Wednesday, April 14, 2021

விக்ரமாதித்தியர் ஆலயம் - ஜோதிர்லிங்கதரிசனம் 2021 - உஜ்ஜயினி ஆலயங்கள்

#உஜ்ஜியினிஆலயங்கள்
பதிவு : 7.

விக்ரமாதித்யர் ஆலயம்:

பாரதம் மறக்கமுடியாத இந்து அரசர்களில் இவரும் ஒருவர், வீரம், தயாளம், மதிநுட்பம் உடைய அரசர்.
உஜ்ஜயினியை மிகச்சிறப்பாக ஆண்ட புகழ் பெற்ற அரசர் விக்கிரமாதித்தியர்.
 தன் தலையை பக்தியால் வெட்டிக்கொண்டவர்.

விக்ரமாதித்தியர் அரசர் சிலைகள் உள்ள ஆலயங்கள் இரண்டு உள்ளன.

மிகப்பழைய ஆலயம் ஒன்று
ஸ்ரீ ஹரிசித்தி மாதாவை பிரதானமாக வழிபட்ட விக்ரமாதித்தியருக்காக
ஹரிசித்தி மாதா ஆலயத்தின் வடக்குப் பிரகாரத்தில் பிரியும் நேர் பாதையில் செல்ல வேண்டும்.  
ஒரு பெரிய கட்டிடத்தில் (ஆலய அமைப்பில்) மிகப்பெரிய விக்கிரமாதித்த அரசர் அரசவையில் உள்ளது போல் அமைத்துள்ளார்கள்.

 அரச சபையில் இருந்த அனைத்து பட்டி, மந்திரிகள், 32 பதுமைகள், எல்லோரும் அவர் கீழ் அமர்ந்து சபை நடத்துவது போல உள்ளது. நாம் அச்சிறிய சாலையில் நின்றே தரிசிக்க வேண்டும்.

வேதாளம், விக்கிரமாதித்தன் கதை, 32 பதுமைகள் எல்லாம் நினைவுக்கு வந்தது.

புதிய விக்கிரமாதித்திய அரசர் சிலை
ருத்ர சாகர ஏரியில் ஒன்று புதியதாக பிரமாண்டமாக அமைக்கப்பட்டு சுற்றுலா வருகையை அதிகப்படுத்தும் விதமாக இந்த ஏரியினை அழகுபடுத்தி மிகப் பெரிய கட்டிட வேலையும் நடந்து வருகிறது.

10.03.2021
#ஜோதிர்லிங்கதரிசனம்2021
#உஜ்ஜியினிஆலயங்கள்
#சுப்ராம்_அருணாசலம்_காரைக்கால் 
படங்கள்:

Tuesday, April 13, 2021

ஹாசித்தி மாதா - உஜ்ஜியினி ஆலயங்கள் - ஜோதிர்லிங்கதரிசனம் 2021 பதிவு. 6.

#உஜ்ஜியினிஆலயங்கள்
 பதிவு: 6
ஹரிசித்திமாதா ஆலயம்:

மகாகாளேஸ்வரர் ஆலய வளாகத்திலிருந்து சுமார் 500 மீ.தூரத்தில் உள்ளது. 51 சக்தி பீடத்தில் ஒன்றக வணங்கப்பட்டு வருகிறது.  அம்மனின் elbow விழுந்த இடம். 
 கொடுமையான அரக்கர்களை அழித்தவர் இந்த அம்மன் என்று கந்தபுராணத்தில் சொல்லப்பட்டுள்ளது. 
இந்த சக்தி பீடம் அமைப்பு சற்று உயரமான இடத்தில் நடுவில் உயரக் கருவறை மண்டபம் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது. அம்மனின் இடதுபுறம் ஒரு சிறிய சிவனாலயம் சேர்ந்துள்ளது. எதிரில் தனி விநாயகர் சன்னதியும், தலவிருட்சம் ஒன்றும் உள்ளது.

பாதாள காளி சன்னதியும் அமைந்துள்ளது. அசுரன் தலையை வெட்டிய இடம். பூசை செய்ய தனி வழி உண்டு. பக்தர்கள் தரிசனம் செய்ய மேல் பகுதியில் 3 தனித்தனி துவாரங்கள் உள்ளன. அதன் வழியே தரிசனம் செய்ய வேண்டும்.

