ஸ்ரீ ஸ்வர்ணபுரீஸ்வரர் கோவில் கூகையூர், தமிழ்நாடு 606301
🌟 தமிழ்நாட்டில், சேலத்திலிருந்து 88 கிமீ தொலைவிலும், விருத்தாசலத்திலிருந்து 60 கிமீ தொலைவிலும், கூகையூர் அமைந்துள்ளது.
🌟கூகை என்னும் குறுநில மன்னன் ஆண்டதால், இந்தப் பகுதி ‘கூகையூர்’ என்றழைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
🌟திருநாவுக்கரசர் தனது ஷேத்திர கோவையில் ‘கூழையூர்’ என்று பாடி வழிபட்டதால் ‘கூழையூர்’ என்றும்,
🌟திருமூலர் இப்பகுதியில் உள்ள குகையில் தங்கி யோகத்தில் ஆழ்ந்ததால் ‘குகையூர்’ என்றும்,
🌟வியாழபகவான் வழிபட்டதால் ‘சொர்ணபுரி’ என்றும் இவ்வூர் அழைக்கப்பட்டது.
கூகையூரில் உள்ள 5 சிவன் கோவில்கள்:
1) ஸ்ரீ பெரியநாயகி சமேத கைலாயமான பொன் பரப்பின ஈஸ்வரமுடைய நாயனார் / ஸ்ரீ சொர்ணபுரீஸ்வரர் கோவில் - மிகவும் பழமையான மற்றும் பிரபலமான கோவில் மற்றும் உள்ளூர் மக்களால் 'பெரிய கோயில்' என்று அழைக்கப்படுகிறது. தற்போது புனரமைப்பில் உள்ளது.
2) ஸ்ரீ கரியம்புரீஸ்வரர் கோவில் - ஒரு அழகான கிரானைட் கோவில் இப்போது பாழடைந்த நிலையில் உள்ளது, ஆனால் முக்கிய தெய்வமான சிவபெருமான் ஒரு பாழடைந்த கருவறைக்குள் திறந்த வெளியில் அமைதியாக அமர்ந்திருக்கிறார்.
3) ஸ்ரீ ஒப்பிலாஅம்மை சமேத ஸ்ரீ பஞ்சாட்சர நாதர் / ஸ்ரீ திருமூல சித்த நாதர் கோவில் (தேவர்கள் தம்பிரான் கோவில்), வீர சைவர்களின் குலதெய்வ கோவில் மற்றும் உள்ளூரில் சித்தர் கோவில் என்று அழைக்கப்படுகிறது.
4) ஸ்ரீ கைலாச சோழீஸ்வரமுடைய நாயனார் கோவில் - ஒரு சிறிய தனி ஆலயம்
5) ஸ்ரீ பொன் பரப்பின சோழீஸ்வரமுடைய நாயனார் கோவில் - தற்போது புதுப்பிக்கப்பட்டு வருகிறது.
🛕கூகையூரில் உள்ள 5 சிவாலயங்களும் பஞ்ச பூத தலங்களாகக் கருதப்படுகின்றன.
சுவர்ணபுரீஸ்வரர் கோயில்,
மிகப் பிரமாண்டமான மற்றும் அழகான கோயிலாகும், இது மிகப்பெரிய சுற்றுச்சுவரைக் கொண்டுள்ளது, ஏராளமான சிறந்த கட்டிடக்கலை அம்சங்கள் மற்றும் புராண முக்கியத்துவம் வாய்ந்த ஆலயம்.
சிறப்பு
🌟நவக்கிரக தோஷம் நீக்கும் சொர்ணபுரீஸ்வரர் திருக்கோயில்*
🌟வசிஷ்ட நதியின் வடகரையில்
முனிவர் வசிஷ்டரால் நிறுவப்பட்ட பஞ்ச பூத ஸ்தலங்களில் ஆகாய தலமாக போற்றப்படுகிறது.
