UTTARAKANNT_TOUR_2022
#பயணஅனுபவக்குறிப்புகள்
#HARIDWAR #RISHIKESH
#சன்டிதேவிஆலயம்.
நிறைவு பயணம்
#HARDWAR பதிவு - 5 - 1
15.04.2022
💚14.04.2022 ஹரிதுவாரில், காலை உணவுக்குப் பிறகு, சிற்றுந்து மூலம், 45 கி.மீ. தூரத்தில் உள்ள ரிஷிகேஷ் சென்று அங்குள்ள ஆலயங்கள், மடங்கள் தரிசித்து விட்டு, கங்கையின் முக்கிய இடத்தில் குளித்தோம்
மதியம், ரிஷிகேசிலிருந்து புறப்பட்டு,
(முன்பே இதன் அனுபவங்களின் பதிவுகள் எழுதியுள்ளேன்)
14.04.2022 மாலை மீண்டும் ஹரிதுவார் வந்து ஓய்வு எடுத்துக் கொண்டோம். மாலையில் ஹரிதுவாரில் உள்ள ஆலயங்கள் தரிசனம். இரவு தங்கினோம்.
(முன்பே இதன் அனுபவங்களையும், பதிவுகள் எழுதியுள்ளேன்)
மீண்டும் 15.04.2022 காலையில் ஹரிதுவாரிலிருந்து புறப்பட்டு, மலைக்குன்றின் மீதுள்ள சண்டி தேவி ஆலயம் தரிசித்தோம்.
🛕#சன்டிதேவிஆலயம்.
🍁ஸ்கந்த புராணத்தின்படி, ஷூம்பா, நிஷும்பா ,சந்தா - முன்டா என்ற அரக்கர்கள் கொல்லப்பட்ட இடம் .
🛕நீல் பர்வத் என்ற மலையின் மீது உள்ளது. கங்கையின் கிழக்குப் பகுதியில் உள்ளது.
🌴1929 ல் காஷ்மீரரசர் சுச்சட் சிங் என்பவரால், புரைமைப்பு செய்து கட்டப்பட்டது.
🛖8ம் நூற்றாண்டில், ஆதிசங்கரர்
சன்டி தேவி சிலையுடன் ஆலயம் ஏற்படுத்தினார் என்ற வரலாற்று சான்று உள்ளது
🌴இவ்வாலயத்திற்கு சென்று வர ரோப்கார் வசதி உள்ளது.
#பயணஅனுபவக்குறிப்புகள்
15.04.22 அன்று ஹரிதுவாரில், நாங்கள் தங்கியிருந்த TRIMOORTI HOTEL அருகில் இருந்த Ganesh Ghat சென்று, கங்கையில் நீராடினோம். பிறகு, வழியில் உள்ள ஆலயங்களை தரிசித்து விட்டு வந்தோம்.
காலை உணவு முடித்துக் கொண்டு, ஹரிதுவாரிலிருந்து புறப்பட்டோம். வரும் வழியில் அகன்ற கங்கைக் கரையின் கிழக்குப் புறம் உள்ள உயரமான மலைத்தொடரில் உச்சியில் ஒரு ஆலயம் கண்டோம்.
மலை உச்சியில் இருந்த முக்கியமான ஆலயம் சன்டிதேவி ஆலயம்.
இதன் அருகில், சற்று உயரத்தில் ஹனுமானின் தாயார் இருந்த இடம் ஒன்றும் உள்ளது.
சன்டி தேவிஆலயம், ஹரிதுவாரின் நுழைவுப் பகுதியில் மலைக்குன்றில் உள்ளது.
இரண்டு வழிகளில் இவ்வாலயம் அமைந்துள்ள மலைக்குன்றிற்குச் செல்லலாம்.
மலைப்படிக்கட்டுப் பாதைகள் மூலம் நடந்தும் செல்லலாம்.
அல்லது Winch / Cable Car மூலமும் செல்லலாம்.
பெரிய வாகனங்கள் நேரடியாக மேலே செல்ல முடியாது.
Ropeway Car : இது ஒரு தனியார் நிறுவனம். பல மலைக்கோவில்களில் இவர்கள் இந்த பணி செய்து வருகிறார்கள்.
ஹரிதுவாரில், மலைக்குன்றின் மீது உள்ள மானச தேவி ஆலயம் மற்றும் சன்டி தேவி ஆலயம் இரண்டுக்கும் இவர்கள்தான் ஏற்பாடு செய்துள்ளனர்.
