️
பயணம் தொடருகிறது...... .....
#Uttarakhand   #ADIKAILASH  #OMPARVAT_YATRA_2024
#ஆதிகைலாஷ்  #ஓம்பர்வத்யாத்திரை
26.05.2024 முதல் 6.06.24 வரை 
#பயணஅனுபவக்குறிப்புகள்🕊️
#என்றும்அன்புடன்
#சுப்ராம்அருணாசலம்காரைக்கால்
🙏🏻🕉️🙏🏻🛐🙇🏻🕉️🙏🏻🙇🏻🛐🙏🏻🕉️🙇🏻🛐🙏🏻🕉️🙇🏻🛐🙏🏻

பதிவு - 4.#Uttarakhand #ADIKAILASH #OMPARVAT_YATRA_2024#ஆதிகைலாஷ் #ஓம்பர்வத்யாத்திரை26.05.2024 முதல் 6.06.24 வரை பதிவு : 4

பதிவு - 4.
#Uttarakhand   #ADIKAILASH  #OMPARVAT_YATRA_2024
#ஆதிகைலாஷ்  #ஓம்பர்வத்யாத்திரை
26.05.2024 முதல் 6.06.24 வரை 
பதிவு : 4
🙏🏻🕉️🙏🏻🛐🙇🏻🕉️🙏🏻🙇🏻🛐🙏🏻🕉️🙇🏻🛐🙏🏻🕉️🙇🏻🛐🙏🏻
நாள். 3️⃣
28.05.24.  Haldwani - KATHAGODAM-
Golu Deva Temple - Jageswar temple  - Pithorgarh
நாள் - 3.
28.05.24- செவ்வாய் Haldwani யிலிருந்து புறப்பட்டு,
காலை 6.30  காத்தகோடம் KMVN, TRH சென்று, Report செய்து காலை உணவு முடித்து,
காலை 8.00 Tempo traveller மூலம் Pithoragarh செல்லுதல்.
(196 Kms. 9-10 hrs .)
வழியில் காஞ்சிதாம், சிட்டாய் கொலு தேவதா ஆலயம், ஜாகேஸ்வர் தரிசித்தல்.
1.00 Meals at Jageswar 
 KMVN TRHல் மதிய உணவு முடித்து,
பித்தோர்கார் சென்று 
6.00  Eve. Tea & Dinner &  இரவு தங்குதல்.

#பயணஅனுபவக்குறிப்புகள்🕊️
 
💥 காலை 6.00 மணியளவில், நாங்கள் Haldwani யில் தங்கியிருந்த Hotel லிலிருந்து  Auto வில் புறப்பட்டு Kathgodam town மெயின் Road ல் அமைந்துள்ள 
Kumaon Mandal Vikas Nigam,
(A unit  undertaken by Uttarakhand State Government) அலுவலகம் சென்று Report செய்து கொண்டோம்.

🌼இந்த யாத்ரா முமுவதும் இவர்கள் ஏற்பாடு செய்து ஏற்று சிறப்பாக  நடத்துகிறார்கள்.

🌼நாங்கள் ஏற்கனவே அனுப்பிய ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு, ஒரு யாத்தரா வழிகாட்டி நியமித்து உடன்வர ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன.

💥அவர்கள் Kathagodam Tourist Rest House சென்றதும், எங்களை வரவேற்று, காலை காபி, காலை உணவு, கொடுத்து  ஓம்பர்வத் மற்றும் ஆதிகைலாஷ் யாத்திரையில் கலந்து கொள்ளும் ஒவ்வொருவருக்கும் நல்ல வரவேற்பு செய்தார்கள்.
எங்களுடன், மகாராஷ்ட்ராவிலிருந்து வந்திருந்த பக்தர்களும் இந்த யாத்ராவில் இணைந்து கொண்டார்கள். 

💥நாங்கள் இந்த 2024 ம் ஆண்டின் 6வது பேட்ச். ஒரு நாளில் சுமார் 35 நபர்கள் மட்டுமே ஒரு பேட்சில் அனுமதிக்கப்படுகிறார்கள். எங்கள் குழுவில் மொத்தம் 33 நபர்கள்  கலந்து கொண்டோம்.

💥இந்த (2024) ஆண்டு மொத்தம் 500 பேர்கள் விண்ணப்பம் பெறப்பட்டு பரிசீலித்து அனுமதிக்கப்படுகின்றனர். யாத்ரா ஏப்ரல் கடைசியில் துவங்கி, ஜூன்  மாதம் வரையிலும், மீண்டும் மழை காலம் முடிந்து, இரண்டு மாதங்கள் அனுமதி உண்டு. முன்பதிவு மிகவும் அவசியம்.

💥அனைவரும் காலை உணவுக்குப் பிறகு ஒவ்வொருவருக்கும் மாலை மரியாதை செய்யப்பட்டு, முறையாக  வழியனுப்பி வைக்கப்பட்டோம்.

💥 28.05.24 அன்று Tempo Traveller / சிறிய ரக பேருந்துகள் மூலம் அனைவரும் பித்தோர்கார் அடைந்தோம்.
வழியில்,
பீம்தால், போவாளி, வழியாக 
KAINCHI என்ற ஊர் சென்றோம்.

💥 பிரதான சாலையை ஒட்டி யே உள்ள மிகவும் பிரசித்தி பெற்ற Kainchi Dham என்ற ஊரில் உள்ள பிரபலமான ஹனுமன் ஆலயம் சென்றோம்.

நீம் கரோலி பாபா ஆலயம் உள்ளது.
இன்று செவ்வாய்க்கிழமை என்பதால் மிகவும் அதிக பக்தர்கள் கூட்டம். மிக நீண்ட வரிசை. இந்த ஆலயம் உத்திரகாண்ட் மாநிலத்தின் மிக முக்கிய ஆன்மீக தலங்களில் ஒன்றாக உள்ளது.

🏵️💮💮💮💮💮💮💮💮💮💮💮💮💮💮💮💮🏵️
இவ்வாலயம் பற்றிய நம்முடைய பயன அனுபவக் குறிப்புகள் தனி பதிவில் உள்ளது.

LINK:
https://www.facebook.com/share/p/DYgAPvj4UVg35xjW/?mibextid=oFDknk
🏵️💮💮💮💮💮💮💮💮💮💮💮💮💮💮💮💮🏵️
Neem Karoli Baba or Neeb Karori Baba :
Born: 1900, Akbarpur
Died: 11 September 1973, Vrindavan
Full name: Lakshmi Narayan Sharma
Guru: Hanuman
Parents: Durga Prasad Sharma
Children: Aneg Singh Sharma, Dharma Narayan Sharma, Girija Bhatele 

His ashrams are in Kainchi, Vrindavan, Rishikesh, Shimla, Neem Karoli village near Khimasepur in Farrukhabad, Bhumiadhar, Hanumangarhi, Delhi in India and in Taos, New Mexico, US. 

Neem Karoli Baba or Neeb Karori Baba was a Yogi, Saintly being and a devotee of the Hindu deity Hanuman. He is prominently known for being a Guru of a number of American hippies who traveled to India in the 1960s and 1970s.
🏵️💮💮💮💮💮💮💮💮💮💮💮💮💮💮💮💮🏵️
தமிழில் .....
நீம் கரோலி பாபா அல்லது நீப் கரோரி பாபா:
பிறப்பு: 1900, அக்பர்பூர்
இறப்பு: 11 செப்டம்பர் 1973, விருந்தாவனம்
முழுப்பெயர்: லட்சுமி நாராயண் சர்மா
குரு: அனுமன்
பெற்றோர்: துர்கா பிரசாத் சர்மா
குழந்தைகள்: அனேக் சிங் சர்மா, தர்ம நாராயண் சர்மா, கிரிஜா பட்டேலே 

இவருடைய ஆசிரமங்கள் இந்தியாவில் உள்ள ஃபரூகாபாத், பூமிதார், ஹனுமன்கர்ஹி, தில்லி மற்றும் அமெரிக்காவின் நியூ மெக்சிகோவில் உள்ள தாவோஸில் உள்ள கைஞ்சி, பிருந்தாவன், ரிஷிகேஷ், சிம்லா, கிமாஸ்பூருக்கு அருகிலுள்ள நீம் கரோலி கிராமத்தில் உள்ளன. 

நீம் கரோலி பாபா அல்லது நீப் கரோரி பாபா ஒரு யோகி, துறவி மற்றும் இந்து கடவுளான ஹனுமானின் பக்தர். 1960கள் மற்றும் 1970களில் இந்தியாவுக்குப்  பயணம் செய்த பல அமெரிக்க ஹிப்பிகளின் குருவாக அவர் பிரபலமாக அறியப்படுகிறார்.

ஆப்பிள் போனும், FACE BOOK  பற்றி தெரிந்தவர்கள் தொடரலாம்.......
🏵️💮💮💮💮💮💮💮💮💮💮💮💮💮💮💮💮🏵️
Steve Jobs -  CEO of APPLE iPhone. :

Steve Jobs was a charismatic pioneer of the personal computer era. With Steve Wozniak, Jobs founded Apple Inc. in 1976 and transformed the company into a world leader in telecommunications. Widely considered a visionary and a genius, he oversaw the launch of such revolutionary products as the iPod and the iPhone. Apple iPhone. 

Steve Jobs, along with his friend Dan Kottke, traveled to India in April 1974 to study Hinduism and Indian spirituality; they planned also to meet Neem Karoli Baba, but arrived to find the guru had died the previous September.

