Wednesday, October 21, 2026

திருக்கழுக்குன்றம் ருத்ரகோடீஸ்வரர் ஆலயம்

திருக்கழுக்குன்றம் ருத்ரகோடீஸ்வரர் ஆலயம்

திருக்கழுக்குன்றம் சங்கு தீர்த்தம் தாண்டி தெற்கில் உள்ளது மிகப்பழமையான ஆலயம். தேவார வைப்புத்தலம்
ஸ்ரீ ருத்ரகோடீஸ்வரர் (சுயம்பு மூர்த்தி)
• அம்பாள்: ஸ்ரீ அபிராமிநாயகி / ருத்ர கோடீசுவரி (காளி தேவியின் உக்கிரத்தை சாந்தப்படுத்தியதால் சற்று சாய்ந்த கோலத்தில் காட்சி தருகிறாள்)
• தல சிறப்பு: கோடி ருத்திரர்கள் சிமானை வழிபட்டு தங்கள் சாபம் நீங்கப்பெற்ற தலம்.
கோயில் கிழக்கு நோக்கிய அமைப்பைக் கொண்டு, நான்கு நிலைகளைக் கொண்ட ராஜகோபுரத்துடன் விளங்குகிறது.
இத்தலம் வேதகிரீஸ்வரர் கோயிலுக்கு முன்பாக வழிபடப்பட வேண்டிய தொன்மையான கோயிலாகும்.
 வேதகிரீஸ்வரர் கோயிலைக் காட்டிலும் ருத்ரன் கோயில் பழமையானது. மரபுப்படி, பக்தர்கள் முதலில் ருத்ரன் கோயிலுக்குச் சென்று, அதன் பின்னரே வேதகிரீஸ்வரர் கோயிலுக்குச் செல்ல வேண்டும்.
கோயில் நுழைவாயிலில் நந்தியும், சுவரில் அவரது துணைவியான சூர்ய பிரபா தேவியின் உருவமும் காணப்படுகின்றன. கருவறையை நோக்கியவாறு பலிபீடமும் நந்தியும் அமைந்துள்ளன. கோயில் நுழைவாயிலுக்கு அருகில் விநாயகர் மற்றும் முருகப்பெருமானின் சன்னதிகள் உள்ளன.
இங்குள்ள மூலவர் 'ருத்ர கோடீஸ்வரர்' என்று அழைக்கப்படுகிறார். அவர் கருவறையில் லிங்க வடிவில் எழுந்தருளியுள்ளார். இவர் சுயம்பு மூர்த்தி ஆவார். கருவறையைச் சுற்றியுள்ள கோஷ்டங்களில் தட்சிணாமூர்த்தி, விநாயகர், பிரம்மா, விஷ்ணு மற்றும் துர்கை ஆகிய தெய்வங்களின் திருவுருவங்கள் உள்ளன. பொதுவாகச் சிவாலயங்களில் கருவறையின் மேற்குப் பகுதியில் 'லிங்கோத்பவர்' உருவம் அமைந்திருக்கும்; ஆனால், இங்கு அதற்குப் பதிலாக வரத ஹஸ்த முத்திரையுடன் கூடிய மகாவிஷ்ணுவின் திருவுருவம் காணப்படுகிறது.

அம்பிகை 'பெண்ணின் நல்லாள்' அல்லது 'திருபுரசுந்தரி அபிராமி' / 'ருத்ராணி' என்று அழைக்கப்படுகிறார். அம்பிகையின் சன்னதி இடதுபுறம் அமைந்துள்ளது. அங்கிருந்து கோயில் சுவரில் உள்ள ஒரு திறப்பின் வழியாக, சற்று தொலைவில் உள்ள வட்டப்பாறை காளி கோயிலை அவர் நோக்கியபடி இருக்கிறார். மிகுந்த கோபத்துடன் இருந்த காளி தேவியை, அபிராமி அன்னை சாந்தப்படுத்தியதாகக் கருதப்படுகிறது. இதைக் குறிக்கும் வகையில், அன்னை இங்கு சற்று சாய்ந்த நிலையில் காட்சியளிக்கிறார்.

கோயில் வளாகத்தில் வேத விநாயகர், வள்ளி-தெய்வானையுடன் கூடிய முருகப்பெருமான், மற்றும் நால்வர் (அப்பர், சுந்தரர், திருஞானசம்பந்தர், மாணிக்கவாசகர்) ஆகியோருக்கான சன்னதிகள் உள்ளன. 
ஸ்தல விருட்சம்: ஒன்பது இதழ் கொண்ட வில்வ விருட்சம் மற்றும் ருத்ராட்ச விருட்சம்.
 இக்கோயிலின் தீர்த்தம் 'ருத்ர தீர்த்தம்' என்று அழைக்கப்படுகிறது; இது கோயில் முன்பகுதியில் அமைந்துள்ளது

சிறப்பு வழிபாடு: பிரதோஷ காலத்தில் இத்தலத்தை வழிபடுவது மிகுந்த புண்ணியமும், பிள்ளைப்பேறு உள்ளிட்ட நன்மைகளையும் தரும்.
வாகனங்கள் சென்று நிறுத்த வசதிகள் உள்ளன. அருகில் வேறு எந்தக்கடைகளும் கிடையாது.
11.10.2026 மீள் தரிசனம்
#சுப்ராம்தரிசனம்
#என்றும்அன்புடன்
#சுப்ராம்அருணாசலம்காரைக்கால்
#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று
#ஆன்மீகபாரதம்அகிலத்தின்சிகரம்


No comments:

Post a Comment

திருப்போரூர் கந்தசாமிக்கோவில் செங்கல்பட்டு மாவட்டம்

திருப்போரூர் கந்தசாமிக்கோவில் திருப்போரூா் கந்தசுவாமி கோவில் என்பது இந்தியாவின் தமிழ்நாட்டின், செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூரில் இருக்கும...