🌟நாயன்மார்களில் ஒருவரான திருநாவுக்கரசரால் பாடல் பெற்ற இந்தத் திருத்தலத்தை இன்னொரு ‘சிதம்பரம்’ என்கிறார்கள்.
🌟இந்தக் கோயில் திருநாவுக்கரசரால் பாடப்பட்ட தேவார வைப்புத் தலமாகும்.
🌟பிரதான தெய்வம் சுவர்ணபுரீஸ்வரர் ஒரு சுயம்பு லிங்கம்.
🌟இந்த தலத்தில், உயிர்கள் அனைத்தும் உய்யும் பொருட்டு போக வடிவம், யோக வடிவம், வேக வடிவம் ஆகிய மூன்று நிலைகளையும் ஒரே திருமேனியில் தாங்கியபடி, ஆகாயலிங்கமாக இறைவன் எழுந்தருளியுள்ளார்.
🌟மூலவர் : ஸ்ரீ ஸ்வர்ணபுரீஸ்வரர் –
🌟அம்பாள் : ஸ்வர்ணாம்பிகை, உமையாள்; ஸ்தல விருட்சம் : அரச மரம்.
தலபுராணம்
1. பஞ்சபூததலம்:
🌟சிவபெருமானை மதிக்காமல் யாகம் நடத்தினான் தட்சன். அவன் நடத்திய யாகத்தில் தேவர்கள், சப்த ரிஷிகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். இதனால் இறைவனின் கோபத்திற்கு ஆளான ரிஷிகள் அனைவரும், தங்கள் ரிஷி பதவியை இழந்து, வேதங்களை மறந்து நைமிசாரண்யத்தில் இருந்து வெளியேற்றப்பட்டனர். பிறகு
சுக பிரம்ம ரிஷியின் அறிவுரைப்படி, அவர்கள் அனைவரும் இந்தப் பகுதிக்கு வந்தனர்.
🌼 ராமரின் குல குருவான வசிஷ்ட முனிவரும் சிவபெருமானுக்கு தவம் மற்றும் பூஜைகள் செய்ய இங்கு வந்தார்.
அவரது தவத்திற்கு அசுரர்களால் பல இடையூறுகள் வந்தன அவர் பல தடைகளை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. நல்ல தண்ணீர் மற்றும் பூக்களால் சிவனை வணங்க சோதனைகளைக் கடக்கலாம் என
மகரிஷி நாரதர் முனிவர் கூறியதன் அடிப்படையில், வசிட்டர், தமது தவவலிமையால் ‘வசிஷ்டநதி’ என்ற தீர்த்தத்தை உருவாக்கினார்.
🌟நதிக்கரையில் வெவ்வேறு இடங்களில் பஞ்ச பூத மூர்த்திகளாக ஐந்து இடங்களில் சிவலிங்கங்களை பிரதிஷ்டை செய்து சிவபெருமானை நோக்கி தவம் செய்தனர்.
🌟பஞ்ச பூத தலங்களில் கடைசியான கூகையூரில், அவர்கள் தங்கள் பாவங்களிலிருந்து விடுபட்டு, இழந்த அறிவையும் சக்தியையும் மீண்டும் .
🌟அந்த 5 தலங்களே வசிஷ்ட நதிக்கரையோர
பஞ்சபூத தலங்கள் என்று போற்றப்படுகிறது.
🌟இவற்றுள் ஆகாய தலமாக விளங்குகிறது கூகையூர் சொர்ணபுரீஸ்வரர் திருக்கோவில்.
🌼வசிஷ்டர் முனிவர் நிறுவிய பஞ்ச பூத ஸ்தலங்களின் பட்டியல் : 1) தான்தோன்றீஸ்வரர் சிவன் கோவில், பேலூர், சேலம் (நிலம்)
2) சாம்பமூர்த்திஸ்வரர் கோவில், ஏத்தாப்பூர் (நீர்) 3) கோட்டை காயநிர்மலேஸ்வரர் கோவில், ஆத்தூர் கோட்டை (அக்னி - தீ)
4) ஸ்ரீ காமநாதர் கோவில்,அரகளூர்.