 Hollywood actress Julia Roberts was also influenced by Neem Karoli Baba. 
🏵️💮💮💮💮💮💮💮💮💮💮💮💮💮💮💮💮🏵️
தமிழிலில் .....
ஸ்டீவ் ஜாப்ஸ் - ஆப்பிள் ஐபோன் தலைமை நிர்வாக அதிகாரி :

ஸ்டீவ் ஜாப்ஸ், தனது நண்பர் டான் கோட்கேவுடன், ஏப்ரல் 1974 இல் இந்து மதம் மற்றும் இந்திய ஆன்மீகத்தைப் படிக்க இந்தியாவுக்குப் பயணம் செய்தார்; அவர்கள் நீம் கரோலி பாபாவை சந்திக்கவும் திட்டமிட்டனர், ஆனால் முந்தைய செப்டம்பரில் குரு இறந்துவிட்டதைக் கண்டுபிடிக்க அவர்கள் வந்தனர். 

மேலும், ஹாலிவுட் நடிகை ஜூலியா ராபர்ட்ஸும் நீம் கரோலி பாபாவால் ஈர்க்கப்பட்டவர்களே.
🏵️💮💮💮💮💮💮💮💮💮💮💮💮💮💮💮💮🏵️
Mark Zuckerberg: CEO of FACE BOOK 

The Indian temple Steve Jobs advised Mark Zuckerberg to visit
Mark Zuckerberg told PM Modi that he visited Kainchi Dham Ashram during early days of Facebook, at the behest of Steve Jobs. 

During PM Narendra Modi's recent US visit, Facebook founder Mark Zuckerberg mentioned that he had visited a temple in India during the initial days of Facebook on the advice of late Apple founder Steve Jobs, according to an Economic Times report.  

The temple Jobs was talking about is Kainchi Dham Ashram in Nainital, Uttarakhand. He himself had visited the temple during the 1970s. 

Zuckerberg arrived in Pantnagar, about 65 km from Nainital, and drove to Neem Karoli baba's ashram. 

The baba who died in 1973 continues to enchant several high-profile Americans. 

Jobs is said to have got the vision for creating Apple after he visited the Kainchi Dham ashram. 

"He (Jobs) told me that in order to reconnect with what I believed as the mission of the company I should visit this temple that he had gone to in India, early on in his evolution of thinking about what he wanted Apple and his vision of the future to be," Zuckerberg told Modi at a town hall meeting. 

"So I went and I travelled for almost a month, and seeing people, seeing how people connected, and having the opportunity to feel how much better the world could be if everyone has a strong ability to connect reinforced for me the importance of what we were doing and that is something I've always remembered over the last 10 years as we've built Facebook." 

Zuckerberg had to extend his stay in the ashram to two days after a storm in Pantnagar hit flights schedule.  
🏵️💮💮💮💮💮💮💮💮💮💮💮💮💮💮💮💮🏵️
தமிழில் .....
மார்க் ஜுக்கர்பெர்க்: FACE BOOKன் CEO 

ஸ்டீவ் ஜாப்ஸ் இந்தியக் கோவிலுக்குச் செல்லுமாறு மார்க் ஜுக்கர்பெர்க்கை அறிவுறுத்தினார்.
ஃபேஸ்புக்கின் ஆரம்ப நாட்களில் ஸ்டீவ் ஜாப்ஸின் உத்தரவின் பேரில் கைஞ்சி தாம் ஆசிரமத்திற்குச் சென்றதாக மார்க் ஜூக்கர்பெர்க் பிரதமர் மோடியிடம் கூறினார். 

பிரதமர் நரேந்திர மோடியின் சமீபத்திய அமெரிக்கப் பயணத்தின் போது, ​​ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூக்கர்பெர்க், மறைந்த ஆப்பிள் நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸின் ஆலோசனையின் பேரில், ஃபேஸ்புக்கின் ஆரம்ப நாட்களில் இந்தியாவில் ஒரு கோவிலுக்குச் சென்றதாக எகனாமிக் டைம்ஸ் அறிக்கை குறிப்பிட்டுள்ளது.  

உத்தரகண்ட் மாநிலம் நைனிடாலில் உள்ள கைஞ்சி தாம் ஆசிரமம் பற்றிப் பேசிக்கொண்டிருந்த கோயில் வேலைகள். 1970களில் அவரே கோயிலுக்குச் சென்றிருந்தார். 

நைனிடாலில் இருந்து சுமார் 65 கி.மீ தொலைவில் உள்ள பந்த்நகருக்கு வந்த ஜுக்கர்பெர்க், நீம் கரோலி பாபாவின் ஆசிரமத்திற்கு காரில் சென்றார். 

1973 இல் இறந்த பாபா பல உயர்மட்ட அமெரிக்கர்களை தொடர்ந்து மயக்கி வருகிறார். 

கைஞ்சி தாம் ஆசிரமத்திற்குச் சென்ற பிறகு, ஆப்பிள் நிறுவனத்தை உருவாக்கும் பார்வையை ஜாப்ஸ் பெற்றதாகக் கூறப்படுகிறது. 

"அவர் (வேலைகள்) என்னிடம், நிறுவனத்தின் பணி என நான் நம்பியதை மீண்டும் இணைக்க, அவர் ஆப்பிள் மற்றும் அவரது பார்வை பற்றி சிந்திக்கும் அவரது பரிணாம வளர்ச்சியின் ஆரம்பத்தில், அவர் இந்தியாவில் சென்ற இந்த கோவிலுக்கு செல்ல வேண்டும் என்று என்னிடம் கூறினார். எதிர்காலம் இருக்கப்போகிறது" என்று 

டவுன் ஹால் கூட்டத்தில் ஜுக்கர்பெர்க் மோடியிடம் கூறினார். 

"எனவே நான் சென்றேன், நான் கிட்டத்தட்ட ஒரு மாதம் பயணம் செய்தேன், மக்களைப் பார்த்தேன், மக்கள் எவ்வாறு இணைந்திருக்கிறார்கள் என்பதைப் பார்த்தேன், ஒவ்வொருவருக்கும் இணைக்கும் வலிமை இருந்தால் உலகம் எவ்வளவு சிறப்பாக இருக்கும் என்பதை உணரும் வாய்ப்பைப் பெற்றதன் முக்கியத்துவத்தை எனக்கு வலுப்படுத்தியது. நாங்கள் ஃபேஸ்புக்கை உருவாக்கியதை கடந்த 10 ஆண்டுகளாக நான் எப்போதும் நினைவில் வைத்திருக்கிறேன். 

பந்த்நகரில் ஏற்பட்ட புயல்  தாக்கியதை அடுத்து, ஜுக்கர்பெர்க் ஆசிரமத்தில் தங்கியிருப்பதை இரண்டு நாட்களுக்கு நீட்டிக்க வேண்டியிருந்தது.
...  ...  ... ... ... .... ..  ...  ... ... ... .... ..  ...  ... ... ... .... 
💜💚💛🤎❤️
(நன்றி🙏🏻 தகவல்கள். வலைதளங்கள்)
❤️🤎💛💚💜💙
இதற்கு அடுத்தது, அல்மோரா என்ற நகரம் தாண்டி சிட்டாய் (Chittai) என்ற இடத்தில் உள்ள கொலு தேவதா ஆலயம் சென்று தரிசித்தோம்.......

பயணம் தொடருகிறது...... .....

💙💜💛🤎❤️💚
#Uttarakhand   #ADIKAILASH  #OMPARVAT_YATRA_2024
#ஆதிகைலாஷ்  #ஓம்பர்வத்யாத்திரை
26.05.2024 முதல் 6.06.24 வரை 
#பயணஅனுபவக்குறிப்புகள்🕊️
#என்றும்அன்புடன்
#சுப்ராம்அருணாசலம்காரைக்கால்
🙏🏻🕉️🙏🏻🛐🙇🏻🕉️🙏🏻🙇🏻🛐🙏🏻🕉️🙇🏻🛐🙏🏻🕉️🙇🏻🛐🙏🏻

பதிவு : 3.#Uttarakhand #ADIKAILASH #OMPARVAT_YATRA_2024 - KMVN #ஆதிகைலாஷ் / #ஓம்பர்வத் யாத்தரா :26.05.2024 முதல் 6.06.24 வரை

பதிவு : 3.
#Uttarakhand   #ADIKAILASH  #OMPARVAT_YATRA_2024  - KMVN 
#ஆதிகைலாஷ்   /  
#ஓம்பர்வத் யாத்தரா :
26.05.2024 முதல் 6.06.24 வரை

ஶ்ரீ சுந்தராம்பாள் உடனாகிய ஸ்ரீகைலாசநாதர் பேரருளால், இமயமலையில் உள்ள ஓம்பர்வத், மற்றும் பஞ்ச கைலாசங்களில் இரண்டாவதான ஆதிகைலாஷ் என்ற புனித இடங்களை கண்டு தரிசிக்க அருள் பெற்றோம்.

நாங்கள் பெற்ற அனுபவங்களின் குறிப்புகளில் சிலவற்றை மட்டும் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். 

நன்றி🙏🏻🙇🏻

#பயணஅனுபவக்குறிப்புகள்🕊️

KUMAN MANDAL VIKAS NIGAM (Uttarakhand State undertaking unit) 

🇮🇳  உத்திரகாண்ட் அரசிற்கு கட்டுப்பட்ட இந்த தனி அமைப்பு, இந்த பயண ஏற்பாடுகள் முழுவதும் ஏற்று நடத்துகிறது.

