Monday, November 28, 2022

உஜ்ஜியினிஆலயங்கள்💫12.10.2022 பதிவு. 4 Shaktipeeth Shri Gadhkalika Mata Temple,

#பயணஅனுபவக்குறிப்புகள்🕊️
#உஜ்ஜியினிஆலயங்கள்💫
12.10.2022
பதிவு. 4
9. Shaktipeeth Shri Gadhkalika Mata Temple, 

#GADHKALIKADEVIMANDIR
#காட்காளிகாமாதாஆலயம்.
 (பிரார்த்தனை ஸ்தலம்)

🛐ஸ்ரீ கட்கலிகா ஆலயம் என்று பாரம்பரியமாக அறியப்படுகிறது.

🛐காலத்தினால் அழியா காவியம் படைத்த கவிச்சக்கரவர்த்தி காளிதாசர். விக்ரமாதித்யனின் நவரத்தினத்தின் முக்கிய ரத்தினங்களில் ஒன்றான காவியமான  சகுந்தலம் படைத்தவர் மகாகவி காளிதாசர், இவர் வணங்கி அருள் பெற்றதலம். மிகவும் புராதானமான ஆலயம். 

🛐கவி காளிதாசர் விக்கிரமாதித்திய அரசவையில் பெரும் புலவராக இருந்தவர். சாகுந்தலம், மேகதூதம், முதலிய நூல்கள் இயற்றிய பாரதத்தின் புகழ் பெற்ற கவிஞர்.

🛐கருவரை மண்டபத்தையும், கருவரையையும் நோக்கி காளியின் வாகனமான அழகிய ஒரு சிங்கம் சிலை வைத்து சிறிய மண்டபத்துடன் உள்ளது.

🛐இவ்வாலயம் சிதைந்துவிட்டிருந்து மீட்டு புதிய அமைப்பில் கட்டி வழிபாடுகள் நடைபெற்று வருகிறது. சிறிய ஆலயம்.

 🔮ஒரு பெரிய உயரமான மண்டபமும், ஒரு கருவறையும் உள்ளது. கருவறையில் காளிமாதாவின் பெரிய முக உருவம் உள்ளது. உயரமான சற்றுப் பெரிய முன்மண்டபத்தில் இருந்து தரிசனம் செய்யலாம்.  

🔮ஒரே சுற்றுப் பிரகாரம். உயரமான  கல்விளக்குத் தூன் ஒன்றுள்ளது.

🛐செங்கற்கள் மற்றும் கிமு முதல் நூற்றாண்டின் ஏராளமான பகுதிகள். கோயிலின் அடித்தளத்தில் இருந்து மீட்கப்பட்டது. பேரரசர் ஹர்ஷவர்தன் இந்த கோவிலை புதுப்பித்துள்ளார்.

🛐சங்க (Shung)காலம், கிமு முதல் நூற்றாண்டு, குப்தர் காலம், நான்காம் நூற்றாண்டு மற்றும் பர்மர் காலம், பத்தாம் மற்றும் பன்னிரண்டாம் நூற்றாண்டுகளில் சிலைகள் மற்றும் அடித்தளங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

 🛐ஏழாம் நூற்றாண்டில் பேரரசர் ஹர்ஷவர்தன் இந்த கோவிலை புதுப்பிக்கின்றார். பர்மர் ஆட்சி பத்தாம் நூற்றாண்டில் செய்யப்பட்ட கற்கோவில் பகுதிகள் மறுசீரமைப்பில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. 

🛐20 ஆம் நூற்றாண்டில், பாரம்பரிய பூசாரி ஸ்ரீ சித்நாத்ஜி மகராஜ் விக்ரம் சம்வத் 1944 இல் புதுப்பித்தார்.

🛐ஆலயத்தினைப் பற்றிய குறிப்பு விபரங்களும் தனியே எழுதி வைத்துள்ளனர். ஏராளமான பக்தர்கள் வந்து வணங்கி அருள் பெற்று செல்கின்றனர். 

🛐உஜ்ஜியினில் தரிசிக்க வேண்டிய முக்கிய இடங்களில் இதுவும் ஒன்று.

