#ஜோதிர்லிங்க_தரிசனம்
#பயண_அனுபவக்_குறிப்புகள்
பதிவு - 2
#மத்தியப்பிரதேசம்
#ஒம்காரேஸ்வரர்
11.10.2022
🛕 இந்தியாவில் உள்ள மத்திய பிரதேச மாநிலத்தில் உஜ்ஜியினியில் உள்ள ஸ்ரீ மகாகாளேஸ்வரர், ஸ்ரீ ஓம்காரேஸ்வரர் மற்றும் மகாராஷ்ட்ரா மாநிலத்தில் உள்ள 5 ஜோதிர்லிங்கங்கள், அஷ்ட்ட கணபதி ஆலயங்கள், மற்றும் புராண சிறப்புவாய்ந்த சில புன்னிய தலங்களை சென்று தரிசனம் செய்யும் வாய்ப்பு எங்களுக்கு மீண்டும் இவ்வருடம் கிடைத்தது.
🛕 இந்த தலங்களுக்குச் சென்று வந்த அனுபவக் குறிப்புகளை பகிர்ந்து கொள்கிறேன். தாங்கள் இத்தலங்களுக்கு செல்லும் போது இவை உதவலாம்.
#மத்தியப்பிரதேசம்:
#ஜோதிர்லிங்கம்
#ஓம்காரேஸ்வரர்
🛕 பாரத தேசம் பழம்பெரும் தேசம். தேசத்தின் பல பாகங்களில் உள்ள இந்த ஜோதிர்லிங்களை தரிசித்து வழிபடுவது, பாரதத்தில் வசிக்கும் ஏராளமான இந்துக்களின் கடமையாக உள்ளது.
🛕 ஓம்காரேஷ்வர்: என்பது சிவனுக்காக அர்ப்பணிக்கப்பட்ட ஒரு இந்துக் கோயிலாகும்.
🛕 இது இந்தியாவின் மத்திய பிரதேச மாநிலத்தின் கந்த்வா மாவட்டத்தில், இந்தூர் அருகில், உள்ள மந்தாதா என்ற தீவு நகரில் அமைந்துள்ளது. தீவின் வடிவம் தேவநாகரி ॐ சின்னம் போல் இருப்பதாக கூறப்படுகிறது.
🛕 மத்தியப் பிரதேசத்தில் உள்ள பர்வாஹாவில் இருந்து சுமார் 16 கி.மீ. ஓம்காரேஷ்வர். இந்தியாவின் மிகவும் புனிதமான நதியான நர்மதையால் உருவானது. இப்போது இங்கு உலகின் மிகப்பெரிய அணை திட்டங்களில் ஒன்று செயல்படுகிறது.
🛕நர்மதை மற்றும் காவேரி (நர்மதையின் துணை நதி) நதிக்கரையில் மந்தாதா அல்லது ஷிவ்புரி தீவில் இக்கோயில் அமைந்துள்ளது . தீவு 4 கிமீ நீளமும், 2.6 கிமீ பரப்பளவும் கொண்டது படகுகள் மற்றும் பாலம் மூலம் அணுகலாம்.
🛕 சிவனின் 12 போற்றப்படும் ஜோதிர்லிங்கத் தலங்களில் இதுவும் ஒன்று . பல நூற்றாண்டுகளுக்கு முன்பு பில் பழங்குடி மக்கள் இந்த இடத்தில் குடியேறினர், இப்போது இந்த இடம் அதன் புராணத்திற்கும், வரலாற்றிற்கும் பிரபலமானது.
🛕இங்கு இரண்டு முக்கிய சிவன் கோவில்கள் உள்ளன, ஒன்று ஓம்காரேஷ்வர். (இதன் பெயர் “ஓம்காரத்தின் இறைவன் அல்லது ஓம் ஒலியின் இறைவன்”) தீவில் அமைந்துள்ளது.