💥இவர்களிடம் முன்னதாக on Line மூலம் தொடர்பு கொண்டு, அனைத்து விண்ணப்பங்களையும் அதற்குரிய இணைப்புப் படிவங்கள், மருத்துவ சான்றிதழ், Stumped Agreement, passport அல்லது காவல் துறை அனுமதி, மற்றும் ஆதார் முதலிய ஆவணங்களுடன், பதிவுக் கட்டணம் ரூ 40,000/- (8 நாட்கள் - பயணத் திட்டம்) அனுப்பி உரிய ரசீதும், உத்திரவும் முன்னதாகப் பெற்றுக் கொள்ள வேண்டும். இது மிக மிக முக்கியம். 

🌟இதற்குப் பிறகு  சிறப்பு அனுமதி, INNER LINE PERMIT, மற்றும், தார்ச்சுலாவில் மருத்துவ சான்றிதழ் பெறவும் இவர்கள் உதவுகிறார்கள்.  INNER PERMIT இருந்தால் மட்டுமே தொடர்ந்து பயணம் செய்ய அனுமதிப்பார்கள். பயணம் முழுவதும் அவரவர் கையில் வைத்திருக்க வேண்டியது அவசியம்.

🌟மேலும், தங்குமிடம் அனைத்தும், KMVNன் Tourist  Rest House. சில இடங்கள் TENT Camps.  அருமையான வரவேற்பு;
வசதியான தங்குமிடங்கள், சிறப்பான  உணவு ஏற்பாட்டுடன் தயாராக வைத்துள்ளார்கள். 

💥போக்குவரத்து, கைடு, முதலிய அனைத்து ஏற்பாடுகளும் அவர்கள் செய்து தருகிறார்கள். எல்லா வசதிகளுக்கும் சேர்த்து மொத்தக் கட்டணம் ரூ 40,000/- எட்டு நாட்கள் (Kathakodam to Kathakodam) கொடுத்தால் போதுமானது. 

🌟நாங்கள் தேர்வு செய்த, எட்டு நாட்கள் கொண்ட  (28.05.24 முதல் 5.06.24 வரை) காத்கோடம் தொடங்கி  திரும்ப வந்து காலை உணவு முடித்து காத்கோடத்தில் வழி அனுப்பி வைக்கின்றனர்.  அங்கிருந்து டெல்லி வந்து அவரவர்  வசதிபடி ஊருக்கு வந்து சேர்ந்தோம்.

💥இந்த பயணம் முழுவதும் அனைத்து ஏற்பாடுகள் உணவு, போக்குவரத்து, தங்குமிடம், கைடு, முழுவதும் இவர்கள் செய்கிறார்கள். 

🌟State Govt. எல்லாவற்றிற்கும்  உதவி செய்வதால், இந்தக்கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

🙇🏻🙏🏻மேலும், இந்த பயணம் முழுவதையும் மிகவும் அற்புதமாக ஏற்பாடு செய்து, அனத்து உதவிகளும் செய்து, எமக்கு துணையிருந்து நடத்திக் கொடுத்த திரு S.R. பாலசுப்பிரமணியன், அவர்கள் SUJANA TOUR, WEST MAMBALAM, CHENNAI அவர்களுக்கும், அவர்கள் குடும்பத்தினருக்கும், உடன் பயணித்த சகோதர நட்புகளுக்கும் மிக்க நன்றி🙏🏻

💜🤎💛💙💚
🙏🏻🕉️🙏🏻🛐🙇🏻🕉️🙏🏻🙇🏻🛐🙏🏻🕉️🙇🏻🛐🙏🏻🕉️🙇🏻🛐🙏🏻

#பயணஅனுபவக்குறிப்புகள்🕊️
முதல் நாள்.1️⃣ சென்னை - டெல்லி - ரயில் பயணம்
26.05.24 - ஞாயிறு - 6.05 காலை
சென்னை - Central - ராஜஸ்தானி எக்ஸ்பிரஸ் - புறப்பாடு.
🙏🏻🕉️🙏🏻🛐🙇🏻🕉️🙏🏻🙇🏻🛐🙏🏻🕉️🙇🏻🛐🙏🏻🕉️🙇🏻🛐🙏🏻

#பயணஅனுபவக்குறிப்புகள்🕊️
🚉ராஜஸ்தானி எக்ஸ்பிரஸ் 12433
காலை 5.05 மணிக்குப் சென்னை Central லிருந்து புறப்பட்டோம். பயண சீட்டில் உணவு option கொடுத்திருந்ததால், பயணம் முழுவதும் முழு வேளை 
ரயிலில் IRCTC மூலம் உணவும், நாள் ஒன்றுக்கு தன்னீர் பாட்டில் ஒன்றும், வழங்கினார்கள்.  இந்த ரயிலில், சென்னையிலிருந்து புதுடெல்லி செல்லும் கால அளவு மிகக்குறைவு, மொத்தம் 10 நிறுத்தங்கள் மட்டுமே. Premium Rail என்பதால், பணம் அதிகம்.
🙏🏻🕉️🙏🏻🛐🙇🏻🕉️🙏🏻🙇🏻🛐🙏🏻🕉️🙇🏻🛐🙏🏻🕉️🙇🏻🛐🙏🏻
நாள்.2️⃣ டெல்லி - ஹல்ட்வாணி (காத்தகோடம்)
27.05.24 - திங்கள்
காலை - 10.30 டெல்லி நிஜாமுதின் நிலையம் - ஹோட்டல் ஆனந்து - ஓய்வு - உணவு
மாலை - 4.00 டெல்லி ரயில் நிலையம்
15035 சம்பர்க் கிராந்தி எஸ்பிரஸ் - 
காத்தகோடம் - புறப்பாடு - ஹல்ட்வாணி -இரவு தங்கல்
🙏🏻🕉️🙏🏻🛐🙇🏻🕉️🙏🏻🙇🏻🛐🙏🏻🕉️🙇🏻🛐🙏🏻🕉️🙇🏻🛐🙏🏻
#பயணஅனுபவக்குறிப்புகள்🕊️
நாள்: 2. 
டெல்லி - (காத்தகோடம்) ஹல்ட்வானி
27.05.24 திங்கள்

🏨காலை 10.30 மணி அளவில் டில்லி நிஜாமுதின் நிலையத்தை அடைந்து,
அங்கிருந்து Tempo மூலம்  
ஆனந்து ஹோட்டல் 11.45 அளவில் அடைந்து ஓய்வு எடுத்தோம்.

🌼சிலர் பக்கத்தில் உள்ள சாந்தினி சவுக் என்ற இடத்தில் MONDAY MARKET சென்று Shopping செய்து வந்தார்கள்.

🏵️மதிய உணவு ஹோட்டலில் முடித்துக் கொண்டு, டில்லி (old) ரயில்வே நிலையத்தை மாலை 3.45 க்கு அடைந்தோம்.

🌟டெல்லி - காத்கோடம் செல்லும் 15035 சம்பர்க் கிராந்தி எக்ஸ்பிரஸ் ரயிலில்
AC Chair car ticket முன்பே முன்பதிவு செய்யப்பட்டிருந்ததால், பயணம் வசதியாக இருந்தது. இந்த பகுதியில் ரயில் போக்குவரத்து மிக முக்கியமானது என்பதால், மிக மிக அதிக கூட்டம் இந்த ரயிலுக்காக  காத்திருக்கிறார்கள்.

🌼டெல்லி ரயில் நிலையத்தில் இந்த ரயில் 3வது பிளாட்பாரத்தில் 3.15 மணி அளவில் காத்தகோடத்திலிருந்து வந்து உடனடியாக 4.00 மணிக்கு காத்தகோடம்  புறப்படுகிறது. 

🌟இதில் பயணம் செய்தோம்.
இரயில் மொராதாபாத் என்ற இடத்தில் சென்ற போது, இரயிலிலேயே உணவு எடுத்துக் கொண்டோம். 

🏵️எல்லா நிலையங்களிலும் நின்று செல்வதாலும், வேகம் குறைவு என்பதாலும் பயண நேரம் மிகவும் அதிகமாக உள்ளது.

🌼எனவே, 27.05.24 இரவு 10.40 அளவில் #ஹல்ட்வானி   #HALDWANI சென்று சேர்ந்தவுடன், அங்கேயே இறங்கிக் கொண்டோம்.

🌟ஹல்ட்வாணி ஊரில் இருந்து காத்தகோடம் 5 கி.மீ.தூரத்தில் உள்ளது.

 🏵️மேலும் இது பெருநகரமாக இருப்பதால், இங்கே தங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.
🌼Haldwani Railway நிலையம் இறங்கினோம். அங்கு Auto மிகவும் அதிகமாக உள்ளதால்
Auto மூலம் Hotel சென்றோம்.

🏵️CASTLE INN என்ற Hotelலில் தங்கினோம்.
நல்ல வசதியாக இருந்தது.

(அடுத்து நாள் காலையில் எழுந்து #உடனடியாக அலுவலகத்தில்Auto மூலம் காத்தகோடம் சென்று, KMVN, , அவர்கள் கேட்டபடி Report செய்து கொண்டோம்)

🙏🏻🕉️🙏🏻🛐🙇🏻🕉️🙏🏻🙇🏻🛐🙏🏻🕉️🙇🏻🛐🙏🏻🕉️🙇🏻🛐🙏🏻
#HALDWANI
🏝️ #ஹல்த்வானி 
ஹல்த்வானி (குமாவோனி: Haldvānī) குமாவோனின் மிகப்பெரிய நகரம். இது இந்திய மாநிலமான உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ளது.

