Wednesday, November 9, 2022

ஜோதிர்லிங்க_தரிசனம்#பயண_அனுபவக்_குறிப்புகள்பதிவு - 2 மத்தியப்பிரதேசம்#ஒம்காரேஸ்வரர்11.10.2022

#ஜோதிர்லிங்க_தரிசனம்
#பயண_அனுபவக்_குறிப்புகள்
பதிவு - 2
#மத்தியப்பிரதேசம்
#ஒம்காரேஸ்வரர்
11.10.2022

🛕 இந்தியாவில் உள்ள மத்திய பிரதேச மாநிலத்தில் உஜ்ஜியினியில் உள்ள ஸ்ரீ மகாகாளேஸ்வரர்,  ஸ்ரீ ஓம்காரேஸ்வரர் மற்றும் மகாராஷ்ட்ரா மாநிலத்தில் உள்ள 5 ஜோதிர்லிங்கங்கள், அஷ்ட்ட கணபதி ஆலயங்கள், மற்றும் புராண சிறப்புவாய்ந்த சில புன்னிய தலங்களை சென்று தரிசனம் செய்யும் வாய்ப்பு எங்களுக்கு மீண்டும் இவ்வருடம்  கிடைத்தது. 
 
🛕 இந்த தலங்களுக்குச் சென்று வந்த அனுபவக் குறிப்புகளை பகிர்ந்து கொள்கிறேன். தாங்கள் இத்தலங்களுக்கு செல்லும் போது இவை  உதவலாம்.

#மத்தியப்பிரதேசம்:
#ஜோதிர்லிங்கம் 
#ஓம்காரேஸ்வரர்

🛕 பாரத தேசம் பழம்பெரும் தேசம். தேசத்தின் பல பாகங்களில் உள்ள இந்த ஜோதிர்லிங்களை தரிசித்து வழிபடுவது, பாரதத்தில் வசிக்கும் ஏராளமான இந்துக்களின் கடமையாக உள்ளது.
🛕 ஓம்காரேஷ்வர்: என்பது சிவனுக்காக அர்ப்பணிக்கப்பட்ட ஒரு இந்துக் கோயிலாகும்.

🛕 இது இந்தியாவின் மத்திய பிரதேச மாநிலத்தின் கந்த்வா மாவட்டத்தில், இந்தூர் அருகில், உள்ள மந்தாதா என்ற தீவு நகரில்  அமைந்துள்ளது. தீவின் வடிவம் தேவநாகரி ॐ சின்னம் போல் இருப்பதாக கூறப்படுகிறது.

🛕 மத்தியப் பிரதேசத்தில் உள்ள பர்வாஹாவில் இருந்து சுமார் 16 கி.மீ. ஓம்காரேஷ்வர்.  இந்தியாவின் மிகவும் புனிதமான நதியான நர்மதையால் உருவானது. இப்போது இங்கு உலகின் மிகப்பெரிய அணை திட்டங்களில் ஒன்று செயல்படுகிறது. 

🛕நர்மதை மற்றும் காவேரி (நர்மதையின் துணை நதி)  நதிக்கரையில் மந்தாதா அல்லது ஷிவ்புரி தீவில் இக்கோயில் அமைந்துள்ளது . தீவு 4 கிமீ நீளமும், 2.6 கிமீ பரப்பளவும் கொண்டது  படகுகள் மற்றும் பாலம் மூலம் அணுகலாம்.

🛕 சிவனின் 12 போற்றப்படும் ஜோதிர்லிங்கத் தலங்களில் இதுவும் ஒன்று . பல நூற்றாண்டுகளுக்கு முன்பு பில் பழங்குடி மக்கள் இந்த இடத்தில் குடியேறினர், இப்போது இந்த இடம் அதன் புராணத்திற்கும், வரலாற்றிற்கும் பிரபலமானது.

🛕இங்கு இரண்டு முக்கிய சிவன் கோவில்கள் உள்ளன, ஒன்று ஓம்காரேஷ்வர்.  (இதன் பெயர் “ஓம்காரத்தின் இறைவன் அல்லது ஓம் ஒலியின் இறைவன்”) தீவில் அமைந்துள்ளது.

 🛕, மம்லேஷ்வர் (அமலேஷ்வர்) (இதன் பெயர் “அழியாத இறைவன்”) “அழியாதவர்கள் அல்லது தேவர்களின் இறைவன்” எனப்படுகிறது. இது, நர்மதை ஆற்றின் தென்கரையில் நிலப்பரப்பில் அமைந்துள்ளது. 

புராண கதைகள்:

🛕இந்து புராணத்தின் படி, விந்தியா, விந்தியாச்சல மலைத்தொடரைக் கட்டுப்படுத்தும் தெய்வம், செய்த பாவங்களைப் போக்க சிவனை வழிபட்டது. அவர் ஒரு புனித வடிவியல் வரைபடத்தையும் மணல் மற்றும் களிமண்ணால் செய்யப்பட்ட லிங்கத்தையும் உருவாக்கினார். சிவன் வழிபாட்டில் மகிழ்ந்தார் மற்றும் ஓம்காரேஷ்வர் மற்றும் அமலேஸ்வரா என இரண்டு வடிவங்களில் தோன்றியதாக நம்பப்படுகிறது. அந்த மண் மேடு ஓம் வடிவில் தோன்றியதால் இத்தீவு ஓம்காரேஸ்வர் என்று அழைக்கப்பட்டது. கோயிலில் பார்வதி மற்றும் கணபதி சன்னதி உள்ளது.

🛕இரண்டாவது மாந்தாதா மற்றும் அவரது மகனின் தவம் தொடர்பானது. இக்ஷ்வாகு குலத்தின் மன்னன் ( ராமரின் மூதாதையர்) சிவபெருமான் ஜோதிர்லிங்கமாக காட்சியளிக்கும் வரை இங்கு சிவனை வழிபட்டார். மாந்தாதாவின் மகன்கள்-அம்பரீஷ் மற்றும் முச்சுகுந்தா அவர்கள் இங்கு கடுமையான தவம் மற்றும் துறவுகளை கடைப்பிடித்து சிவபெருமானை மகிழ்வித்தனர். அதனால்தான் இந்த மலைக்கு மாந்தாதா என்று பெயர்.

🛕இந்து மத நூல்களின் மூன்றாவது கதை:  ஒரு காலத்தில் தேவர்களுக்கும், அசுரர்களுக்கும். இடையே ஒரு பெரிய போர் நடந்தது, அதில் அசுரர்கள் வெற்றி பெற்றார். இது தேவர்களுக்கு பெரும் பின்னடைவாக இருந்தது, எனவே தேவர்கள் சிவபெருமானிடம் பிரார்த்தனை செய்தனர். அவர்களின் பிரார்த்தனையால் மகிழ்ந்த சிவபெருமான், ஓம்காரேஷ்வர் ஜோதிர்லிங்க வடிவில் தோன்றி  அசுரார்களை வென்றார்.

🕉️ஓம்காரத்தின் தத்துவம் :– ஓம்கார் ஓம் (ஒலி) மற்றும் அகார் (சிருஷ்டி) ஆகிய இரண்டு வார்த்தைகளால் ஆனது. அத்வைத் என்றால் “இரண்டு அல்ல” என்பதால் இரண்டும் ஒன்று அல்ல. சிருஷ்டியின் ஓம் பீஜே மந்திரம் , ஸ்ருஷ்டியை உருவாக்கியவர்.

#பயண_அனுபவக்_குறிப்புகள்🕊️

🛕முதலில், சென்னையிலிருந்து உஜ்ஜயினி செல்வதற்கு JAIPUR Expressல் ரயில் பயணம் ஏற்பாடு செய்யப்பட்டது. 

🛕9.10.2022 மாலை 5.40 மணிக்கு சென்னை Central Railway Jn. புறப்பட்டு அடுத்த நாள் 10.10.2022 இரவு 9.15 க்கு செல்ல 3 AC கட்டணம் இருவருக்கு கட்டணம் ரூ 3650/-

🛕போக்குவரத்து, உணவு, தங்கும் வசதி பயண ஏற்பாட்டளர் மூலம்  ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.

🛕10.10.22 அன்று இரவு உஜ்ஜயினி சென்றதும், அங்கிருந்து ஷேர் Auto மூலம் 8 பேர்களுக்கு ரூ 250 கட்டணம் செலுத்தி நாங்கள் தங்க வேண்டிய, Hotel Ganga என்ற இடத்திற்கு சென்றுதங்கினோம். இந்த இடம் உஜ்ஜயினி நகரிலிருந்து சற்று தள்ளி புறநகர் பகுதியில் இருந்தது. இதன் அருகில் தனியார் பேருந்து நிலையம் உள்ளது. 

🛕11.10.2022  செவ்வாய்க்கிழமை அன்று காலை உணவு முடித்து விட்டு, காலை 7.00 மணி அளவில் உஜ்ஜயினியிலிருந்து 190 கி.மீ. தூரம் உள்ள ஓம்காரேஸ்வரர் ஆலயம் சென்று தரிசித்து வர தனிப் பேருந்து வசதி செய்யப்பட்டு இருந்தது.

🛕காலையில் புறப்பட்டு  மதியம் சென்று அடைந்தோம். வழியில் ஒரு DABA என்னும் பயணவழி உணவகத்தில் Tea சாப்பிட்டோம்.  Highway ஆக இருந்தாலும், சாலைகள் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருவதாலும், போக்குவரத்து அதிகம் உள்ள சாலை என்பதாலும் கவனமாகச் செல்ல வேண்டியிருந்தது. 

🛕 11.30 மணி அளவில் ஓம்காரேஸ்வரர் இடம் அடைந்தோம்.

🕉️ஆலய தரிசனம்

🔱ஓம்காரேஸ்வரர் ஆலயம்

🛕 இந்த ஊர் சென்றவுடன் பேருந்து நிறுத்தும் இடத்திலிருந்து சுமார் 1 கி.மீ. தூரத்தில் நர்மதை நதியின் பாலம் சென்று அங்கிருந்து இவ்வாலயம் செல்லலாம்.

🛕நர்மதை நதியின் கிழக்குப் புறத்தில் ஒரு பெரிய நீர்த் தேக்கம் உள்ளது. இங்கிருந்து வெளியேறும் நீர்வழி இரண்டாகப் பிரிந்து, மந்தாதா மலைப் பிரதேசத்தைச் சுற்றி மீண்டும் சங்கமம் ஆகி செல்லுகிறது. இந்த பிரதேசம் ஓம் வடிவில் உள்ளது.