🛕, மம்லேஷ்வர் (அமலேஷ்வர்) (இதன் பெயர் “அழியாத இறைவன்”) “அழியாதவர்கள் அல்லது தேவர்களின் இறைவன்” எனப்படுகிறது. இது, நர்மதை ஆற்றின் தென்கரையில் நிலப்பரப்பில் அமைந்துள்ளது.
புராண கதைகள்:
🛕இந்து புராணத்தின் படி, விந்தியா, விந்தியாச்சல மலைத்தொடரைக் கட்டுப்படுத்தும் தெய்வம், செய்த பாவங்களைப் போக்க சிவனை வழிபட்டது. அவர் ஒரு புனித வடிவியல் வரைபடத்தையும் மணல் மற்றும் களிமண்ணால் செய்யப்பட்ட லிங்கத்தையும் உருவாக்கினார். சிவன் வழிபாட்டில் மகிழ்ந்தார் மற்றும் ஓம்காரேஷ்வர் மற்றும் அமலேஸ்வரா என இரண்டு வடிவங்களில் தோன்றியதாக நம்பப்படுகிறது. அந்த மண் மேடு ஓம் வடிவில் தோன்றியதால் இத்தீவு ஓம்காரேஸ்வர் என்று அழைக்கப்பட்டது. கோயிலில் பார்வதி மற்றும் கணபதி சன்னதி உள்ளது.
🛕இரண்டாவது மாந்தாதா மற்றும் அவரது மகனின் தவம் தொடர்பானது. இக்ஷ்வாகு குலத்தின் மன்னன் ( ராமரின் மூதாதையர்) சிவபெருமான் ஜோதிர்லிங்கமாக காட்சியளிக்கும் வரை இங்கு சிவனை வழிபட்டார். மாந்தாதாவின் மகன்கள்-அம்பரீஷ் மற்றும் முச்சுகுந்தா அவர்கள் இங்கு கடுமையான தவம் மற்றும் துறவுகளை கடைப்பிடித்து சிவபெருமானை மகிழ்வித்தனர். அதனால்தான் இந்த மலைக்கு மாந்தாதா என்று பெயர்.
🛕இந்து மத நூல்களின் மூன்றாவது கதை: ஒரு காலத்தில் தேவர்களுக்கும், அசுரர்களுக்கும். இடையே ஒரு பெரிய போர் நடந்தது, அதில் அசுரர்கள் வெற்றி பெற்றார். இது தேவர்களுக்கு பெரும் பின்னடைவாக இருந்தது, எனவே தேவர்கள் சிவபெருமானிடம் பிரார்த்தனை செய்தனர். அவர்களின் பிரார்த்தனையால் மகிழ்ந்த சிவபெருமான், ஓம்காரேஷ்வர் ஜோதிர்லிங்க வடிவில் தோன்றி அசுரார்களை வென்றார்.
🕉️ஓம்காரத்தின் தத்துவம் :– ஓம்கார் ஓம் (ஒலி) மற்றும் அகார் (சிருஷ்டி) ஆகிய இரண்டு வார்த்தைகளால் ஆனது. அத்வைத் என்றால் “இரண்டு அல்ல” என்பதால் இரண்டும் ஒன்று அல்ல. சிருஷ்டியின் ஓம் பீஜே மந்திரம் , ஸ்ருஷ்டியை உருவாக்கியவர்.
#பயண_அனுபவக்_குறிப்புகள்🕊️
🛕முதலில், சென்னையிலிருந்து உஜ்ஜயினி செல்வதற்கு JAIPUR Expressல் ரயில் பயணம் ஏற்பாடு செய்யப்பட்டது.
🛕9.10.2022 மாலை 5.40 மணிக்கு சென்னை Central Railway Jn. புறப்பட்டு அடுத்த நாள் 10.10.2022 இரவு 9.15 க்கு செல்ல 3 AC கட்டணம் இருவருக்கு கட்டணம் ரூ 3650/-
🛕போக்குவரத்து, உணவு, தங்கும் வசதி பயண ஏற்பாட்டளர் மூலம் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.