இதன் அருகில் உள்ள மற்ற இரண்டு ஆலயங்கள்:
Shree Vaibhav Mahalakshmi mandir

🛐இந்த ஆலயம் மகாலெட்சுமியை மூலவராகக் கொண்டது. பெரிய உருவத்தில் அமைந்தது. இந்த ஆலயமும், காளி ஆலயம் மிக அருகில் உள்ளது.

Sri Sethiman Ganesh temple
🛐இது சீதா, ராமரால் பிரதிஸ்டை செய்யப்பட்ட கணபதி ஆலயம். ஷிப்ரா நதி அருகில் உள்ளது. காளி ஆலயம் அருகில் இருக்கிறது. சிறிய ஆலயம். கணபதி மூலவர்.

மீள் தரிசனம்.

12.10.2022
#பயணஅனுபவக்குறிப்புகள்🕊️
#உஜ்ஜியினிஆலயங்கள்💫

🛐பயணங்கள் தொடரும்....

நன்றி🙇🏼‍♂️🙏

#என்றும்அன்புடன் 
#சுப்ராம்அருணாசலம்_காரைக்கால் 

#ஜோதிர்லிங்கதரிசனம்2022
#ஜோதிர்லிங்கதரிசனம்
#மகாகாளேஸ்வரர் #உஜ்ஜியினிஆலயங்கள்
#ஜோதிர்லிங்கம்
#உஜ்ஜியினி , #மத்தியப்பிரதேசம்
🛕#மகாகாலேஸ்வரர்ஆலயம்

Saturday, November 26, 2022

பயணஅனுபவக்குறிப்புகள்🕊️ #உஜ்ஜியினிஆலயங்கள்💫பதிவு - 3 #Bhartriharicaves - பர்த்திரிஹரிகுகைகள்

#பயணஅனுபவக்குறிப்புகள்🕊️ 
#உஜ்ஜியினிஆலயங்கள்💫
பதிவு - 3

8. #Bhartriharicaves#பர்த்திரிஹரிகுகைகள் :
12.10.2022
✨BHATRIHARI CAVES: 'சிப்ராநதியின் ஓரத்தில் இரண்டு குகை ஆலயங்கள் உள்ளன.

✨விக்கிரமாதித்திய ராஜாவின் மூத்த சகோதரர். பர்த்திரிஹரி என்பவர். இவர் மகாராஜாவாக இருந்தவர். இவரின் குருநாதர் குருகோரக்ஷ்நாத் என்பவரால் ஞானம் பெற்றவர். 

 பர்த்திரிஹரி மகாராஜா தன் அரசு பதவியை துறந்து துறவியாகி இங்குள்ள குகையில் 12 ஆண்டுகள் இருந்து கொண்டு கடும் தவம் செய்து முனிவர் ஆனார். 

இவர் யோகம், மற்றும், அஷ்ட்டமாசித்து எனப்படும் முனிவர்களின் நிலை அடைந்தவர்.

இவர் பல சமஸ்கிருத நூல்களைப் படைத்துள்ளார்.
 
✨நுழைவுப்பகுதியின் முன்மன்டபத்தில் ஒரு ஆஞ்சனேயர் சன்னதி உள்ளது. அதை அடுத்து குகைக் கோவில்கள் செல்ல, ஒரு கோபுரநுழைவுவாயில், தமிழ்நாட்டு கோபுர அமைப்பில் உள்ளது.

இதை அடுத்து சிறு குகைகளின் மன்டபம், அடுத்துள்ளது. குகைப் பகுதிகள்.
 
✨இரண்டு தனித்தனி குகைகள்.
குகைக்குள் செல்ல மிக சிறிய பாதை
மிகவும் குனிந்து, செல்லவேண்டும்.

வயதானவர்கள் நிதானித்தும், கவனமாகவும் உள்ளே செல்வது நல்லது.

✨முதல் குகை நுழைவுப்பாதையில் உள்ளே சென்றால், ஒரு பெரிய மண்டபம் அதன் உட்பகுதிகளில் சிறு சிறு அறைகள் அவற்றில் காலபைரவர், சிவலிங்கங்கள் உள்ளன.