🛕தென் பகுதியில் செல்லும் நர்மதை ஆற்றின் மலைக்கரையில் ஓம்காரேஸ்வரர் ஆலயம் அமைக்கப்பட்டுள்ளது. தென்புறக் கரையில் மம்லேஸ்வரர் ஆலயம் உள்ளது.

🛕 வாகன நிறுத்தத்திலிருந்து, நர்மதை நதி கரை அருகில் செல்லும்போது, 3 வழிகள் உள்ளது.

🌟1வது மேற்கில் செல்லும் சாலையில் 200 மீ.தூரத்தில் மம்லேஸ்வர் ஆலயம் செல்லலாம்.

🌟2வது நேராக தொங்குபாலம் கீழ் பகுதியில் சென்றால், நர்மதை நதிக்கரையை அடையலாம்.

🌟3வது தொங்குபாலம் வழியாக நடந்து சென்றால் ஓம்காரேஸ்வரர் ஜோதிர்லிங்க ஆலயம் அடையலாம்.

🛕 முதலில், இந்த தொங்கு பாலத்திற்கு சென்று, பாலத்திலிருந்து ஒரு புறம் நர்மதை ஆற்றில் கட்டப்பட்டுள்ள நீர்த்தேக்கத்தையும், மறுபுறத்தில் நர்மதை நதியின் நீரோட்டம், மற்றும், மலைக்கரையில் உள்ள ஓம்காரேஸ்வரர் ஆலயம், தென் பகுதியில் உள்ள மம்லேஸ்வரர், மற்றும் அருகில் உள்ள ஆலயங்கள். படகுத்துறைகள் இவற்றைப் பார்த்துக்கொண்டு, தீவுப்பகுதியை அடைந்து ஓம்காரேஸ்வரர் ஆலயம் சென்றோம். பாலத்திலிருந்து இவ்விடங்களைப் பார்ப்பது நல்ல அனுபவமாக இருந்தது.

🛕ஆலயம் அடைந்ததும், ஆலயத்தின் அருகிலிருந்து கீழ்பகுதியில், சுமார் 50 படிகள் கீழே இறங்கி, பளிங்குபோன்ற நல்ல நீரால் படிகளைத் தொட்டு செல்லும் நர்மதையில் நீராடினோம். அருகில் திதி, தர்ப்பணம் செய்ய பண்டாக்களும் (பூசை செய்பவர்கள்) உள்ளனர். 

🛕நீராடிய பின், சில படிகள் மேல் ஏறினால், ஒரு குகைக் கோவில் இருந்தது.இதை ஆதிசங்கரர் குகை என்கிறார்கள்..

🛐ஆதி சங்கரரின் குகை –

🛕 சங்கரர் தனது குருவான கோவிந்த பகவத்பாதாவை ஒரு குகையில் சந்தித்த இடம் என்று கூறப்படுகிறது. ஆதி சங்கரரின் திருவுருவம் நிறுவப்பட்டுள்ளது.  சிவன் கோவிலுக்கு சற்று கீழே இந்த குகை இன்றும் காணப்படுகிறது. 

🛕 அருகில் உள்ள இந்தியில் உள்ள கல்வெட்டு சுருக்கம். தமிழில் ...

'காமகோடி பீட சேவா அறக்கட்டளை மற்றும் ஜகத்குரு ஆதி பகவத்பாத் ஸ்ரீ சங்கராச்சார்யா ஸ்ரீமத் கோவிந்த் பகவத்பாதாச்சார்யாவின் குகைக் கோயில் ஆகியவை ஸ்ரீ மத் ஜகத்குரு ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி மற்றும் ஸ்ரீமத் ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி மஹானால் புனரமைக்கப்பட்டுள்ளன. மத்தியப் பிரதேச முதல்வர் மாண்புமிகு ஸ்ரீ அர்ஜுன் சிங் அவர்களின் சிறப்பு முன்னிலையில், இது ஸ்ரீ சங்கராச்சாரியார் ஜெயந்தி விழா புனித நிகழ்வில் மீண்டும் பிரதிஷ்டை செய்யப்பட்டது.'

🛕இந்தக் குகை கோயில் உட்புறம் ஸ்ரீஆதிசங்கரர் சிலை மற்றும் புடை சிற்பமாக, ஓம்காரேஸ்வரரை வழிபட்டது, உள்ளது.

🛕உட்புறம் சில கல்தூண்களும், குகை போன்ற அமைப்பில் சில அருமையான பழமையான சிலைகளும் உள்ளன. மிகவும் புராதானமான ஆலயம் என்பதாலும் சிதைந்தும் உள்ளது. இருப்பினும் வடிவமைப்பு நுட்பங்கள் வியக்கவைக்கின்றது.

🛕குகையைவிட்டு வெளியில் வந்து மேலும், சில படிகள் ஏறி, ஜோதிர்லிங்க ஆலயம் அடைந்தோம்.

🛕ஆலயம் மலைப்பகுதியில் அமைந்துள்ளதால், மலைப்பகுதிகள் பலவற்றை சரி செய்து ஆலயம் எழுப்பப்பட்டுள்ளது. 

🛕கருவரையின் மீது உயரக் கோபுரம் அமைந்துள்ளது. நில அமைப்பில் உள்ளது போல மிக தாராளமான இடவமைப்பு இல்லை. சுற்றுப் பிரகாரம் மற்றும் பல சன்னதிகள் மலை இடுக்குகளாக உள்ளன. 

 🛕முதலில், சுமார்,.3 அடி அமைப்பில் விநாயகர் புடை சிற்பமாக ஒரு சன்னதி போல அமைத்துள்ளனர்.

🛕இந்தப் பகுதியில் ஆலய அலுவலகம், கடைகளும், Cheppal Stand உட்பட வைத்துள்ளனர்.

🛕ஆலயம் தென்புறமாக உட்செல்ல வழி உள்ளது. முன் வெளி மண்டபம் அகலமாக இருந்தாலும், வரிசை இரும்புக்குழாய்த் தடுப்புகள் உள்ளன.

🛕தற்போது, இங்கிருந்து ஆலயம் உள்ளே சென்று சுவாமி தரிசித்து வெளியில் வரும் வரை இரும்புக்குழாய் வரிசை அமைக்கப்பட்டுள்ளது. (முதன்முறை நாங்கள் வந்த போது இப்படி இல்லை). இந்த வரிசை ஏற்பாடுகள் மூலம் ஆலயம் உள்ளே சென்று, சுவாமியைத் தரிசித்து வரலாம். Cellphone எடுத்துச் செல்வதில் கட்டுப்பாடுகள் இல்லாவிட்டாலும், கருவரைப் பகுதிகளில் மட்டும் புகைப்படம் எடுப்பதை நெறிப்படுத்த முயலுகிறார்கள்.

🛕முன் வெளி மண்டபத்தில், ஒரு அழகிய வெள்ளை பளிங்குக் கல்லால் ஆன நந்தியும், அதற்கு ஒரு சிறப்பான அழகிய வடிவமைப்பில் ஒரு கல் மண்டபமும் அமைக்கப்பட்டுள்ளது.

🛕இதற்கு அடுத்தபடியாக, ஆலய முன்மண்டபம் பிரமாண்டமான அளவில் பல்வேறு துண்கள் கொண்ட அமைப்பில் உள்ளது. மிக அழகிய, அற்புத கல் சிலைகள், தூண்கள், மற்றும், மண்டபத்தின் விதானங்களும். அமைந்துள்ளது மிக சிறப்பு.

🛕இதை அடுத்து கல்லால் செய்யப்பட்டுள்ள அழகிய முறையில் வடிவமைப்பில் உள்ள பெரிய நிலைப்படியைத் தாண்டினால், ஒரு குறுகிய அளவில் உள்ள நீள்சதுர வடிவில் உள்ள உள் மண்டபத்தில் கருவறை அமைந்துள்ளது.  சுவாமி மேற்கு நோக்கிய சன்னதியும், நடுவில் பார்வதியின் சிலையும், உள்ளது.

🛕ஜோதிர்லிங்கமாகிய, ஓம்காரேஸ்வரர் சிறிய அளவில் உள்ளார். தரைப்பகுதியை ஒட்டி உள்ளார். லிங்கத்தின் மீது நீரைக் கொண்டு அபிஷேகம் செய்து கொண்டுள்ளார்கள். சுவாமிக்கு, நாகாபரணம் அமைத்துள்னர்.

🛕நாமே தனியாக நீர், பால், புஷ்பங்கள் கொண்டும் சுவாமி மீது ஊற்றி அபிஷேகம் செய்யலாம்.  அல்லது, பண்டாக்கள் மூலம், சிறப்பு வழி முறையில் (ரூ.50 முதல் கொடுத்து) சென்றும், நாமே அபிஷேகம் செய்யவும் அனுமதிக்கின்றனர்.

🛕கருவரை அகலம் மிகவும் குறுகியதாகவும், பக்தர்கள் கூட்டம் அதிகம் இருப்பதாலும், வரிசையாக சென்றுதான் தரிசனம் செய்ய வேண்டும். அங்குள்ளவர்கள் கூட்டத்தைக் கட்டுப்படுத்த முயற்சி செய்வதாலும், தள்ளுமுள்ளுகள் உண்டு.

🛕நாம் கவனமாக, பொறுமையாக நின்று  கருவரை மாடத்தின் நடுவில் நன்றாகத் தெரியும், பார்வதி  அம்மனையும், கீழ்புறத்தில் அமைந்துள்ள சுவாமியையும் பார்த்து தரிசிக்க வேண்டும்.

🛕சுவாமி தரிசித்து வெளியில் வந்ததும், மீண்டும் படிகள் கீழே இறங்கி, நதிக்கரைக்கு வந்தோம்.

🛕இங்கு படகுத்துறை உள்ளது. இந்தப் படகுகள் மூலம் நதியின் தென்புறம் உள்ள ஆலயங்கள் செல்ல முடிவு செய்தோம்.

🛕ஒரு படகில் சுமார் 20 பேர் அனுமதிக்கப்பட்டு அமரவைக்கப்பட்டு எதிர்கரை செல்லலாம். கட்டணம் நபருக்கு ரூ 20 மட்டும். 

