திருவள்ளூர் மாவட்டத்தில் பொன்னேரிக்கு அருகில் அமைந்துள்ளது.
முக்கிய சிறப்புகள்:
மூலவர்: அருள்மிகு பாலசுப்பிரமணியர் (அதிகார முருகேஸ்வரர்) வள்ளி மற்றும் தெய்வானை இல்லாமல் தனித்து, கைகளை இடுப்பில் வைத்து (அதிகார கோலத்தில்) கிழக்கு நோக்கி காட்சியளிக்கிறார்.
• அதிசயம்: மூலவரின் திருமேனி காலை வேளையில் குழந்தையாகவும், மதியம் இளைஞராகவும், மாலை வேளையில் முதியவராகவும் மாறுவதாக நம்பப்படுகிறது.
• பிரம்மன் சன்னதி: பிரம்மதேவன் மூலவருக்கு எதிரில் அருவமாக (கல் வடிவம் இல்லாமல் கமண்டலம் மற்றும் அட்சமாலையுடன்) காட்சியளிக்கிறார்.
• வாகனம்: முருகப்பெருமானின் வழக்கமான மயிலுடன், சக்தியின் வாகனமான சிங்கமும் சேர்ந்துள்ளது. இதில் சிங்கம் மயிலைப் பிடித்துக் கொண்டிருப்பது போன்ற அமைப்பு இங்கு சிறப்பு.
• பெயர்க் காரணம்: முருகப்பெருமான் இங்கு 'ஆண்டி' கோலத்தில் வந்ததால் 'ஆண்டியர்குப்பம்' என்று அழைக்கப்பட்டு, பின்னர் 'ஆண்டார்குப்பம்' என மருவியது.
இந்த முருகன் கோவில் சுமார் ஆயிரம் ஆண்டுகள் பழமையானது. ஐந்து நிலை இராஜ கோபுரத்துடன் அமைந்துள்ள இந்த கோயிலின் நுழைவாயிலுக்கு அருகில் வலது பக்கத்தில் வேம்படி விநாயகர் சந்நிதி மற்றும் பாதாள கங்கை அம்மன் சந்நிதியை தரிசித்துவிட்டு உள்ளே சென்றால் கொடிமரம், பலிபீடம், மயில் மற்றும் சிம்ம வாகனத்தைக் கடந்து அழகிய தூண் சிற்பங்களுடன் கூடிய 16 கால் மண்டபம். ஶ்ரீ பிரசன்ன விநாயகர் – ஸ்ரீ காசிவிஸ்வநாதர், ஶ்ரீ விசாலாட்சி ஆகியோருக்கு நடுவே கோயிலின் மூலவரான பாலசுப்பிரமணிய சுவாமி கிழக்கு நோக்கி வேலும், மயிலும், வள்ளி தெய்வானை இல்லாமல் தனித்து அருளும் அதிகார முருகனாக அருள்பாலிக்கின்றார்.
இதைத்தவிர,உற்சவர் வள்ளி தேவசேனா சண்முகர், நடராஜர் ஆகியோருக்கு தனி சந்நிதிகள் உள்ளன. வெளிப் பிரகாரத்தில் சம்வர்த்தன முனிவர் சந்நிதியும், சண்டிகேஸ்வரர், நவகிரக சந்நிதியும் அமைந்துள்ளது. கொடிமரத்துக்கு அருகில் பிரம்மா சங்கிலியால் கட்டி சிறைவைக்கப்பட்ட கருங்கல் இன்றும் அப்படியே உள்ளது. இந்த நிகழ்வுகள் கோயில் தூணில் செதுக்கப்பட்டுள்ளது.
கோவில் திறக்கும் நேரம்:
• காலை: 6:30 மணி முதல் 12:30 மணி வரை
• மாலை: 4:30 மணி முதல் 8:00 மணி வரை (வார இறுதி நாட்களில் அல்லது சிறப்பு நாட்களில் மாற்றங்கள் இருக்கலாம்)
அமைவிடம் மற்றும் வழித்தடம்:
• தச்சூர் கூட்டுரோட்டில் இருந்து பொன்னேரி செல்லும் சாலையில் (சிறுவாபுரி முருகன் கோவிலுக்கு மிக அருகில், சுமார் 6 கி.மீ தொலைவில்) இந்த கோவில் அமைந்துள்ளது.
பொன்னேரியிலிருந்து 7 கிமீ தொலைவில் அமைந்துள்ளது செங்குன்றத்தில் (Red Hills) இருந்து 10 கி.மீ. பயண தூரத்திலும் இத்தலத்தை அடையலாம். ஆவடி, கும்மிடிப்பூண்டி, சென்னை, திருவள்ளூர் எனச் சுற்றுவட்டாரத்தில் இருந்து ஆண்டார்குப்பம் வரப் பேருந்து வசதிகள் உள்ளது
10.10.2026 தரிசனம்
#சுப்ராம்தரிசனம்
#என்றும்அன்புடன்
#சுப்ராம்அருணாசலம்காரைக்கால்
#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று
#ஆன்மீகபாரதம்அகிலத்தின்சிகரம்
No comments:
Post a Comment