Wednesday, October 21, 2026

காளஹஸ்த்திதிருக்காளத்தீசுவரர் திருக்கோயில்

காளஹஸ்த்தி
திருக்காளத்தீசுவரர் திருக்கோயில்

திருக்காளத்தி ஆந்திரப் பிரதேச மாநிலத்தின் திருப்பதி மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு பாடல் பெற்ற தலம் ஆகும். இது காளகத்தீசுவரர் கோயில் என்றும் அழைக்கப்படுகிறது. சம்பந்தரால் பாடப் பெற்ற இத்தலம், கண்ணப்பர் தொண்டாற்றிப் பேறு பெற்ற தலம் எனக் கருதப்படுகிறது. பஞ்சபூதத் தலங்களில் ஒன்றான இத்தலம் வாயுத் தலம் ஆகும். புகழ்பெற்ற மன்னர்களுள் ஒருவரும் தஞ்சை பெரிய கோவில் கட்டிய இராசராச சோழன் மகனும், தென்னிந்தியாவின் புகழ்பெற்ற மன்னர்களுள் ஒருவருமான இராசேந்திர சோழன் கட்டிய கோவிலாகும். 
இத்தலத்தில் சிலந்தி, பாம்பு, யானை என்பன சிவலிங்கத்தை பூசித்ததாகவும் அதனால் தான் இதற்கு காளத்தி (காளகத்தி) என பெயர் பெற்றதாகவும் தல புராணம் கூறுகிறது. பாடல் பெற்ற தலங்களில் தொண்டை நாட்டுத் தலங்களில் ஒன்றாகும்.
பஞ்சபூத தலங்களில் வாயு லிங்க க்ஷேத்திரமாகத் திகழ்கிறது.
வாயு பகவானுக்கு என ஏற்படுத்தப்பட்ட முதல் கோயில் இது என்ற தனித்தன்மையை இந்தக் கோயில் பெற்றுள்ளது. மேலும், ஈசன் சாபம் பெறப்பட்ட உமையவளும் இந்த க்ஷேத்திரத்தில் வந்து லிங்கத்தைப் பூஜை செய்து ஞானம் பெற்றதால், இத்தலத்தில் எழுந்தருளியிருக்கும் இறைவி ஞானபிரசுனாம்பா என்று அழைக்கப்படுகிறார். சிவனின் தலையில் இருக்கும் கங்கை இத்தலத்தில் சொர்ணமுகி என்ற பெயரில் கோயிலைச் சுற்றிப் பிரவகிக்கிறாள். மேலும் சாபம் பெற்ற இந்திரன், சந்திரன், மயூரன் உள்ளிட்ட பலரும் காளஹஸ்தியில் உள்ள சொர்ணமுகி நதியில் மூழ்கி சாப விமோசனம் பெற்றதாக வரலாறு கூறுகிறது.

ராகு - கேது தோஷம் நீக்கும் காளஹஸ்தி திருக்காளத்தீசுவரர் திருக்கோயில்
திருமண தோஷம், புத்திர பாக்கியம், தொழில் மேன்மை, கல்வி வளர்ச்சி என அனைத்து பிரச்னைகளுக்கும் தீர்வாக அமைந்துள்ளது இந்த பரிகார பூஜை.
சொர்ணமுகி நதிக்கரையில் அமைந்து சைவ சமய நெறிகளைப் பின்பற்றும் மிகப் பழமையான கோயில் இது. 

வேடனான கண்ணப்பர் இறைவன் மேல் கொண்ட பக்தியால் தன் இரண்டு கண்களையும் அர்ப்பணித்து மோட்சம் பெற்ற தலம். மேலும் சிலந்தி (ஸ்ரீ), பாம்பு (காள), யானை (அஸ்தி) என மூன்றும் இத்தலத்து இறைவனை வழிபட்டு மோட்சம் பெற்றதால் அவற்றின் பெயரால் ஸ்ரீகாளஹஸ்தி என்று வழங்கப்படுகிறது.

இக்கோயிலின் இறைவி ஞானபிரசுனாம்பிகை அம்மன் செங்குந்தர் கைக்கோளர் குலத்தில் வெள்ளத்தூரர் கோத்திரத்தில் பிறந்து, தவம் புரிந்து இறைவனை அடைந்தார். அதனால் ஒவ்வோர் ஆண்டும் மகாசிவராத்திரி பிரம்மோற்சவத்தின்போது நடைபெறும் திருக்கல்யாண உற்சவத்தின் போது வெள்ளத்தூரர் கோத்திரத்தைச் சேர்ந்தவர்கள் அம்மனுக்குச் சீர்வரிசை அனுப்பும் மரபு காலம் காலமாகப் பின்பற்றப்பட்டு வருகிறது.