🛕10.10.22 அன்று இரவு உஜ்ஜயினி சென்றதும், அங்கிருந்து ஷேர் Auto மூலம் 8 பேர்களுக்கு ரூ 250 கட்டணம் செலுத்தி நாங்கள் தங்க வேண்டிய, Hotel Ganga என்ற இடத்திற்கு சென்றுதங்கினோம். இந்த இடம் உஜ்ஜயினி நகரிலிருந்து சற்று தள்ளி புறநகர் பகுதியில் இருந்தது. இதன் அருகில் தனியார் பேருந்து நிலையம் உள்ளது.
🛕11.10.2022 செவ்வாய்க்கிழமை அன்று காலை உணவு முடித்து விட்டு, காலை 7.00 மணி அளவில் உஜ்ஜயினியிலிருந்து 190 கி.மீ. தூரம் உள்ள ஓம்காரேஸ்வரர் ஆலயம் சென்று தரிசித்து வர தனிப் பேருந்து வசதி செய்யப்பட்டு இருந்தது.
🛕காலையில் புறப்பட்டு மதியம் சென்று அடைந்தோம். வழியில் ஒரு DABA என்னும் பயணவழி உணவகத்தில் Tea சாப்பிட்டோம். Highway ஆக இருந்தாலும், சாலைகள் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருவதாலும், போக்குவரத்து அதிகம் உள்ள சாலை என்பதாலும் கவனமாகச் செல்ல வேண்டியிருந்தது.
🛕 11.30 மணி அளவில் ஓம்காரேஸ்வரர் இடம் அடைந்தோம்.
🕉️ஆலய தரிசனம்
🔱ஓம்காரேஸ்வரர் ஆலயம்
🛕 இந்த ஊர் சென்றவுடன் பேருந்து நிறுத்தும் இடத்திலிருந்து சுமார் 1 கி.மீ. தூரத்தில் நர்மதை நதியின் பாலம் சென்று அங்கிருந்து இவ்வாலயம் செல்லலாம்.
🛕நர்மதை நதியின் கிழக்குப் புறத்தில் ஒரு பெரிய நீர்த் தேக்கம் உள்ளது. இங்கிருந்து வெளியேறும் நீர்வழி இரண்டாகப் பிரிந்து, மந்தாதா மலைப் பிரதேசத்தைச் சுற்றி மீண்டும் சங்கமம் ஆகி செல்லுகிறது. இந்த பிரதேசம் ஓம் வடிவில் உள்ளது.
🛕தென் பகுதியில் செல்லும் நர்மதை ஆற்றின் மலைக்கரையில் ஓம்காரேஸ்வரர் ஆலயம் அமைக்கப்பட்டுள்ளது. தென்புறக் கரையில் மம்லேஸ்வரர் ஆலயம் உள்ளது.
🛕 வாகன நிறுத்தத்திலிருந்து, நர்மதை நதி கரை அருகில் செல்லும்போது, 3 வழிகள் உள்ளது.
🌟1வது மேற்கில் செல்லும் சாலையில் 200 மீ.தூரத்தில் மம்லேஸ்வர் ஆலயம் செல்லலாம்.
🌟2வது நேராக தொங்குபாலம் கீழ் பகுதியில் சென்றால், நர்மதை நதிக்கரையை அடையலாம்.
🌟3வது தொங்குபாலம் வழியாக நடந்து சென்றால் ஓம்காரேஸ்வரர் ஜோதிர்லிங்க ஆலயம் அடையலாம்.
🛕 முதலில், இந்த தொங்கு பாலத்திற்கு சென்று, பாலத்திலிருந்து ஒரு புறம் நர்மதை ஆற்றில் கட்டப்பட்டுள்ள நீர்த்தேக்கத்தையும், மறுபுறத்தில் நர்மதை நதியின் நீரோட்டம், மற்றும், மலைக்கரையில் உள்ள ஓம்காரேஸ்வரர் ஆலயம், தென் பகுதியில் உள்ள மம்லேஸ்வரர், மற்றும் அருகில் உள்ள ஆலயங்கள். படகுத்துறைகள் இவற்றைப் பார்த்துக்கொண்டு, தீவுப்பகுதியை அடைந்து ஓம்காரேஸ்வரர் ஆலயம் சென்றோம். பாலத்திலிருந்து இவ்விடங்களைப் பார்ப்பது நல்ல அனுபவமாக இருந்தது.