5) ஸ்வர்ணபுரீஸ்வரர் கோவில், கூகையூர் (வானம்)
2.வியாழ பகவானுக்கு தரிசனம்
🌟ஒரு முறை இந்திரன், தேவலோகத்தில் தனது சிம்மாசனத்தில் தேவர்கள் சூழ அமர்ந்திருந்தான். அப்போது தேவர்களின் குருவான வியாழ பகவான் அங்கு வந்தார். மாயையால் செல்வச் செருக்கும், அதிகார ஆணவமும் இந்திரனின் கண்களை மறைத்த காரணத்தால், தன்னுடைய குருவுக்கு அவன் எழுந்து நின்று மதிப்பளிக்க தவறினான். இதனால் கோபம் கொண்ட வியாழ பகவான் அங்கிருந்து வெளியேறினார். தேவகுரு இல்லாததாலும், அவரது சாபத்தாலும் இந்திரசபை பொலிவிழந்தது. தனது தவறை உணர்ந்த இந்திரன் வியாழ பகவானை பல இடங்களிலும் தேடினான். ஆனால் அவரோ தன்னை யார் கண்ணுக்கும் தெரியாத அரூபியாக மாற்றிக்கொண்டு, தனது கவுரவத்தை இழந்த வருத்தத்தில் வனாந்தரத்தில் வாசம் செய்தார். அப்போது கூகையூரில் நெல்லி வனத்தில் எழுந்தருளி இருந்த இறைவனை, மலர் தூவி, வேதங்கள் ஓதி தம் குறை தீர்க்க வேண்டினார். அவருக்கு சிவபெருமான் தரிசனம் தந்தருளினார்.
அப்போது சாபம் பெற்ற இந்திரனும் தமது தவறை உணர்ந்து, இங்கு வந்து வியாழ பகவானை வணங்கினான். அதன்பிறகு மீண்டும் தேவகுருவாக வியாழ பகவான் புகழுடன் வீற்றிருந்தார். வியாழ பகவானுக்கு அருளாசி புரிந்ததால் பொன்பரப்பின ஈஸ்வரன் (சொர்ணபுரீஸ்வரர்) எனும் திருநாமம் இங்குள்ள இறைவனுக்கு ஏற்பட்டதாக கூறுகிறார்கள்.
🏵️மற்றொரு புராணத்தின் படி, இந்த கோயிலின் ஸ்தபதியின் மகன் பாம்பு விஷத்தால் இறந்தபோது, இந்த கோயிலின் இறைவன் ஒரு சித்தர் வடிவத்தில் வந்து சிறுவனின் உயிரைக் கொண்டு வந்தார்.
ஆலய வரலாறு
🛕கி.பி. 7-ம் நூற்றாண்டில் செங்கற்களால் கட்டப்பட்ட சொர்ணபுரீஸ்வரர் கோவிலை, மூன்றாம் குலோத்துங்க சோழன் உத்தரவின் படி கி.பி.1184-ம் ஆண்டு குறுநில மன்னன் பொன்பரப்பின ராஜராஜ கோவலராயன் கற்கோவிலாக மாற்றிக் கட்டினான்.
🛕இந்தக் கோயில் எவ்வாறு கட்டப்பட்டது என்பது பற்றிய ஒரு சுவாரஸ்யமான கதை உள்ளது:
🛕1178 ஜூலை 6-8 தேதிகளில் கங்கை கொண்ட சோழபுரத்தில் சோழ மன்னர் மூன்றாம்
குலோத்துங்கரின் முடிசூட்டு விழாவின் போது, ராஜா மற்றும் ராணியிடம் ஒரு தெய்வீகக் குரல் கேட்டது, "உங்கள் முடிசூட்டு விழாவின் போது எனக்கு ஒரு கோயில் கட்டுவதாக நீங்கள் செய்த சபதத்தை மறந்துவிட்டீர்களா?".
