ராமகிரி வாலீஸ்வரர் கோவில் ஆந்திரப் பிரதேச மாநிலம், திருப்பதி மாவட்டம் (பழைய சித்தூர் மாவட்டம்), நாகலாபுரம் அருகே ராமகிரி (திருப்பாற்கடல் / கரிக்கரை) என்ற கிராமத்தில் அமைந்துள்ளது.
முக்கிய சிறப்புகள்:
• இறைவன் மற்றும் இறைவி: மூலவர் வாலீஸ்வரர் (சிறிது சாய்ந்த நிலையில் இருக்கும் சிவலிங்கம்), தாயார் மரகதாம்பிகை (மரகதாம்பாள்).
• பெயர்க்காரணம்: ராமபிரானுக்காக அனுமன் காசியிலிருந்து சிவலிங்கத்தை எடுத்து வந்தபோது, பைரவரின் தந்திரத்தால் கீழே வைக்க நேர்ந்தது. பின்னர் அதை தன் வாலால் இழுத்ததால் லிங்கம் சற்று சாய்ந்தது. இதனால் இறைவனுக்கு 'வாலீஸ்வரர்' என்று பெயர் வந்தது.
• நந்திக்குப் பதில் ஆஞ்சநேயர்: இக்கோவிலில் சிவலிங்கத்திற்கு நேர் எதிரே நந்திக்குப் பதிலாக ஆஞ்சநேயர் கைகூப்பி நின்றபடி அருள்பாலிக்கிறார். இதனால் இங்கு பிரதோஷ வழிபாடு கிடையாது.
• சந்தான பிராப்தி பைரவர்: இங்குள்ள காலபைரவர் சன்னதி மிகவும் பிரசித்தமானதாகும். குழந்தை வரம் வேண்டுவோர் இங்கு வழிபடுகின்றனர்.
• நந்தி தீர்த்தம்: அடிவாரத்தில் உள்ள குளம் 'நந்தி தீர்த்தம்' என்று அழைக்கப்படுகிறது.
இறைவனின் சன்னிதிக்கு நேராக ஆஞ்சநேயரும், அவருக்கு அடுத்தபடியாக நந்திதேவரும் காட்சி தருகிறார்கள். அம்பிகையின் திருநாமம் ‘மரகதாம்பிகை.’
இந்தத் தலத்தில் சிவலிங்கப் பிரதிஷ்டைக்குக் காரணமாக இருந்த காலபைரவர், இந்தக் கோவிலில் காலபைரவர் சந்தான பிராப்தி பைரவராக அருள்கிறார். எனவே ..
குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் இங்கே வந்து பைரவரை வேண்டிக்கொள்கிறார்கள்.
‘சந்தான பிராப்தி பைரவர்’ என்று அழைக்கப்படுகிறார்.
பைரவர் சன்னிதிக்கு அடுத்தபடியாக காளிமாதாவின் சன்னிதியை தரிசிக்கலாம். மேலும் விநாயகர், பிரம்மதேவர், விஷ்ணு, சண்முகர், அமர்ந்த கோலத்தில் வீரபத்திரர், தட்சிணாமூர்த்தி, சூரியபகவான் போன்ற பரிவார தெய்வங்களும் இத்தலத்தில் அருள்புரிகின்றனர்.
திருக்காரிக்கரை’ என்ற பெயரிலும் இந்த ஊர் அழைக்கப்பட்டு வந்ததாகத் தெரியவருகிறது. சுந்தரமூர்த்தி நாயனார், தம்முடைய தேவாரத்தில் இடையாற்றுத் தொகை என்ற பதிகத்தில் இந்தத் தலத்தை, ‘கடங்கள் ஊர் திருக்காரிக்கரை கயிலாயம்' என்று வைப்புத்தலமாக வைத்துப் பாடி இருக்கிறார்.
கோவிலுக்கு வெளியில் ஒரு தீர்த்தக் குளம் இருக்கிறது. அந்த தீர்த்தக் குளத்தின் ஒரு கரையில் இருக்கும் நந்தி சிலையின் வாயில்.இருந்து, தீர்த்தக்குளத்துக்குள் ஆண்டு முழுவதும் தொடர்ச்சியாக நன்னீர் கொட்டிக்கொண்டே இருக்கிறது. இந்தத் தீர்த்தம் ‘நந்தி தீர்த்தம்’ என்று அழைக்கப்படுகிறது.
• மலைக்கோவில்: மலையின் அடிவாரத்தில் வாலீஸ்வரர் கோவிலும், மலையின் உச்சியில் சுப்பிரமணிய சுவாமி கோவிலும் அமைந்துள்ளன.
கோவில் திறந்திருக்கும் நேரம்:
• பொதுவாக காலை 8:00 மணி முதல் 11:30 மணி வரையிலும், மாலை 3:00 மணி முதல் 5:30 மணி வரையிலும் திறந்திருக்கும்.
• கிருத்திகை மற்றும் அஷ்டமி நாட்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும்.
10.10.2026 தரிசனம்
#சுப்ராம்தரிசனம்
#என்றும்அன்புடன்
#சுப்ராம்அருணாசலம்காரைக்கால்
#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று
#ஆன்மீகபாரதம்அகிலத்தின்சிகரம்
No comments:
Post a Comment