 ஒரு சிறிய குறுகிய பாதையில் சென்றால் இன்னும் குறுகிய நுழைவு படியில் இறங்க மிகவும் குனிந்து நுழைந்து செல்ல வேண்டியது உள்ளது. உள்ளே சென்றதும், உட்புறபகுதிகளிலும், ஒரு சிறிய மன்டபமும், அடுத்தடுத்து குகை அறைகளும் உள்ளன. 

ஒரு குகை அறையில் ஆதேஷ் என்ற முனிவர் என்றும், இன்னொரு குகை அறையில், மகாயோகி மத்ஸ்யேந்திரநாத் என்பவரின் திருவுருவசிலையும் உள்ளது.

மகாயோகி மத்ஸ்யேந்திரநாத் இவரே பர்த்திரிஹரி மகாராஜாவாகும்.

✨இரண்டாவது குகை கோபிசந்குகை:
எனப்படுகிறது இங்கும் முதல் குகை போல ஒரு மண்டபம், ஒரு நீண்ட வழிமுடிவில் குகை அறைகளில், மகாகாளி, சிவலிங்கம் உள்ளது.

✨ஒவ்வொரு குகைகளாக உள் சென்று வர வேண்டும். மிகவும் , வயதானவர்கள், உடல் முடியாதவர்கள், இந்த குகைப்பகுதிக்கு உள்ளே சென்று பார்க்க விரும்புவதில்லை. உள்ளே நுழைந்து உட்படிகளில் இறங்க அவர்கள் உடல்நிலை காரணமாக ஒத்துழைக்க முடிவதில்லை எனவே, வெளியில் நின்றுவிடுகிறார்கள். 

இந்த குகைப் பகுதிகளைக் கடந்துவந்தால், அடுத்து, மேல்புறத்தில் பெரிய வளாகம் உள்ளது.
 
✨இந்த வளாகத்தின் ஒரு பகுதியில்,
குரு கோரக்ஷ்நாத் கோவில் அமைந்துள்ளது.
12.10.2022

#பயணஅனுபவக்குறிப்புகள்🕊️
#உஜ்ஜியினிஆலயங்கள்💫
குரு கோரக்ஷ்நாத் கோவில்:

✨பர்த்திரிஹரி முனிவரின் குருநாதரான குருகோரக்ஷ்நாத் அவர்களுக்கான ஆலயம். இது சற்று பெரிய ஆலயம் . பெரிய மண்டபத்துடன் கூடிய, உயர்கோபுர கருவரை அமைப்பில் உள்ளது. 

✨குரு கோரக்ஷ்நாத் கோவில் 12/02/2009 ல் இவ்வாலயம் புனரமைப்பு செய்து பிரதிஷ்டை செய்துள்ளனர்.

இதற்கு ஒரு அழகிய பெரிய முன்மண்டபமும் அதையடுத்து உள்பகுதியில், பல்வேறு முனிவர்கள், ரிஷிகள் பளிங்கு சிலைகளும் உள்ளனர், கருவரை மண்டபமும் உள்ளது. கருவரையில், முனிவர் கோரக்ஷநாதர் உள்ளார்.  

✨ஆலயம் வெளியில் ஒரு பெரிய கோசாலையும் உள்ளது. தனியார் Trust மூலம் நிர்வாகம் செய்யப்பட்டு வருகிறது. 

✨உஜ்ஜியினியின் முக்கிய இடங்களில் இதுவும் ஒன்று.
தரிசனம் : ஏற்கனவே ஒரு முறையும் 10.03.2021 சிவராத்திரி அன்றும், மற்றும் 12.10.2022ல் தரிசனம் அமைந்தது.