🏝️டேராடூன் மற்றும் ஹரித்வாருக்கு அடுத்தபடியாக உத்தரகாண்டில் 
 மூன்றாவது அதிக மக்கள் தொகை கொண்ட நகரம் மற்றும் மிகப்பெரிய வணிக சந்தையாகும். ஹல்த்வானி உத்தரகாண்டின் நிதித் தலைநகராகக் கூறப்படுகிறது.

🏝️கௌலா ஆற்றின் கரையில் இமயமலை அடிவாரத்தில் உள்ள பாபர் பகுதியில் அமைந்துள்ளது. ஹல்த்வானி நகரம் 

🏝️மாநிலத்தின் வணிக, பொருளாதார மற்றும் தொழில்துறை நடவடிக்கைகள் அதிகம். ஹல்த்வானி நைனிடால் மாவட்டத்தில் அமைந்துள்ளது மற்றும் அதன் எட்டு துணைப்பிரிவுகளில் ஒன்றாகும்.

🏝️குமாவோன் இமயமலையின் அடிவாரத்தில் அமைந்துள்ள ஹல்த்வானியின் காத்கோடம் சுற்றுப்புறம் "குமாவோனுக்கான நுழைவாயில்" என்று அழைக்கப்படுகிறது.

🏝️வடக்கே ஷிவாலிக் மலைகளுக்கும் தெற்கே ருத்ராபூரின் தெராய் பகுதிக்கும் இடையில் அமைந்துள்ளது.

🏝️"ஹல்ட்வானி" என்ற பெயர் குமாவோனி வார்த்தையான "ஹல்டு-வானி" (அதாவது "ஹால்டு காடு") என்பதன் ஆங்கிலப் பதிப்பாகும், இது தாவரவியலாளர்களால் ஹால்டினா கார்டிஃபோலியா என அறியப்படும் "ஹல்டு" (கடம்ப) மரத்தின் பெயரால் அழைக்கப்படுகிறது. விவசாயம் மற்றும் குடியேற்றத்திற்காக இப்பகுதி காடுகளை அழிப்பதற்கு முன்பு ஹால்டு மரங்கள் நகரைச் சுற்றி ஏராளமாக காணப்பட்டன.

🏝️சராசரி நிலம் கடல் மட்டத்திலிருந்து 424 மீ (1,391 அடி) உயரத்தில் உள்ளது.

🙏🏻🕉️🙏🏻🛐🙇🏻🕉️🙏🏻🙇🏻🛐🙏🏻🕉️🙇🏻🛐🙏🏻🕉️🙇🏻🛐🙏🏻
#KATHGODAM
#கத்கோடம் #Kathgodam

💥கத்கோடம் என்பது இந்தியாவின் உத்தரகண்ட் மாநிலத்தின் நைனிடால் மாவட்டத்தில் உள்ள ஹல்த்வானி நகரின் புறநகர்ப் பகுதியாகும்.

🏵️இது ஹல்த்வானி-கத்கோடம் என்ற இரட்டை நகரத்தின் ஒரு பகுதியாக இருந்தது, உடனடியாக ஹல்த்வானிக்கு வடக்கே உள்ளது. குமாவோன் இமயமலையில் இருந்து பெறப்பட்ட வனப் பொருட்களுக்கான முக்கியமான சேகரிப்பு மையங்களில் இதுவும் ஒன்றாகும்.

🌼மரக் கிடங்கு என்று பொருள்படும், கத்கோடம் 1901 இல் 375 மக்கள்தொகை கொண்ட ஒரு சிறிய கிராமமாக இருந்தது, இருப்பினும் 1884 இல் ஹல்த்வானியை அடைந்த பிறகு, 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் ரயில் பாதை இங்கு நீட்டிக்கப்பட்ட பின்னர் அதன் முக்கியத்துவம் வேகமாக வளர்ந்தது.

🌼இன்று, இந்த நகரம் அதன் இந்திய இரயில் பாதையில் ஒரு டெர்மினஸ் நிலையத்தைக் கொண்டுள்ளது. இந்த இடத்திலிருந்து, இமயமலை மலைகளின் குமாவோன் பகுதிக்கு ஆட்டோமொபைல் மூலம் பயணிக்க வேண்டும். கத்கோடாமிலிருந்து, மலைப்பாதைகள் நைனிடால், பீம்தால், சத்தால், முக்தேஷ்வர், ராணிகேத், பின்சார், கௌசனி, நௌகுசியாதல் மற்றும் அல்மோரா போன்ற சுற்றுலாத் தலங்களுக்கு இட்டுச் செல்கின்றன.
🌼கத்கோடம் 29.27°N 79.53°E இல் அமைந்துள்ளது. இது சராசரியாக 554 மீட்டர் (1,483 அடி) உயரத்தில் உள்ளது. இது கவுலா ஆற்றின் கரையில் அமைந்துள்ளது.

🌼கத்கோடம் குமாவோன் இமயமலையின் அடிவாரத்தில் உள்ள பாபர் பகுதியில் அமைந்துள்ள மிக அழகிய இடங்களில் ஒன்றாகும்.

உள்ளூர் இடங்கள்

🏵️கத்கோடத்திற்கு அருகில் 'ஷீத்லா தேவி' மற்றும் 'காளிச்சவுட்' என்று அழைக்கப்படும் அழகிய கோவில்கள், திருவிழாக் காலங்களில் சுற்றுப்புறப் பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்களை ஈர்க்கின்றன. கத்கோடம் ஹைராகான் என்று அழைக்கப்படும் அழகான ஆசிரமம் ஒன்றிற்கு செல்கிறது.

🏵️கோலா ஆற்றின் மீது கட்டப்பட்டுள்ள அழகிய அணை உள்ளது.

🏵️கல்லூரியில் நைனிடால் சாலையில் உள்ள குமாவுன் இன்ஸ்டிடியூட் ஆஃப் இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி (கேஐஐடி) மற்றும் ரயில் நிலையத்திற்கு அருகில் திறன் மேம்பாட்டிற்காக பஹல் நிறுவனம் ஆகியவை அடங்கும்.

💥கத்கோடம் ரயில் நிலையம் மூன்று முறை தூய்மையான ரயில் நிலையம் என்ற விருதை பெற்றுள்ளது.
(நன்றி🙏🏻 தகவல்: வலை தளங்கள்)

💥 28.05.24 காலை 6.00 மணியளவில், நாங்கள் Haldwani யில் தங்கியிருந்த Hotel லிலிருந்து  Auto வில் புறப்பட்டு Kathgodam town மெயின் Road ல் அமைந்துள்ள Kumaon Mandal Vikas Nigam,
(A unit  undertaken by Uttarakhand State Government) அலுவலகம் சென்று Report செய்து கொண்டோம்.

பயணம் தொடருகிறது...... .....

#Uttarakhand   #ADIKAILASH  #OMPARVAT_YATRA_2024
#ஆதிகைலாஷ்  #ஓம்பர்வத்யாத்திரை
26.05.2024 முதல் 6.06.24 வரை 
#பயணஅனுபவக்குறிப்புகள்🕊️
#என்றும்அன்புடன்
#சுப்ராம்அருணாசலம்காரைக்கால்
🙏🏻🕉️🙏🏻🛐🙇🏻🕉️🙏🏻🙇🏻🛐🙏🏻🕉️🙇🏻🛐🙏🏻🕉️🙇🏻🛐🙏🏻

#Uttarakhand #ADIKAILASH #OMPARVAT_YATRA_2024#ஆதிகைலாஷ் #ஓம்பர்வத்யாத்திரை26.05.2024 முதல் 6.06.24 வரை பதிவு : 2.

#Uttarakhand #ADIKAILASH #OMPARVAT_YATRA_2024
#ஆதிகைலாஷ் #ஓம்பர்வத்யாத்திரை
26.05.2024 முதல் 6.06.24 வரை 
பதிவு : 2.

ஆதி கைலாஷ் மற்றும் ஓம் பர்வத் யாத்திரையில் உள்ள சில முக்கிய ஆலயங்களில் சில... 

#பாதல்புவனேஷ்வர்

🏵️புராணங்களில் பொதிந்துள்ள பாதால் புவனேஷ்வர், புகழ்பெற்ற சக்திபீடமான கங்கோலிஹாட் அருகில் உள்ள புனித யாத்திரை மையமாகும். 

🏵️அல்மோராவிலிருந்து 120 கிலோமீட்டர் தொலைவில் ஷெராகாட் செல்லும் வழியில் அமைந்துள்ள இந்த மிகவும் பிரசித்தி பெற்ற குகை சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.

🏵️சிவபெருமானின் சன்னதி உட்பட பல நீண்ட உட்புறங்களுடன் குகை அமைந்துள்ளது. 

🏵️சுண்ணாம்பு பாறை வடிவங்கள் பல்வேறு கண்கவர் ஸ்டாலாக்டைட் மற்றும் ஸ்டாலக்மைட் உருவங்களை உருவாக்கியுள்ளன. 

🏵️குகைக் கோயிலுக்குச் செல்லும் வழி ஒரு நீண்ட, குறுகிய சுரங்கப்பாதை வழியாக உள்ளது. 

🏵️குகையின் உள்ளே, சுண்ணாம்புக் கற்கள் பல இந்து சமயக் கடவுள்களின் வடிவத்தைக் கொண்டுள்ளன. விநாயகர், சேஷ் நாக், கருடன், சிவலிங்கம் போன்றவற்றின் வடிவங்கள் தெளிவாகத் தெரியும்.