இரண்டு அற்புதமான மிக உயரமான கல்விளக்குத் தூண்களில் மாலையில் விளக்கு ஏற்றுகிறார்கள்.
சிறிய ஆலயமாக இருந்தாலும் தூய்மையாகப் பராமரிக்கின்றனர்.

மிக முக்கியமான ஆலயங்களில் இதுவும் ஒன்றாகும்.
10.03.2021

#ஜோதிர்லிங்கதரிசனம்2021
#உஜ்ஜியினிஆலயங்கள்
#சுப்ராம்_அருணாசலம்_காரைக்கால்

முந்திய பதிவு:
https://m.facebook.com/story.php?story_fbid=5419530171455529&id=100001957991710

Sunday, April 11, 2021

பாரதமாதா ஆலயம் - உஜ்ஜியினி பதிவு - 5 ஜோதிர்லிங்கதரிசனம்2021

#ஜோதிர்லிங்கதரிசனம்2021
#உஜ்ஜியினிஆலயங்கள்

பதிவு-5
பாரதமாத ஆலயம் :

மகாகாளேஸ்வரர் ஆலயத்தின் தென்புறம் ஒரு பெரிய புதிய ஆலயம் கட்டப்பட்டு, பாரதமாதாவின் சிலை நடுநாயகமாக அமைக்கப்பட்டுள்ளது.
இருபுறமும் படிகள் ஏறி தரிசிக்க வேண்டும். நடுவில் பாரதத்தின் இயற்கை அமைப்புடன் நதி, மலை முதலியவற்ற செயற்கையாக அமைத்து விளக்கம் எழுதி அழகுடன் வடிவமைத்துள்ளார்கள்.
மிகப்பெரிய வளாகம்.
இதனையும் உள்ளடக்கி ஒட்டி அமைந்துள்ள ருத்ர சாகரம் என்ற ஏரியில் நடுநாயகமாக விக்கிரமாதித்த அரசரின் உருவ சிலையும் உள்ளது.
இவ்வளாகம் முழுதும் ருத்த சாகரம் ஏரியுடன் இணைத்து பெரிய சுற்றுலா கட்டிட அமைப்பு செய்து வருகிறார்கள்.
10.03.2021
#ஜோதிர்லிங்கதரிசனம்2021
#உஜ்ஜியினிஆலயங்கள்
#சுப்ராம்_அருணாசலம்_காரைக்கால் 
படங்கள்:

Friday, April 9, 2021

உஜ்ஜியினிஆலயங்கள் - . Shree Bade Ganesh ஜோதிர்லிங்கதரிசனம்2021

#உஜ்ஜியினிஆலயங்கள் 
பதிவு : 4

Shree Bade Ganesh:

மகாகாளேஸ்வரர் ஆலயம் மிக அருகில் வடக்கு பகுதியில் உள்ள சிறிய சிறப்பான ஆலயம்.
உள் நுழைந்ததும் மிக மிகப் பெரிய உருவத்தில் கணபதி உள்ளார்.

ஆலயத்தின் உட்பகுதியில் பஞ்சமுக ஹனுமான் உலோகத்தால் அமைக்கப்பட்டு நடுநாயகமாக ஒரு சிறிய மண்டபத்தில் உள்ளார்.

இடைவெளியில் ஒரு தொட்டில் அமைக்கப்பட்டுள்ளது. அதில் உள்ள அம்மன் வைத்து அதை அசைத்தும், தொட்டும் வழிபாடு நடைபெறுகிறது. 
இவ்வாலயம், மகாகாளேஸ்வரர் ஆலயம் அருகில் உள்ளது.
இதுவும் பிரார்த்தனை ஆலயம் போன்று வழிபடுகிறார்கள்.

10.03.2021
#ஜோதிர்லிங்கதரிசனம்2021
#உஜ்ஜியினிஆலயங்கள்
பதிவு : 3
https://m.facebook.com/story.php?story_fbid=5404498276292052&id=100001957991710

திருவோத்தூர்வேதபுரீசுவரர் கோயில் 16.8.26

#திருவோத்தூர் வேதபுரீசுவரர் கோயில் தேவாரப்பாடல் பெற்ற 276 சிவாலயங்களில் இது 240 வது தேவாரத்தலம் ஆகும். தொண்டை நாட்டுத் தலங்களில் ஒன்றாகும். ...