🛕ஆலயம் அடைந்ததும், ஆலயத்தின் அருகிலிருந்து கீழ்பகுதியில், சுமார் 50 படிகள் கீழே இறங்கி, பளிங்குபோன்ற நல்ல நீரால் படிகளைத் தொட்டு செல்லும் நர்மதையில் நீராடினோம். அருகில் திதி, தர்ப்பணம் செய்ய பண்டாக்களும் (பூசை செய்பவர்கள்) உள்ளனர்.
🛕நீராடிய பின், சில படிகள் மேல் ஏறினால், ஒரு குகைக் கோவில் இருந்தது.இதை ஆதிசங்கரர் குகை என்கிறார்கள்..
🛐ஆதி சங்கரரின் குகை –
🛕 சங்கரர் தனது குருவான கோவிந்த பகவத்பாதாவை ஒரு குகையில் சந்தித்த இடம் என்று கூறப்படுகிறது. ஆதி சங்கரரின் திருவுருவம் நிறுவப்பட்டுள்ளது. சிவன் கோவிலுக்கு சற்று கீழே இந்த குகை இன்றும் காணப்படுகிறது.
🛕 அருகில் உள்ள இந்தியில் உள்ள கல்வெட்டு சுருக்கம். தமிழில் ...
'காமகோடி பீட சேவா அறக்கட்டளை மற்றும் ஜகத்குரு ஆதி பகவத்பாத் ஸ்ரீ சங்கராச்சார்யா ஸ்ரீமத் கோவிந்த் பகவத்பாதாச்சார்யாவின் குகைக் கோயில் ஆகியவை ஸ்ரீ மத் ஜகத்குரு ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி மற்றும் ஸ்ரீமத் ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி மஹானால் புனரமைக்கப்பட்டுள்ளன. மத்தியப் பிரதேச முதல்வர் மாண்புமிகு ஸ்ரீ அர்ஜுன் சிங் அவர்களின் சிறப்பு முன்னிலையில், இது ஸ்ரீ சங்கராச்சாரியார் ஜெயந்தி விழா புனித நிகழ்வில் மீண்டும் பிரதிஷ்டை செய்யப்பட்டது.'
🛕இந்தக் குகை கோயில் உட்புறம் ஸ்ரீஆதிசங்கரர் சிலை மற்றும் புடை சிற்பமாக, ஓம்காரேஸ்வரரை வழிபட்டது, உள்ளது.
🛕உட்புறம் சில கல்தூண்களும், குகை போன்ற அமைப்பில் சில அருமையான பழமையான சிலைகளும் உள்ளன. மிகவும் புராதானமான ஆலயம் என்பதாலும் சிதைந்தும் உள்ளது. இருப்பினும் வடிவமைப்பு நுட்பங்கள் வியக்கவைக்கின்றது.
🛕குகையைவிட்டு வெளியில் வந்து மேலும், சில படிகள் ஏறி, ஜோதிர்லிங்க ஆலயம் அடைந்தோம்.
🛕ஆலயம் மலைப்பகுதியில் அமைந்துள்ளதால், மலைப்பகுதிகள் பலவற்றை சரி செய்து ஆலயம் எழுப்பப்பட்டுள்ளது.
🛕கருவரையின் மீது உயரக் கோபுரம் அமைந்துள்ளது. நில அமைப்பில் உள்ளது போல மிக தாராளமான இடவமைப்பு இல்லை. சுற்றுப் பிரகாரம் மற்றும் பல சன்னதிகள் மலை இடுக்குகளாக உள்ளன.
🛕முதலில், சுமார்,.3 அடி அமைப்பில் விநாயகர் புடை சிற்பமாக ஒரு சன்னதி போல அமைத்துள்ளனர்.