12.10.2022
🛐பயணங்கள் தொடரும்....
நன்றி🙇🏼‍♂️🙏

#என்றும்அன்புடன் 
#சுப்ராம்அருணாசலம்_காரைக்கால் 

பதிவு : 2 - உஜ்ஜியின் ஆலயங்கள்: LINK
https://m.facebook.com/story.php?story_fbid=8455635961178253&id=100001957991710

#ஜோதிர்லிங்கதரிசனம்2022
#ஜோதிர்லிங்கதரிசனம்
#மகாகாளேஸ்வரர் #உஜ்ஜியினிஆலயங்கள்
#ஜோதிர்லிங்கம்
#உஜ்ஜியினி , #மத்தியப்பிரதேசம்
🛕#மகாகாலேஸ்வரர்ஆலயம்

Friday, November 25, 2022

உஜ்ஜியின் ஆலயங்கள் - பதிவு - 2 - ஹர்சித்தி மாதா, ராம் Temple, விக்கிரமாதித்தியர் ஆலயம்

உஜ்ஜியின் ஆலயங்கள் - பதிவு - 2

#பயணஅனுபவக்குறிப்புகள்🕊️ 
#உஜ்ஜியினிஆலயங்கள்💫
பதிவு - 2

5. ஹரஸித்தி மாதா கோயில் (உச்சினி மாகாளி):
12.10.2022

🌺மகாகாளேஸ்வரர் ஆலயத்திலிருந்து சுமார் 1 கிமீ. மேற்குப் புறத்தில் உள்ளது. பிரதான ஆலயம் தரிசித்து விட்டு நடந்தே வரலாம், சாலை நடுவில்  ஒரு சிங்கம் உருவ பெரிய சிலை வைக்கப்பட்டுள்ளது.

 அதிலிருந்து வடக்கில் பிரியும் சாலையில் 50 அடி தொலைவில் கிழக்குப் பார்த்து அமைந்துள்ள ஆலயம். இது ஒரு முக்கிய ஆலயம். 

சக்தி பீடத்தில் ஒன்று. பார்வதிதேவியின் முழங்கை வீழ்ந்த இடம். 

இராஜகோபுரம் இல்லாவிட்டாலும், உள்நுழைவுப் பகுதி வாசல் பகுதியில் அழகிய சிலைகள் வைக்கப்பட்டுள்ளன.

சாலையிலிருந்து, சுமார் 10 படிகள் ஏறினால் பெரிய வெளி மன்டபம்.
இரண்டு கல்தூன்கள். ஆலய வளாக உள் முன் பகுதியில்,  அமைந்துள்ள. 

 ஹரசித்தி மாதா ஆலயம் 6 அடி உயரம் உடையது.  ஒரு சிறியமுன்மண்டபம், அடுத்துள்ள கருவரையில் அம்பாள் கிழக்கு நோக்கி அருள்பாலிக்கும் வகையில் அமைப்புள்ளது. முன்புறம் அழகிய ஒரு சிங்கம் உள்ளது. கருவரை உயரக் கோபுர அமைப்பில் உள்ளது. கருவரை மண்டபம்  சுற்றி வரலாம்.

🛕கார்கோடேஸ்வரர் ஆலயம் :

💥ஒரு கார்கோடேஸ்வரர் சிவன் ஆலயம் தனியே அம்பாள் ஆலய சன்னதியை, ஒட்டியவாறு இடது புறத்தில் இணைந்து உள்ளது. இது ஒரு முன்மண்டபம் அதில் ஒரு அழகிய சிறிய நந்தி. கிழக்குப் பார்த்த கருவரையில் சிவன் உள்ளார். 

🛕பாதாள காளி / பைரவி சன்னதி:

🌟விக்கிரமாதித்தன் தலையை வெட்டி பலி கொடுக்க முற்பட்ட இடம் என்கிறார்கள். பாதாள பைரவி சன்னதி, இவ்வாலய ஈசான பகுதியில் உள்ளது.  
பாதாள காளியை /பைரைவியை பக்தர்கள் தரிசனம் செய்ய மேல்பகுதியில் உள்ள  சிறிய மன்டபத்தின்  3 சிறு துளைகள் மூலம் மட்டுமே வணங்க முடியும்.  கீழே சென்று பூசை செய்ய தனிபடிகள் அமைப்பு உள்ளது. பக்தர்கள் உள்ளே இறங்க அனுமதி கிடையாது.
 விக்கிரமாதித்த மகாராஜா வணங்கி அருள் பெற்ற இடம்.

💥மேலும் ஈசானத்தில் தனியாக ஒரு சிறிய விநாயகர் மேற்கு நோக்கிய சன்னதியும் உள்ளது. 