🛕 எதிர் கரையில், (தென்கரையில்) சில புராதானமான ஆலயங்களும், புதிதாக கட்டப்பட்டுள்ள ஆலயங்களும் உள்ளன. எதிர் கரையில் உள்ள படகுத்துரைக்கு 5-10 நிமிடங்களில் வந்து சேர்ந்துவிடலாம்.வழியில், Boat லிருந்து நர்மதை ஆற்றின் தெளிவான நீரோட்டம், தூரத்தில் உள்ள அணைப்பகுதி முதல், தொங்குபாலம், மற்றும், மேற்கில் உள்ள நடைபாலம் வரை உள்ள கட்டிடங்கள், ஆலயங்கள் முதலியவைகள் கண் கொள்ளாக்காட்சியாக அமைந்துள்ளன.

🛕இதற்குப் பிறகு பலபடிகள் ஏறி நடந்து சென்றால், இந்தப் பகுதியில் உள்ள ஆலயங்களை தரிசிக்கலாம்.

🛕இந்தப்பகுதியில், ஏராளமான கடைகள் உள்ளன.

🛕வழியில், புராதானமான ஆலயங்கள் பல உள்ளன. 

🛕🔱 ஸ்ரீமம்லேஸ்வரர் ஆலயம்

🛕நர்மதை நதியின் தென்கரையிலிருந்து சுமார் 50 மீட்டர் தூரத்தில் ஒரு மிக புராதானமான ஆலயமான ஸ்ரீமம்லேஸ்வரர் ஆலயம் உள்ளது. 

🛕ஆலயம் ASI எனப்படும், இந்திய தொல்பொருள் ஆராய்ச்சித் துறையினரின் கட்டுப்பாட்டில் உள்ளது.

🛕கி.பி.10ம் நூற்றாண்டில், இவ்வாலயம் கட்டப்பட்டுள்ளதாகவும்,இவ்வாலயங்களை இந்தூர் ரானி அவர்களால் புனரமைக்கப்பட்டதாகவும் குறிப்பு உண்டு.

🛕ஆலயம் அமைப்பு :

சுவாமி மூலவர் மம்லேஸ்வரர் மேற்கு பார்த்த சன்னதி, சிறிய அமைப்பு நாம் கருவரை உள்ளே சென்று அபிஷேகம் செய்து தொட்டு வணங்கலாம். கருவரையில் உள்ள நடு மாடத்தில், ஓங்காரேஸ்வரர் கருவரை மாடம் போலவே பார்வதி சிலையும் உள்ளது.

 🛕ஆலயத்தில் உள கருவரை உயர் கோபுர அமைப்பு. தனி முன்மண்டபம் வடக்கிலும், தெற்கிலும் நுழைவுப்பகுதி, கருவரை மேல்புறம் நந்தியம் பெருமாள் கருவரையை நோக்கி தனியே சிறிய மண்டபத்தில் உள்ளார்.

 🛕ஆலயம் கருவரை சுற்றில் வடபுறம் ஒரு லிங்கமும், நந்தியும், வெட்டவெளியில், கருவறை கோமுகத்தை ஒட்டியுள்ளது.

🛕ஆலய கருவரைக் கோபுரம் மிகக் கம்பீரமான உயரம் உடையது.  அற்புத சிலை அமைப்புகள் அமைந்துள்ளது.

 🛕இதை அடுத்து தனியாக கிழக்குப் பார்த்த கருவரை கொண்ட சிவன் சன்னதியும் உள்ளது. இக்கருவரை யினுள் பலவிதமான சுவாமி சிலைகள், பழமையானதாகவும், சிதைந்தும் உள்ளது. மிகப்பழமையான கலை வடிவத்துடன் சிறிய நந்தியும் உள்ளே உள்ளது. இந்த சன்னதியும் உயர் கருவரைக் கோபுரம் உடையது.

 🛕மிகப்பெரிய வளாகமாக, ஆலயம் இருந்து, பிறகு சிதைந்து அல்லது சிதைக்கப்பட்டு, பிறகு புனரமைக்கப்பட்டுள்ளது. 

🛕இதையடுத்துள்ள சுற்றுப் பிரகாரத்தில், மூலவர் முன்பு இரண்டு மூன்று சிறிய சன்னதிகளும் உள்ளன.

#பயண_அனுபவக்_குறிப்புகள்🕊️

💥இங்கெல்லாம் Cellphone எடுத்துச் செல்வதில் கட்டுப்பாடுகள் இல்லாவிட்டாலும், கருவரைப் பகுதிகளில் மட்டும் புகைப்படம் எடுப்பதை நெறிப்படுத்த முயலுகிறார்கள்.

🛐மிக பிரமாண்டமாகவும், அழகிய நுட்பத்துடன் முழுவதும், கற்றளியால் ஆன ஆலயம், சிதைக்கப்பட்டும், மீண்டும் புனரமைக்கப்பட்டும் உள்ள நிலைமையைக் காணுகிறோம்.

 🕉️இதுபோன்றே இந்துக்களின் ஆலயங்கள் பாரத தேசமெங்கும் பல இடங்களில் உள்ளது என்பதையும் நாம் எண்ணவேண்டியுள்ளது.

🛐இவ்வாலயங்களை தரிசித்துவிட்டு, நாங்கள் எங்கள் பேருந்து நின்ற இடத்திற்கு நடந்துவந்தடைந்தோம். சிலர் Auto மூலமும் வந்தார்கள்.

🔯இங்கிருந்து புறப்பட்டு, சற்று தூரம் சென்று, ஒரு பூங்காவில், பயண ஏற்பாட்டாளரால் தயாரிக்கப்பட்டு கொண்டு வந்த மதிய உணவை முடித்துக்கொண்டு, உஜ்ஜியினி புறப்பட்டோம்.

🛕11.10.2022 அன்று நம்முடைய பாரத பிரதமர் அவர்கள், உஜ்ஜியினி வந்திருந்து, ஆலய வளாகத்தில் புதியதாக கட்டப்பட்டுள்ள ஆன்மீக பூங்கவை திறந்துவைக்கும் பெருவிழா நடைபெற்றுக் கொண்டிருந்தது.இதனால், உஜ்ஜியினி நகர் முழுதும் அழகான மின் அலங்காரம் செய்யப்பட்டு, மிக பிரமாண்ட அளவில் ஜொலித்துக் கொண்டிருந்தது.

🛕நாங்கள் ஓங்காரேஸ்வரர் சென்று  விட்டு உஜ்ஜியின் வரும் போது போக்குவரத்துக்கட்டுப்பாடுகள் கடுமையாக இருந்ததால், இரவு 12.00 மணி அளவில் உஜ்ஜியினியில் நாங்கள் தங்கியிருந்த Hotel GANGA வந்து அடைந்தோம்.

🛐பயணங்கள் தொடரும்....
11.10.2022
நன்றி🙇🏼‍♂️🙏

#என்றும்அன்புடன் 
#சுப்ராம்_அருணாசலம்_காரைக்கால் 

#ஜோதிர்லிங்கதரிசனம் 

#ஜோதிர்லிங்கம் 
#மத்தியப்பிரதேசம்
#ஓங்காரேஸ்வரர்

ஜோதிர்லிங்கங்கள் மற்றும் #அஷ்ட்டகணபதி_ஆலயங்கள் தரிசனம் 9.10.2022 முதல் 12.10.2022 வரை💫

#ஜோதிர்லிங்கங்கள் மற்றும் #அஷ்ட்டகணபதி_ஆலயங்கள் தரிசனம் 
9.10.2022 முதல் 12.10.2022 வரை💫

#பயண_அனுபவக்_குறிப்புகள்🕊️
பதிவு - 1

#ஜோதிர்லிங்கதரிசனம்

🛕#ஜோதிர்லிங்கங்கள்

சோதிலிங்கம் (Jyotirlinga) என்பது இந்துக் கடவுளான சிவனை வணங்குவதற்குரிய வடிவங்களுள் ஒன்று. இது ஒளிமயமான லிங்கம் என்னும் பொருள் தருவது. 

இந்தியாவில் 12 சோதிலிங்கத் திருத்தலங்கள் உள்ளன. திருவாதிரை நட்சத்திர நாளில் சிவன் தன்னை சோதிலிங்க வடிவில் வெளிப்படுத்தியதாக இந்துக்கள் நம்புகிறார்கள். இதனால் திருவாதிரை நாள் சோதிலிங்கத்தை வணங்குவதற்கு உரிய சிறப்பு நாளாகக் கருதப்படுகிறது. 

🛕ஜோதிர்லிங்கங்களில் சிவன் ஜோதிமயமாக உள்ளார். இதனால் சிவன் ஒளியின் வடிவமாகிய நெருப்பாக தோன்றிய இடங்கள் ஜோதிர்லிங்க சிவாலயங்கள் எனப்படுகின்றன.  

🛕இந்து புராணங்களின்படி, சிவபெருமானிற்கு 64 வடிவங்கள் உள்ளன. அவற்றை ஜோதிர்லிங்கங்களுடன் ஒப்பிட்டு குழப்பமடையக்கூடாது. பன்னிரண்டு ஜோதிர்லிங்க தலங்கள் ஒவ்வொன்றும் தலைமை தெய்வத்தின் பெயரை எடுத்துக்கொள்கின்றன. ஒவ்வொன்றும் சிவனின் வெவ்வேறு வெளிப்பாடாக கருதப்படுகின்றன. இந்த எல்லா தலங்களிலும், முதன்மை உருவம் சிவனின் எல்லையற்ற தன்மையைக் குறிக்கும். தொடக்கமற்ற மற்றும் முடிவில்லாத ஸ்தம்ப தூணைக் குறிக்கும் லிங்க வடிவம் ஆகும்.

