Wednesday, October 21, 2026

பெரியபாளையம் அருள்மிகு பவானி அம்மன் திருக்கோயில் தமிழ்நாட்டின் திருவள்ளூர் மாவட்டத்தில், ஊத்துக்கோட்டை வட்டம், எள்ளாபுரம் (Ellapuram) பகுதியில் உள்ள ஆரணி ஆற்றின் கரையில் அமைந்துள்ளது.

பெரியபாளையம் அருள்மிகு பவானி அம்மன் திருக்கோயில் 
 தமிழ்நாட்டின் திருவள்ளூர் மாவட்டத்தில், ஊத்துக்கோட்டை வட்டம், எள்ளாபுரம் (Ellapuram) பகுதியில் உள்ள ஆரணி ஆற்றின் கரையில் அமைந்துள்ளது.
சென்னையில் இருந்து செங்குன்றம், ஊத்துக்கோட்டை வழியாக திருப்பதி செல்லும் நெடுஞ்சாலையில், சென்னையிலிருந்து இருந்து சுமார் 45 கிலோமீட்டர் தொலைவில் பெரியபாளையம் உள்ளது.
பெரியபாளையம் என்றால் பெரிய படை வீடு என்று பொருள். பழமை வாய்ந்த இந்த ஆலயத்தில் வீற்றிருக்கும் அம்மன் சக்தி வாய்ந்தவராக திகழ்கிறார்.  

பவானி அம்மனை கிருஷ்ண பரமாத்மாவின் தங்கையாக பாவிக்கிறார்கள். துவாபர யுகத்தில், குழந்தை வடிவிலிருந்த அம்மன், தன்னை கொல்ல முயன்ற கம்சனின் (அசுரக்குல அரசன்) கோரப்பிடியிலிருந்து தப்பிக்கும் போது, அவனுக்கு தனது தமையனான கிருஷ்ண பரமாத்மாவால் ஏற்படப் போகும் துர்மரணம் பற்றி முன் கூட்டியே எச்சரித்தப் பிறகு, ஸ்ரீபவானி என்ற பெயரில், இத்தலத்தில் குடியேற முடிவு செய்தார்.
• தல வரலாறு: இந்து புராணத்தின்படி, துவாபர யுகத்தில் தேவகிக்குக் பிறந்த எட்டாவது குழந்தை (மாயாதேவி / கிருஷ்ணரின் சகோதரி) கம்சனிடமிருந்து தப்பித்து வானில் மறைந்து, பின்னர் இந்த இடத்தில் அமர்ந்ததாக ஐதீகம். 

மேலும் ஒரு வரலாற்றின்படி, ஒரு வியாபாரி புற்றில் தவறிவிட்ட தனது வளையல் தொகுதியை எடுக்க முயன்றபோது புற்று வெட்டுப்பட்டு இரத்தம் வந்ததாகவும், மஞ்சள் வைத்து அதை சரிசெய்து பின்னர் கோயில் அமைக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

• சிறப்பம்சங்கள்:
மூலவர்: ஸ்ரீ பவானி அம்மன் (பெரியபாளையத்தம்மன்) சுயம்பு வடிவில் அருள்பாலிக்கிறார். அம்மனின் திருமுகம் மற்றும் வடிவில் உள்ள தழும்புகளை மறைக்க தங்கக் கவசம் சாத்தப்பட்டுள்ளது. மூலஸ்தானத்தில், பவானி அம்மன், அமர்ந்த கோலத்தில் ஜ்வாலா மகுடத்துடனும், நான்கு கரங்களுடன் காட்சியளிக்கிறார் மேலிரண்டு கைகளில் சங்கு, சக்கரங்கள் தரித்தும், கீழிரண்டு கைகளில் வாள் மற்றும் அமிர்த கலசத்துடனும் காட்சியளிக்கிறார்.

 நாள்தோறும் இரவு நேரத்தில் கருவறைக்குள் ஐந்தடி நீளமுள்ள பாம்பு வந்து அம்மனை வழிபட்டுச் செல்வதாக ஒரு சிறப்பு ஐதீகமும் உள்ளது.
• துணை சன்னதிகள்: ஸ்ரீ அற்புத சக்தி விநாயகர், ஸ்ரீ சர்வசக்தி மாதாங்கி அம்மன், சுப்பிரமணியர், Srinivasa Perumal (மகாலட்சுமியுடன்), ஆஞ்சநேயர், பரசுராமர் மற்றும் நாக சன்னதி.

வழிபாடுகள் & நேர்த்திக்கடன்

• வேப்பிலை ஆடை: பக்தர்கள் அம்மனுக்கு நேர்த்திக்கடனாகவும் வேண்டுதலுக்காகவும் வேப்பிலையை உடையாக அணிந்து வலம் வருவது இங்கு மிகவும் பிரசித்தம்.
• பிரசாதம்: இத்தலத்தின் குங்குமம் மற்றும் தீர்த்தம் நோய்களைத் தீர்க்கும் அருமருந்தாக நம்பப்படுகிறது.
• மற்ற வழிபாடுகள்: முடிகாணிக்கை செலுத்துதல், பொங்கல் வைத்தல், அங்கபிரதட்சணம் செய்தல்.
திருவிழாக்கள்

• ஆடி மாதத் திருவிழா: ஆடி மாதம் மற்றும் ஆவணி மாதங்களில் இலட்சக்கணக்கான பக்தர்கள் கூடும் மிக முக்கிய பிரம்மோற்சவம் (14 வாரங்கள் நீடிக்கும் திருவிழா) இங்கு சிறப்பாக நடைபெறுகிறது.

ஆயிரக்கணக்கில் அம்மனை தரிசிக்க வருகிறார்கள். உடல் நலம் பெறவும், நீண்ட ஆயுளை ஆரோக்கியத்துடன் அடையவும், பெரிய பாளையத்து அம்மனை நினைத்தப்படி வருபவர்கள் அதிகம். இத்தல அன்னையிடம் மாங்கல்ய பலம் வேண்டி வரும் பெண்களின் எண்ணிக்கை அதிகமானது. பெண்கள், கணவன் நோய்வாய்பட்டிருந்தால், தங்கள் மாங்கல்யம் நிலைத்து நிற்க அம்மனை வேண்டி கொள்கிறார்கள். பக்தர்கள் மொட்டை அடித்தும், அங்கப்பிரதட்சணம் செய்தும், வேப்பிலையை ஆடையாக அணிந்தும், பொங்கல் படைத்தும் மற்றும் கரகம் எடுத்தும் என பல வழிகளில் அம்மனுக்கு தங்கள் நேர்த்திக் கடனைச் செலுத்துகிறார்கள்.

10.10.2026 தரிசனம்
#சுப்ராம்தரிசனம்
#என்றும்அன்புடன்
#சுப்ராம்அருணாசலம்காரைக்கால்
#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று
#ஆன்மீகபாரதம்அகிலத்தின்சிகரம்

No comments:

Post a Comment

சிறுவாபுரி அருள்மிகு பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் சென்னையின் வடக்கே, திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி வட்டத்தில் அமைந்துள்ளது

சிறுவாபுரி அருள்மிகு பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோயில்  சென்னையின் வடக்கே, திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி வட்டத்தில் அமைந்துள்ளது. இத்தலம் ...