 🏵️இமயமலை மத்தியில், புனிதமான குகை 33 கோடி தேவர்கள் மற்றும் தெய்வங்களின் உருவங்கள் உள்ளதாக நம்பப்படுகிற பிரபலமான இடம்.

🏵️இந்த குகையின் ஒரு புள்ளி கைலாஷ் மலையில் திறக்கப்பட்டு, இங்கு பிரார்த்தனை செய்வதன் மூலம், சோட்டாசார் தாமிற்குச் செல்வதன் மூலம் அவர்கள் பெறும் அதே ஆசீர்வாதங்களைப் பெறுவார்கள் என்று நம்பப்படுகிறது. 

🏵️பாண்டவர்களும் தங்களின் வனவாசத்தின் போது இங்கு தபஸ்யம் செய்தனர்.

#ஜாகேஷ்வர்

 🛕ஜாகேஷ்வர் என்பது கி.பி 8 முதல் 12 ஆம் நூற்றாண்டு வரையிலான பழமையான கோயில்களின் தொகுப்பாகும், இதில் 125 கோயில்கள் மற்றும் நூற்றுக்கணக்கான சிலைகள் உள்ளன, புராண வரலாறு கொண்ட இந்தத் தலமானது, பெரும்பாலும் சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.

#காஞ்சிதாம்: 
#கைஞ்சிதாம் (நைனிடால்):
#வேம்புகரோலிபாபாஆசிரமம், 

ஆன்மீக முக்கியத்துவம் வாய்ந்த இடம்.
இது நைனிடால் - அல்மோரா சாலையில் (4593 அடி) உயரத்தில், போவாலியிலிருந்து 9 கிமீ தொலைவிலும், நைனிடாலில் இருந்து 17 கிமீ தொலைவிலும் உள்ள ஒரு நவீன யாத்ரீக மையமாகும். புகழ்பெற்ற ஸ்ரீ நீம் கரோலி பாபா மகாராஜ் ஜியின் ஆசிரமத்தின் காரணமாக இந்த இடம் அங்கீகாரம் பெற்றுள்ளது. 

1962 ஆம் ஆண்டு புகழ்பெற்ற மஹாராஜ் நீம் கரோலி பாபாவால் நிறுவப்பட்டது.

 1942 ஆம் ஆண்டில் மகராஜ் நீம் கரோலி மற்றும் கைஞ்சி கிராமத்தைச் சேர்ந்த ஸ்ரீ பூர்ணானந்தம் இணைந்து சோம்பரி மஹாராஜ் மற்றும் சாது பிரேமி பாபா ஆகியோருக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு ஆசிரமம் கட்ட முன்மொழிந்தபோது இந்த இடம் உருவானது. 

இந்த இடத்தில் யாகங்கள். ஸ்ரீ நீம் கரோலி பாபாவிற்கு இந்தியா முழுவதும் மற்றும் உலகம் முழுவதும் மில்லியன் கணக்கான பின்தொடர்பவர்கள் உள்ளனர், மார்க் ஜுக்கர்பெர்க் (ஃபேஸ்புக் நிறுவனர் மற்றும் CEO), ஸ்டீவ் ஜாப்ஸ் (ஆப்பிளின் நிறுவனர் மற்றும் முன்னாள் CEO), வ்ருஷ்கா (விராட் கோஹ்லி - கிரிக்கெட் வீரர் மற்றும் அனுஷ்கா ஷர்மா - நடிகை), மற்றும் உலகம் முழுதும் உள்ள ஏராளமான பக்தர்கள் .

#சித்தாய்(அல்மோரா)கோலுதேவ்தா கோவில்:
இந்தியாவில் உள்ள ஒரு தனித்துவமான கோவில், நீதியின் கோவில் என்று பிரபலமாக அறியப்படுகிறது.

#GOLUDEVATEMPLE,CHITAI. 

🏔️தேவபூமி எனப்படும் உத்தரகாண்ட் மாநிலத்தில் ஏராளமான பிரசித்திப் பெற்ற ஆலங்கள் உள்ளன.
Chittai GOLU MATHA TEMPLE, ஒரு முக்கிய பிரார்த்தனை தலம். 

🙇🏼‍♂️GOLU DEVA என்பவர் சிறந்த கடவுளாகப் போற்றப்படுகிறார். தன்னுடைய வெள்ளைக் குதிரையில் விரைவில் வந்து, பக்தர்களின் வேதனையை போக்கி விடுவார். மலையில் தூரம் செல்பவர்களுக்கு உடன் பாதுகாப்பாக வந்து உதவி செய்யும் கடவுளாக வணங்கப்படுகிறார். 

⚜️மிகப் பழங் காலத்திலிருந்து சிறந்த ராஜாவாக வாழ்ந்தவர். தன்னுடைய பிரதேசத்தில் வாழும் மக்களின் தேவைகளை அறிந்து வேண்டிய உதவிகளை வேண்டுபவர்களுக்கு இன்றும் செய்து வருகிறார். 

🎠🛎️தங்கள் வேண்டுதல் கோரிக்கைகளை எழுதி, ஒரு மணிகட்டி ஆலயத்தில் வைத்துவிடுகிறார்கள்.
தங்கள் அனத்து வேண்டுதல்களையும் நல்ல முறையில் முடித்தவுடன் இவ்வாலயம் வந்து வணங்கி செல்கிறார்கள். 

🌺யாககுண்டம் வைத்து, பூசை செய்தும் பிரார்த்தனைகள் நடை பெற்று வருகிறது. 

🔔🛎️ஆலயம் முழுவதும் எல்லா இடங்களிலும் மணிகள் சிறியது முதல், மிகப் பெரிய, அளவிலும் கட்டிவிடப்பட்டுள்ளது. அங்கேயே, நமது பிரார்த்தனைக்காக அனைத்து வித ஏற்பாடுகளும் செய்து தர பண்டாக்கள் உள்ளனர். கட்டிடங்களிலும் வசதிகள் உண்டு. 

🎠முக்கிய கருவரை கட்டிடத்தில் சிறிய உருவில் குதிரையில் அமர்ந்து இருக்கும் கோலத்தில் சுவாமி உள்ளார். 

❤️உங்கள் வேண்டுதலை எழுதி மணிகட்டுங்கள் அத்தனையும் நிறைவேறும் என்ற நம்பிக்கை.

 #அல்மோரா:
 அல்மோரா இமயமலைத் தொடரின் குமாவோன் மலைகளின் தெற்கு விளிம்பில் உள்ள ஒரு முகட்டில் அமைந்துள்ளது. அல்மோரா 1568 இல் மன்னர் கல்யாண் சந்த் என்பவரால் நிறுவப்பட்டது, இருப்பினும் இந்து இதிகாசமான மகாபாரதத்தில் (கிமு 8 மற்றும் 9 ஆம் நூற்றாண்டு) மலைகள் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் மனித குடியிருப்புகள் உள்ளன.

அல்மோரா குமாவோன் இராச்சியத்தை ஆண்ட சந்த் மன்னர்களின் இடமாக இருந்தது. இது உத்தரகாண்டின் குமாவோன் பகுதியின் கலாச்சார மையமாக கருதப்படுகிறது. 

நந்தா தேவி, கதர்மல், ஜாகேஷ்வர் மற்றும் காசர் தேவி. பெரிய துறவி சுவாமி விவேகானந்தர் அல்மோராவின் சுற்றுப்புறங்களில் ஞானம் அடைந்ததாகக் கூறப்படுகிறது.

அல்மோரா அதன் கோயில்களுக்கு பிரபலமானது.

#காக்ரிகாட்: 
1890 ஆம் ஆண்டு சுவாமி விவேகானந்தர் இமயமலைக்கு பயணத்தின் போது இந்த இடத்தில் ஒரு பீப்பல் மரத்தின் கீழ் தியானம் செய்தார்.

 சுவாமி விவேகானந்தர் ஆகஸ்ட் 1890 இல் காக்ரிகாட்டில் ஒரு இரவு தங்கினார்.

 அவருடைய துணைவர் சுவாமி அகண்டானந்தர். அவர்கள் ஒரு பழைய பீப்பல் மரத்தின் கீழ் இரவு தங்கினர்.

 கோசி ஆறு சூயல் என்ற மற்றொரு மலை நதியை சந்திக்கும் இடத்தில் உள்ளது.

காக்ரிகாட் என்று அழைக்கப்படும் இந்த இடம் சுமார் 37 கி.மீ. நைனிடால்-அல்மோரா தேசிய நெடுஞ்சாலையில் நைனிடாலில் இருந்து. காக்ரிகாட்டை அடைந்ததும் சுவாமி விவேகானந்தர் தனது தோழரிடம் "இந்த இடம் வசீகரமானது, தியானத்திற்கு எவ்வளவு அற்புதமான இடம்" என்று கூறினார்.

 கோசி நதியில் நீராடிவிட்டு சுவாமி மரத்தடியில் அமர்ந்து நீண்ட நேரம் ஆழ்ந்த தியானத்தில் ஆழ்ந்தார். பின்னர் இயல்பான சுயநினைவுக்குத் திரும்பிய அவர் அகண்டானந்தரிடம் கூறினார் "ஓ கங்காதர்! நான் என் வாழ்க்கையின் மிக முக்கியமான தருணங்களில் ஒன்றைக் கடந்துவிட்டேன். இங்கே இந்த பீப்பல் மரத்தின் கீழ் என் வாழ்க்கையின் மிகப்பெரிய பிரச்சனைகளில் ஒன்று தீர்க்கப்பட்டது. நான் ஒருமைப்பாட்டைக் கண்டேன். 