💥ஆலய வளாகத்தின் முன் பகுதியில், சுமார் 30 அடி உயரத்திற்கு கல்தூண்கள் இரண்டு அமைந்துள்ளது.  மாலையில் இரண்டு கல்விளக்குத் தூண்களிலும்  விளக்குகள் ஏற்றப்படும் காட்சி அற்புதம்.

💥சிறிய ஆலயமாக இருந்தாலும் தூய்மையாகப் பராமரிக்கின்றனர்.
முன்பதிவு 
https://m.facebook.com/story.php?story_fbid=5428428250565721&id=100001957991710

💥உஜ்ஜியினியின் மிக முக்கியமான ஆலயங்களில் இதுவும் ஒன்றாகும்.
12.10.2022
#பயணஅனுபவக்குறிப்புகள்🕊️
#உஜ்ஜியினிஆலயங்கள்💫

6. Shri Ram Mandir, Patidar Samaj
Shree Rudreshwar Mahadev
12.10.2022

🍀உஜ்ஜினியின் முக்கிய ஆலயங்களில் ஒன்றான, ஹர்சித்தி மாதா ஆலயம் அருகில் வடக்குப்புறத்தில் பெரிய ஒரு ராம் மந்தீர்  உள்ளது.  அதன் அருகில் சிறிய ருத்திரேஸ்வரர் ஆலயம் உள்ளதும் சிறப்பு.

SRI RAM TEMPLE

🍀ஷிப்ரா நதி செல்லும் வழியில் அருகில் உள்ள ராம் மந்திர். மிகப் பெரிய கட்டிடத்தில் அமைந்துள்ளது. மூலஸ்தானத்தில் ராம லெட்சுமண சீதா பளிங்கு உருவங்கள், மற்றும்  பல் வேறு சுவாமி உருவங்கள் வைக்கப்பட்டு Patidar Samaj என்பவர்களால் பராமரிப்பில் உள்ளது.
🍀ஹரிசித்தி மந்திர், விக்கிரமாதித்யர், ஆலயங்கள் வரிசையில் மிக அருகில் உள்ளது.

🌺வீதி முனையில் மிகப்பழமையான சிறிய லிங்க வடிவத்தில் ஸ்ரீ ருத்ரேஸ்வர மகாதேவர் மிகச்சிறு ஆலயம் ஒன்றும் அமைந்துள்ளது.

12.10.2022
#பயணஅனுபவக்குறிப்புகள்🕊️
#உஜ்ஜியினிஆலயங்கள்💫

7. #விக்ரமாதித்யர்ஆலயம்

🌸பாரதம் மறக்கமுடியாத இந்து அரசர்களில் இவரும் ஒருவர், வீரம், தயாளம், மதிநுட்பம் உடைய அரசர்.
உஜ்ஜயினியை மிகச்சிறப்பாக ஆண்ட புகழ் பெற்ற அரசர் விக்கிரமாதித்தியர்.

 🔥தன் தலையை பக்தியால் வெட்டிக்கொண்டவர். விக்ரமாதித்தியர் அரசர் சிலைகள் உள்ள ஆலயங்கள் இரண்டு உள்ளன. ஒன்று, மிகப்பழைய ஆலயம். 

🌼ஸ்ரீ ஹரிசித்தி மாதாவை பிரதானமாக வழிபட்ட விக்ரமாதித்தியருக்காக
ஹரிசித்தி மாதா ஆலயத்தின் வடக்குப் பிரகாரத்தில் பிரியும் நேர் பாதையில் செல்ல வேண்டும்.  

🌼ஒரு பெரிய கட்டிடத்தில் (ஆலய அமைப்பில்) மிகப்பெரிய விக்கிரமாதித்த அரசர் அரசவையில் உள்ளது போல் அமைத்துள்ளார்கள். அரச சபையில் இருந்த அனைத்து பட்டி, மந்திரிகள், 32 பதுமைகள், எல்லோரும் அவர் கீழ் அமர்ந்து சபை நடத்துவது போல உள்ளது. நாம் அச்சிறிய சாலையில் நின்றே தரிசிக்க வேண்டும். வேதாளம், விக்கிரமாதித்தன் கதை, 32 பதுமைகள் எல்லாம் நினைவுக்கு வந்தது.