🛕அதே நேரத்தில், கூகையூரிலிருந்து சோழ அரசின் துணை நிலைத் தலைவர் ஒருவர் வந்தார், அப்போது கூகையூர் ஸ்வர்ணபுரீஸ்வரர் கோயிலைப் புதுப்பித்து கிரானைட் கோயிலாக மாற்றுவதற்கான தனது முந்தைய சபதம்/விருப்பத்தை மன்னர் திடீரென்று நினைவு கூர்ந்தார். அவர் உடனடியாக வேலையைத் தொடங்க உத்தரவிட்டார், 6 ஆண்டுகள் பணிக்குப் பிறகு, 24.01.1184 அன்று மன்னர் மூன்றாம் குலேத்துங்கர் முன்னிலையில் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. கோயிலின் சரியான தேதி பொறிக்கப்பட்டுள்ளதால், இது "தேதியிட்ட கோயில்" என்று அழைக்கப்படுகிறது.
🛕இரண்டாம் ராஜராஜ சோழன் தாராசுரம் ஐராவதீஸ்வரர் கோயிலைக் கட்டிய பிறகு, அவனுடைய மகன் மூன்றாம் குலோத்துங்கன் இந்தக் கோயிலைக் கட்டினான். அதனால் தாராசுரம் கோயிலின் செல்வாக்கு பல்வேறு சிற்பங்கள் மற்றும் கட்டிடக்கலை அம்சங்கள் இங்கு காணப்படுகிறது.
ஆலய அமைப்பு
🌼நாம் கோயிலுக்குள் நுழைந்ததும், 46 தூண்களைக் கொண்ட ஒரு பெரிய வசந்த மண்டபம் உள்ளது, அங்கு பல்வேறு கோயில் உற்சவங்கள் நடத்தப்படுகின்றன.
🌟ஸ்ரீ மகாலட்சுமியின் அனைத்து குணங்களுடனும் அன்னை சுவர்ணாம்பிகை, கிழக்கு நோக்கி நின்ற கோலத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
🌟முருகப்பெருமானின் சன்னதி வெளிப்புற பிரகாரத்தில் உள்ளது; அவர் ஒரு மயில் மீது அமர்ந்து தரிசனம் அளிக்கிறார், சிலை 8 அடி உயரம் கொண்டது. அவர் தனது 6 முகங்கள் மற்றும் 12 கைகளுடன் தனது மனைவியர்களான வள்ளி மற்றும் தெய்வானையுடன் கம்பீரமாகத் தோன்றுகிறார்.
கல்வெட்டுகள் சிற்பங்கள்
🌟அம்மன் சன்னதி மிகவும் சிறப்பு வாய்ந்தது
மற்றும் கட்டிடக்கலை சிறப்பால் நிறைந்துள்ளது. கொடுங்கை (முன் மண்டபத்தின் கூரை) மிகவும் பிரபலமானது, மேலும் "கூகையூர் கொடுங்கை அழகு / கூகையூர் கொடுங்கை அழகு " என்ற பழமொழி அதன் அழகைப் பறைசாற்றுகிறது. அம்மன் சன்னதியைச் சுற்றியுள்ள கோஷ்டச் சுவர்களில் பார்வதி தேவி, கண்ணப்ப நாயனார், குரங்கு, நண்டு போன்றோர் வழிபடும் உருவம் உள்ளது.
🌼இந்தக் கோயிலில் மட்டும் 19 கல்வெட்டுகள் உள்ளன, கூகையூரில் உள்ள 5 கோயில்களிலும் மொத்தம் 32 கல்வெட்டுகள் உள்ளன. இவை ஸ்ரீ ராம அருணாச்சலம் எழுதிய "கூகையூர் கல்வெட்டுகள்" என்ற தனித் தமிழ் புத்தகத்தில் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன
🏵️கொடுங்கை, 20 x 20 அடி பெரிய சதுரத்திற்குள் 72 சதுரங்களில் சிவனின் பல்வேறு தெய்வீக நாடகங்களின் அழகிய சின்னங்களுடன் மிகவும் கலைநயத்துடன் செதுக்கப்பட்டுள்ளது.
