Wednesday, October 21, 2026

சிறுவாபுரி அருள்மிகு பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் சென்னையின் வடக்கே, திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி வட்டத்தில் அமைந்துள்ளது

சிறுவாபுரி அருள்மிகு பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் 
சென்னையின் வடக்கே, திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி வட்டத்தில் அமைந்துள்ளது. இத்தலம் சுமார் 500 ஆண்டுகள் பழமையானது என்று கருதப்படுகிறது. இராமாயண காலத்தில் இராமர் மகன்களான லவன், குசன் ஆகியோர் போரிட்ட இடமே மருவி ‘சிறுவாபுரி’ (சிறுவர் போர் புரி) என்று அழைக்கப்படுவதாகத் தல வரலாறு கூறுகிறது. இங்கு மூலவர் பாலசுப்பிரமணியர் நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார்.
 திரு அண்ணாமலையார் மற்றும் திரு உண்ணாமலை அம்மன் ஆகியோரும் இக்கோயிலில் உள்ளனர். முருகப்பெருமானின் உற்சவ மூர்த்தியான வள்ளி மணாளர் வள்ளியுடன் திருமண கோலத்தில் இங்கு உள்ளார்.
கிழக்கு நோக்கிய ஆலயம் சுவாமி அம்பாள் மற்றும் மூலவர் பாலசுப்பிரமணியர் அணைவரும் கிழக்கு நோக்கியுள்ளனர். கருவரை தனித்தனியா இருந்தும், மூன்றும் சேர்ந்த உள் மண்டபம் உள்ளது. வெளிப்பிரகாரத்தில் நுழைவில் உற்சவர் வைத்து அங்கிருந்தே தரிசன வரிசையில் சுவாமி தரிசனம் உள் பிரகாரம் சுற்றி வர அனுமதி இல்லை.

அருணகிரிநாதரின் சிலை கோயில் கருவறையை நோக்கி உள்ளது. துறவியான இக்கவிஞர் இந்த கோயிலுக்கு பல முறை வருகை தந்து பல திருப்புகழ் பாடல்களைப் பாடினார். முருகப் பெருமானைப் புகழ்ந்து அர்ச்சனை திருப்புகழும் இங்கு பாடப்பட்டது.

சொந்த வீடு யோகம் அருளும் திருத்தலம்

இந்தக் கோயில் சொந்த வீடு வாங்குதல், கட்டும் கனவை நிறைவேற்றுதல் மற்றும் நிலம் தொடர்பான பிரச்சினைகள் தீருவதற்காக பக்தர்கள் மத்தியில் மிகவும் பிரசித்தி பெற்றுள்ளது. குறிப்பாக, ஞாயிறு, செவ்வாய்க்கிழமைகளில் இத்தல முருகனை தொடர்ந்து ஆறு வாரங்கள் வணங்கி வந்தால், நினைத்த காரியங்கள் நிறைவேறுவது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது.

மரகதச் சிலைகளின் சிறப்பு

சிறுவாபுரி ஆலயத்தின் தனிச்சிறப்புகளில் ஒன்று, இங்குள்ள மூலவர் பாலசுப்பிரமணியர், ஆதிமூலவர் மற்றும் நவக்கிரகங்கள் நீங்கலாக மற்ற அனைத்துத் தெய்வச் சிலைகளும் பச்சை மரகதக் கல்லால் ஆனவை. கொடிமரத்தின் அருகே வீற்றிருக்கும் மரகத மயில் மிகவும் விசேஷமானது.

இலவசம் மற்றும் சிறப்பு தரிசனம் 50, மற்றும் 100 வரிசையும் உள்ளது. ஞாயிறு செவ்வாய்கிழமை பக்தர்கள் வருகை மிக மிக அதிகம் சிறப்பு ஏற்பாடுகளும் உண்டு

10.10.2026 தரிசனம்
#சுப்ராம்தரிசனம்
#என்றும்அன்புடன்
#சுப்ராம்அருணாசலம்காரைக்கால்
#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று
#ஆன்மீகபாரதம்அகிலத்தின்சிகரம்






No comments:

Post a Comment

சிறுவாபுரி அருள்மிகு பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் சென்னையின் வடக்கே, திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி வட்டத்தில் அமைந்துள்ளது

சிறுவாபுரி அருள்மிகு பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோயில்  சென்னையின் வடக்கே, திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி வட்டத்தில் அமைந்துள்ளது. இத்தலம் ...