அகத்தீஸ்வரர் ஆலயம்
விடாராபுரம் - தாராபுரம் - வைப்புத்தலம்
தாராபுரம் அகஸ்தீஸ்வர சுவாமி கோயில் என்பது தமிழ்நாட்டில் திருப்பூர் மாவட்டம், தாராபுரம் என்னும் ஊரில் அமைந்துள்ள ஒரு சிவன் கோயில் ஆகும்.
இக்கோயில் மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்தது. இக்கோயிலுக்குத் தலவரலாறு உண்டு.
கோயில் அமைப்பு
இக்கோயிலில் அகஸ்தீஸ்வரர் சுவாமி, அகிலாண்டேஸ்வரி சன்னதிகளும், சனீஸ்வரர், காசி விஸ்வநாதர், விநாயகர், பாலதண்டாயுதபானி, பைரவர் உபசன்னதிகளும் உள்ளன. இங்குக் கோயில் கோசாலை உள்ளது. இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அல்லாத அறங்காவலர் அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது.
பூசைகள்
இக்கோயிலில் காமிகாகம முறைப்படி இரண்டு காலப் பூசைகள் நடக்கின்றன. மாசி, மார்கழி, ஆணி, புரட்டாசி, ஐப்பசி, ஆடி, மாதம் முக்கிய திருவிழா நடைபெறுகிறது.
தாராபுரம் அகஸ்தீஸ்வரர் கோவில் வரலாறு:-
பராந்தசுபுரம் என்றும் இராஜபுரம் என்றும் விராடபுரம் என்றும் பெயர்கொண்டு விளங்கும் தாராபுரம் நகர் சரித்திர புகழ் பெற்ற ஸ்தலமாகும். இந்நகரில் அமராவதி நதிக்கரையில் (ஆண் பொருணை நதி) கோவில் கொண்டு அருள் பாலித்து வரும் அருள்மிகு அகஸ்தீஸ்வரர் ஆவார்.
முன்பு ஒரு காலத்தில் பார்வதி தேவியார் திருமண நாளில் பிரம்மா, திருமால் முப்பத்தி முக்கோடி தேவர்கள்
முதல் யாவரும் மேரு மலையில் ஒன்று சேர்ந்தார்கள். சுமை ஏறிய மேரு மலையின்; வடதிசை இறங்கியது. இதனால் தென்புலி மேல் எழுந்தது. பூமியை சமநிலை ஆக்க சிவபெருமான் அகஸ்தியரை தென் மலையான பொதிகைக்கு செல்லுமாறு கட்டளையிட்டார். அகஸ்தியரும் பொதிகை மலை செல்லும் வழியில் உள்ள கொங்கு நாடான தாராபுரத்தில் அமராவதி நதிக்கரையில் தங்கினார்.
தினசரி ஒவ்வொரு நாளும் ஆர்மாத்த பூஜையை தங்கும் ஊர்களில் நடத்தி வந்தார். அச்சமயத்தில் அமராவதி ஆற்றங்கரையில் தன்னுடைய பூஜைக்கு உரிய சிவலிங்கத்தை காசியில் இருந்து சீடர்கள் கொண்டு வருவதற்கு தாமதம் ஏற்பட்டு விட்டதால் சிவ பூஜையை முடிக்க தன்னுடைய திருக்கரங்களால் அமராவதி புனித நீரின் மணலை பிடித்து வைத்து பூஜித்தார். ஆகவே அதற்கு ஸ்ரீஅகஸ்தீஸ்வரர் என பெயர் வர காரணமாயிற்று. மேலும் தனது சீடர்கள் காசியில் இருந்து லிங்கத்தை தாமதமாக எடுத்து வந்ததால் இவர் பிடித்து வைத்த லிங்கமே மூலஸ்தானம் ஆகியது. சீடர்கள் கொண்டு வந்த லிங்கம் வலது பக்கம் காசி விஸ்வநாதர் என்ற பெயரில் பிரதிஷ்டை செய்யப்பட்டது.
மேலும் மகாபாரத புராண கதையில் அஞ்ஞான வாசம் பாண்டவர்கள் இவ்வூரில் தங்கி வழிபட்டனர். இத்திருக்கோயிலானது மூர்த்தி தீர்த்தம் ஸ்தலம் ஒருங்கே அமைந்தது.
இக்கோவிலை புத்தூர் திருமலைசாமி பகவான் போன்றோர் வழிபட்டுள்ளனர். இக்கோவிலின் ஸ்ரீஅகிலாண்டேஸ்வரி சமேத ஸ்ரீ அகஸ்தீஸ்வரர் மனம் உருகி பிரார்த்தனை செய்தால் திருமண தடை, வேலைவாய்ப்பு, புத்திர தோஷம் மற்றும் சித்த பிரமை தோஷம் நிவர்த்தி ஆகும். சுகல ஷேமங்களும் பெறுவார்கள். புண்ணிய நதியாகிய அமராவதியல் நீராடி தரிசனம் செய்தால் சகல நன்மைகளும் அடைவர்.
5.09.2026
5.9.26 #சுப்ராம்தரிசனம்
#என்றும்அன்புடன்
#சுப்ராம்அருணாசலம்காரைக்கால்
#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று
#ஆன்மீகபாரதம்அகிலத்தின்சிகரம்
https://www.facebook.com/share/p/1ByLj8aQh8/
Check out this review of Easwaran Temple on Google Maps
https://goo.gl/maps/vwCZ2JjKtj8unKLB6?g_st=ac
Check out this review of Easwaran Temple on Google Maps
https://goo.gl/maps/66XhwcPnpn9s955j9
No comments:
Post a Comment