🛕 சிவ மஹாபுரானத்தின் கூற்றுப்படி , ஒரு காலத்தில் பிரம்மாவும், விஷ்ணுவும், படைப்பின் மேலாதிக்கத்தின் அடிப்படையில் ஒரு வாதத்தை கொண்டிருந்தனர். அவர்களைச் சோதிக்க, சிவன் மூன்று உலகங்களையும் ஒரு பெரிய முடிவற்ற ஒளித் தூணாக, ஜோதிர்லிங்கமாகத் துளைத்தார் . இரு திசைகளிலும் ஒளியின் முடிவைக் கண்டறிய விஷ்ணுவும் பிரம்மாவும் முறையே கீழ்நோக்கி மற்றும் மேல்நோக்கி தங்கள் வழிகளைப் பிரித்தனர். பிரம்மா தான் முடிவை கண்டுபிடித்ததாக பொய் சொன்னார், விஷ்ணு தனது தோல்வியை ஒப்புக்கொண்டார். சிவன் ஒளியின் இரண்டாவது தூணாகத் தோன்றி, பிரம்மாவுக்கு விழாக்களில் இடமில்லை என்று சபித்தார், அதே நேரத்தில் விஷ்ணு நித்தியத்தின் இறுதி வரை வணங்கப்படுவார். 

 🛕 இவ்வாறு சிவன் தீபமாகத் தோன்றிய இடங்கள். முதலில் 64 ஜோதிர்லிங்கங்கள் இருப்பதாக நம்பப்பட்டது, அவற்றில் 12 மிகவும் மங்களகரமானதாகவும் புனிதமானதாகவும் கருதப்படுகிறது. பன்னிரண்டு ஜோதிர்லிங்கத் தலங்களில் ஒவ்வொன்றும் முதன்மைக் கடவுளின் பெயரைப் பெறுகின்றன – ஒவ்வொன்றும் சிவனின் வெவ்வேறு வெளிப்பாடாகக் கருதப்படுகின்றன. இந்தத் தலங்கள் அனைத்திலும் , சிவனின் எல்லையற்ற தன்மையைக் குறிக்கும்.

🛕 பொதுவாக சோதிலிங்கத்துக்கும், பிற லிங்கங்களுக்கும் இடையே எவ்வித தோற்ற வேறுபாடுகளும் தெரிவதில்லை. எனினும், உயர்ந்த ஆன்மீக நிலையை அடைந்தவர்கள் புவியைத் துளைத்துக் கிளம்பும் தீப்பிழம்பாக சோதிலிங்கத்தைக் காண்பார்கள் என்பது இந்துக்களின் நம்பிக்கை.

🛕இந்தியாவில் உள்ள சோதிர்லிங்கங்கள்..
1. கேதாரீஸ்வரர், இமயமலைக்கோவில், கேதர்நாத், உத்ராஞ்சல்.

2. விஸ்வேஸ்வரர், நதிக்கரைக் கோவில் (கங்கை நதிக்கரை) வாரணாசி உத்திரபிரதேசம்

3. சோமநாதேஸ்வரர் கடற்கரைத்தலம் (அரபிக் கடற்கரை) சோமநாதம் குஜராத்

4. மகா காளேஸ்வரர் நதிக்கரைக் கோவில் (சிப்ரா நதிக்கரை), உஜ்ஜயினி மத்திய பிரதேசம்

5. ஓங்காரேஸ்வரர் நர்மதை நதிக்கரையில் அமைந்துள்ள மலைக்கோவில் இந்தூர் மத்திய பிரதேசம்

6. திரியம்பகேஸ்வரர் நதிக்கரைக் கோவில் (கோதாவரி நதிக்கரை) நாசிக் மகாராஷ்டிரம்

7. குஸ்ருணேஸ்வரர் ஊரின் நடுவே அமைந்த தலம் ஓளரங்கபாத் மகாராஷ்டிரம்

8. நாகநாதேஸ்வரர் தாருகாவனம் காட்டுத்தலம் ஓளண்டா மகாராஷ்டிரம்

9. வைத்தியநாதேஸ்வரர் ஊரின் நடுவே அமைந்த தலம் பரளி மகாராஷ்டிரம்

10. பீமசங்கரர், பீமா நதி உற்பத்தியாகும் இடம், மலைக்கோவில், பூனா, மகாராஷ்டிரம்

11. மல்லிகார்ஜுனர், கிருஷ்ணா நதி, மலைக்கோவில் ஸ்ரீ சைலம் ஆந்திர பிரதேசம்.

12. இராமேஸ்வரர், கடற்கரைத்தலம் (வங்காள விரிகுடா) தமிழகம்.

🛕 இந்தியாவில் உள்ள மத்திய பிரதேச மாநிலத்தில் உஜ்ஜியினியில் உள்ள ஸ்ரீ மகாகாளேஸ்வரர், ஸ்ரீ ஓம்காரேஸ்வரர் மற்றும் மகாராஷ்ட்ரா மாநிலத்தில் உள்ள 5 ஜோதிர்லிங்கங்கள், அஷ்ட்ட கணபதி ஆலயங்கள், மற்றும் புராண சிறப்புவாய்ந்த சில புன்னிய தலங்களை சென்று தரிசனம் செய்யும் வாய்ப்பு எங்களுக்கு மீண்டும் இவ்வருடம் கிடைத்தது. 
 
🛕 இந்த தலங்களுக்குச் சென்று வந்த அனுபவக் குறிப்புகளை பகிர்ந்து கொள்கிறேன். தாங்கள் இத்தலங்களுக்கு செல்லும் போது இவை உதவலாம்.

🛐பயணங்கள் தொடரும்....
நன்றி🙇🏼‍♂️🙏

#ஜோதிர்லிங்கதரிசனம்

#என்றும்அன்புடன் 
#சுப்ராம்_அருணாசலம்_காரைக்கால் 

#ஜோதிர்லிங்கம் 
#மத்தியப்பிரதேசம்

Wednesday, September 28, 2022

காரைக்கால் கொலு 2022 நவராத்திரி 2022

காரைக்கால் கொலு 2022

🌟நவராத்திரியை முன்னிட்டு,
14வது ஆண்டாக  ஸ்ரீ கைலாசநாதர் ஆலயம் மற்றும் சிவனடியார் திருக்கூட்ட அறக்கட்டளையின் சார்பில்,
காரைக்கால் அம்மையார் ஆலய வளாகத்தில்,  ஆன்மீக கொலு வைக்கப்பட்டுள்ளது.

🌟இன்று 26.09.2022 மாலை 6.30 மணி அளவில், கும்பாபிஷேக சாம்ராட், தமிழகத்தின் மூத்த ஆன்மீக பெரியவர், திருக்கண்ணங்குடி சிவஸ்ரீ  T.K. பாலாமணி சிவாச்சாரியார் அவர்களால் விஷேச பூசையுடன் துவக்கி வைக்கப்பட்டுள்ளது.

🌟26.09.2022 திங்கள் முதல் உள்ள 5.10.2022 புதன் வரை நடைபெறும் இக்கொலுவின் கானும் சில சிறப்பு அம்சங்கள்:

1. முகப்பு அலங்காரம்:

ஆலய நுழைவு அமைப்பில் முகப்பு அலங்காரம், மேல்மாடத்தில், விநாயகர், வள்ளிதெய்வானையுடன் சுப்பிரமணியர், கைலாச காட்சியில் சிவன், பார்வதி, அம்பாள், மற்றும் சண்டிகேஸ்வரர்.
இவர்களை ஆலய  நுழைவு கோபுர வாசல் மேல் மாடம் போல அமைக்கப்பட்டுள்ள சிறப்பு.

2. அற்புத தட்சினாமூர்த்தி:

ஆலய கோபுர வாசல் நுழைவு அமைப்புத்தாண்டி, உட்புறம் நுழைந்தால்,  தட்சினாமூர்த்தி சுமார் 12 அடி உயரத்தில், மிகப்பிரம்மாண்ட  அருள்தரும் ஞான உருவம். மிகவும் அழகிய முறையில் உருவாக்கியுள்ளனர்.  புதுமையான முறையில் உருவாக்கம் செய்யப்பட்ட  கருவரை மண்டத்தின் உள் அமைப்பில் உள்ளார். இதன், அமைப்பும், ஒளி அமைப்பும் வித்தியாசமாக இருக்கிறது.

3. தட்சிணா மூர்த்தியின் பக்தி  தரிசனம் பெற்று  படி இறங்கினால், மூன்று காந்திகள்  பொம்மை நமக்கு வாழ்வியல் உண்மைப் பக்குவத்தை உணர்த்துகிறது.

4. அடுத்து, மகாபாரத அர்ச்சுணன் பெற்ற   விசுவரூப பெருமாள் காட்சி.

6. ஈசனமூலையில், தனி உஞ்சலில், ஆனந்த வட பத்திரக் காளியம்மன்.

இவர் நாங்கூர் மதங்கீஸ்வரர் ஆலயத்தில் வழிபாட்டில் உள்ளவர்.  பொதுவாக, சிவன் ஆலயத்தில் உள்ள காளி மிகச்சிறப்பும் அரியதுமானதும் என்றும் கூறுவார்கள். இவ்வாலத்தின், தென் பிரகாரத்தில், தனி சன்னதியில், வடக்கு நோக்கி அருளும் ஆனந்த ஊஞ்சல் காளி.

உஞ்சலில் உள்ள காளி. 5 வருடத்திற்கு ஒரு முறை குடமுழுக்கு செய்யப்பட்டு, வீதி ஊர்வலம் வருவது கண்கொள்ளாக் காட்சி. அடுத்த வருடம் 2023 ஆண்டில் நடைபெற உள்ளது என்பதால், தற்போது, காரைக்கால் கொலுவில் காட்சித் தருகிறார்.  மிகவும் அதிசயகாளி. தத்ரூபமாகவும், அருளும் ஆனந்தமும் தரும் சிறப்புடன் உள்ளது.

7. அடுத்து, பெருமாளின் முக்கோலம். மற்றும் யோகநரசிம்மர் அருட் கோலம்.

8. தொடர்ந்து, சதுரங்க வல்லபர்.
நீடாமங்கலம் அருகில் உள்ள திருமுறை பாடல் பெற்ற தலத்தில் திருப்பூவனத்தில் உள்ள பூவனநாதர் சதுரங்கம் ஆடும் காட்சி.
2022 தமிழ்நாட்டு தலைநகரில் நடைபெற்ற  உலக சதுரங்கப் போட்டியைத் துவக்கிவைத்த பாரதப் பிரதமர்  பெருமையுடன் குறிப்பிட்ட நமது இறைவன்.  இங்கு காரைக்காலில் காட்சியில் உள்ளார்.