🛕இந்தப் பகுதியில் ஆலய அலுவலகம், கடைகளும், Cheppal Stand உட்பட வைத்துள்ளனர்.
🛕ஆலயம் தென்புறமாக உட்செல்ல வழி உள்ளது. முன் வெளி மண்டபம் அகலமாக இருந்தாலும், வரிசை இரும்புக்குழாய்த் தடுப்புகள் உள்ளன.
🛕தற்போது, இங்கிருந்து ஆலயம் உள்ளே சென்று சுவாமி தரிசித்து வெளியில் வரும் வரை இரும்புக்குழாய் வரிசை அமைக்கப்பட்டுள்ளது. (முதன்முறை நாங்கள் வந்த போது இப்படி இல்லை). இந்த வரிசை ஏற்பாடுகள் மூலம் ஆலயம் உள்ளே சென்று, சுவாமியைத் தரிசித்து வரலாம். Cellphone எடுத்துச் செல்வதில் கட்டுப்பாடுகள் இல்லாவிட்டாலும், கருவரைப் பகுதிகளில் மட்டும் புகைப்படம் எடுப்பதை நெறிப்படுத்த முயலுகிறார்கள்.
🛕முன் வெளி மண்டபத்தில், ஒரு அழகிய வெள்ளை பளிங்குக் கல்லால் ஆன நந்தியும், அதற்கு ஒரு சிறப்பான அழகிய வடிவமைப்பில் ஒரு கல் மண்டபமும் அமைக்கப்பட்டுள்ளது.
🛕இதற்கு அடுத்தபடியாக, ஆலய முன்மண்டபம் பிரமாண்டமான அளவில் பல்வேறு துண்கள் கொண்ட அமைப்பில் உள்ளது. மிக அழகிய, அற்புத கல் சிலைகள், தூண்கள், மற்றும், மண்டபத்தின் விதானங்களும். அமைந்துள்ளது மிக சிறப்பு.
🛕இதை அடுத்து கல்லால் செய்யப்பட்டுள்ள அழகிய முறையில் வடிவமைப்பில் உள்ள பெரிய நிலைப்படியைத் தாண்டினால், ஒரு குறுகிய அளவில் உள்ள நீள்சதுர வடிவில் உள்ள உள் மண்டபத்தில் கருவறை அமைந்துள்ளது. சுவாமி மேற்கு நோக்கிய சன்னதியும், நடுவில் பார்வதியின் சிலையும், உள்ளது.
🛕ஜோதிர்லிங்கமாகிய, ஓம்காரேஸ்வரர் சிறிய அளவில் உள்ளார். தரைப்பகுதியை ஒட்டி உள்ளார். லிங்கத்தின் மீது நீரைக் கொண்டு அபிஷேகம் செய்து கொண்டுள்ளார்கள். சுவாமிக்கு, நாகாபரணம் அமைத்துள்னர்.
🛕நாமே தனியாக நீர், பால், புஷ்பங்கள் கொண்டும் சுவாமி மீது ஊற்றி அபிஷேகம் செய்யலாம். அல்லது, பண்டாக்கள் மூலம், சிறப்பு வழி முறையில் (ரூ.50 முதல் கொடுத்து) சென்றும், நாமே அபிஷேகம் செய்யவும் அனுமதிக்கின்றனர்.
🛕கருவரை அகலம் மிகவும் குறுகியதாகவும், பக்தர்கள் கூட்டம் அதிகம் இருப்பதாலும், வரிசையாக சென்றுதான் தரிசனம் செய்ய வேண்டும். அங்குள்ளவர்கள் கூட்டத்தைக் கட்டுப்படுத்த முயற்சி செய்வதாலும், தள்ளுமுள்ளுகள் உண்டு.
🛕நாம் கவனமாக, பொறுமையாக நின்று கருவரை மாடத்தின் நடுவில் நன்றாகத் தெரியும், பார்வதி அம்மனையும், கீழ்புறத்தில் அமைந்துள்ள சுவாமியையும் பார்த்து தரிசிக்க வேண்டும்.