கட்டணம் இரண்டு ஆலயங்களையும் சென்று தரிசித்து வர மொத்தமாக ஒரே கட்டண வசதிகள் செய்துள்ளார்கள். நாம் சரியானபடி திட்டமிட்டால் இதன் கட்டண சலுகைகளை அனுபவிக்க முடியும்.
ஒரு முறை சண்டி தேவி ஆலயம் சென்று திரும்ப. ரூ.220ம், இரண்டு ஆலயங்களையும் தரிசிக்க 365ம்,
Transport கட்டணம் Rs.80ம் வசூல் செய்யப்படுகிறது.
ஒருமுறை மட்டும் கீழ இறங்கிவர ரூ165 கட்டணம் அமைக்கப்பட்டு உள்ளது.
ஒவ்வொரு ஆலயம் செல்லும் போது கட்டனம் செலுத்தி Ticket பெறுவதற்கு, வரிசையில் நிற்க வேண்டியிருக்கிறது.
Ticket ஒரு முறை எடுத்தால், 3 நாட்கள் செல்லும் என்கிறார்கள்.
மலைமீது ஏறுவதற்கும், இறங்குவதற்கும் சேர்த்துதான் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
இரண்டு ஆலயங்களுக்கும் தரிசித்து வர தனி வாகன வசதியும் செய்து தருவதாகக் கூறப்படுகிறது.
சில நேரங்களில், சன்டி தேவி அல்லது மானச தேவி ஆலயத்தில் கூட்டம் மிகவும் அதிகம் இருக்கும். நாம் Token வாங்கி காத்திருக்கவேண்டும்.
சிலர் முதலில் சன்டி தேவி ஆலயம் சென்று தரிசித்து விட்டு இங்கு வருவது நலம் என்று பதிவிடுகிறார்கள்.
அருகில் வசிப்பவர்கள், ஆலய விஷேச நாட்களில், ஒரே சமயத்தில் தரிசிக்க இந்த Compound ticket முறை நல்ல ஏற்பாடு எனத் தெரிகிறது
நாங்கள், தனித்தனியாக வெவ்வேறு நாட்களில் சென்று தனி தனி Ticket பெற்று தரிசித்தோம். பெரும்பாலான Tourist operators இதைத்தான் செய்கிறார்கள். இதுவே நமக்கு வசதியாகப்படுகிறது
Winch / Cable Car Station செல்ல தனி இடம் உள்ளது.
கட்டணம் உண்டு Ticket வாங்கும் இடத்தில் Waiting Hall உள்ளது.
முதலில் ஒரு Tocken கொடுத்து விடுகிறார்கள். ஒரு Winch | cable காரில் 6 பேர் செல்லலாம் என்பதால் அதற்கு தகுந்தார்போல் சிறிய சிறிய குழுக்களாக உள்ளே நுழைய வைக்கிறார்கள். Disply Board Announcement ல் நம் Token அழைப்பில் நாம் சென்று வரிசைக்குச் செல்ல வேண்டும். அதன் பிறகு Ticket வாங்கி
நாம் Cable Car ல் ஏறும் இடம் செல்ல வேண்டும்.
நிறைய ஆட்கள் உள்ளனர். நமக்குப் போதுமான எச்சரிக்கை தந்து பாதுகாப்புடன் ஏற்றுகிறார்கள்.
மலைமீது போகும்போதும், வரும்போதும், மலைக்காட்சிகள் மிகவும் அற்புதமாக உள்ளது.
Cable Car பாதி Auto போல உள்ளதால், தொங்கிக் கொண்டும், ஆடிக் கொண்டும் மெதுவாகச் ஆடிச் செல்கிறது. இறங்கும் போதும் அவ்வாறே பாதுகாப்புடன் வந்து இறக்கி விடுகிறார்கள்.
இறங்கிய பிறகு கோவில் வளாகம் மிக அருகிலேயே இருக்கிறது. ஆலயம் நுழை வாயில் ஒரு வளைவும் அதைத் தொடரந்து நீண்ட பாதையும், அதன் முடிவில் ஒரு மண்டபம், அதிலிருந்து சில படிகள் ஏறி அங்குள்ள கருவரை யில் சுவாமி தரிசனம் செய்தோம்.
நாங்கள் காலையில் சென்றதால் சற்று கூட்டம் இருந்து கொண்டே இருந்தது.
தனி வழி, கட்டண தரிசனம் இவைகள் கிடையாது.