🌼நவீனமான மற்றொரு ஆலயம்;
ருத்ர சாகர ஏரியில் ஒன்று புதியதாக அமைக்கப்பட்டுள்ளது.  பிரம்மாண்டமான சிம்மாசனத்தில் அமர்ந்த பெரிய விக்கிரமாதித்திய அரசர் சிலை அற்புதமாக காட்சியளிக்கிறது. 
ஆன்மீக  சுற்றுலா வருகையை அதிகப்படுத்தும் விதமாக இந்த ஏரியினை அழகுபடுத்தியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

12.10.2022
#பயணஅனுபவக்குறிப்புகள்🕊️
#உஜ்ஜியினிஆலயங்கள்💫
பதிவு - 1 LINK.
https://m.facebook.com/story.php?story_fbid=8444319635643219&id=100001957991710

🛐பயணங்கள் தொடரும்....
நன்றி🙇🏼‍♂️🙏

என்றும் அன்புடன்
சுப்ராம்.அருணாசலம்_காரைக்கால்

#ஜோதிர்லிங்கதரிசனம்2022
#ஜோதிர்லிங்கதரிசனம்
#மகாகாளேஸ்வரர் #உஜ்ஜியினிஆலயங்கள்
#ஜோதிர்லிங்கம்
#உஜ்ஜியினி , #மத்தியப்பிரதேசம்
🛕#மகாகாலேஸ்வரர்ஆலயம்

Tuesday, November 22, 2022

உஜ்ஜியினி ஆலயங்கள். 1 பயன அனுபவக்குறிப்புகள் 12.10.2022

#உஜ்ஜியினிஆலயங்கள்💫
#பயணஅனுபவக்குறிப்புகள்🕊️

#உஜ்ஜியினிஆலயங்கள்
♻️ உஜ்ஜியினி பெருநகரம் சார்ந்துள்ள கோயில்கள்: 

💥உஜ்ஜியினி,  பாரதத்தின் முக்கிய ஆன்மீக பெருநகரம்; ஏராளமான  புராதானமான ஆலயங்கள் நிறைந்த அற்புத தலம்.  ஜோதிர்லிங்கம் உள்ள மகாகாளேஸ்வரர் ஆலயம் பெரிய வளாகப் பகுதி, ருத்தர சாகர் ஏரிக்கரையில் உள்ளது. சுற்றிலும் சில முக்கிய புராதான ஆலயங்களும், புதிய ஆன்மீக ஆலயக் கட்டிடங்களும்,  கட்டப்பட்டுள்ளது.
மூன்று முறை உஜ்ஜயினி சென்றுள்ளோம்.
ஒவ்வொரு முறையும் பல பல மாறுதல்கள் காணுகிறோம்.

⛳சுற்றுப்புறத்திலும், ஷிப்ரா நதிக்கரையிலும், உஜ்ஜியினியின் புறநகர் பகுதிகளிலும் நிறைய ஆன்மீக ஆலயங்கள் மற்றும் புராதான இடங்கள் உள்ளன. இவற்றில் சில குறிப்பிட்ட ஆலயங்கள், ஆன்மீக இடங்களை 12.10.2022 அன்று சென்று தரிசித்து வந்தோம். 

#பயணஅனுபவக்குறிப்புகள்🕊️
#உஜ்ஜியினிஆலயங்கள்💫

1🛐ஸ்ரீ பாத கணபதி ஆலயம்:
12.10.2022
🌟மகாகாளேஸ்வரர் புனித ஆலயத்தின் வடக்குப்புறம் உள்ள ஸ்ரீபாத கணபதி என்ற படா கணபதி ஆலயம், புராதானமானது. பிரதான சாலையின் ஓரத்தில் உள்ளது. நுழைவில் சிறிய மன்டபம் உள்ளது. இதன் உள் நுழைந்ததும் மிகப் பெரிய உருவத்தில் கணபதி உள்ளார்.

🌟ஆலயத்தின் உட்பகுதியில் பஞ்சமுக ஹனுமான் உலோகத்தால் அமைக்கப்பட்டு நடுநாயகமாக ஒரு சிறிய மண்டபத்தில் உள்ளார்.