🛕சுவாமி தரிசித்து வெளியில் வந்ததும், மீண்டும் படிகள் கீழே இறங்கி, நதிக்கரைக்கு வந்தோம்.
🛕இங்கு படகுத்துறை உள்ளது. இந்தப் படகுகள் மூலம் நதியின் தென்புறம் உள்ள ஆலயங்கள் செல்ல முடிவு செய்தோம்.
🛕ஒரு படகில் சுமார் 20 பேர் அனுமதிக்கப்பட்டு அமரவைக்கப்பட்டு எதிர்கரை செல்லலாம். கட்டணம் நபருக்கு ரூ 20 மட்டும்.
🛕 எதிர் கரையில், (தென்கரையில்) சில புராதானமான ஆலயங்களும், புதிதாக கட்டப்பட்டுள்ள ஆலயங்களும் உள்ளன. எதிர் கரையில் உள்ள படகுத்துரைக்கு 5-10 நிமிடங்களில் வந்து சேர்ந்துவிடலாம்.வழியில், Boat லிருந்து நர்மதை ஆற்றின் தெளிவான நீரோட்டம், தூரத்தில் உள்ள அணைப்பகுதி முதல், தொங்குபாலம், மற்றும், மேற்கில் உள்ள நடைபாலம் வரை உள்ள கட்டிடங்கள், ஆலயங்கள் முதலியவைகள் கண் கொள்ளாக்காட்சியாக அமைந்துள்ளன.
🛕இதற்குப் பிறகு பலபடிகள் ஏறி நடந்து சென்றால், இந்தப் பகுதியில் உள்ள ஆலயங்களை தரிசிக்கலாம்.
🛕இந்தப்பகுதியில், ஏராளமான கடைகள் உள்ளன.
🛕வழியில், புராதானமான ஆலயங்கள் பல உள்ளன.
🛕🔱 ஸ்ரீமம்லேஸ்வரர் ஆலயம்
🛕நர்மதை நதியின் தென்கரையிலிருந்து சுமார் 50 மீட்டர் தூரத்தில் ஒரு மிக புராதானமான ஆலயமான ஸ்ரீமம்லேஸ்வரர் ஆலயம் உள்ளது.
🛕ஆலயம் ASI எனப்படும், இந்திய தொல்பொருள் ஆராய்ச்சித் துறையினரின் கட்டுப்பாட்டில் உள்ளது.
🛕கி.பி.10ம் நூற்றாண்டில், இவ்வாலயம் கட்டப்பட்டுள்ளதாகவும்,இவ்வாலயங்களை இந்தூர் ரானி அவர்களால் புனரமைக்கப்பட்டதாகவும் குறிப்பு உண்டு.
🛕ஆலயம் அமைப்பு :
சுவாமி மூலவர் மம்லேஸ்வரர் மேற்கு பார்த்த சன்னதி, சிறிய அமைப்பு நாம் கருவரை உள்ளே சென்று அபிஷேகம் செய்து தொட்டு வணங்கலாம். கருவரையில் உள்ள நடு மாடத்தில், ஓங்காரேஸ்வரர் கருவரை மாடம் போலவே பார்வதி சிலையும் உள்ளது.
🛕ஆலயத்தில் உள கருவரை உயர் கோபுர அமைப்பு. தனி முன்மண்டபம் வடக்கிலும், தெற்கிலும் நுழைவுப்பகுதி, கருவரை மேல்புறம் நந்தியம் பெருமாள் கருவரையை நோக்கி தனியே சிறிய மண்டபத்தில் உள்ளார்.
🛕ஆலயம் கருவரை சுற்றில் வடபுறம் ஒரு லிங்கமும், நந்தியும், வெட்டவெளியில், கருவறை கோமுகத்தை ஒட்டியுள்ளது.
🛕ஆலய கருவரைக் கோபுரம் மிகக் கம்பீரமான உயரம் உடையது. அற்புத சிலை அமைப்புகள் அமைந்துள்ளது.