நாங்கள் வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தோம்.
சிறிய சன்னதியில் சிறிய அளவில் அம்மன் உருவம். தீப ஆராதனை காட்டப்பட்டது. ஆலய கருவரை மண்டபத்தை உள்ளடக்கிய ஏகபிரகாரம்.
சுற்று பிரகாரத்தில் மேலும் சிறுசிறு சன்னதிகள் உள்ளன.
பிரார்த்தனைத்தலமாக உள்ளதால்,
ஏராளமான மக்கள் வந்த வண்ணம் உள்ளார்கள்.
வெளியில் வந்தால், ஆலய பூசைப் பொருட்கள், மற்ற பொருட்கள் விற்பனைக் கடைகள் இரண்டு வரிசையிலும் உள்ளன.
பிரதான கோயில் சாலையில் மாற்றுத்திறனாளிகளுக்கு சக்கர நாற்காலிகள் மற்றும் பல்லக்குகள் முறையான ஏற்பாடுகள் உள்ளன என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இங்கு இரண்டு பிரிவுகள் பாதைகளில் ஒன்று கீழிறங்கும் பாதையும், மற்றொன்று சற்று உயரே செல்லும் பாதை, அதன் வழியில் சென்றால் ஸ்ரீ அஞ்சனி தேவி ஆலயம் செல்லலாம்.
நாங்கள் ஸ்ரீ அஞ்சனி மதா ஆலயம் சென்று தரிசித்தோம்.
பாதை சற்று தூரம் சென்றதும், மலையின் உயரத்தில், மேலும் ஒரு ஆலயம் செல்ல ஒரு பாதை உள்ளது. அங்கு சில படிகள் உயரத்தில் பெரிய மண்டபமும் இரண்டு பெரிய கருவரைகள் அமைப்பில் ஆலயம் உள்ளது.
ஸ்ரீ ஜெய் ஹனுமானின் தாயாரின் தாயார் ஸ்ரீ ஜெய்மா அஞ்சனி தேவி ஒரு கருவரையிலும், ஸ்ரீ ஹனுமான் மற்றும் ஸ்ரீ சந்தோஷிமாதா தேவி சன்னதியும் உள்ளன. இணைத்து பெரிய மண்டபமாகவும் அமைத்துள்ளார்கள்.
மேலும், சற்று தூரத்தில் ஒரு சன்னதியும் அதில் ஒரு காலபைரவர் மற்றும் ஒரு சிவலிங்கம் உள்ளது.
ஸ்ரீஹனுமான் தாயார் வழிபட்டது என்றும் கூறுகிறார்கள்.
மலைமீது ஒரு பகுதி அடர்ந்த மரங்களும், காடுகள் போல நிறைந்தும் உள்ளன.
இங்கிருந்து, ஹரிதுவார் நகர் முழுதும் மற்றும் கங்கையும் அற்புதமாக காட்சியளிக்கின்றது.
சற்று அருகிலேயே பாதைஇறங்கி செல்ல படிகள் / வழி அமைத்துள்ளார்கள்.
இயற்கை காட்சிகள், ஆன்மீக உணர்வுகளுடன் மிக அருமையான இடமாக உள்ளது.
ஹரிதுவார் வருபவர்கள், சற்று நேரம் ஒதுக்கி, இந்த ஆலயங்களை
தரிசித்து செல்லவேண்டும். நல்ல அனுபவங்கள். பகலில் வந்தால், முழுமையாக ரசித்து செல்லலாம்.
அருகில் ஆலய Shopping complex. Cable Car வழியில் கீழ செல்ல ஒரு தனி இடம். அங்கும் வரிசையில் நின்று இறங்கினோம்.
நான் 2011ம் வருடம் சார்தாம் யாத்ரா வந்தபோது, ஹரிதுவாரில் உள்ள இந்த ஆலயம் வந்திருந்தேன். அப்போது இருந்ததைவிட அதிக வளர்ச்சியும், மக்கள் நெருக்கமும் வசதிகளும் பல்வேறு நிலைகளில் பெருகி உள்ளதைப் பார்க்க முடிகிறது.
ஆலய தரிசனம் முடித்து கீழே இறங்கியபிறகு மீண்டும் பேருந்தில் புறப்பட்டோம்.
ஹரிதுவாரில் இருக்கும் மிக சிறப்பு வாய்ந்த மேலும் சில
ஆலயங்கள் /ஆசிரமங்கள் பற்றிய சில குறிப்புகள்:
🛕மாயாதேவி ஆலயம் :
சித்தர் பீடம் என்ற, ஆதிசக்திதேவி என்னும் ஆலயம். பார்வதிதேவியின் இதயம் விழுந்து இருந்த இடமாகும்.