9. அடுத்து, குற்றாலநாதர் காட்சி:

மேற்கு மலைத் தொடரின் முக்கிய மூலிகை வனமான விளங்குவது குற்றாலம். அதன் அருவி நீரில் அன்றாடும் அபிஷேகம் கொள்ளும் குற்றாலநாதர், இங்கே,  காட்சிப்படுத்தப்பட்டுள்ளது, மலையிலிருந்து நீர் விழுந்து குற்றாலநாதரை நேரடியாக அபிஷேகம் காணும் காட்சி நமக்குப் பெருமை.

10. கொலுவின் நடுமண்டபத்தில் சிறப்பாகவும், முக்கிய காட்சிகளாகவும் சிறப்பு அமைப்புகள்.

1. திருமுறைநாதர் :
கொலுமண்டபத்தின் வலதுபுறத்தில்,
திருமுறைநாதருக்கு, சுவாமி, அம்பாளாக  அலங்காரம் செய்து ரிஷபத்தில் வைக்கப்பட்டு, ரிஷபாரூடராகக் காட்சித் தருகிறார்.

2. திருமெய்ச்சூர் லலித்தாம்பிகை
நடுநாயகமாக, அம்மனின், அழகுடன் அருள்தரும் காட்சி கொலுவின் பிரதானம். சிறப்பு அலங்காரத்தில் லலித்தாம்பிகை அம்பாள் அமைக்கப்பட்டுள்ளார். கண்கொள்ளக் காட்சி.

3. திருவாரூர் தியாகராசர் :
இடதுபுறம், உலகில் வேறு எங்கும் இல்லாத  தோற்றத்தில் விசித்திர காட்சிக்கோலமாக, ஆரூர் தியாகராசர்  அம்பல் திருமாளத்திற்கு எழுந்தருளி, சோமாஜி மாறனார் யாகத்தில் பங்கு கொண்டு அவிர்பாகம் பெற வரும் அற்புதக் காட்சி.

சுவாமி,
ரிஷபத்தைத் தன்  தோளில் தூக்கிக்கொண்டும்,  புலையர் வேடத்தில், பறை அடித்துக்கொண்டு, நான்கு வேதங்களையும் நாய்கள் போலமாற்றி, உடன் கொண்டு வரவும்,

அம்பாள்,
கள் குடத்தை தலையில் வைத்துக்கொண்டும், விநாயகர், மற்றும் முருகரை, பாலகர்களாக, துணைக்கு அழைத்துக் கொண்டும், வரும் வேடம்.

இம்மூன்று காட்சிகளையும் இவ்வருடத்தின் பிரதான கொலுக்காட்சிகளாக அமைத்துள்ளார்கள்.

11. அடுத்து நாம் காண்பது,
சாகம்பரி பூசை :

காரைக்கால் நகர சிறப்புக்கும் பெருமைக்கும் காரணமான புராதான சிறப்பு வாய்ந்த நிகழ்வு:
ஸ்ரீ சுந்தராம்பாள், ஸ்ரீ கைலாசநாதருக்கு சாகாம்பரியாக வந்து பூசை செய்யும் காட்சி.
உலகம்,  நீர் வற்றி, பஞ்சம் ஏற்பட்டபோது, உயிர்கள் பிணி நீங்கி, உணவு பெறவேண்டி, கைலாயத்தில் உள்ள, ஸ்ரீ சுந்தராம்பாள், ஸ்ரீ சாகாம்பரி வேடம் கொண்டு காரைக்கால் ஸ்ரீகைலாசநாதரை சிறப்பு வழிபாடுகளும், பூசைகளும் செய்து, உலகத்திற்கு  பசி, பிணி, பஞ்சம் நீக்கிய புராண தலவரலாற்றுக் காட்சி.

ஆவணி மாதம் முதல் நாளில் வருடம்தோறும் காரைக்காலில் ஸ்ரீ கைலாசநாதர் ஆலயத்தில் நடைபெறும் விஷேச பூசை இங்கு எல்லோருக்கும் நவராத்திரியில் தரிசனக் காட்சியாக உள்ளது.

12. பொம்மைகள் காட்சி:
சோமாஜி மாற நாயனார் அருள் பெற்ற வரலாறு.
அம்பல் நகரில் வசித்த சோமாஜிநாயனர். சுந்தரமூர்த்தி நாயனார் மீது மிக்க அன்பு கொண்டு, தினம் அவருக்கு பிடித்த தூதுவளைக்  கீரை எடுத்துக்கொண்டு, அவர் வீட்டில் கொடுப்பது, சுந்தரர் தன் துணைவியான பரவையாரிடம்  தினம் கீரை தரும் அன்பர் பற்றி விசாரித்தல்.
சோமாஜி மாறனாரைப்பற்றி தெரிந்துகொண்டபின்  அவருக்கு எப்படி உதவலாம் என்று  அறிந்து கொள்ளுதல்.
சோமாஜி மாறனாரும், திருவாரூர் தியாகேசப்பெருமான் வந்து தான் செய்யும் யாகத்தில் அவிர்பாகம் பெற வேண்டும் என வேண்டிக்கொள்ளுதல்.
சுவாமியும்,  எவ்வுருவில் வந்தாலும், தங்களுக்கு அவிர்பாகம் தரவேண்டும் எனக் கட்டளையிடுதல்.
அவ்வாறே, புலையர் வேடத்தில் வந்து இறைவரைக் கண்டு உணர்ந்து, வணங்கி அவிர்பாகம் கொடுத்து இறையருள் பெற்ற நிகழ்வு.

சோமாஜிநாயனார்.
இவர்  வரலாற்றின் சில பகுதிகளை  பொம்மைகளில் வடித்து காட்சிப்படுத்தியுள்ளார்கள்.

🌟மேலும், தவழும் கண்ணன், பாண்டுரங்கர், கோதண்டராமர், சீதை, லெட்சுமணர், அனுமார் பொம்மை உருவங்களும் அலங்கரிப்பில் உள்ளன.

இத்துடன் முதன்மை காட்சிக்கொலு மிகச் சிறப்பாக அமைந்துள்ளது.

13. பொது பொம்மைகள் காட்சிக்கொலு :

உட்புறம், மண்டபத்தில்,  11 படிகளில் ஏராளமான பொம்மைகளை வைத்து  அலங்கரிக்கப்பட்ட  வழக்கமான இறையுருக்களுடன்,  மனிதர்கள்  உருவங்கள், வாழ்க்கை முறையில் ஏற்படும் பல்வேறு செயல்பாடுகள், பொம்மைகள் காட்சிக் கொலுவும்  அமைக்கப்பட்டுள்ளது.

தினமும், கலை /பாட்டு / நிகழ்வுகளும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.

காரைக்காலில் அமைக்கப்பட்டுள்ள கொலுவின் தனித்தன்மை வாய்ந்த சிறப்புகள்:

💥புராண நிகழ்வுகள், தல வரலாறுகள், நாயன்மார் வரலாறுகள் முதலியவற்றை அடிப்படையாகக் கொண்ட, இதுபோன்ற ஆன்மீக நிகழ்வுகள் அடிப்படையில் பொம்மைக்காட்சி வேறு எங்கும் உருவாக்கப்பட்டு காட்சிபடுத்தும் முறைகளில் காணுவது அரிது.

💥பொம்மைக் காட்சிகள் அனைத்தும் பல்வேறு பொருட்கள் கொண்டு ஒவ்வொரு ஆண்டும் புதிது புதிதாகவே பொம்மைகளை  உருவாக்கம் செய்யப்படுகிறது என்பதே மிகச்சிறப்பு.

💥வேறு எங்கும் ஒவ்வொரு வருடமும், புதிய முறையில் உருவாக்கம் செய்யப்படுவதில்லை.

💥ஒவ்வொரு முறை கொலு முடிந்ததும், முற்றிலும், பிரிக்கப்பட்டுவிடுகிறது.

💥அருகில் உள்ள தமிழ் மாநிலத்தில் வேறு எந்த மாவட்டங்களில் உள்ள வேறு எந்த ஆலயங்களிலும், இப்படிப்பட்ட ஆன்மீக தகவல் நுணுக்கங்களுடன் கொலு உருவாக்கம், அமைப்புக் கிடையாது என்பதால், அருகில் உள்ள நாகப்பட்டினம், திருவாரூர், கும்பகோணம், மயிலாடுதுறை மாவட்டங்களிலிருந்து, ஆன்மீக உணர்வுடையோர் ஏராளமானோர் வந்து  கண்டு வியந்து, பேரானந்தம் அடைந்து வியப்பை வெளியிட்டு செல்கிறார்கள் என்பது கூடுதல் சிறப்பு.

💥துவக்க விழாவில் பங்குபெற்ற ஆன்மீக சான்றோர், கும்பாபிஷேக மூத்த முதன்மை , திருக்கண்ணங்குடி சிவஸ்ரீ  T.K. பாலாமணி சிவாச்சாரியார் அவர்கள்,திறந்து வைத்து, பூசைகள் செய்து 26.09.2022 மாலை 7 மணி அளவில், திறந்து வைத்துள்ளார்.
அவர் துவக்கிவைத்து நெகிழ்ந்து பாராட்டினார்கள்.

🧡கொலுவின் சிறப்புகள், கொலு வைப்பதின் நோக்கம் குறித்து ஆன்மீக விளக்கம் கொடுத்தார்.

💙கொலு பொம்மைகள் மன்னிலிருந்து உருவாக்கம் செய்யப்படுவதால், பூமியின் சக்தியும், ஆற்றலும் உணரப்படுதலும், வழிபடப்படுவதும் வழக்கமாயிற்று என்றார்.
 
💚நவராத்திரியின் போது, சக்தியின் ஆற்றல் மிகவும் அதிகரித்து இருக்கும். எனவே, நவராத்திரியில் பூசை செய்து  வழிபடுவதால், பொம்மைகள் அனைத்திற்கும், ஆன்மீக சக்தி ஆற்றல் உருவாக்கம் பெற்று, சக்தியின் ஆற்றல் பெருகும். 

💜ஆன்மீக சிறப்பு வாய்ந்த பல தலங்களில் உள்ள புராண வரலாறுகள், ஆலய தெய்வ வழிபாடுகள், நாயன்மார் வரலாறுகள் காட்சிப்படுத்தப்படும்போது, அவற்றையெல்லாம், அந்தந்த ஊர் மக்கள், தாங்கள் இருக்கும் இடத்திலிருந்தே அவற்றின் சிறப்பை எளிதாக உணர்ந்து கொள்ள முடிகிறது.