பரிவார தேவதைகள்

மேலும், இக்கோயிலில் பூமிக்கு 9 அடிக்கு கீழ் வல்லப கணபதி அமைந்துள்ளார். காசி விஸ்வநாதர், அன்னபூரணி, சூரியநாராயணர், சந்த்யோகணபதி மற்றும் சுப்ரமணிய சுவாமி உள்ளிட்டோருடன் கோயிலின் முதல் பிரகாரத்தில் தட்சிணாமூர்த்தியும் எழுந்தருளியுள்ளார். இக்கோயிலில் சூரிய புஷ்கரணி, சந்திர புஷ்கரணி என்று இரு வேறு புஷ்கரணிகள் உள்ளன.
திராவிட கட்டடக் கலை முறையில் கட்டப்பட்டுள்ளது. இக்கோயிலின் உட்பிரகாரம் 5 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. அதன் பிறகு, 6 நூற்றாண்டுகள் கடந்து இக்கோயிலின் வெளிப்பிரகாரம், 11ம் நூற்றாண்டில் ராஜேந்திர சோழனாலும், நூற்றுக்கால் மண்டபம் விஜயநகர அரசர்களாலும் கட்டப்பட்டன.
இவரின் லிங்கத் திருமேனி வெள்ளைக் கல்லால் ஆனது. இக்கோயிலில் 1516-ம் ஆண்டு ஸ்ரீகிருஷ்ணதேவராயர் 120 அடி உயரம் கொண்ட பிரம்மாண்ட ராஜகோபுரத்தை ஏற்படுத்தினார்.
ஸ்ரீகிருஷ்ண தேவராயர் ஏற்படுத்திய ராஜகோபுரம் கடந்த 2010ம் ஆண்டு மே மாதம் இடிந்து விழுந்தது. அதை ஆந்திர அறநிலையத் துறை சீர்படுத்தி, மீண்டும் இப்பகுதியில் நன்கொடைகள் வசூல் செய்து ரூ. 45 கோடி பொருள் செலவில் புதிய பிரம்மாண்ட ராஜகோபுரத்தை 2017ம் ஆண்டு எழுப்பி ஜனவரி மாதம் கும்பாபிஷேகம் நடத்தியது. 144 அடி உயரமும் 22 அடுக்குகளும் கொண்டது; இந்த புதிய ராஜகோபுரம்.

ஆலயம் ஒட்டியுள்ள மலைக்குன்றின் மீது ஒரு சிறிய ஆலயம் கட்டப்பட்டுள்ளது. சுமார் 200 படிகள் உள்ளன.
கண்ணப்பர் வழிபட்டது என்று ஒரு சிவலிங்கம் மற்றும் ஒரு சுயம்புலிங்கம் அடுத்து கண்ணப்ப நாயனாருக்கு தனியான ஒரு கருவரை சன்னதியும் கட்டப்பட்டுள்ளது. மேலும் சிவன் பார்வதி காட்சி தரும் அமைப்பில் ஒரு பிரம்மாண்டமான சிலையும் உள்ளது.
ஆலயவளாகத்தை ஒட்டி வாகனங்கள் நிறுத்த நிறைய வாகன நிறுத்தம், தங்குமிடங்கள், நிறைய கடைகள் உள்ளன.
ஆலயம் மதியம் திறந்து உள்ளது.
தென்புறம் 1 கி.மீ தூரத்தில் ஓரு பெரியகுளம் உள்ளது.
cell phone, bags இவற்றை ஆலயம் முன் வைத்து விட்டு சென்று சுவாமி தரிசன செய்துவர முடியும்
வாழ்வில் ஒரு முறையாவது தரிசிக்க வேண்டிய ஆலயங்களில் ஒன்று.
10.10.2026 மீள் தரிசனம்
#சுப்ராம்தரிசனம்
#என்றும்அன்புடன்
#சுப்ராம்அருணாசலம்காரைக்கால்
#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று
#ஆன்மீகபாரதம்அகிலத்தின்சிகரம்




No comments:

Post a Comment

சிறுவாபுரி அருள்மிகு பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் சென்னையின் வடக்கே, திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி வட்டத்தில் அமைந்துள்ளது

சிறுவாபுரி அருள்மிகு பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோயில்  சென்னையின் வடக்கே, திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி வட்டத்தில் அமைந்துள்ளது. இத்தலம் ...