🛕இதை அடுத்து தனியாக கிழக்குப் பார்த்த கருவரை கொண்ட சிவன் சன்னதியும் உள்ளது. இக்கருவரை யினுள் பலவிதமான சுவாமி சிலைகள், பழமையானதாகவும், சிதைந்தும் உள்ளது. மிகப்பழமையான கலை வடிவத்துடன் சிறிய நந்தியும் உள்ளே உள்ளது. இந்த சன்னதியும் உயர் கருவரைக் கோபுரம் உடையது.
🛕மிகப்பெரிய வளாகமாக, ஆலயம் இருந்து, பிறகு சிதைந்து அல்லது சிதைக்கப்பட்டு, பிறகு புனரமைக்கப்பட்டுள்ளது.
🛕இதையடுத்துள்ள சுற்றுப் பிரகாரத்தில், மூலவர் முன்பு இரண்டு மூன்று சிறிய சன்னதிகளும் உள்ளன.
#பயண_அனுபவக்_குறிப்புகள்🕊️
💥இங்கெல்லாம் Cellphone எடுத்துச் செல்வதில் கட்டுப்பாடுகள் இல்லாவிட்டாலும், கருவரைப் பகுதிகளில் மட்டும் புகைப்படம் எடுப்பதை நெறிப்படுத்த முயலுகிறார்கள்.
🛐மிக பிரமாண்டமாகவும், அழகிய நுட்பத்துடன் முழுவதும், கற்றளியால் ஆன ஆலயம், சிதைக்கப்பட்டும், மீண்டும் புனரமைக்கப்பட்டும் உள்ள நிலைமையைக் காணுகிறோம்.
🕉️இதுபோன்றே இந்துக்களின் ஆலயங்கள் பாரத தேசமெங்கும் பல இடங்களில் உள்ளது என்பதையும் நாம் எண்ணவேண்டியுள்ளது.
🛐இவ்வாலயங்களை தரிசித்துவிட்டு, நாங்கள் எங்கள் பேருந்து நின்ற இடத்திற்கு நடந்துவந்தடைந்தோம். சிலர் Auto மூலமும் வந்தார்கள்.
🔯இங்கிருந்து புறப்பட்டு, சற்று தூரம் சென்று, ஒரு பூங்காவில், பயண ஏற்பாட்டாளரால் தயாரிக்கப்பட்டு கொண்டு வந்த மதிய உணவை முடித்துக்கொண்டு, உஜ்ஜியினி புறப்பட்டோம்.
🛕11.10.2022 அன்று நம்முடைய பாரத பிரதமர் அவர்கள், உஜ்ஜியினி வந்திருந்து, ஆலய வளாகத்தில் புதியதாக கட்டப்பட்டுள்ள ஆன்மீக பூங்கவை திறந்துவைக்கும் பெருவிழா நடைபெற்றுக் கொண்டிருந்தது.இதனால், உஜ்ஜியினி நகர் முழுதும் அழகான மின் அலங்காரம் செய்யப்பட்டு, மிக பிரமாண்ட அளவில் ஜொலித்துக் கொண்டிருந்தது.
🛕நாங்கள் ஓங்காரேஸ்வரர் சென்று விட்டு உஜ்ஜியின் வரும் போது போக்குவரத்துக்கட்டுப்பாடுகள் கடுமையாக இருந்ததால், இரவு 12.00 மணி அளவில் உஜ்ஜியினியில் நாங்கள் தங்கியிருந்த Hotel GANGA வந்து அடைந்தோம்.
🛐பயணங்கள் தொடரும்....
11.10.2022
நன்றி🙇🏼♂️🙏
#என்றும்அன்புடன்
#சுப்ராம்_அருணாசலம்_காரைக்கால்
#ஜோதிர்லிங்கதரிசனம்
#ஜோதிர்லிங்கம்
#மத்தியப்பிரதேசம்
#ஓங்காரேஸ்வரர்
No comments:
Post a Comment