🛕மேலும், ஆண்டுகள் தோரும், ஆன்மீக காட்சிகளைப் புதுமையான முறையில் அமைத்து  காரைக்காலில், சிறப்பாகக் கொலு கொண்டாடப்படுவது மிகச்சிறப்பும், பெருமையும் நிறைந்தது.

🛕இதை ஒரு முன்னுதாரணமாகக் கொண்டு, ஒவ்வொரு ஆலயத்திலும், குறைந்தபட்சம், மாவட்ட அளவில் ஒரு சில ஆலயங்களிலாவது இது போன்ற சிறப்பு கவனமும், முயற்சியும் செய்யப்பட வேண்டிய அவசியம் குறித்து வலியுறுத்தினார்.

🛕இவ்வாறு, மிகச்சிறப்பான முறையில் நடைபெற்று வரும் காரைக்கால் கொலுவில் தாம் தம் குடும்பத்தினருடன் வந்து ஆர்வத்துடன் கலந்து கொள்வதில், மிக மகிழ்வும், மனநிறைவும் ஏற்படுவதாக, நெகிழ்ச்சியுடனும், பெருமையுடனும் கூறினார்கள்.

🌟காரைக்கால், கைலாசநாதர் ஆலயத்தில், சிறப்பு வழிபாடுகளும் பூசைகளும், உழவாரப்பணி, மற்றும்  சமய ஆன்மீக தொண்டுகளிலும் பல்லாண்டுகளாக மிகச்சிறப்பான முறையில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டு,  தன்னலம் இல்லாமல் சிவத்தொண்டுகள் பலவும் செய்துவரும் காரைக்கால் சிவனடியார் திருக்கூட்டத்தின் பொறுப்பாளார்கள், அடியார்கள் அணைவருக்கும் பாராட்டுகள். வாழ்த்துக்கள்.

🎉 🙏குறிப்பாக, மிக முக்கிய பொறுப்பில் இருந்து செயலாற்றும்  இக்கொலுவின் தலைமை சிற்பி திரு T.மரகதவேல் அவர்களின் அர்பணிப்புடன் கூடிய ஆற்றல்மிகு சேவையும், அவர்கள் ஆற்றும் தொண்டும், அவருக்கு உறுதுணையாக செயல்பட்டுவரும், இளைஞர்கள் கூட்டமைப்பும் என்றென்றும் பாரட்டுக்குரியவர்கள்.

🙏கைலாசநாதர் அருளால், வளர்ந்திடும்
இளைஞர்களை வணங்கிடுகிறேன்.

🙏இறை உணர்வு வற்றாத ஆர்வம், விடாமுயற்சி, கடும் உழைப்பு,
கைலாசநாதர் அருள் பெற்ற இளைஞர்களின் தூய்மையான அர்ப்பணிப்பு. வாழ்த்திடுவோம் வாருங்கள்.

🙏சமூகத்தில் பல்வேறு பணிகளில், ஈடுபட்டு தங்கள் குடும்பம், வாழ்வாதாரத்தையும், பொறுப்புடன் கவனித்துக் கொண்டு, ஆன்மீகத் தொண்டில் தன்னலம் இல்லாமல், ஒன்றுபட்டு அயராது பாடுபடும் இவர்கள்
🙏காரைக்காலின் ஆன்மீக காவலர்கள்.
காரைக்காலின் பெருமைக்கு மேலும் உயர்வு தந்து வையம் போற்ற வைக்கும்  இவர்கள் சேவைகளைப் போற்றுவோம். வளரட்டும் ஆன்மீகத் தொண்டு.
வாழ்க வளத்துடன். வணங்கிடுவோம்.
என்றும் இறையருள் துணையிருக்கும்.

பாராட்டுக்கள்.
வணக்கங்கள்
நன்றிகள்
26.09.2022
#என்றும்அன்புடன்
#சுப்ராம்_அருணாசலம்_காரைக்கால்


Tuesday, September 20, 2022

UTTARAKANNT_TOUR_2022 #HARIDWAR #RISHIKESH#சன்டிதேவிஆலயம். நிறைவு பயணம்

UTTARAKANNT_TOUR_2022
#பயணஅனுபவக்குறிப்புகள்
#HARIDWAR  #RISHIKESH
#சன்டிதேவிஆலயம். 
நிறைவு பயணம்
#HARDWAR பதிவு - 5 - 1
15.04.2022

💚14.04.2022 ஹரிதுவாரில், காலை உணவுக்குப் பிறகு, சிற்றுந்து மூலம், 45 கி.மீ. தூரத்தில் உள்ள ரிஷிகேஷ் சென்று அங்குள்ள ஆலயங்கள், மடங்கள் தரிசித்து  விட்டு, கங்கையின் முக்கிய இடத்தில் குளித்தோம்

மதியம், ரிஷிகேசிலிருந்து புறப்பட்டு, 
(முன்பே இதன் அனுபவங்களின் பதிவுகள் எழுதியுள்ளேன்)

14.04.2022 மாலை  மீண்டும் ஹரிதுவார் வந்து ஓய்வு எடுத்துக் கொண்டோம். மாலையில் ஹரிதுவாரில் உள்ள ஆலயங்கள் தரிசனம். இரவு தங்கினோம்.
(முன்பே இதன் அனுபவங்களையும், பதிவுகள் எழுதியுள்ளேன்)

மீண்டும் 15.04.2022 காலையில் ஹரிதுவாரிலிருந்து புறப்பட்டு, மலைக்குன்றின் மீதுள்ள சண்டி தேவி ஆலயம் தரிசித்தோம். 

🛕#சன்டிதேவிஆலயம்.

🍁ஸ்கந்த புராணத்தின்படி,  ஷூம்பா, நிஷும்பா ,சந்தா - முன்டா என்ற அரக்கர்கள் கொல்லப்பட்ட இடம் .

🛕நீல் பர்வத் என்ற மலையின் மீது உள்ளது. கங்கையின் கிழக்குப் பகுதியில் உள்ளது.

🌴1929 ல் காஷ்மீரரசர் சுச்சட் சிங் என்பவரால், புரைமைப்பு செய்து கட்டப்பட்டது. 

🛖8ம் நூற்றாண்டில், ஆதிசங்கரர் 
சன்டி தேவி சிலையுடன் ஆலயம் ஏற்படுத்தினார் என்ற வரலாற்று சான்று உள்ளது

🌴இவ்வாலயத்திற்கு சென்று வர ரோப்கார் வசதி உள்ளது.

#பயணஅனுபவக்குறிப்புகள் 

15.04.22 அன்று ஹரிதுவாரில், நாங்கள் தங்கியிருந்த TRIMOORTI HOTEL அருகில் இருந்த Ganesh Ghat சென்று, கங்கையில் நீராடினோம். பிறகு, வழியில் உள்ள ஆலயங்களை தரிசித்து விட்டு வந்தோம்.

காலை உணவு முடித்துக் கொண்டு, ஹரிதுவாரிலிருந்து புறப்பட்டோம். வரும் வழியில் அகன்ற கங்கைக் கரையின் கிழக்குப் புறம் உள்ள உயரமான மலைத்தொடரில் உச்சியில் ஒரு ஆலயம் கண்டோம்.

மலை உச்சியில் இருந்த முக்கியமான ஆலயம் சன்டிதேவி ஆலயம்.

இதன் அருகில், சற்று உயரத்தில் ஹனுமானின் தாயார் இருந்த இடம் ஒன்றும்  உள்ளது.

சன்டி தேவிஆலயம், ஹரிதுவாரின் நுழைவுப் பகுதியில் மலைக்குன்றில் உள்ளது.

இரண்டு வழிகளில் இவ்வாலயம் அமைந்துள்ள மலைக்குன்றிற்குச் செல்லலாம்.  

மலைப்படிக்கட்டுப் பாதைகள் மூலம் நடந்தும் செல்லலாம்.

அல்லது Winch / Cable Car மூலமும் செல்லலாம். 

பெரிய வாகனங்கள் நேரடியாக மேலே செல்ல முடியாது.

Ropeway Car : இது ஒரு தனியார் நிறுவனம். பல மலைக்கோவில்களில் இவர்கள் இந்த பணி செய்து வருகிறார்கள்.

ஹரிதுவாரில், மலைக்குன்றின் மீது உள்ள மானச தேவி ஆலயம் மற்றும் சன்டி தேவி ஆலயம்  இரண்டுக்கும் இவர்கள்தான் ஏற்பாடு செய்துள்ளனர்.
கட்டணம் இரண்டு ஆலயங்களையும் சென்று தரிசித்து வர மொத்தமாக ஒரே கட்டண வசதிகள் செய்துள்ளார்கள்.  நாம் சரியானபடி திட்டமிட்டால் இதன் கட்டண சலுகைகளை அனுபவிக்க முடியும்.

ஒரு முறை சண்டி தேவி ஆலயம் சென்று திரும்ப. ரூ.220ம், இரண்டு  ஆலயங்களையும் தரிசிக்க 365ம்,
Transport கட்டணம் Rs.80ம் வசூல் செய்யப்படுகிறது.

ஒருமுறை மட்டும் கீழ இறங்கிவர ரூ165 கட்டணம் அமைக்கப்பட்டு உள்ளது. 

ஒவ்வொரு ஆலயம் செல்லும் போது கட்டனம் செலுத்தி Ticket பெறுவதற்கு, வரிசையில் நிற்க வேண்டியிருக்கிறது.

Ticket ஒரு முறை எடுத்தால், 3 நாட்கள் செல்லும் என்கிறார்கள்.

மலைமீது ஏறுவதற்கும், இறங்குவதற்கும் சேர்த்துதான் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

இரண்டு ஆலயங்களுக்கும் தரிசித்து வர தனி வாகன வசதியும் செய்து தருவதாகக் கூறப்படுகிறது.

சில நேரங்களில், சன்டி தேவி அல்லது மானச தேவி ஆலயத்தில் கூட்டம் மிகவும் அதிகம் இருக்கும். நாம் Token வாங்கி காத்திருக்கவேண்டும். 

சிலர் முதலில் சன்டி தேவி ஆலயம் சென்று தரிசித்து விட்டு இங்கு வருவது நலம் என்று பதிவிடுகிறார்கள்.

