9.10.2022 முதல் 12.10.2022 வரை💫
#பயண_அனுபவக்_குறிப்புகள்🕊️
பதிவு - 1
#ஜோதிர்லிங்கதரிசனம்
🛕#ஜோதிர்லிங்கங்கள்
சோதிலிங்கம் (Jyotirlinga) என்பது இந்துக் கடவுளான சிவனை வணங்குவதற்குரிய வடிவங்களுள் ஒன்று. இது ஒளிமயமான லிங்கம் என்னும் பொருள் தருவது.
இந்தியாவில் 12 சோதிலிங்கத் திருத்தலங்கள் உள்ளன. திருவாதிரை நட்சத்திர நாளில் சிவன் தன்னை சோதிலிங்க வடிவில் வெளிப்படுத்தியதாக இந்துக்கள் நம்புகிறார்கள். இதனால் திருவாதிரை நாள் சோதிலிங்கத்தை வணங்குவதற்கு உரிய சிறப்பு நாளாகக் கருதப்படுகிறது.
🛕ஜோதிர்லிங்கங்களில் சிவன் ஜோதிமயமாக உள்ளார். இதனால் சிவன் ஒளியின் வடிவமாகிய நெருப்பாக தோன்றிய இடங்கள் ஜோதிர்லிங்க சிவாலயங்கள் எனப்படுகின்றன.
🛕இந்து புராணங்களின்படி, சிவபெருமானிற்கு 64 வடிவங்கள் உள்ளன. அவற்றை ஜோதிர்லிங்கங்களுடன் ஒப்பிட்டு குழப்பமடையக்கூடாது. பன்னிரண்டு ஜோதிர்லிங்க தலங்கள் ஒவ்வொன்றும் தலைமை தெய்வத்தின் பெயரை எடுத்துக்கொள்கின்றன. ஒவ்வொன்றும் சிவனின் வெவ்வேறு வெளிப்பாடாக கருதப்படுகின்றன. இந்த எல்லா தலங்களிலும், முதன்மை உருவம் சிவனின் எல்லையற்ற தன்மையைக் குறிக்கும். தொடக்கமற்ற மற்றும் முடிவில்லாத ஸ்தம்ப தூணைக் குறிக்கும் லிங்க வடிவம் ஆகும்.
🛕 சிவ மஹாபுரானத்தின் கூற்றுப்படி , ஒரு காலத்தில் பிரம்மாவும், விஷ்ணுவும், படைப்பின் மேலாதிக்கத்தின் அடிப்படையில் ஒரு வாதத்தை கொண்டிருந்தனர். அவர்களைச் சோதிக்க, சிவன் மூன்று உலகங்களையும் ஒரு பெரிய முடிவற்ற ஒளித் தூணாக, ஜோதிர்லிங்கமாகத் துளைத்தார் . இரு திசைகளிலும் ஒளியின் முடிவைக் கண்டறிய விஷ்ணுவும் பிரம்மாவும் முறையே கீழ்நோக்கி மற்றும் மேல்நோக்கி தங்கள் வழிகளைப் பிரித்தனர். பிரம்மா தான் முடிவை கண்டுபிடித்ததாக பொய் சொன்னார், விஷ்ணு தனது தோல்வியை ஒப்புக்கொண்டார். சிவன் ஒளியின் இரண்டாவது தூணாகத் தோன்றி, பிரம்மாவுக்கு விழாக்களில் இடமில்லை என்று சபித்தார், அதே நேரத்தில் விஷ்ணு நித்தியத்தின் இறுதி வரை வணங்கப்படுவார்.
🛕 இவ்வாறு சிவன் தீபமாகத் தோன்றிய இடங்கள். முதலில் 64 ஜோதிர்லிங்கங்கள் இருப்பதாக நம்பப்பட்டது, அவற்றில் 12 மிகவும் மங்களகரமானதாகவும் புனிதமானதாகவும் கருதப்படுகிறது. பன்னிரண்டு ஜோதிர்லிங்கத் தலங்களில் ஒவ்வொன்றும் முதன்மைக் கடவுளின் பெயரைப் பெறுகின்றன – ஒவ்வொன்றும் சிவனின் வெவ்வேறு வெளிப்பாடாகக் கருதப்படுகின்றன. இந்தத் தலங்கள் அனைத்திலும் , சிவனின் எல்லையற்ற தன்மையைக் குறிக்கும்.