🌟இடைவெளியில் ஒரு தொட்டில் அமைக்கப்பட்டுள்ளது. அதில் உள்ள அம்மன் வைத்து அதை அசைத்தும், தொட்டும் வழிபாடு நடைபெறுகிறது. 

🌟இவ்வாலயம், மகாகாளேஸ்வரர் ஆலயம் அருகில் உள்ளது. இதுவும் பிரார்த்தனை ஆலயம் போன்று வழிபடுகிறார்கள்.
முதலில், இவரை  தரிசித்து விட்டே, மகாகாளேஸ்வரர் தரிசிக்க வேண்டும் என்று சிலர் கூறுவார்கள்.

(10.3.2021 ல் தரிசித்த அனுபவக் குறிப்புகள்:
https://m.facebook.com/story.php?story_fbid=5409904815751398&id=100001957991710)

12.10.2022
#பயணஅனுபவக்குறிப்புகள்🕊️
#உஜ்ஜியினிஆலயங்கள்💫

2.🛕பாரதமாத ஆலயம்:
12.10.2022

🌟மகாகாளேஸ்வரர் ஆலய முன்புறம், தென்கிழக்குப்பகுதியில் ஒரு பாரதமாத ஆலயம் கட்டப்பட்டுள்ளது. இது சுமார் 20 படிகள் உயரத்தில் மிகப்பெரிய முன்மண்டபம் மற்றும், உள்மன்டபம் கொண்டது. அடுத்துள்ள கருவரையில் பிரமிக்க வைக்கும் பாரதமாத சிலை கையில் கொடியுடன் பின்புறம் சீறிப் பாயும் சிங்கம் ஒன்றுடன், மிக அற்புதமாக உள்ளது.

🌟இதன் புறச்சுற்றுப் பாதை, பால்கனி அமைப்பில்உள்ள பகுதியும் உள்ளது.
இதிலிருந்து ருத்ரசாகர் எரியின் அழகிய அமைப்பும், ஏரி வளாகத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள ஆன்மீக பூங்கா பகுதிகளையும், உஜ்ஜியினி நகரம், ஆலய வளாகம் அனைத்தையும் காணலாம்.
 
🌟முன்புறம் ஆலய நுழைவுப்படிகளின் நடுவில் பாரததேசம் இயற்கையான நில அமைப்புடன் (3Dயில்) வடிவமைக்கப்பட்டு, அதில் பாரத நதிகளை வடிவமைத்தும் அனைவரையும் கவரும் வகையில், கருத்துடன் நல்ல அமைப்பில் உள்ளது. 

🌟பாரதமாதா ஆலயம் மிகப்பெரிய வளாகத்தில் அமைந்துள்ளது, அருகில் தங்கும் இடங்கள், Car Parking வசதிகளும் உள்ளன.
10.3.2021 ல் தரிசித்த அனுபவக் குறிப்புகள்:
https://m.facebook.com/story.php?story_fbid=5419530171455529&id=100001957991710


12.10.2022
#பயணஅனுபவக்குறிப்புகள்🕊️
#உஜ்ஜியினிஆலயங்கள்💫

3. 🏞️ருத்திர சாகர் ஏரி வளாகம்-ஆன்மீக பூங்கா:
12.10.2022

⚛️ஆலய மேற்குப் பகுதியில் உள்ள உஜ்ஜியின் ஏரி, அல்லது மகாகாளேஸ்வரர் ஏரி என்ற ருத்திர சாகர் ஏரி,  மற்றும் ஏரி வளாகம், பகுதிகளைச் சிறந்த ஆன்மீகப் பூங்காவாக தற்போது மாற்றப்பட்டுள்ளது. 

 ⚛️ஏரியின் கரைப்பகுதிகளை மிக சிறந்த ஆன்மீக பூங்காவாக மாற்றி, நமது பெருமைக்கு உரிய பாரதப் பிரதமர் திரு நரேந்திர மோடிஜி அவர்களால் நாங்கள் உஜ்ஜியின் சென்ற 10.10.2022 அன்று திறந்துவைக்கப்பட்டுள்ளது. 