மேக்ரோகோஸ்முடன் கூடிய நுண்ணுயிரியில் உள்ள அனைத்தும் (மேக்ரோகோஸ்மில்) ஒரு அணுவிற்குள் உள்ளது. அவரது இந்த உணர்தல் விரிவுரைகளில் பிரதிபலிக்கிறது.

 பின்னர் அவர் மேற்கில் "காஸ்மோஸ்-தி மேக்ரோகாஸ்ம் அண்ட் தி மைக்ரோகாஸ்ம்" என்ற தலைப்பில் கொடுத்தார். 

#ஜ்வலேஷ்வர்மகாதேவ், 

🌼ஸ்வாமி பெர்மானந்த் மஹாராஜின் கூற்றுப்படி, நேபாளம் மற்றும் இந்தியாவின் இந்தப் பகுதியில் உள்ளூரில் வழிபடப்படும் கடவுளின் பெயர் ஜ்வலேஷ்வர் மகாதேவ், அவர் நெருப்பின் வடிவத்தை எடுத்ததாக நம்பப்படுகிறது. 

💥கோரி & காளி சங்கமமான இடத்தில் (சங்கம்) குளித்துவிட்டு, தனது மரக் குச்சியை விட்டுச் செல்ல வேண்டிய வேத் வியாஸால் ஜ்வாலேஷ்வரரின் 

🌼தேவி ஜ்வலேஷ்வர் மேலும் வேத் வியாஸிடம் தன்னை அமைதிப்படுத்த ஜ்வலேஷ்வர் மகாதேவ்-லிங்கத்தை ஏற்றும்படி கேட்டுக் கொண்டார். அன்றிலிருந்து இந்த இடம் ஜ்வலேஷ்வர் மகாதேவ் என்று அழைக்கப்படுகிறது.

🌼18 ஆம் நூற்றாண்டில், அஸ்காட் மன்னர் இந்த நிலத்தை அன்னபூர்ணா மகாதேவ் என்று மறுபெயரிட்டார். சிவபெருமானின் இந்த இடம் கைலாஷ் மானசரோவர் மற்றும் ஆதி கைலாஷ் யாத்திரை செல்லும் வழியில் உள்ளது.

#வேத்வியாஸ்குஃபா (குகை): 

ஓம் பர்வத்துக்குச் செல்லும் பாதையில் அமைந்துள்ளது, _ இங்கு வியாஸ் முனி (மஹரிஷி வேத் வியாஸ் என்று பிரபலமாக அறியப்படுகிறார்) மகாபாரதத்தை விநாயகப் பெருமானுக்குக் கட்டளையிட்டார்.
காலாபாணி ஆலயம் எதிரில் உள்ளது.

#காளிமாதாமந்திர்:
காளி மந்திர், காலாபானி காளி நதி தோன்றிய இடம், இந்த இடம் அருகில் அமைந்துள்ளது. ஓம் பர்வத் செல்லும் சாலையில் தனி ஆலயம் உள்ளது.

#ஷீஷ்நாக்பர்வத்:

நாக் பர்வத் ஓம் பர்வத்திற்கு செல்லும் வழியில் அமைந்துள்ளது மற்றும் மலை நாகின் வடிவத்தை உருவாக்குகிறது. நாக் என்பது சிவபெருமானுடன் எப்போதும் காணப்படும் பாம்பின் கடவுளைக் குறிக்கிறது.

 #குட்டி 

கிராமம் பாண்டவர்களின் தாயான குந்தியின் பெயரால் அழைக்கப்படுகிறது. குந்தி இந்த இடத்தில் சில காலம் தங்கியிருந்தாள். அதேபோல், ,பல நூல்களை எழுதியதாகவும் கூறுகின்றனர். 

#பிரம்மபர்வத்: 
பிரம்மா பர்வதம் ஆதி கைலாச பர்வத்திற்கு செல்லும் வழியில் உள்ளது.

#பார்வதிசரோவர் & சிவன் கோயில்:

 பார்வதி சரோவரின் பக்கத்தில் ஆதி கைலாசத்தில் சிவ பார்வதி கோயில் அமைந்துள்ளது. சிவன் பார்வதியின் சிலையும் கோயிலில் மிகவும் அலங்காரமாக உள்ளது.
#பார்வதிமுகுட்:

 இது ஒரு நீண்ட கல் போன்ற அமைப்பாகும், இது ஒன்றாக நின்று முகுட்டின் வடிவத்தை அல்லது பார்வதி தேவியின் கிரீடத்தை உருவாக்குகிறது.

#கௌரிகுண்ட்: 
கௌரி குண்ட் மாதா பார்வதியின் தனிப்பட்ட இடமாக நம்பப்படுகிறது, அங்கு அவர் குளித்தார்.

மேலும்,
ஆதி-கைலாஷ், ஓம் பர்வத் யாத்திரையின் போது, அபி, நம்பா, டிங்கர் மற்றும் கணேச பர்வத்தின் பனி சிகரங்களின் வலிமைமிக்க சிறப்பை காணலாம்.

தர்மா பள்ளத்தாக்கு, காலா, ஜிப்டி, புத்தி போன்ற பாரம்பரிய கிராமங்கள், கர்பியாங், நபால்சு, குன்ஞ்ஜி, நபி, ரோங்காங், குட்டி, வழியில் புத்தி சியாலேக். அல்பைன் காட்டு மலர்கள், இமயமலை மூலிகைகள், பெரிய இமயமலை சிகரங்கள், அமைதி மற்றும் அமைதி நிறைந்த புக்யாலை நாம் காணலாம்.

பனி மூடிய மலைகள், அழகான ஆறுகள், சிகரங்கள், பசுமையான புல்வெளிகள் மற்றும் பனிப்பாறைகள், காணக் கிடைக்கின்றன.

பதிவுகள் தொடரும்....
14.06.2024
#Uttarakhand #ADIKAILASH #OMPARVAT_YATRA_2024
#ஆதிகைலாஷ் #ஓம்பர்வத்யாத்திரை :
26.05.2024 முதல் 6.06.24 வரை 
#பயணஅனுபவக்குறிப்புகள்🕊️
# என்றும்அன்புடன்
#சுப்ராம்அருணாசலம்காரைக்கால்

ADIKAILASH #OMPARVAT_YATRA_2024 1

#Uttarakhand   #ADIKAILASH  #OMPARVAT_YATRA_2024  - KMVN 
#ஆதிகைலாஷ்   /  
#ஓம்பர்வத்யாத்தரா :
26.05.2024 முதல் 6.06.24 வரை
பதிவு - 1🙏🏻
ஶ்ரீ சுந்தராம்பாள் உடனாகிய ஸ்ரீகைலாசநாதர் பேரருளால், இமயமலையில் உள்ள ஓம்பர்வத், மற்றும் பஞ்ச கைலாசங்களில் இரண்டாவதான ஆதிகைலாஷ் என்ற புனித இடங்களை கண்டு தரிசிக்க அருள் பெற்றோம்.

நாங்கள் பெற்ற அனுபவங்களின் சில குறிப்புகளை இங்கு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். 
நன்றி
🙏🏻
🙏🏻🕉️🏔️🛐⛰️🕉️🗻🛐🏔️🕉️🗻🛐🙏🏻

#பயணஅனுபவக்குறிப்புகள்🕊️

🇮🇳"தெய்வங்களின் சிம்மாசனம்" 'மேகங்களுக்கு மேலே ஒரு கனவு நாடு '
 'தேவபூமி' - எனப்படும் சொர்க்கம்" என்றெல்லாம் பெருமைப்படுவது, நமது பாரத தேசத்தின்  இமயமலையில் உள்ள உத்தரகாண்ட் மாநிலம் ஆகும்.

🛐உலகெங்கிலும், இமயமலையின் உத்தரகாண்ட் பகுதி மட்டுமே பாரம்பரியமாக ஆன்மீக விழிப்புணர்வைத் தேடி மனிதகுலத்தை ஈர்த்தது.

🌟இம்மாநிலத்தின்  மேற்குப் பகுதியில் உள்ள யமுனோத்திரி, கங்கோத்திரி, கேதார்நாத், மற்றும் பத்திரிநாத் இந்நான்கு இடங்களையும் இணைத்து யாத்திரை செல்வார்கள். இதற்கு 
' சார்தாம்'  யாத்திரை என்பார்கள்.

🌼உத்திரகாண்ட் மாநிலத்தில் வடகிழக்குப் பகுதியில் இமயமலைப்பகுதியில் உள்ள ஆதிகைலாஷ், மற்றும் ஓம்பர்வத்
சிகரங்களைத் தரிசித்து திபெத்தில் உள்ள கைலாஷ் பர்வதம் சென்று தரிசித்து வருவது இந்து மக்களின் பாரம்பரிய வழிபாட்டு முறை.

பஞ்ச கைலாஷ் 
💥"பாஞ்ச் கைலாஷ்", அதாவது "ஐந்து கைலாசங்கள்", இமயமலையில் தனித்தனி இடங்களில் உள்ள ஐந்து புனித மலை சிகரங்களின் குழுவின் கூட்டுப் பெயராகும், ஒவ்வொன்றும் அதன் பெயரில் கைலாஷ் உள்ளது. 

