ஓரேகடம் / ஓரடகம்
ஸ்ரீ வாடாமல்லீஸ்வரர் ஆலயம்
செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுகுன்றத்திலிருந்து சுமார் ஐந்து கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஓரகடம் எனும் கிராமத்தில் மிகவும் ரம்மியமான இயற்கை சூழலில் சிறிய குன்றின்மேல் அமைந்துள்ளது பழமை வாய்ந்தது; இச்சிவாலயம், அருள்மிகு ஸ்ரீ வாடாமல்லீஸ்வரர் திருக்கோவில் (வாடா மலர் ஈஸ்வரன்)
பெயர்க்காரணம்: சீதா தேவியை மீட்பதற்காக இலங்கை செல்லும் வழியில், ஸ்ரீ ராமர் இங்குள்ள சிவபெருமானை முல்லை மலர்கள் (மல்லிகை) கொண்டு வழிபட்டதாகக் கூறப்படுகிறது. ராமபிரான் அர்ச்சித்த அந்த மலர்கள் பல நாட்கள் ஆகியும் வாடாமல் அப்படியே நறுமணத்துடன் இருந்ததால், இத்தல இறைவனுக்கு "வாடாமல்லீஸ்வரர்" (வாடா மலர் ஈஸ்வரன்) என்ற திருநாமம் ஏற்பட்டது.
இறைவன் திருவுள்ளப்படி அம்பாள் ஸ்ரீ ராமரை குறித்து விரதம் இருந்து வழிபட்டு உள்ளார். தினமும்குன்றின் அடிவாரத்தில் உள்ள ரகுநாத புஷ்கரணியில் நீராடி ராமரை பூஜை செய்து வரும் வேலையில்,என்று ராமருக்கு சார்த்தும் புஷ்பங்கள் வாடாமல் இருக்கிறதோ அன்று விரதம் பூர்த்தி அடைந்து ராமரும் காட்சி கொடுப்பார் என்ற ஈஸ்வரன் வாக்கின்படி ராமரும் சீதா தேவியுடன் அம்பாளுக்கு காட்சி கொடுத்ததாக தல புராணம் கூறுகிறது.
இன்றும் அதன்படி இதற்கான உற்சவம் நடைபெற்று வருகிறது. ஓரகஇங்குடம் கோதண்டராமர் கோயிலிலிருந்து தைமாதம் ஐந்தாம் நாள் ராமர் சீதா தேவியுடன் எழுந்தருளி உற்சவம் நடைபெறுகிறது.
அமைந்துள்ள மிகவும் வரலாற்றுச் சிறப்புமிக்க பழமையான சிவஸ்தலமாகும்.
கல்வெட்டுகளில் இவ்வூர் பல்லவ மன்னனான இரண்டாம் நந்திவர்மனின் பெயரால் "உரோகடம் என்கிற பல்லவமல்ல சதுர்வேதி மங்கலம்" என்றும், இறைவன் "திருவாடாமலையார்" என்றும் குறிப்பிடப்படுகிறார்.
இக்கோயில் பல்லவ மன்னன் மகேந்திரவர்மனால் கட்டப்பட்டது. இங்கிருந்து வேதகிரீஸ்வரர் கோயிலுக்கு சுரங்கப்பாதை செல்வதாக சொல்கிறார்கள்.
சுவாமி திருநாமம் ஸ்ரீ வாடாமல்லீஸ்வரர். அம்பாள் திருநாமம் ஸ்ரீ அமிர்தவல்லி.
🛕 கோவிலின் சிறப்புகள் & புராண வரலாறு:
• மூலவர் & அம்பாள்: இக்கோவிலின் மூலவர் ஸ்ரீ வாடாமல்லீஸ்வரர் (சிவபெருமான்), தாயார் ஸ்ரீ அமிர்தவல்லீஸ்வரி (அறம்வளர்த்தநாயகி) ஆவர்.
• கட்டிடக்கலை: கி.பி. 7 அல்லது 8-ஆம் நூற்றாண்டில் பல்லவ மன்னர்களால் கட்டப்பட்ட இக்கோவில், ஒரு சிறிய குன்றின் மேல் இயற்கை எழில் சூழ்ந்த அமைப்பில் அமைந்துள்ளது. இதன் கருவறை விமானம் தூங்கானை மாடம் எனப்படும் கஜபிருஷ்ட (யானையின் பின்புற வடிவம்) அமைப்பில் கல்லால் செதுக்கப்பட்டுள்ளது.
• அபூர்வ நந்தி: இங்குள்ள நந்தி பகவான் புலித்தோல் ஆடை உடுத்தியவாறு காட்சியளிப்பது மிகவும் அரிதான மற்றும் விசேஷமான அமைப்பாகும்.
🕉️ பைரவர் கோவில் தொடர்பு:
இப்பகுதியில் மிக முக்கியமான வழிபாட்டுத் தலமாக விளங்கும் ஸ்ரீ மகா பைரவர் ருத்ர ஆலயம் (ஈச்சங்காரணை, திருவடிசூலம் சாலை) இக்கோவிலுக்கு அருகிலேயே அமைந்துள்ளது. இந்த வாடாமல்லீஸ்வரர் கோவிலையும், அருகிலுள்ள இந்த பைரவர் ஆலயத்தையும்பைரவர் கோவில் 12 ராசிப் படிகள் மற்றும் பிரம்மாண்ட வடிவத்துடன் மிகவும் பிரசித்தி பெற்றது. ஆன்மீகப் பயணம் மேற்கொள்பவர்கள் ஒரகடம் இணைத்து வழிபடுவது வழக்கம்.
🕒 கோவில் நேரங்கள்:
• காலை: 06:00 மணி முதல் மதியம் 12:00 மணி வரை
• மாலை: 05:30 மணி முதல் இரவு 08:30 மணி வரை
இறைவன் திருநாமத்திற்கு ஏற்ப அவருக்கு சார்த்தும் மல்லிகை மாலை என்றும் வாடுவதில்லை. நினைத்த காரியம் நிறைவேற இப்பெருமானுக்கு மல்லிகை சார்த்தி வழிபட்டால் நிச்சியமாக நிறைவேறும் என்று ஊர்மக்கள் கூறுகிறார்கள்.
இக்கோயில் நன்கு சீர் செய்யப்பட்டு ஒரு கால பூஜை நடைபெறுகிறது. கோயில் திறந்திருக்கும் நேரம் காலை 6-7 மாலை 3-7. திருக்கழுகுன்றம்-செங்கல்பட்டு டவுன் பஸ் மூலம் இங்கு வரலாம்.
11.10.2026 தரிசனம்
#சுப்ராம்தரிசனம்
#என்றும்அன்புடன்
#சுப்ராம்அருணாசலம்காரைக்கால்
#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று
#ஆன்மீகபாரதம்அகிலத்தின்சிகரம்
No comments:
Post a Comment