🏵️வெளிப்புறச் சுவர்களில் மூன்றாம் குலோத்துங்க மன்னர் மற்றும் ராணி திருபுவன சுந்தரியின் சின்னங்களும் உள்ளன. மேலும், அம்மன் சன்னதி மண்டபத்தில் இசைத் தூண்கள் உள்ளன, அவை தூண்களின் வெவ்வேறு பகுதிகளிலிருந்து அனைத்து சப்த ஸ்வரங்களையும் வெளிப்படுத்துகின்றன.
🌟 இரண்டு வரிசைகளில் 108 சிவலிங்கத் திருவுருவங்களும், வெளிச் சுவர்களில் மூன்றாம் குலோத்துங்க மன்னன் திருபுவன சுந்தரியின் திருவுருவங்களும் உள்ளன.
🌟தூண்களின் பல்வேறு பகுதிகளிலிருந்து சப்த ஸ்வரங்கள் ஒலி வருமாறு அமைந்துள்ளன.
🌟இந்தக் கோயிலில் உள்ள நந்தி கன்றுக்குட்டியின் அளவு - பால நந்தி / குழந்தை நந்தி என்று அழைக்கப்படுகிறது.
ராகு - கேதுவின் பாதகமான விளைவுகளை எதிர்கொள்பவர்கள் பால நந்திக்கு அபிஷேகம் செய்கிறார்கள் - அது நீல நிறமாக மாறும்.
தரிசன பலன்
🪴இந்த திருத்தலத்தில் உள்ள சொர்ணம்சொர்ண புரீஸ்வரரை வழிபடுபவர்களுக்கு கல்வியும், தொழிலும் சிறப்பாக அமையும் என்பது ஐதீகம். இத்தல இறைவனை வழிபட்டால் நவக்கிரக தோஷங்கள் நீங்கும் என்று கூறப்படுகிறது.
ஆலய நடைதிறப்பு
🌟 கோயில் காலை 0700 மணி முதல் இரவு 8 மணி வரை தரிசனத்திற்காக திறந்திருக்கும்.
⛳#பயணஅனுபவக்குறிப்புகள்🕊️
🛐 2017 ல் ஏற்கனவே தரிசித்துள்ளோம். இறையருளால் 10.11.2025 மீள் தரிசனம்.
🌟பெரிய ஆலயம் மிகவும் பழமையானது. சிறப்பானது. திருப்பணி வேலைகள் நடந்து வருகிறது.
🌟சிற்றூர் ஆக இருப்பதால், சாதாரண நாட்களில் வெளியூர் பக்தர்கள் மட்டும் வருகிறார்கள்.
🌟அருகில் குருக்கள் வீடு உள்ளதால், நடை திறப்பு நேரம் விசாரித்து தரிசனம் செய்யலாம்.
🌟வாகனங்கள் ஆலயம் முன்புறம் நிறுத்தலாம்.
🌟இவ்வூரில் மேலும் 4 ஆலயங்கள் உள்ளன. சில ஆலயங்கள் மிகவும் சிதைந்து பராமரிப்பு இல்லாமல் உள்ளது. பகலில் சென்று அவற்றையும் தரிசிக்கலாம்.
🌟 சிறப்பான ஆலயம் அவசியம் தரிசிக்க வேண்டியது.
🙇நன்றி🙏
🛕#சுப்ராம்ஆலயதரிசனம் 9.11.2025🛐
# என்றும்அன்புடன்💟
#சுப்ராம்அருணாசலம்காரைக்கால்
#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று🙇🛕
#ஆன்மிகபரதம்அகிலத்தின்சிகரம்🇮🇳🗻
⛳ #பிரதோஷேக்குழுயாத்ரா
🛕#ஆன்மீகதலயாத்திரை:
சேலம் 8, 9 நவம்பர், 2025.
நன்றி🙏 9.11.2025
🕊️🔱🛐🙏🇮🇳🙇⛳🛕🌏🗻
No comments:
Post a Comment