ஐந்து கைலாசங்கள்" 

1. கைலாஷ் மலை - இது திபெத்தில் உள்ளது.
(2018 ல் நேப்பாளம் வழியில் சென்று தரிசித்து வர அருள் பெற்றோம்)
https://www.facebook.com/share/p/rWPKtq55sbfJqbWX/?mibextid=oFDknk

https://www.facebook.com/subbram.arunachalam?mibextid=ZbWKwL

 2. ஆதி கைலாஷ் 
இது இந்தியாவில்
உத்திரகாண்ட் மாநிலத்தில் உள்ளது.
(தற்போது சென்று தரிசனம் பெற்று வந்துள்ளோம்)
3.ஷிகர் கைலாஷ் (ஸ்ரீகண்ட் மகாதேவ் கைலாஷ்) 

4. கின்னவுர் கைலாஷ் 

5. மணிமகேஷ் கைலாஷ் .

இவை (3, 4, 5) மூன்றும் இந்தியாவின் இமாச்சலப் பிரதேச மாநிலத்தில் உள்ளது.

#ஆதிகைலாஷ்

💥"ஐந்து கைலாசங்கள்" என்று தனித்தனி இடங்களில் உள்ள இமயமலையில் உள்ள ஐந்து தனித்தனி சிகரங்களின் குழுவில் , இரண்டாவது மிக முக்கியமான சிகரம் ஆதிகைலாஷ் அல்லது ஆதி பர்வதம் ஆகும். இதை சிவ கைலாஷ் , சோட்டா கைலாஷ் , பாபா கைலாஷ், ஜாங்லிங்காங் சிகரம் என்றும்  அழைக்கின்றனர்.
அதன் தோற்றம் திபெத்தில் உள்ள கயிலை மலையை ஒத்திருக்கிறது.

🌟இது இந்தியாவின் உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள பித்தோராகர் மாவட்டத்தில் இமயமலை மலைத்தொடரில் அமைந்துள்ள ஒரு மலையாகும் .

🌟இந்துக்களுக்குப் புனிதமான,
கௌரி குண்ட் (ஜோலிங்காங் ஏரி) மற்றும் பார்வதி தால் பனிப்பாறை ஏரிகள் ஆதி பர்வத்தின் அடிவாரத்தில் உள்ளன. 

🏝️பல வழிகளில் திபெத்தில் உள்ள கைலாஷ் மலையின் பிரதியாகும்,
குறிப்பாக தோற்றத்தில். 

🇮🇳ஆதி-கைலாஷ், இந்தோ-திபெத்திய எல்லைக்கு அருகில் உள்ள இந்தியப் பகுதியில் உள்ளது, 

🏝️இது இயற்கை அழகு, அமைதி மற்றும் அமைதியின் ஒரு பகுதியாகும். நகர்ப்புற வாழ்க்கையின் இடைவிடா பிரச்சனைகளில்,  சோர்வடைந்த ஆண்களும் பெண்களும் இங்கே ஒரு குணப்படுத்தும் அமைதியைக் காண்பார்கள்.

💥உள்நோக்கிப் பார்ப்பதற்கும் ஒருவரின் உள்நிலையுடன் உரையாடுவதற்கும் உகந்தது. 

💧கைலாஷ் மலையின் அடிவாரத்தில் கௌரி குண்ட் உள்ளது, அதன் நீர் மலையையே பிரதிபலிக்கிறது. 

🏞️அருகில் பார்வதி சரோவர் உள்ளது, 
இது 'மானசரோவர்' என்றும் அழைக்கப்படுகிறது,  சரோவரின் கரையின் மீது உள்ளூர் மக்கள் சிவன் மற்றும் மாதா பார்வதியின் கோவிலைக் கட்டியுள்ளனர். 

🌼சீனர்கள் திபெத்தை ஆக்கிரமித்த பிறகு, குஞ்சியில் உள்ள இந்திய சாதுக்கள் அல்லது யாத்ரீகர்கள் இங்கு சிவபெருமானிடம் பிரார்த்தனை செய்து, இந்த புனித மலையை தரிசனம் செய்வதற்காக 14,364 அடிக்கு மேல் உயரத்தில் உள்ள குட்டியைத் தொடர்ந்து ஜியோலிங்காங்கிற்குச் சென்றனர்.

🌟ஆதி கைலாஷ் அல்லது சிவ கைலாஷ் ஓம் பர்வத்திலிருந்து வேறுபட்ட திசையில் அமைந்துள்ளது. ஆதி கைலாஷ் சின் லா கணவாய்க்கு அருகில் மற்றும் பிரம்ம பர்வத்திற்கு அருகில் அமைந்துள்ளது.

 🌼ஆதி கைலாஷின் அடிப்படை முகாம் குத்தி பள்ளத்தாக்கில் உள்ள குத்தி (குடி) கிராமத்திலிருந்து 17 கி.மீ தொலைவில் புனித ஜோலிங்காங். உலகெங்கிலும், இமயமலையின் உத்தரகாண்ட் பகுதி மட்டுமே பாரம்பரியமாக ஆன்மீக விழிப்புணர்வைத் தேடி மனிதகுலத்தை ஈர்த்தது. உள்ளது, அதன் கரையில் ஒரு இந்து சிவன் கோவில் உள்ளது.

🌼 ஆதிகைலாஷ் மலையை ஜோங்லிங்கோங் கொடுமுடி என்றும் அழைப்பர். இது இந்தியாவின் உத்தராகண்ட் மாநிலத்தின் உள்ள பிதௌரகட் மாவட்டத்தின் வடக்கில் அமைந்த இமயமலையில் அமைந்துள்ள்து. 

🌟இங்கு அமைந்த ஓம் பர்வதம் மற்றும் ஆதி கைலாசம் இந்துக்களின் புனித தலம் ஆகும்.

🌼உத்தராகண்ட் மாநிலம் வழியாக கயிலை மலை - மானசரோவர் யாத்திரை செல்பவர்கள், தார்ச்சுலா, காலாபானி, ஆதி கைலாசம், ஓம் பர்வதம், காலாபானி, லிபுலேக் வழியாக, திபெத்தில் உள்ள கயிலை யாத்திரையை முடிப்பார்கள்.

#ஓம்பர்வதம் (Om Parvat) 
🕉️இந்தியாவின் உத்தராகண்ட் மாநிலத்தில் இந்திய-நேபாள எல்லையில் அமைந்த பிதௌரகட் மாவட்டத்தின் வடகிழக்கில் இமயமலையில் அமைந்துள்ளது.

🕉️இந்தியாவிற்கும், நேபாளத்திற்கும் இடையே இந்தியா-நேபாள எல்லையில் உள்ள ஓம் பர்வதம் இந்தியப் பகுதில் "ஓம்" வடிவம் தெரியுமாறும், நேபாளத்தில், மலையின் பின்புறம் தெரியுமாறும் அமைந்துள்ளது. இமயமலைத் தொடரில் 6191 மீ உயரத்தில் அமைந்துள்ள மலையாக ஓம் பர்வதம் அமைந்துள்ளது.

🕉️ 'ஓம்' (OM) அல்லது 'அம்' (AUM) என்ற வடிவத்தில் பனி படர்ந்திருக்கும் இந்த மலை இந்து, பௌத்தம் மற்றும் சமண மதங்களுக்கு மிகவும் முக்கியமான இடமாக கருதப்படுகிறது.

🕉️இம்மலையிலுள்ள பனிப்படிவு வடிவம் இந்துக்களால் புனிதமாகக் கருதப்படும் ஓம் (ॐ) என்ற வடிவத்தை ஒத்திருக்கிறது. 

🕉️திபெத்தில் உள்ள கைலாஷ் மலையை லிம்பியாதுரா கணவாய் மற்றும் பழைய லிபுலேக் கணவாய் (லிபுலேக் கணவாய்க்கு மேற்கே இரண்டு கிலோமீட்டர் தொலைவில்) இருந்து பார்க்க முடியும். (தற்போது அனுமதி கிடையாது)

🕉️குன்ஞ்ஜியில் இருந்து காளி நதி உருவாகும் காலாபானி வரை பாதை பிரிந்து பின்னர் நபிதாங் (13,993 அடி) வரை செல்கிறது (லிபுபாஸ் 9 கிமீ முன்னால் உள்ளது).

🕉️ நாபிதாங்கில் நாம் இயற்கையின் ஒரு அதிசயமான "ஓம் பர்வத்தை" காணலாம், பனி மலையில் நிரந்தரமான "ஓம்" என்ற ஆதி ஒலியின் வடிவத்தில் உள்ளது. மற்ற அனைத்து சரிவுகளும் வெறுமையாக இருக்கலாம், ஆனால் பனியில் உள்ள இந்த கல்வெட்டு என்றென்றும் உள்ளது.

🕉️ அதை ஒருவர் கவனிக்கும்போது, மலையே சிவபெருமான் அவதாரம்-அழிப்பவர், ஒரு அரிய பார்வையில் தன்னைக் காட்டுகிறது என்ற உணர்வை ஒருவர் பெறுகிறார். 

🕉️கருப்பு பின்னணியில் வெள்ளை (பனி) ஓம் பார்க்க முடியும். "ஓம்" ஐ காட்சிப்படுத்த எந்த கருதுகோளும், அனுமானமும், கற்பனையும் தேவையில்லை. மனிதன், கடவுள் மற்றும் பிரபஞ்சத்தை இணைக்கும் மத்தியஸ்தத்திற்கான சின்னமும் வழிகாட்டியும், அனைத்து நடவடிக்கைகளின் தொடக்கத்திலும் இறுதியிலும் முழக்கமிட்டது, கடவுளின் சிறந்த மற்றும் மிகவும் பயனுள்ள சின்னமாக உபநிக்ஷங்களில் போற்றப்படுகிறது. 