சக்தி பீடம் என்றும் போற்றப்படுகிறது.
இதை மாயாதேவி ஆலயம் என்றும் கூறுகின்றனர்.
🛕 சதி அல்லது சத்திகுன்ட் இந்த இடத்தில்தான், தட்சன் யாகத்தில் கலந்து கொள்ள சென்ற சதி தன்னை இங்குள்ள யாகக் குண்டத்தில் தன்னை மாய்த்துக் கொண்டதாக கருதுகிறார்கள். இந்த இடம் கான்கால் (Kankhal) அருகில் உள்ளது.
🛕11ம் நூற்றாண்டுகளில் புணரமைப்பு செய்யப்பட்டது.
🛕நாராயணி ஷிலா ஆலயமும், பைரவர் ஆலயமும் இணைந்துள்ளது.
🌊பிமாகோடா குளம்:
ஹர்கி பாவுரி நீர்த்துறையிலிருந்து 1 கி.மீ. தூரத்தில் உள்ளது.
🌳பாண்டவர்கள் இமயத்திற்கு ஹரிதுவார் வழியாக சென்ற போது, பீமர், தன் முஷ்டியால் மலையை மோதி பாறையை பிளந்து நீரை வரவைத்த இடம்.
🛕ராம்மந்தீர்.
சிறப்பான முறையில் மிகப்பெரிய அளவில் ராமர் ஆலயம் ஒன்று அமைக்கப்படவுள்ளது.
🛕மகரவாகினி ஆலயம்:
பிர்லா காட் அருகில் உள்ளது.'கங்கா' மாத ஆலயம்.
ஸ்ரீ ஜெயந்திர சரஸ்வதி சங்கராச்சாரியார் அவர்களால் சில நூற்றாண்டுகளுக்கு முன் கட்டப்பட்டுள்ளது. தமிழகக் கோவில் அமைப்பில் உள்ள ஆலயம்.
🛕பாரதமாத ஆலயம் :
கங்கையின் கரையில், பல்லடுக்கு 8 அடுக்கு மாடி கட்டிடமாக இவ்வாலயம் உள்ளது. ஒவ்வொரு மாடியிலும், ராமாயணக் காலத்திலிருந்து பாரதத்தின் வரலாறுகள் இங்கே காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
முன்னாள் பிரதம மந்திரி திருமதி இந்திராகாந்தி அம்மையார், 15.05.1983ல், இந்த ஆலயத்தை திறந்து வைத்துள்ளார்கள்.
முதல் மாடியில் பாரதமாதா, இரண்டாவது மாடியில் ஷூர் மந்தீர், 3வது மாத்திரி ஆலயம்,
4வது மாடியில், முனிவர்கள்
5வது மாடியில், அனைத்து மத வழிபாடுகள் பற்றிய ஓவியங்கள்.
6 வது மாடியில், சக்தியின் வடிவங்கள்.
7வது மாடியில், விஷ்ணுவின் வடிவங்கள்.
8வது மாடியில், சிவன் வடிவங்கள், மற்றும், இமயமலையின் புராதான ஆலயங்கள்,காட்சிப்படுத்தப்பட்டு வருகிது
🛕திருப்பதி பாலாஜி ஆலயம் :
தென்னக ஆலய அமைப்பில் அமைக்கப்பட்டுள்ள ஆலயம்.
இங்கு சிவன், விஷ்ணுவின் சிலைகள் வழிபாட்டில் உள்ளது.
🛖சப்தரிஷி ஆஷ்ரமம் / சப்த சரோவர் :
🍁சப்தரிஷிகளான,
காசிபர், வசிஷ்ட்டர், அத்ரி, விஷ்வாமித்ரார், ஜமதக்கனி, பரத்வாஜர், கௌதமர் ஆகியோர்
தவம் செய்த இடம். கங்கை 7 பிரிவாக பிரிந்து செல்லும் இடம்.
🌺ஏழு முனிவர்கள் வழிபட்ட இந்த இடத்தில், கங்கை பொங்கிப் பாயும். இந்த இடத்தில் நதியின் வேகம், சப்தம் மிகவும் அதிகம். இதனால், முனிவர்களின் தவம் செய்வதற்கு இடராக இருந்தது.