அருகில் வசிப்பவர்கள், ஆலய விஷேச நாட்களில், ஒரே சமயத்தில் தரிசிக்க இந்த Compound ticket முறை நல்ல ஏற்பாடு எனத் தெரிகிறது

நாங்கள், தனித்தனியாக வெவ்வேறு நாட்களில் சென்று தனி தனி Ticket பெற்று தரிசித்தோம். பெரும்பாலான Tourist operators இதைத்தான் செய்கிறார்கள். இதுவே நமக்கு வசதியாகப்படுகிறது

Winch / Cable Car Station செல்ல தனி இடம் உள்ளது. 

கட்டணம் உண்டு Ticket வாங்கும் இடத்தில் Waiting Hall உள்ளது. 
முதலில் ஒரு Tocken கொடுத்து விடுகிறார்கள். ஒரு Winch | cable காரில் 6 பேர் செல்லலாம் என்பதால் அதற்கு தகுந்தார்போல் சிறிய சிறிய குழுக்களாக உள்ளே நுழைய வைக்கிறார்கள். Disply Board Announcement ல் நம் Token அழைப்பில் நாம் சென்று  வரிசைக்குச் செல்ல வேண்டும். அதன் பிறகு Ticket வாங்கி
நாம் Cable Car ல் ஏறும் இடம் செல்ல வேண்டும்.

நிறைய ஆட்கள் உள்ளனர். நமக்குப் போதுமான எச்சரிக்கை தந்து பாதுகாப்புடன் ஏற்றுகிறார்கள்.

மலைமீது போகும்போதும், வரும்போதும், மலைக்காட்சிகள் மிகவும் அற்புதமாக உள்ளது.

Cable Car பாதி Auto போல உள்ளதால், தொங்கிக் கொண்டும், ஆடிக் கொண்டும் மெதுவாகச் ஆடிச் செல்கிறது. இறங்கும் போதும் அவ்வாறே பாதுகாப்புடன் வந்து இறக்கி விடுகிறார்கள்.

இறங்கிய பிறகு கோவில் வளாகம் மிக அருகிலேயே இருக்கிறது. ஆலயம் நுழை வாயில் ஒரு வளைவும் அதைத் தொடரந்து நீண்ட பாதையும், அதன் முடிவில் ஒரு மண்டபம், அதிலிருந்து சில படிகள் ஏறி அங்குள்ள கருவரை யில் சுவாமி தரிசனம் செய்தோம். 

நாங்கள் காலையில் சென்றதால் சற்று கூட்டம் இருந்து கொண்டே இருந்தது.

தனி வழி, கட்டண தரிசனம் இவைகள் கிடையாது.
நாங்கள் வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தோம்.
சிறிய சன்னதியில் சிறிய அளவில் அம்மன் உருவம். தீப ஆராதனை காட்டப்பட்டது.  ஆலய கருவரை மண்டபத்தை உள்ளடக்கிய  ஏகபிரகாரம். 

சுற்று பிரகாரத்தில் மேலும் சிறுசிறு சன்னதிகள் உள்ளன.

பிரார்த்தனைத்தலமாக உள்ளதால்,
ஏராளமான மக்கள் வந்த வண்ணம் உள்ளார்கள். 

வெளியில் வந்தால், ஆலய பூசைப் பொருட்கள், மற்ற பொருட்கள் விற்பனைக் கடைகள் இரண்டு  வரிசையிலும் உள்ளன.

பிரதான கோயில் சாலையில் மாற்றுத்திறனாளிகளுக்கு சக்கர நாற்காலிகள் மற்றும் பல்லக்குகள் முறையான ஏற்பாடுகள் உள்ளன என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இங்கு இரண்டு பிரிவுகள் பாதைகளில் ஒன்று கீழிறங்கும் பாதையும், மற்றொன்று சற்று உயரே செல்லும் பாதை, அதன் வழியில் சென்றால் ஸ்ரீ அஞ்சனி தேவி ஆலயம் செல்லலாம்.

நாங்கள் ஸ்ரீ அஞ்சனி மதா ஆலயம் சென்று தரிசித்தோம்.

பாதை சற்று தூரம் சென்றதும், மலையின் உயரத்தில், மேலும் ஒரு ஆலயம் செல்ல ஒரு பாதை உள்ளது.  அங்கு சில படிகள் உயரத்தில் பெரிய மண்டபமும் இரண்டு பெரிய கருவரைகள் அமைப்பில் ஆலயம் உள்ளது.  

ஸ்ரீ ஜெய் ஹனுமானின் தாயாரின் தாயார் ஸ்ரீ ஜெய்மா அஞ்சனி தேவி ஒரு கருவரையிலும், ஸ்ரீ ஹனுமான் மற்றும் ஸ்ரீ சந்தோஷிமாதா  தேவி  சன்னதியும் உள்ளன. இணைத்து பெரிய மண்டபமாகவும்  அமைத்துள்ளார்கள். 

மேலும், சற்று தூரத்தில் ஒரு சன்னதியும் அதில் ஒரு காலபைரவர் மற்றும் ஒரு சிவலிங்கம் உள்ளது.
ஸ்ரீஹனுமான் தாயார் வழிபட்டது என்றும் கூறுகிறார்கள்.

மலைமீது ஒரு பகுதி அடர்ந்த மரங்களும், காடுகள் போல நிறைந்தும் உள்ளன.
இங்கிருந்து, ஹரிதுவார் நகர் முழுதும் மற்றும் கங்கையும்   அற்புதமாக காட்சியளிக்கின்றது.

சற்று அருகிலேயே பாதைஇறங்கி செல்ல படிகள் / வழி அமைத்துள்ளார்கள்.
இயற்கை காட்சிகள், ஆன்மீக உணர்வுகளுடன் மிக அருமையான இடமாக உள்ளது.

ஹரிதுவார் வருபவர்கள், சற்று நேரம் ஒதுக்கி, இந்த ஆலயங்களை
தரிசித்து செல்லவேண்டும். நல்ல அனுபவங்கள். பகலில் வந்தால், முழுமையாக ரசித்து செல்லலாம்.

அருகில் ஆலய Shopping  complex. Cable Car வழியில் கீழ செல்ல ஒரு தனி இடம். அங்கும் வரிசையில் நின்று இறங்கினோம்.

நான் 2011ம் வருடம் சார்தாம் யாத்ரா வந்தபோது, ஹரிதுவாரில் உள்ள இந்த ஆலயம் வந்திருந்தேன். அப்போது இருந்ததைவிட அதிக வளர்ச்சியும், மக்கள் நெருக்கமும் வசதிகளும் பல்வேறு நிலைகளில் பெருகி உள்ளதைப் பார்க்க முடிகிறது.

ஆலய தரிசனம்  முடித்து கீழே இறங்கியபிறகு மீண்டும் பேருந்தில் புறப்பட்டோம்.

ஹரிதுவாரில் இருக்கும் மிக சிறப்பு வாய்ந்த மேலும் சில
ஆலயங்கள் /ஆசிரமங்கள் பற்றிய சில குறிப்புகள்:

🛕மாயாதேவி ஆலயம் :

சித்தர் பீடம் என்ற, ஆதிசக்திதேவி என்னும் ஆலயம். பார்வதிதேவியின்  இதயம் விழுந்து இருந்த இடமாகும்.
சக்தி பீடம் என்றும் போற்றப்படுகிறது.
இதை மாயாதேவி ஆலயம் என்றும் கூறுகின்றனர்.

🛕 சதி அல்லது சத்திகுன்ட் இந்த இடத்தில்தான், தட்சன் யாகத்தில் கலந்து கொள்ள சென்ற சதி தன்னை இங்குள்ள யாகக் குண்டத்தில் தன்னை மாய்த்துக் கொண்டதாக கருதுகிறார்கள். இந்த இடம் கான்கால் (Kankhal) அருகில் உள்ளது.

🛕11ம் நூற்றாண்டுகளில் புணரமைப்பு செய்யப்பட்டது.

🛕நாராயணி ஷிலா ஆலயமும், பைரவர் ஆலயமும் இணைந்துள்ளது.

🌊பிமாகோடா குளம்:

ஹர்கி பாவுரி நீர்த்துறையிலிருந்து 1 கி.மீ. தூரத்தில் உள்ளது.
🌳பாண்டவர்கள் இமயத்திற்கு ஹரிதுவார் வழியாக சென்ற போது, பீமர், தன் முஷ்டியால் மலையை மோதி பாறையை பிளந்து நீரை வரவைத்த இடம்.

🛕ராம்மந்தீர். 
சிறப்பான முறையில் மிகப்பெரிய அளவில் ராமர் ஆலயம்  ஒன்று அமைக்கப்படவுள்ளது.

🛕மகரவாகினி ஆலயம்:

பிர்லா காட் அருகில் உள்ளது.'கங்கா' மாத ஆலயம். 
ஸ்ரீ ஜெயந்திர சரஸ்வதி சங்கராச்சாரியார் அவர்களால் சில நூற்றாண்டுகளுக்கு முன் கட்டப்பட்டுள்ளது. தமிழகக் கோவில் அமைப்பில் உள்ள ஆலயம்.

🛕பாரதமாத ஆலயம் :

கங்கையின் கரையில், பல்லடுக்கு 8 அடுக்கு மாடி கட்டிடமாக இவ்வாலயம் உள்ளது. ஒவ்வொரு மாடியிலும், ராமாயணக் காலத்திலிருந்து பாரதத்தின் வரலாறுகள் இங்கே காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
முன்னாள் பிரதம மந்திரி திருமதி இந்திராகாந்தி அம்மையார், 15.05.1983ல், இந்த ஆலயத்தை திறந்து வைத்துள்ளார்கள். 
முதல் மாடியில் பாரதமாதா, இரண்டாவது மாடியில் ஷூர் மந்தீர், 3வது மாத்திரி ஆலயம்,
4வது மாடியில், முனிவர்கள் 
5வது மாடியில், அனைத்து மத வழிபாடுகள் பற்றிய ஓவியங்கள்.
6 வது மாடியில், சக்தியின் வடிவங்கள்.
7வது மாடியில், விஷ்ணுவின் வடிவங்கள். 
8வது மாடியில், சிவன் வடிவங்கள், மற்றும், இமயமலையின் புராதான ஆலயங்கள்,காட்சிப்படுத்தப்பட்டு வருகிது

🛕திருப்பதி பாலாஜி ஆலயம் :

தென்னக ஆலய அமைப்பில் அமைக்கப்பட்டுள்ள ஆலயம். 
இங்கு சிவன், விஷ்ணுவின் சிலைகள் வழிபாட்டில் உள்ளது.