#ஓம்பர்வத்யாத்தரா

🛐ஓம் பர்வத், கைலாஷ் மானசரோவர் யாத்திரை செல்லும் பாதையில் கடைசி முகாம் ஆகிய  நபிதாங் பாஸ் என்ற இடத்திலிருந்தும் ,  மேற்கே உள்ள - லிபுலேக் கணவாய் வழியாக ஓம் பர்வத்தைப் பார்க்கலாம்..

🕉️ உலகெங்கிலும் உள்ள இந்துக்களுக்கு இது எப்போதும் புனிதமான மலையாக இருந்து வருகிறது.

🕉️குன்ஞ்ஜி பள்ளத்தாக்கில் இருந்து ஆதி கைலாசத்திற்கு  செல்பவர்கள்,  ஓம் பர்வத்தைக் காண குன்ஞ்ஜியில் இருந்து வடகிழக்கில் உள்ள பாதையில் வர வேண்டும். 

🕉️இந்து மதத்தில் ஓம் பர்வதத்தின் முக்கியத்துவம் ஓம் பர்வத் இந்துக்களுக்கு புனிதமான இடமாக கருதப்படுகிறது, ஏனெனில் இது இந்து மதத்தின் உயர்ந்த கடவுளான சிவபெருமானுடன் தொடர்புடையதாக நம்பப்படுகிறது. 

🕉️சிவன் மற்றும் பிற கடவுள்கள் மற்றும் தெய்வங்களை உள்ளடக்கிய பல்வேறு புனைவுகள் மற்றும் புராணங்களுடன் தொடர்புடையவை என்பதால் இவை இந்து மதத்தில் மிகவும் புனிதமான இடங்களாகக் கருதப்படுகின்றன. 

🕉️சிவன் தீமை மற்றும் அறியாமை ஆகியவற்றை அழிப்பவர் மற்றும் மாற்றுபவர், மேலும் அனைத்து அறிவு மற்றும் ஞானத்தின் ஆதாரமாக இருக்கிறார். அவர் யோகா மற்றும் தியானத்தின் புரவலர் ஆவார். தெய்வீகத்துடன் ஐக்கியத்தை அடைவதை நோக்கமாகக் கொண்ட நடைமுறைகள்.

 🕉️ஓம் பர்வத் என்பது சிவனின் சக்தி மற்றும் கருணையின் வெளிப்பாடாகவும், அவரது இருப்பையும் ஆசீர்வாதத்தையும் ஒருவர் அனுபவிக்கும் இடமாகவும் கூறப்படுகிறது.

🕉️ஓம் பர்வத் என்பது கைலாஷ் மானசரோவர் யாத்திரையின் ஒரு பகுதியாகும்

🕉️இந்த யாத்திரை என்பது பிறப்பு மற்றும் இறப்பு சுழற்சியில் இருந்து தூய்மை மற்றும் விடுதலைக்கான பயணம் என்று கூறப்படுகிறது.

🕉️இந்தியாவின் உத்தரகாண்ட் பக்கத்தில் உள்ள தர்சூலா, பித்தோராகர் மாவட்டத்தில் உள்ளது.  உலகெங்கிலும் உள்ள இந்துக்களுக்கு இது எப்போதும் புனிதமான மலையாக இருந்து வருகிறது.

#குன்ஞ்ஜியிலிருந்து செல்லும் வழிகள் ..

🌼இந்தியாவின் உத்தரகாண்ட்டில் உள்ள தர்சூலா, பித்தோராகர் மாவட்டத்தில் உள்ளது.

 💥தார்ச்சுலாவிற்கு அப்பால் சாலைகள் கரடுமுரடானவை.

🛣️இந்தியாவின் உத்தரகாண்ட் பக்கத்தில் உள்ள தர்சூலா, பித்தோராகர் மாவட்டத்தில் உள்ள குன்ஞ்ஜியில் உள்ள பாதைகள் வழி செல்ல வேண்டும்
,
🌟தெற்கிலிருந்து தார்ச்சுலா-பித்தோராகர் மற்றும் இந்தியாவின் பிற பகுதிகளிலிருந்து,  குன்ஞ்ஜியை நெருங்கும் போது, குன்ஞ்ஜிக்கு தென்கிழக்கே அருகில் உள்ள சாரதா ஆற்றின் (மஹாகாளி நதி என்றும் அழைக்கப்படுகிறது) மேற்குக் கரையில் உள்ள பாதை இரண்டு தனித்தனி  பாதைகளில் பிரிகிறது;

முதல் வழி : 

ஓம்பர்வத் சாலை:

🏞️வடகிழக்கில் செல்லும் பாதை :
(PLPH (KMR))
பித்தோராகர்-லிபுலேக் பாஸ் நெடுஞ்சாலை (PLPH) அல்லது கைலாஷ்-மானசரோவர் சாலை (KMR),

(Pithoragarh-Lipulekh Pass Highway (PLPH) or Kailash-Mansarovar Road (KMR))

💮கைலாஷ் மானசரோவர் யாத்ரா பாதையின் ஒரு  பகுதியாகும்.

💮இது கிட்டத்தட்ட 350 கிமீ நீளமுள்ள 2-வழி பாதை நெடுஞ்சாலை ஆகும்.

💮இது பித்தோராகார், தர்ச்சுலா, புத்தி, கர்பியுங்,  குன்ஞ்ஜியின் கிழக்குப் பகுதி, ITBP முகாம், நபிதாங் மற்றும் லிபுலேக் வழியாக, கைலாஸ்-மானசரோவர் வரை
செல்கிறது. வடகிழக்கே செல்கிறது. 

💮 இந்தப்பாதையில் ஓம் பர்வத்,  தரிசித்து, லிபுலேக் கணவாய்  மற்றும் 
கைலாஷ் மானசரோவர் செல்லலாம். 

இரண்டாவது பாதை :  (ஆதிகைலாஷ்பாதை)

🛣️வடமேற்கே செல்லும் பாதை.
குன்ஞ்ஜி-லம்பியா துரா பாஸ் சாலை (GLDPR) :

💮வடக்கே  தர்மா பள்ளத்தாக்கின் மேலே சென்று, பின்னர் சின் லா பாஸ் வழியாக குத்தி யாங்க்டி பள்ளத்தாக்கு (இந்தியா), ஆதி கைலாஷ்  மற்றும் குன்ஞ்ஜி-லம்பியா துரா  (Lampiya Dhura Pass) கணவாய்க்கு செல்கிறது.

💥இது ஜூலை 2020 இல் கட்டப்பட்ட பிறகு, ஆதி கைலாசத்திற்கான மலையேற்ற நேரத்தை இரண்டு மணிநேரமாகக் குறைத்துள்ளது.

🇮🇳ஜூலை 2020 இல், குன்ஞ்ஜி யிலிருந்து லிம்பியாதுரா கணவாய் வரை (இந்தியா-சீனா எல்லையில் உள்ள லாம்பியா துரா பாஸ்) இந்தப் பகுதியில் புதிதாகக் கட்டப்பட்ட சாலையையும் இந்தியா திறந்தது, இது ஆதி கைலாஷிற்கான மலையேற்ற நேரத்தை இரண்டு மணிநேரமாகக் குறைத்தது.

🇮🇳முன்னதாக மே 2020 இல், இந்தியா- நேப்பாள் எல்லையில் உள்ள தார்சூலாவிலிருந்து  குன்ஞ்ஜி வழியாக லிபுலேக் கணவாய் வரை  இந்தியா-சீனா எல்லைச் சாலைகள் திட்டத்தின் கீழ் கைலாஷ்-மானசரோவர் வரையிலான புதிய 80 கிமீ நீள சாலையை இந்தியா திறந்து வைத்தது. 

🌟நபிதாங் பாஸ் - லிபுலேக் கணவாய் வழியாக திபெத்தில் உள்ள  ஸ்ரீ கைலாஷ் மலையைப் பார்க்கலாம். இருப்பினும், தற்போது லிபுலேக் கனவாய் வழியாக கைலாஷ் மலை செல்ல இன்னும் முழுமையான அனுமதி கொடுக்கப்படவில்லை.  நாம் நபிதாங் வரை மட்டுமே செல்ல முடியும்.

💥நபிதாங் வரை சென்று ஓம்பர்வதம் தரிசித்து பின் குன்ஞ்ஜி திரும்ப வர வேண்டியுள்ளது.

🌟"முன்பு பக்தர்கள் ஆதி கைலாஷ் & ஓம் பர்வத் யாத்திரைக்காக > 198 கிமீ தூரம் மலையேற வேண்டியிருந்தது. இப்போது அரசாங்கம் BRO உடன் புதிய சாலையை உருவாக்கி வருகிறது.

பதிவுகள் தொடரும்.....

#Uttarakhand   #ADIKAILASH  #OMPARVAT_YATRA_2024  
#ஆதிகைலாஷ்  #ஓம்பர்வத்யாத்தரா :
26.05.2024 முதல் 6.06.24 வரை 
#பயணஅனுபவக்குறிப்புகள்🕊️
#என்றும்அன்புடன் 
#சுப்ராம்அருணாசலம்காரைக்கால்