இதை உணர்ந்ததால், கங்கை தன்னை 7 பிரிவுகளாக பிரித்துக் கொண்டு பாய்ந்தார். இந்த இடத்திற்கு சப்த சாரோவர் என்று பெயர். இங்குள்ள ஆசிரமமே சப்தரிஷி ஆசிரமம்.
🌺7 முனிவர்களின் தவம் கலையாமல் இருக்க,
கங்கை 7 பிரிவுகளாக பிரிந்து பாயும் இடம்.
🌺யுதிராஷ்ட்ரர், இந்த இடத்தில் பாயும் கங்கை தீர்த்தத்தின் சிறப்பை மகாபாரதத்தில் விவரித்துள்ளார்.
🌺கங்கையில் சப்தசாரோவர் அருகில் உள்ள இந்த சப்தரிஷி ஆஷ்ரமத்தில் 1943ல் குருகோஸ்வாமிடட் என்பவர் இலவசக் கல்வி, உணவு, தங்குமிடம் வசதிகளை ஏற்படுத்தியுள்ளார்.
🛖கபிலர் ஆசிரமம்:
தன் முன்னோர்களுக்காக சூரிய வம்ச அரசரான பகீரதன் தவம் இருந்து கங்கை நீரை சிவபெருமானிடமிருந்து பெற்று, கங்கை நதியாக பூமிக்கு வந்து பாயும் இடம் இது.
🛖அகஸ்தியர் ஆசிரமம்:
🌴அகஸ்திய முனிவரும் தன் மனைவி லோபமுத்தராவுடன் இருந்து தவம் செய்த இடம் என்பது புராணம்.
இது போன்று, புராதான புரான சிறப்புவாய்ந்த ஆலயங்கள்
புகழ்பெற்ற... பல்வேறு ஆஷ்ரமங்கள், மடங்கள்
ஹரிதுவாரில் ஏராளமாக உள்ளன.
🌲ஹரிதுவார், ஆன்மீக புன்னிய பூமி மட்டுமல்ல, புராதான, குருகுலக்கல்விக் கேந்திரமாகவும், ஆயூர்வேதம், மூலிகைகள், பற்றிய ஆராய்ச்சிகளிலும், அதன் மருந்து உற்பத்தியிலிலும் சிறந்து விளங்குகிறது.
🌼இன்று ஹரிதுவாரில் BHEL, Integrated Industrial Estate(IIE), IIT Roorkee முதலியவைகள் அமைக்கப்பட்டு, தொழில் முன்னேற்றமும் ஏற்பட்டுள்ளது.
ஹரிதுவாரிலிருந்து
புறப்பட்டு புது டெல்லி தனிப் பேருந்தில் வந்தோம்.
வரும் வழியில் ஒரு கிராமத்தில்
கரும்புவெட்டி எடுத்து வந்து சார் எடுத்து, பிழிந்து அதை காய்ச்சி வெல்லம் எடுத்து Pack செய்யும் இயற்கையான திறந்தவெளி சர்க்கரை ஆலைகளை ப் பார்த்தோம்.
இறையருள் தந்த இனிய பயணம்:
இறையருளால் 3-04-2022 முதல் 15.04.2022 வரை இந்த உத்தரகாண்ட் மாநிலத்தின் சில புனித இடங்களைக் கண்டு வந்து என் இனிய பயணங்களின்
நினைவுகளை தங்களுடன் பகிர்ந்துகொண்டேன்.
நிறைவான பயணம்.
எல்லோருக்கும் நன்றிகளும் வணக்கங்களும்.🙏🙇🏼♂️
✈️15.04.2022 பகல் ஹரிதுவாரிலிருந்து புறப்பட்டு
புது டெல்லி விமான நிலையம் வந்து, விமானத்தில் அன்று மாலை புறப்பட்டு 15.04.2022 இரவு 11.00 அளவில் சென்னை வந்தடைந்தோம்.🛩️
🚍நான், அங்கிருந்து பேருந்தில் புறப்பட்டு 16.04.2022 காலையில் காரைக்கால் வீடு வந்து நலமுடன் சேர்ந்தேன்.
💚இறையருள் துணையால், மேலும் ஒரு இனிய பயணமாக அணைவருக்கும், இந்த பயணம் அமைந்து இருந்தது.
இறைவனுக்கு நன்றி.