☸️இதில், மிகப்பெரிய சிவன், விநாயகர், சுப்பிரமணியர், முதலிய  பல்வேறு  கடவுளர்களின் மற்றும் சப்தரிஷிகளின் பிரமாண்டமான சிலைகள், மற்றும் பல்வேறு இறை உணர்வு கட்டிடங்களும், சிவபுராண காட்சி சிற்பங்களும் அமைக்கப்பட்டு மிக அற்புத ஆன்மீக பூங்காவாகவடிவமைக்கப்பட்டு உள்ளது. அனைவரும் கான வேண்டிய அற்புத பூங்கா. 

☸️ஏரியின் நடுவில் விக்கிரமாதித்திய மகாராஜா சிம்மாசனத்தில் அமர்ந்திருக்கும், மிகப்பெரிய சிலையும் உள்ளது.

12.10.2022
#பயணஅனுபவக்குறிப்புகள்🕊️
#உஜ்ஜியினிஆலயங்கள்💫

4.ராம்தீர்த்தக் கட்டம் (RAM GHAT), 
ஷிப்ரா நதிக்கரை: 
12.10.2022🌼மகாகாளேஸ்வரர் ஆலயப்பகுதியை அடுத்து இருக்கும்  மிகப்பெரிய ருத்ரசாகார் என்ற ஏரி பகுதி உள்ளது. இதை அடுத்து சுமார் 1 கி.மீ. தூரத்தில்தான் ஷிப்ரா நதி உள்ளது.

🌼பொதுவாக  உஜ்ஜியினியின் பெரும்பகுதியில் ஷிப்ரா நதி உள்ளது.

🌼ஷிப்ரா நதிக்கரையில் உள்ள ஸ்தான கட்டடங்கள் பல உண்டு.  

🌼சிப்ரா நதி புண்ணிய தீர்த்தங்களில் ஒன்று.புராதானமானது. 

🌼தேவாமிர்தம் சிந்திய இடங்களில் இதுவும் ஒன்று.

🌼பனிரெண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும்  கும்பமேளா விழாவின் போது ஏராளமான லட்சக்கணக்காண பக்தர்கள் பாரதம் முழுதும் இருந்து இங்கு வந்து நீராடுகிறார்கள். 

🌼பக்தர்கள் நீராடுவதற்கு வசதியாக நீளமான படித்துறைகள் இருபுறமும் உள்ளன.  பெரிய சிறிய ஆலயங்கள் இருகரைகளிலும் உள்ளது. 

🌼தினம்  மாலையில் ஆர்த்தி வழிபாடு சிறப்பாக நடைபெறுகிறது. பக்தர்கள் பிரார்த்தனைகள் செய்யவும், பூசை செய்யவும் பண்டாக்கள் உதவுகிறார்கள். 
🌼எல்லா பொழுதிலும் மனிதர்கள் நடமாட்டம் உள்ளது. இங்கு நீராடி வழிபடுதல் மிகவும் புனிதமானது. 
( ஏற்கனவே ஒரு முறையும், மற்றும் 10.3.2021 அன்றுசென்ற போதும், காலையில் சென்று நீராடி வந்தோம்.)

10.3.2021 ல் தரிசித்த அனுபவக் குறிப்புகள்:
https://m.facebook.com/story.php?story_fbid=5404498276292052&id=100001957991710

🛐பயணங்கள் தொடரும்....
நன்றி🙇🏼‍♂️🙏
12.10.2022
என்றும் அன்புடன்
சுப்ராம்.அருணாசலம்_காரைக்கால்

#ஜோதிர்லிங்கதரிசனம்2022
#ஜோதிர்லிங்கதரிசனம்
#மகாகாளேஸ்வரர் #உஜ்ஜியினிஆலயங்கள்
#ஜோதிர்லிங்கம்
#உஜ்ஜியினி , #மத்தியப்பிரதேசம்
🛕#மகாகாலேஸ்வரர்ஆலயம்


திண்டல் திண்டல் வேலாயுதசாமி முருகன் கோயில் 6.09.26

திண்டல்  திண்டல் வேலாயுதசாமி முருகன் கோயில் வேலாயுதசாமி கோயில், திண்டல் என்பது ஈரோட்டில் இருந்து பெருந்துறை செல்லும் வழியில் எட்டு கி.மீ. தொ...