🛖சப்தரிஷி ஆஷ்ரமம் / சப்த சரோவர் :
🍁சப்தரிஷிகளான, 
காசிபர், வசிஷ்ட்டர், அத்ரி, விஷ்வாமித்ரார், ஜமதக்கனி, பரத்வாஜர், கௌதமர் ஆகியோர்
தவம் செய்த இடம். கங்கை 7 பிரிவாக பிரிந்து செல்லும் இடம்.

🌺ஏழு முனிவர்கள் வழிபட்ட இந்த இடத்தில், கங்கை பொங்கிப் பாயும். இந்த இடத்தில் நதியின் வேகம், சப்தம் மிகவும்  அதிகம்.  இதனால், முனிவர்களின் தவம் செய்வதற்கு இடராக இருந்தது.
இதை உணர்ந்ததால், கங்கை தன்னை 7 பிரிவுகளாக பிரித்துக் கொண்டு பாய்ந்தார். இந்த இடத்திற்கு சப்த சாரோவர் என்று பெயர். இங்குள்ள ஆசிரமமே சப்தரிஷி ஆசிரமம்.

🌺7 முனிவர்களின் தவம் கலையாமல் இருக்க,
கங்கை 7 பிரிவுகளாக பிரிந்து பாயும் இடம்.

🌺யுதிராஷ்ட்ரர், இந்த இடத்தில் பாயும் கங்கை தீர்த்தத்தின் சிறப்பை மகாபாரதத்தில் விவரித்துள்ளார்.

🌺கங்கையில் சப்தசாரோவர் அருகில் உள்ள இந்த சப்தரிஷி ஆஷ்ரமத்தில் 1943ல் குருகோஸ்வாமிடட் என்பவர் இலவசக் கல்வி,  உணவு, தங்குமிடம் வசதிகளை ஏற்படுத்தியுள்ளார்.

🛖கபிலர் ஆசிரமம்:

தன் முன்னோர்களுக்காக சூரிய வம்ச அரசரான பகீரதன் தவம் இருந்து கங்கை நீரை சிவபெருமானிடமிருந்து பெற்று, கங்கை நதியாக பூமிக்கு வந்து பாயும் இடம் இது.

🛖அகஸ்தியர் ஆசிரமம்:

🌴அகஸ்திய முனிவரும் தன் மனைவி லோபமுத்தராவுடன் இருந்து தவம் செய்த இடம் என்பது புராணம்.

இது போன்று, புராதான புரான சிறப்புவாய்ந்த ஆலயங்கள்
புகழ்பெற்ற... பல்வேறு ஆஷ்ரமங்கள், மடங்கள்
ஹரிதுவாரில் ஏராளமாக உள்ளன.

🌲ஹரிதுவார், ஆன்மீக புன்னிய பூமி மட்டுமல்ல, புராதான, குருகுலக்கல்விக் கேந்திரமாகவும், ஆயூர்வேதம், மூலிகைகள், பற்றிய ஆராய்ச்சிகளிலும், அதன் மருந்து உற்பத்தியிலிலும் சிறந்து  விளங்குகிறது. 

🌼இன்று ஹரிதுவாரில் BHEL, Integrated Industrial Estate(IIE), IIT Roorkee  முதலியவைகள் அமைக்கப்பட்டு, தொழில் முன்னேற்றமும்  ஏற்பட்டுள்ளது.

ஹரிதுவாரிலிருந்து
புறப்பட்டு புது டெல்லி தனிப் பேருந்தில் வந்தோம். 
வரும் வழியில் ஒரு கிராமத்தில்
கரும்புவெட்டி எடுத்து வந்து சார் எடுத்து, பிழிந்து அதை காய்ச்சி வெல்லம் எடுத்து Pack செய்யும் இயற்கையான திறந்தவெளி சர்க்கரை ஆலைகளை ப் பார்த்தோம்.

இறையருள் தந்த இனிய பயணம்:

இறையருளால் 3-04-2022 முதல் 15.04.2022 வரை இந்த உத்தரகாண்ட் மாநிலத்தின் சில புனித இடங்களைக் கண்டு வந்து என் இனிய பயணங்களின்
நினைவுகளை தங்களுடன் பகிர்ந்துகொண்டேன். 
நிறைவான பயணம்.
எல்லோருக்கும் நன்றிகளும் வணக்கங்களும்.🙏🙇🏼‍♂️

✈️15.04.2022 பகல் ஹரிதுவாரிலிருந்து புறப்பட்டு 
புது டெல்லி விமான நிலையம்  வந்து, விமானத்தில் அன்று மாலை புறப்பட்டு 15.04.2022 இரவு 11.00 அளவில் சென்னை வந்தடைந்தோம்.🛩️

🚍நான், அங்கிருந்து பேருந்தில் புறப்பட்டு 16.04.2022 காலையில் காரைக்கால் வீடு வந்து  நலமுடன் சேர்ந்தேன்.

💚இறையருள் துணையால், மேலும் ஒரு இனிய பயணமாக அணைவருக்கும்,  இந்த பயணம் அமைந்து இருந்தது.
இறைவனுக்கு நன்றி.

💜இந்த யாத்ரா முழுவதும் ஏற்பாடு செய்து, நிர்வாகம் செய்து, அனைத்து வசதிகளையும் ஒருங்கிணைத்தும்,  அனைவரையும் திருப்தி செய்ய அயராத பாடுபட்டு, சிறப்பாக அமைத்துக் கொடுத்தும், எல்லோரிடமும் உண்மையான உள்ளன்புடன் பழகி தன் இனிய குணத்தினால் அமைதியான சுபாவம் கொண்ட, திரு S.R.பாலசுப்பிரமணியன், Administrator, SUJANA TOURS, West Mambalam,  Chennai அவர்களுக்கு என்றென்றும் என் பணிவான நமஸ்காரங்கள். 
இதயபூர்வ வணக்கங்களும், நன்றிகளும்🙏🙇🏼‍♂️

🧡எப்போதுமே, என்னுடைய எல்லா  யாத்திரைகளிலும் பங்குபெறுவதுடன், நல்ல  துணையாகவும், உதவியாகவும், தூண்டுதலாகவும், உன்மையான ஆர்வத்துடனும்,  இதய உணர்வுகளுடனும், பண்பு,பாசத்துடனும் இருந்து, நட்புடன் பழகும், அன்பு சகோதரர் திரு பரணிதரன் அவர்களையும் நான் வணங்கி நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.🙇🏼‍♂️🙏
மேலும்,
இந்த யாத்ராவில் பங்குகொண்டு, மிகச் சிறப்பாக அமைய, ஆழ்ந்த நட்புடனும், பாசத்துடனும்  எம் மீது தனி  அன்புகாட்டி உயர்ந்த பண்புடன் பழகி வரும் சகோதரர் திரு ராஜேந்தின் அவர்களையும் பணிந்து வணங்கி நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.🙏🙇🏼‍♂️

💙பல இடங்களும் புதியவையாக இருந்தாலும்,  அதைப் பற்றிய, புராண பெருமைகளை அவ்வப்போது, உணர்த்தியும், 
உயர் உள்ளம் கொண்டு, யாத்திரையில் எம்முடன் உண்மையான  நட்புடனும், சகோதரத்துவத்துடனும்,  அன்பு உள்ளத்துடன், பழகிய  அத்துணை அன்பு பெரியோர்கள், நன்பர்களுக்கும் ஒவ்வொருவருக்கும் என் பணிவார்ந்த நமஸ்காரங்கள்.🙇🏼‍♂️🙏

❤️யாத்திரை சிறப்பாக அமைய உதவிய எல்லோருக்கும் என் இதயபூர்வ நன்றியும், வணக்கங்களும்.🙇🏼‍♂️🙏

🧡தொலைவில் இருந்தாலும் தொடர்பில் இருப்போம்.💚

🌟நல்லவர்கள் மனங்களில் என்றும் நம்பிக்கையும் நன்றியும்  இருக்கும் அல்லவா? 

💫மீண்டும் வேறு ஒரு பயண அனுபவங்களை சந்திப்போமோ?
 வணக்கம்🙏

🙏நன்றி🙇🏼‍♂️
#என்றும்அன்புடன் 
#சுப்ராம்_அருணாசலம்_காரைக்கால்
CHANDI DEVI - 2
#UTTARAKANNT_TOUR_2022
#பயணஅனுபவக்குறிப்புகள்
#HARIDWAR #RISHIKESH
#சன்டிதேவிஆலயம்.
#HARDWAR பதிவு - 5 - 2
15.04.2022

https://m.facebook.com/story.php?story_fbid=8141002619308257&id=100001957991710


ஹரிதுவாரிலிருந்து புதுடெல்லி வரும் வழியில் ஒரு சிற்றூரில் (LIBBERHIDI ) உள்ள சர்க்கரை / வெல்லம் தயாரிக்கும் தொழிற்சாலை.

#UTTARAKANNT_TOUR_2022
#பயணஅனுபவக்குறிப்புகள்
#HARIDWAR #RISHIKESH
#HARDWAR பதிவு - 5 - 4
15.04.2022

https://m.facebook.com/story.php?story_fbid=8141002619308257&id=100001957991710




HARIDWAR to NEW DELHI - CHENNAI - RETURN -
15.04.2022
இனிய ஆன்மீக பயணம் என்றும் எம் 
நினைவில் நிற்கும் நிறைவு பயணம்.

#UTTARAKANNT_TOUR_2022
#பயணஅனுபவக்குறிப்புகள்
#HARIDWAR #RISHIKESH
#HARDWAR 
15.04.2022

https://m.facebook.com/story.php?story_fbid=8141002619308257&id=100001957991710

திண்டல் திண்டல் வேலாயுதசாமி முருகன் கோயில் 6.09.26

திண்டல்  திண்டல் வேலாயுதசாமி முருகன் கோயில் வேலாயுதசாமி கோயில், திண்டல் என்பது ஈரோட்டில் இருந்து பெருந்துறை செல்லும் வழியில் எட்டு கி.மீ. தொ...