🛕 பொதுவாக சோதிலிங்கத்துக்கும், பிற லிங்கங்களுக்கும் இடையே எவ்வித தோற்ற வேறுபாடுகளும் தெரிவதில்லை. எனினும், உயர்ந்த ஆன்மீக நிலையை அடைந்தவர்கள் புவியைத் துளைத்துக் கிளம்பும் தீப்பிழம்பாக சோதிலிங்கத்தைக் காண்பார்கள் என்பது இந்துக்களின் நம்பிக்கை.
🛕இந்தியாவில் உள்ள சோதிர்லிங்கங்கள்..
1. கேதாரீஸ்வரர், இமயமலைக்கோவில், கேதர்நாத், உத்ராஞ்சல்.
2. விஸ்வேஸ்வரர், நதிக்கரைக் கோவில் (கங்கை நதிக்கரை) வாரணாசி உத்திரபிரதேசம்
3. சோமநாதேஸ்வரர் கடற்கரைத்தலம் (அரபிக் கடற்கரை) சோமநாதம் குஜராத்
4. மகா காளேஸ்வரர் நதிக்கரைக் கோவில் (சிப்ரா நதிக்கரை), உஜ்ஜயினி மத்திய பிரதேசம்
5. ஓங்காரேஸ்வரர் நர்மதை நதிக்கரையில் அமைந்துள்ள மலைக்கோவில் இந்தூர் மத்திய பிரதேசம்
6. திரியம்பகேஸ்வரர் நதிக்கரைக் கோவில் (கோதாவரி நதிக்கரை) நாசிக் மகாராஷ்டிரம்
7. குஸ்ருணேஸ்வரர் ஊரின் நடுவே அமைந்த தலம் ஓளரங்கபாத் மகாராஷ்டிரம்
8. நாகநாதேஸ்வரர் தாருகாவனம் காட்டுத்தலம் ஓளண்டா மகாராஷ்டிரம்
9. வைத்தியநாதேஸ்வரர் ஊரின் நடுவே அமைந்த தலம் பரளி மகாராஷ்டிரம்
10. பீமசங்கரர், பீமா நதி உற்பத்தியாகும் இடம், மலைக்கோவில், பூனா, மகாராஷ்டிரம்
11. மல்லிகார்ஜுனர், கிருஷ்ணா நதி, மலைக்கோவில் ஸ்ரீ சைலம் ஆந்திர பிரதேசம்.
12. இராமேஸ்வரர், கடற்கரைத்தலம் (வங்காள விரிகுடா) தமிழகம்.
🛕 இந்தியாவில் உள்ள மத்திய பிரதேச மாநிலத்தில் உஜ்ஜியினியில் உள்ள ஸ்ரீ மகாகாளேஸ்வரர், ஸ்ரீ ஓம்காரேஸ்வரர் மற்றும் மகாராஷ்ட்ரா மாநிலத்தில் உள்ள 5 ஜோதிர்லிங்கங்கள், அஷ்ட்ட கணபதி ஆலயங்கள், மற்றும் புராண சிறப்புவாய்ந்த சில புன்னிய தலங்களை சென்று தரிசனம் செய்யும் வாய்ப்பு எங்களுக்கு மீண்டும் இவ்வருடம் கிடைத்தது.
🛕 இந்த தலங்களுக்குச் சென்று வந்த அனுபவக் குறிப்புகளை பகிர்ந்து கொள்கிறேன். தாங்கள் இத்தலங்களுக்கு செல்லும் போது இவை உதவலாம்.
🛐பயணங்கள் தொடரும்....
நன்றி🙇🏼♂️🙏
#ஜோதிர்லிங்கதரிசனம்
#என்றும்அன்புடன்
#சுப்ராம்_அருணாசலம்_காரைக்கால்
#ஜோதிர்லிங்கம்
#மத்தியப்பிரதேசம்
No comments:
Post a Comment