💜இந்த யாத்ரா முழுவதும் ஏற்பாடு செய்து, நிர்வாகம் செய்து, அனைத்து வசதிகளையும் ஒருங்கிணைத்தும், அனைவரையும் திருப்தி செய்ய அயராத பாடுபட்டு, சிறப்பாக அமைத்துக் கொடுத்தும், எல்லோரிடமும் உண்மையான உள்ளன்புடன் பழகி தன் இனிய குணத்தினால் அமைதியான சுபாவம் கொண்ட, திரு S.R.பாலசுப்பிரமணியன், Administrator, SUJANA TOURS, West Mambalam, Chennai அவர்களுக்கு என்றென்றும் என் பணிவான நமஸ்காரங்கள்.
இதயபூர்வ வணக்கங்களும், நன்றிகளும்🙏🙇🏼♂️
🧡எப்போதுமே, என்னுடைய எல்லா யாத்திரைகளிலும் பங்குபெறுவதுடன், நல்ல துணையாகவும், உதவியாகவும், தூண்டுதலாகவும், உன்மையான ஆர்வத்துடனும், இதய உணர்வுகளுடனும், பண்பு,பாசத்துடனும் இருந்து, நட்புடன் பழகும், அன்பு சகோதரர் திரு பரணிதரன் அவர்களையும் நான் வணங்கி நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.🙇🏼♂️🙏
மேலும்,
இந்த யாத்ராவில் பங்குகொண்டு, மிகச் சிறப்பாக அமைய, ஆழ்ந்த நட்புடனும், பாசத்துடனும் எம் மீது தனி அன்புகாட்டி உயர்ந்த பண்புடன் பழகி வரும் சகோதரர் திரு ராஜேந்தின் அவர்களையும் பணிந்து வணங்கி நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.🙏🙇🏼♂️
💙பல இடங்களும் புதியவையாக இருந்தாலும், அதைப் பற்றிய, புராண பெருமைகளை அவ்வப்போது, உணர்த்தியும்,
உயர் உள்ளம் கொண்டு, யாத்திரையில் எம்முடன் உண்மையான நட்புடனும், சகோதரத்துவத்துடனும், அன்பு உள்ளத்துடன், பழகிய அத்துணை அன்பு பெரியோர்கள், நன்பர்களுக்கும் ஒவ்வொருவருக்கும் என் பணிவார்ந்த நமஸ்காரங்கள்.🙇🏼♂️🙏
❤️யாத்திரை சிறப்பாக அமைய உதவிய எல்லோருக்கும் என் இதயபூர்வ நன்றியும், வணக்கங்களும்.🙇🏼♂️🙏
🧡தொலைவில் இருந்தாலும் தொடர்பில் இருப்போம்.💚
🌟நல்லவர்கள் மனங்களில் என்றும் நம்பிக்கையும் நன்றியும் இருக்கும் அல்லவா?
💫மீண்டும் வேறு ஒரு பயண அனுபவங்களை சந்திப்போமோ?
வணக்கம்🙏
🙏நன்றி🙇🏼♂️
#என்றும்அன்புடன்
#சுப்ராம்_அருணாசலம்_காரைக்கால்
CHANDI DEVI - 2
#UTTARAKANNT_TOUR_2022
#பயணஅனுபவக்குறிப்புகள்
#HARIDWAR #RISHIKESH
#சன்டிதேவிஆலயம்.
#HARDWAR பதிவு - 5 - 2
15.04.2022
https://m.facebook.com/story.php?story_fbid=8141002619308257&id=100001957991710
ஹரிதுவாரிலிருந்து புதுடெல்லி வரும் வழியில் ஒரு சிற்றூரில் (LIBBERHIDI ) உள்ள சர்க்கரை / வெல்லம் தயாரிக்கும் தொழிற்சாலை.
#UTTARAKANNT_TOUR_2022
#பயணஅனுபவக்குறிப்புகள்
#HARIDWAR #RISHIKESH
#HARDWAR பதிவு - 5 - 4
15.04.2022
https://m.facebook.com/story.php?story_fbid=8141002619308257&id=100001957991710
HARIDWAR to NEW DELHI - CHENNAI - RETURN -
15.04.2022
இனிய ஆன்மீக பயணம் என்றும் எம்
நினைவில் நிற்கும் நிறைவு பயணம்.
#UTTARAKANNT_TOUR_2022
#பயணஅனுபவக்குறிப்புகள்
#HARIDWAR #RISHIKESH
#HARDWAR
15.04.2022
https://m.facebook.com/story.php?story_fbid=8141002619308257&id=100001957991710
No comments:
Post a Comment